Thursday, June 20, 2013

.உன் குழந்தை நான். காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்.

அன்பே ஆண்டவன் 
அன்பு என்றாலே கொடுப்பதே.

பெறுவதற்காக  அன்பு
 என்றால் சுயநலமே.
இறைவனிடம் செலுத்தும் அன்பு ,
அவன் கருணைக்காக.

அதையும் நாம் ஒரு வேண்டுகோளாக இருக்கக் கூடாது.

நீ  படைத்த  உடல்.!புகழோ, இகழ்ச்சியோ,
ஏற்றமோ  , தாழ்வோ,

வறுமையோ ,வளமோ , எல்லாமே 

இறைவன் செயல்.

துன்பமும்  இன்பமும்  நீ தருபவையே!

உன் குழந்தை  நான்.

எனக்கு வரும் சிறுமையும் பெருமையும் 
ஆரோக்யமும் நோயும் 
அனைத்தும் உன்னால் எனக்கு வரக்கூடியவை.
அல்லது தீரக்கூடியவை.

நான் உன்னிடம்  அன்பும் ,பக்தியும் செலுத்துகிறேன்.

என்னை உலகில்  படைத்த நீ,
எப்படி என்னை ஆட்டிப்படைத்தாலும் 

பக்தியும் உன் மீது அன்பு செலுத்துவதும் என் கடன்.

உன் குழந்தை  நான்.
காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்.




1 comment:

Ranjani Narayanan said...

//பக்தியும், உன் மீது அன்பு செலுத்துவதும் என் கடன். உன் குழந்தை நான். காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்//
ரொம்பவும் உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!