நந்தன ஆண்டு , நமசிவாய
என்ற பஞ்சாக்ஷரம் ஜபித்து,
அன்பே சிவம் என்று ஆனந்தக்
கூத்தன் அருள்பெற வேண்டி.
ஆழ்மன வாழ்த்துக்கள்.
நாமகள் நாயகன் நீலமேநியான்.
ஆண்டாளின் அன்பன்,
அருளமைதி தரும்
கீதை நாயகன்
தனம் தந்து,
தரணியில் தரமாக வாழ,
அருள் புரிய வாழ்த்துக்கள்.
கல்விக்கடவுள் கலைமகள்.
செல்வக்கடவுள் அலைமகள்.
சக்திதரும் மலைமகள்.
முப்பெரும் தேவிகளின்
க்ருபாகடக்ஷம் பெற்று,
சீரும் சிறப்புமாய்.
சீலமாய் வாழ,
நந்தன ஆண்டு,
நலம் பெற வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment