Sunday, April 1, 2012

anbu manithanin panbu parantha anbu vendum.

அன்பு  என்பது  குறுகியதா?
பரந்ததா?
 வினா எழுகிறது.
அன்பு என்பது இருவருக்கு மட்டுமே.
அதில் மூன்றாமவருக்கு இடம் இல்லை.
இது குறுகிய அன்பு.
வையாக வாழ்க என்பது பரந்த அன்பு.
எனது நாடு வாழ்க .
என்பது  குறுகிய அன்பு.
எனது ஊர் வாழ்க என்பது
நாடு வாழ்க,என்பதை விட இன்னும்
அளவு குறைந்த அன்பு.
எனது குடும்பம் மட்டும் வாழ்க என்பது,
அன்பு சுருங்குகிறது.
ஒரு கணவன்-மனைவி
காதலன்-காதலி
என்ற அன்பில் மூன்றாமவருக்கு
இடமில்லை.
அந்த  அன்பில் ஒருவர் மற்றவரின்
நலனில் அக்கறை கொள்கின்றனர்.
தன் காதலியை அல்லது காதலனை
மற்றவன் விரும்புவது எரிச்சலை ஏற்படுத்தும்.
தன் குழந்தையின் அழகு,மழலைப்பேச்சு,
விளையாட்டு,நடை,ஓட்டம் என்பதை,
மற்றவர்கள் ரசிப்பது புகழ்வது பிடிக்கும்.
இந்த அன்பு சற்று விரிவடைகிறது.
அன்பு பற்றாக மாறும்.
தேசப்பற்று.
மொழிப்பற்று.
சமுதாயப்பற்று.
இனப்பற்று.
ஜாதிப்பற்று.
மதப்பற்று.
பற்றுகளும் விரிந்து,
பறந்து,குறுகிய தாகிறது.
ஆகாயம் போன்று ஒரே நிலையில்
எல்லையில்லா அன்பு வேண்டும்.
பெருங்கடல் போன்று ஆழ்ந்த அன்பு வேண்டும்.
காற்றுபோல் அனைவர்க்கும் உயிர் அளிக்கும்
அன்புவேண்டும்.
சுயநலமில்லா பொதுநலம் காக்கும் அன்பு வேண்டும்.
பொறாமை இல்லாத,ஆணவம் இல்லாத,பேராசை இல்லாத.
காமக் குரோதம் இல்லாத அன்புவேண்டும்.பற்றுவேண்டும்.
நடுநிலையான அன்புவேண்டும் .
நேர்மையான அன்புவேண்டும்.
மனிதாபிமானம் மிக்க மிகப்பரந்த அன்புவேண்டும்.
இறைவன் பெயரில்.இறைவன் உள்ளான் என்று கூறும்
அனைவரும் மனிதத்தன்மை உள்ளவராக வேண்டும்.
இனக்கலவரம்.மதக்கலவரம் என்று மனிதனை
பிரிவு படுத்தும்,மனித நேயத்தை அளிக்கும்
குறுகிய  இறைப்பற்று ஒழியவேண்டும்.
இறைவன் என்றாலே மாற்றுக்கருத்து ஏற்படக் காரணமே,
மதவாதிகள் ..
இறைவன் உள்ளான் என்பதை யார்ம மறுக்கவில்லை .
இறைவன் அனைத்து உலகைக் காக்கிறான் என்பதில்,
மாற்றுக் கருத்து இல்லை.
இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதிலும்,
வெற்றுக்கருத்து இல்லை.
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்
என்பதிலும் கருத்து வேறுபாடில்லை.
இறைவன் உருவமற்றவன் என்பதிலும்
மாறு பட்ட கருத்தில்லை.
அருவமும் உருவமும் ஆகி என்கிறது ஹிந்து மதம்.
தூணிலும் துரும்பிலும் இறைவன் உள்ளன் என்கிறது
ஹிந்துமதம்.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன்,
இறைவன் என்கிறது.
இயற்கையின் சக்தி இறைவன் .
இயற்கையின் படைப்புகள் அதிசய மிக்கவை.
ஆழ்கடல் சிப்பிக்குள் முத்து.
வண்ண வண்ண பறவைகள்.
வண்ண வண்ண மலர்கள்.
முட்கள்.நீரோடைகள்.
நீர்வீழ்ச்சிகள்.
ஆறுகள்.
இவை குறிப்பிட்ட ஒரு மதவாதிகளுக்கோ,
மொழி பேசு பவர்களுக்கோ ஆண்டவன் படைக்கவில்லை.
மனிதனுக்கு மட்டுமே பேராசை கொடுத்துள்ளான்.
பல மனோபாவங்களைக் கொடுத்துள்ளான்.
சுய நலன்களைக் கொடுத்துள்ளான்.
பொதுநல,சேவை செய்யும் மனப்பான்மையும்
கொடுத்துள்ளான்.
நேர்மை,மனிதனை மனிதனாக்க
மனிதததன்மை
கொடுத்துள்ளான்.
இறைவா!






No comments: