Friday, April 6, 2012

kaadhal.

காதல்  என்பது  கலியுகத்தில்  வந்த களங்கம்  என்றும் ,
மிகவும் பாவமான செயல் என்றும் கதறுகின்றனர்.
ஒருவரிடம்  மகாபாரத்தில் மூன்று அரச குமாரர்களை
போரிட்டு கடத்திவந்து திருமணம் செய்துள்ளனர்.
சிவபெருமானை  விரும்பிய பர்வத ராஜகுமாரியின்
தந்தை தக்ஷனுடன் போரிட்டுள்ள கதை.
முருகன் வள்ளிக் குறத்தியை மணந்த கதை.
 ஆண்டாள்,மீராவின் காதல் கதை .
இந்திய மன்னர்கள் அரசகுமரிகளுக்காக போரிட்ட கதை.
நளன் தமயந்தியை மணக்க சுயவரம் நடத்திய போது,
தேவர்கள் நளன் உருவமெடுத்து  வந்த கதை.
துஷ்யந்தன் சகுந்தலா காதல் கதை,
கிருஷ்ணனின் பாமா ,ருக்குமணி கதை.
நமது இந்திய வரலாற்றிலும்,புராணங்களிலும் ,சங்ககால
தமிழ் இலக்கியங்களிலும் இல்லாத  காதலா,
கலியுகக் காதல்.
அமராவதி- அம்பிகாபதி   காதல்.
குண்டலகேசி  கள்வனின் மீது கொண்ட காதல்.
இந்திரன் அகல்யாவின் மோகத்தால் செய்த தவறு.
காதல்-மோகம் இதுதான் இலக்கியம்.
நாட்டுப்பற்று நாட்டின் மீது காதல்.
காதலே தான் உலகத்தின் இயக்கம்.

No comments: