அன்பு என்றால் என்ன?
இதை கபீர்தாசர் ஹிந்தியில் இரண்டரை எழுத்து என்கிறார்.
ப்ரேம் ,இஷ்க் ,ப்யார் என்ற ஹிந்தி வார்த்தைகள்
அன்பைக்குரிக்கும். காதல் என்பதைக்குறிக்கும்.
அன்பு.காதல் இரண்டரை எழுத்தே .
पोथी पढी -पढी जग मुआ ,पंडित भया न कोय.
ढाई अक्षर प्रेम का ,सो पढ़े पंडित होय.
என்கிறார் கபீர்.
நூல்கள் படிப்பதால் யாரும் மேதை யாவதில்லை.
அன்பிற்கு இரண்டரை எழுத்து அதை படிப்பவன் மேதை ஆகிறான்.
இது கபீர் அன்பைப்பற்றி கூறுகிறார்.
இந்த அன்பு இறைவன் மேல் இருக்கவேண்டும் .
மனிதர்கள் மேல் அன்பு வைத்தாலும் ,
இறைவன் மீது அன்பு வைத்தாலும்
எதையாவது அவர்களிடம் இருந்து
எதிர்பார்த்தால் மிஞ்சுவது துன்பமே.
இந்த அன்பு எதையும் எதிர்பாராமல்
இருக்கவேண்டும்.
இது நிரந்தரமாக இருக்கவேண்டும்.
இதை சத்திய சாய்பாபா கூறும்போது
நாம் இன்று ஒரு இறைவனை வழிபடுகிறோம்.
இன்றைய எனது பேச்சில் ராம மகிமை என்றால்
ராமா ,ராமா என்று இங்குள்ள பக்தர்கள் கூறுவர்.
மாலையில் மற்றொரு தேவி உபாசகர்
உபன்யாசம் கேட்டால் மனது தேவியைநாடும்.
நண்பர்கள்,உற்றார் உறவினர்கள்
இந்த இறைப்பற்றையும் அன்பையும்
வெவ்வேறு நாமங்களில் ,வெவ்வேறு உபாசன முறைகளில்
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
பல ஆஷ்ரமங்கள். பல ஆலயங்கள். பல மதங்கள்.
இந்த இறைவனின் மேல் உள்ள உண்மை அன்பு என்பதை மாற்றி.
அதில் ஒரு மன சஞ்சலம்.
*********
இதைப்பற்றி நான் மிகவும் சிந்தித்தேன்.
இறைவன் மேல் உள்ள பற்று இறைவனின் நாமங்களால்
எப்படி எல்லாம் சஞ்சலப்படுகின்றது.
ஒரு ஜோதிடரிடம் தங்கள் குடும்பத்தின் துன்பம்
தீர ஆலோசனை கேட்டார் ஒருவர்.
ஜோதிடர் சோழி உருட்டினார்.
ஜாதகம் பார்த்தார் .
பின்னர் உங்கள் மூதாதையர் செய்த குல தெய்வ வழிபாடு
நீங்கள் செய்யவில்லை என்றார்.
தெய்வங்கள் பல. அதில் குலதெய்வம் பற்றி சிந்திக்காத குடும்பம் அது.
இப்பொழுது இறைவனை வழிபடவேண்டும்.
குலதெய்வம் எது என்பதில் குழப்பம்.
வீட்டில் உள்ளோரை விசாரித்தால் .
நாம எல்லாக் கோயிலுக்கும் தானே போறோம்.
பாட்டி முருக,முருகா என்றே சொல்லுவார் என்று ஒருவர்.
மற்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வம் கூற
குல தெய்வம் எங்கே?யார்?எப்படி வழிபாடு செய்யவேண்டும் ?
என்ற பிரச்சனை தீர ஒரு ஜோசியரைத் தேட ஆரம்பித்தனர்.
இறுதியில் ஒரு கிராமதேவதை என்ற முடிவிற்கு வந்தனர்.
அது எங்கே? என்ற தெளிவு வரவில்லை.
இப்படி தெளிவில்லா பக்தி.
மற்றொரு ஜோதிடர் நீங்கள் வழிபட்ட கோவில் சரிதான்.
அங்குள்ள கோயிலில் கிழக்குப்பக்கத் தூணில் மேற்குப்பாத்த
ஒரு அம்மன் சிலை உள்ளது..அது தான் அந்தக் கோயிலைக்காக்கிறது.
அதை வழிபடவில்லை. அதை மீண்டும் சென்று வழிபட்டு வாருங்கள் என்றார்.
