ஆண்டவன் என்று ஆராதிக்கும் கடவுளை
மிகவும் மதிப்பளித்து ஆராதிக்கவேண்டும்.
இறைவனை இழிவுபடுத்தும் செயல் நமது
சனாதன தர்மத்தில் இல்லை.
சிவபெருமானுக்கு கண் அளித்த கண்ணப்பர்
கால் வைத்து கண்ணை அடையாளம் வைத்து
தன் கண்ணை பதிய வைத்த பக்தி.
ஆலயம் மிகவும் புனிதம்.
அதைவிட புனிதம் தெய்வப் பதுமைகள்.
நாம் நமது ஒற்றுமை,பக்தி காட்ட எத்தனையோ
வழிகள் இருக்கின்றன.
கூட்டுப் பிரார்த்தனைகள்.
சங்கீத உபன்யாசங்கள்.
கோவில் திருவிழாக்கள் .
உழவாரப் பணிகள்.
கோயில் குளங்கள் தூர்வாரல்
ஆனால் இந்த சுதந்திரப்போராட்டத்தில்
நாட்டின் நன்மைக்காக ஆரம்பித்த விநாயகர்
ஊர்வலம் மிகவும் வேதனை அளிக்கும் அளவிற்கு
இன்று வளர்ந்துள்ளது.
௧௦௦௦ ரூபாய் முதல் ௨௦,௦௦௦ வரை
கடின உழைப்பில் உருவாகிய பலவித உயரத்தில்.
அழகின் ஆராதனைக்கு பயன் படுத்தி
அதை கடலில் எரிந்து அவமானப்படுத்துவது
கௌரவப்படுத்துவதாகுமா?
சாலைகள் இல்லை.
பள்ளிகளில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை.
அறிவுத்திறன் உள்ள மாணவர்களில் பலர் உயர் கல்விக்கு வசதி இல்லை.
எத்தனையோ நாட்டில் துயரங்கள்;துன்பங்கள்.
ஆனால் இந்த விநாயகர் சிலைகள்
அழகை வர்ணிக்கமுடியா கலைஞனின் படைப்பு ;உழைப்பு. பொருள் முதலீடு.
லக்ஷக்கணக்கில் ரூபாய் .
பிறகு இதை கடலில் பழு தூக்கிவைத்து எறிவது
அவமானப்படுத்துவது தானே?
இது ஆராதனையா?
பக்தியா? சிரத்தையா?ஒற்றுமை உணர்வா?
அன்றைய தினம் போக்குவரத்து இடையூறு.
ஒரு அச்சம். ஊர்வலத்தில் அடிதடி வரக்கூடாது.
அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது.
இதில் காவல்துறை ஆக்கப் பணிகளை விட்டுவிட்டு இந்த சிலைகள் எங்கெல்லாம் உள்ளதோ.அங்கெல்லாம் இரவு-பகல் பாதுகாப்பு.
சில தினங்கள் கழித்துப் பார்த்தல்
சமுத்திரக்கரையில் மலத்துடன் சேர்ந்து அசிங்கப்படும் யானை முகம்,
கால்கைகள்,கைகள்,முண்டங்கள்.
இவ்வளவு அவமானம் உதாசீனம் ஆண்டவனை செய்வதில் ஆனந்தம்;பக்தி.
இந்த மன நிலையில் உள்ளவர்கள்
கற்பழிப்பு என்றும் கொலை,கொள்ளை என்று மனிதர்களை
இழிவு படுத்துவதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.
ஆண்டவனை,முழுமுதற்கடவுள் யானை முகத்தோனை ,கந்தனுக்கு மூத்தோனை
எளியயோருக்கு
அங்கிங்கென்று ஆற்றங்கரையிலும் ,மரத்தடியிலும் அருள் புரியும் ஆண்டவனுக்கே இந்த அலங்கோலம் என்றால்
மனது துடிக்கிறது.
மனிதனுக்கு பக்தியே இல்லையா?
இது ஒரு இழிசெயல் என்ற எண்ணமே இல்லையா?
நெஞ்சு பொறுக்கவில்லை,
முருகப்பெருமானே!
உன் அண்ணனுக்கு இப்படிப்பட்ட அவமானத்தைத்
தடுக்க புறப்படு;
இதைத் தடுக்க ஞானம் கொடு.
மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்து.
இந்துக்களே இந்த இழிசெயலால் இந்துக்களை வெறுக்கும் படி செய்யாதே.
முருகா !இதற்கு ஒரு வழி செய்.
இதுதான் பகுத்தறிவு.
அது தான் அன்பு வழி
அந்த அன்புதான் பண்பைக் கொடுக்கும்..
2 comments:
வழிகள் இருக்கின்றன....
சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
Post a Comment