ஆண்டவன் அருள் ஆடம்பரத்தால் ,
பொன்னும் பொருளாலும் கிட்டுமென்றால்,
வைரக்கிரீடத்தாலும் , பொன்-நகையாலும்
காணிக்கையால் காட்சி கிடைக்கும் என்றால் ,
வேள்விகள்-யாகங்கள் ப்ராயச்சித்தத்தால்
இறைவன் கருணை கிட்டும் என்றால்,
நந்தனார் சரித்திரம் இல்லை.
கண்ணப்பர் சரித்திரம் இல்லை.
துருவ நக்ஷத்திரக் கதையோ,
பிரஹ்லாதன் கதையோ ,
அருணகிரிநாதர்,அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் இல்லை.
ஆதி சங்கரர் இல்லை;துளசிதாசர் இல்லை.கபீர் இல்லை;
பாண்டுரங்கன் விட்டல் இல்லை;பண்டரிபுரமே இல்லை;
ராமகிருஷ்ண பரமஹம்சர்
விவேகானந்தர் இல்லை. யாருமே இல்லை.
முஹம்மது நபி இல்லை; ஏசுநாதர் இல்லை.
உண்மையான அருளாளர்களுக்கு ,
இறை அன்பே போதுமன்றோ.
லௌகீக சுகங்களுடன் இன்றைய ஆஷ்ரமங்கள்.
பொன்னும் பொருளும் கறுப்புப்பணமும் குவிந்து கிடக்கும்
கருவூலங்கள். களங்கங்களின் புகலிடங்கள்.
மெய்வழி பொய்வழி ஆன கதை.
நித்தியானந்தம்,பிரேமானந்தம்,சதுர்வேதி கதைகள்,
உள்ளத்தூய்மையுடனான அன்பே ,
பவித்திரமான பக்தியே ஆண்டவன் அருளாகும்.
பொன்னும் பொருளாலும் கிட்டுமென்றால்,
வைரக்கிரீடத்தாலும் , பொன்-நகையாலும்
காணிக்கையால் காட்சி கிடைக்கும் என்றால் ,
வேள்விகள்-யாகங்கள் ப்ராயச்சித்தத்தால்
இறைவன் கருணை கிட்டும் என்றால்,
நந்தனார் சரித்திரம் இல்லை.
கண்ணப்பர் சரித்திரம் இல்லை.
துருவ நக்ஷத்திரக் கதையோ,
பிரஹ்லாதன் கதையோ ,
அருணகிரிநாதர்,அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் இல்லை.
ஆதி சங்கரர் இல்லை;துளசிதாசர் இல்லை.கபீர் இல்லை;
பாண்டுரங்கன் விட்டல் இல்லை;பண்டரிபுரமே இல்லை;
ராமகிருஷ்ண பரமஹம்சர்
விவேகானந்தர் இல்லை. யாருமே இல்லை.
முஹம்மது நபி இல்லை; ஏசுநாதர் இல்லை.
உண்மையான அருளாளர்களுக்கு ,
இறை அன்பே போதுமன்றோ.
லௌகீக சுகங்களுடன் இன்றைய ஆஷ்ரமங்கள்.
பொன்னும் பொருளும் கறுப்புப்பணமும் குவிந்து கிடக்கும்
கருவூலங்கள். களங்கங்களின் புகலிடங்கள்.
மெய்வழி பொய்வழி ஆன கதை.
நித்தியானந்தம்,பிரேமானந்தம்,சதுர்வேதி கதைகள்,
உள்ளத்தூய்மையுடனான அன்பே ,
பவித்திரமான பக்தியே ஆண்டவன் அருளாகும்.
1 comment:
அன்பிலர் எல்லாம் தமக்குரிஅர் ..அன்புடையர் என்பும் உரியர் பிரர்கு . if we live for others ..then there is no obstacle ...in moving towards the almighty..that is the basic principle of hindu dharna..
Post a Comment