இப்படி இறைவனை வழிபடுவதில் எத்தனை ஐயங்கள். குழப்பங்கள்.
இதற்கு ஒரு பழமொழி
मन चंगा तो कठौती में गंगा.
மனத் தூய்மை இருந்தால்,
வீட்டுக் கிண்ணத்தில் உள்ள நீரில்
கங்கை இருப்பாள்.
இதற்கு ஒரு உண்மை சம்பவம்.
இந்திக் கவிஞர் ரைதாஸ் ஒரு காலணி செய்யும் தொழிலாளி.
அவர் கங்கைக்கரையில் இந்த தொழில் செய்துவந்தார்.
தினந்தோறும் கங்கையில் நீராட வரும் அந்தணர்,
ஒரு நாள் ரைதாசிடம் ,
நீ கங்கையில் ஸ்நானம் செய்ய வில்லையா?என்றார்.
அதற்கு நான் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் ,
எனது பக்தி தூய்மையானது என்றார்.
பின்னர்,அந்த அந்தணணிடம் ,
கங்கை அம்மாவிடம் நான் சொன்னதாகச் சொல்லி
ஒரு வெகுமதி பெற்றுச் செல் என்றதும்
அவ்வாறே அந்தணன் நதியில் சென்று கேட்டதும் கங்கா தேவி
விலை மதிப்பில்லா ஒரு கால் சலங்கை அளித்தாள்.
சுய நலமுள்ள அந்தணன் மீண்டும் ரைதாசைப் பார்க்காமல்
அந்த சலங்கையை தம் மனைவியிடம் கொடுத்தான்.
மனைவி மகிழ்ந்து ,
இந்த அபூர்வமான சலங்கையை அரசரிடம் கொடுத்தால்,
மகிழ்வார் என்றாள்.
அரசனின் மனைவி சலங்கையில் அதிகம் ஆசை கொண்டு
மற்றொரு சலங்கை வேண்டும் என்றதும்
அந்தணன் வேறுவழி இன்றி
ரைதாசை மீண்டும் வேண்டினான்.
அந்த காலணி தொழிலாளி
மீண்டும் கங்கையிடம் பெற்றுச்செல் என்றார்.
அந்த உண்மையான இறைப்பற்று இருந்தால்.
கொடுக்குற தெய்வம் கூரையைப்பிய்த்துக் கொடுக்கும்
என்ற தீவிர அன்பு,பக்தி இருந்தால்
இறைவனை வழிபடுதலில் சஞ்சலம் இல்லாமல் இருந்தால்,
இயற்கையை நாம் வழிபட்டால்.
இறவன் அருள் நமக்குக் கிட்டும்.
துருவனின் பக்தி,பிரகலாதன்,கண்ணப்பன்,நந்தனார் ,விட்டல்தாஸ்
எத்தனையோ பக்தர்கள் இறைவன் மேல் மட்டும் அன்பு வைத்தவர்கள்.
பல சோதனையிலும் சாதனைகள் புரிய ,
குறைந்த பக்ஷம் நமது வட்டத்தில்
இறைவன் மேல் மட்டுமே அன்பு வைக்க வேண்டும்.
लाली मेरे लाल की ,जित देखो तित लाल.
लाली देखन मैं गयी ,मैं भी हो गयी लाल.
என் அன்பரைப் பார்க்க நான் சென்றேன்.
அங்கிங்கேனாதபடி எங்கும் அவரே காட்சி அளித்தார்.
நான் அன்பரைக் காணச் சென்றால் நானே அன்பராகிவிட்டேன்.
கபீர் தன்னை பெண்ணாகவும்
இறைவனைக் காதலனாகவும்
எண்ணி பாடிய தோகை இது.
இப்படி இறவன் மேல் உள்ள காதல் ஒன்றாக ஐக்கியமாக வேண்டும்.
ஆண்டாள் போல்,மீரா போல்.
இவ்வித பக்தியில் இறைவன் சக்தி மட்டுமே .
நாம பேதம் வேண்டாம்.
இறவன் ஒருவனே.
மண்னும் பொன்னும் ஒன்றே.
அதனால் உருவாக்கப்படும் பண்டங்கள் வேறு.
ஆதி மூலம் ஒன்றே.
அன்பே ஆண்டவன்.
1 comment:
ரைதாசின் கதை நன்றாக இருக்கிறது.
அன்பே கடவுள் - எந்தப் பெயரில் அழைத்தாலும்!
Post a Comment