அன்பு அல்லது பற்று இன்றி எந்த ஒரு செயலும் செய்து ஜெயமடைய முடியாது.
துருவன் தன் விருப்பத்தை பூர்த்திசெய்ய தவத்தில் மெய்மறந்தான்.பிரஹலாதன் தன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என சிந்திக்கவில்லை.இறைவன் நாம ஜெபமே அவனைக்காப்பாற்றி தந்தையின் செருக்கை அழித்து தந்தைக்கு மோக்ஷமளித்தது.
துருவன் தன் தந்தையின் மடியில் அமர தவம் செய்தான்.பிரகலாதன் தந்தையின் செருக்கு ஒழிய இறைநாபம் சபித்தான்.
முருகப்பெருமான் தன் தந்தைக்கு உபதேசம் செய்தான்.
நமக்கு ஆன்மிகம் அனைத்தையும் போதிக்கிறது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என குடிகாரத்தந்தையுடன் சேர்ந்து குடித்து
கும்மாள மிட்டால் அப்பா விற்குப்பிறந்த நல்ல பிள்ளை என்று பாராட்டுமா ,
அப்பா தான் இப்படி பிள்ளை வீட்டு நிலை அறிந்து பொறுப்பா நடக்கக் கூடாத என்றுதான் கூறுவார்.ஆகையால் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது
உயர்ந்த குணங்கள் ஞானம் ,சத்யஷீலம்,நேர்மை,நன்னடத்தை உள்ள தந்தையின் சொல் கேட்பது.
நேற்றைய செய்தி குடிகாரத் தந்தையின் தவறா இச்சையால் மகள்கள் இருவர்
அவரைக்கொன்றனர். இதுதான் தர்மம். நியாயம்.தவறு செய்தவன் தந்தையானாலும் பொறுக்க முடியாது.
நமது நாட்டில் கற்பழிக்கும் கயவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க சட்டமில்லை.தவறு செய்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றனர்.
குடிகார ஆசிரியர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்தால் கல்வித்துறை சீராகும்.
தனிவகுப்புகள் நடத்தி மதிப்பெண் வழங்கி ,தனிவக்குப்புக்கு செல்லாத நல்ல மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கும் ஆசிரியர்கள் பாராட்டப்படுவதால் கல்வித்துறை எப்படி முன்னேறும்.
பணம் இருந்தால் அந்த மாணவனுக்கு வருகைப்பதிவேடில் இருந்து அனைத்திலும் சலுகை.இதைக்கானும் மாணவனிடம் ஆசிரியர்கள் எப்படி
மரியாதை பெறுவார்.
கல்வி என்பது பணத்திற்கு மதிப்பளிக்கிறது.இன்றல்ல. நமது வரலாறே அப்படித்தான்.
இந்நிலை தற்போது மாறுவது போல் இருந்தாலும் ஏழை மாணவன் /பணக்கார மாணவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்றம் அடையும் பொது சமச்சீர் கல்வி ஏட்டளவில் தான்.
அதிக மதிப்பெண் பெற்ற தாய் மொழி வழியில் படித்த மாணவன் உயர் கல்வியில் தற்கொலை செய்து கொள்கிறான்.காரணம் ஆங்கிலம் புரியவில்லை.இதைவிட நமது கல்விமுறைக்கு அவமானம் எதுவும் இல்லை.
1 comment:
very nice
Post a Comment