Saturday, April 14, 2012

anbum panbum

அன்பு  பக்தியால் அசம்பவத்தையும் சம்பவமாக்கலாம் என்பது ஆன்மிகம்.
அறிவால் தான் சாதனைகள் ,கண்டுபிடுப்புகள் சாத்யமாகும் என்பது அறிவியல்.
இதற்கும் மீறிய சம்பவங்கள் மனிதனின் மனத்தில் பக்தியையும் ,ஆன்மீகத்தையும் வளர்க்கின்றன.
மனிதனின் நாடிகள் பற்றிய நிலையான கருத்துக்கள் இன்றுவரை அறிவியல்
ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மருத்துவ உலகம் பல விந்தைகள் கொண்டது.
பிரபல மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு அதிசயங்கள் நடந்துள்ளன.
அறிவியலில் எண்ணங்களில் புதுமைகள் பல ஏற்பட்டாலும்
மனிதன் மன அளவில் பாதிக்கப்பட்டவனாகவே உள்ளான்.
புதியன புகுதல்,பழையன கழித்தல் ,கழிதல்,என்பது இயற்கையின் தத்துவம்.
இந்த தத்துவம் மனிதன் மனத்தில் சஞ்சலத்தை உண்டுபண்ணுகின்றன.
தோற்றங்கள் பிரியாமல் இருந்தால்,மறையாமல் இருந்தால்
அன்பும் பண்பும் நிலைத்து இருக்கும்.
மாற்றங்கள் அன்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
வளர்ச்சி மனிதனின் பண்பை மாற்றுகின்றன.
ஒரு வீட்டில் இருக்கும் பண்பு,தெரிவிற்கு வரும்போது மாறுகிறது.
ஊரைவிட்டு வேறு ஊருக்கு செல்லும்போது மாறுகிறது.
மாநிலம் விட்டு மாநிலம் ,நாடு விட்டு நாடு செல்லும் போது மாறுகிறது.
அன்பு மாறுமா? என்றால் மாறுகிறது.
ஜாதிப்பற்று,இனப்பற்று,மொழிப்பற்று,தேசப்பற்று,தெய்வப்பற்று,மதப்பற்று,
அனைத்திலும் ஒரு சகிப்புத்தன்மை ஏற்படுகிறது.
அதற்குத்தான் கிணற்றுத்தவளையாக இருக்கக்கூடாது.பூனை கண் மூடினால்
பூலோகமே இருண்டது என்பதுபோல் இருக்கக் கூடாது என்றனர்.
வையகம் வாழ்க,வாழ்க வளமுடன் என்ற பற்று
பரந்த பற்று.
உயர்ந்த பண்பு.
தேசப்பற்று  குறுகிய பற்று உள்ளவர்களிடமிருந்து,
நாட்டை,மொழியை .பண்பாடை காப்பாற்றும்
குறிக்கோளுடன் கூடிய அவசியமான மிக உயர்ந்த அகப்பற்று.
புறப்பற்று வாழ்வதற்காக.
அகப்பற்று மன அமைதி.;மன நிறைவிற்காக.

No comments: