மனிதன் மிருகம் தான்.
அவனுக்கு மிருக குணம் தான்.
அவனை மனித குணமாக மாற்ற
ஒரே மார்க்கம் பக்தி தான்.
ஆனால் , அந்த மார்க்கம் பல வழிகளில்
மக்களை சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது.
காரணம் நாத்திகவாதமா? இல்லை.
ஆத்தீகர்களின் ஆணவம்.சுயநலம்.
ஆடம்பர வாழ்க்கை.
ஆண்டவனின் அருளுள் பெற பூஜைகள்.
சிறப்பு வழிபாடுகள்.
வேள்விகள். சடங்குகள்.
மடாலயங்கள்.
ஆஷ்ரமங்கள்.
தங்கம் வைரம் நவரத்தினங்கள்.
ஆனால் ஆன்மீக ஆதி வழிகாட்டிகள்
வாழ்ந்த வாழ்க்கை
வெள்ளி சிம்மாசனத்தில் அல்ல.
பாலா/தேனா /பன்னீரா/ அல்ல.
அருகம்புல்,துளசி,வில்வம் எருக்கு என்று
எளியோருக்கும் கிடைக்கும் எளிய பொருட்கள்.
அவையும் ஆரோக்யத்துடன் இணைந்தவை.
இன்று வெளிநாட்டு வாசனைப்பொருள்கள்.
மின்சார சரவிளக்குகளால் ஆனா இறை உருவங்கள்.
ஆபாச ஆட்டங்கள்,இசைகள்,
தெய்வீகப்பாடல் பாடும் போதே பக்திப்பாடல் போதும்;
திரைப்படப்பாடல் பாடு என்று கூச்சல் குழப்பம்.
இறைவனை துரிதமாக வழிபட முக்கியபிரமுகர்கள்,
மிகமிக முக்கியப்பிரமுகர்கள்,
நுழைவுக்கட்டணம்.
அதிலும் தில்லுமுல்லுகள்.
அங்குள்ள கடைகளில் உள்ள அதிக விலை .
சில்லறைத் தட்டுப்பாடு.
,இயற்கை உபாதிகளுக்குப் படும் அவஸ்தைகள்.
ஏமாற்றும் பேர்வழிகள்.
ஆடம்பர பக்தி ;
காதலாகிக் கசிந்துருகி கண்ணீர்மல்கி
என்ற இறைவழி பாடு எங்கோ சென்று,
பணமே இறைவன் என்றே
ஆஸ்திகர்கள் இறைவரம் பெற
பொருளற்ற பொருளாதாரம்
என்று ஊழல் ,கையூட்டு ,கறுப்புப்பணம்
கனகக் கோயில்கள்.
No comments:
Post a Comment