Sunday, April 8, 2012

ANBE ANDAVAN--PRARTHTHANAI.

MANITHANUKKU AANDAVAN SILA AATRALKALAI KIDUTHTHULLAAN.ATHU MANITHA SEVAIKKE.
மனிதனுக்கு தன் பதவியால் செய்யும் உண்மையான சேவை,அவனுக்கு ஒரு தன்னிறைவைத்தரும்.ஆத்மா சந்தோசம் அடைந்தால் பரமாத்மா
மனதை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றுவார்.மனக்கவலை அல்லது மனச்சஞ்சலம் அல்லது மனதில் ஏற்படும் தீய எண்ணங்கள்  அதனால் ஏற்படும் மன நிறைவின்மை மனிதனை உடல்.கடமை உணர்வு ,நேர்மை சத்தியம் அனைத்தையும் பாதிக்கச் செய்யும்.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி எது என்ற கவியின் திரைப்பட பாடல் பொய்யாகாது.என்னதான் சுவிஸ் வங்கியில் பணம் குவிந்தாலும் நிம்மதி என்பது மனிதர்களுக்கு செய்யும் உண்மையான தொண்டால் தான் ஏற்படும்.
தனக்கென பல கோடியில் ஒரு வீடு கட்டி வால்பதை வாடா பல குடும்பங்கள் வாழ குறைந்த வாடகையில் குடியிருப்புகள் கட்டித்தந்து பெயரை நிலைத்து இருக்கச் செய்யலாம்.

ச்விச்ஸ் வங்கியில் இருக்கும் கருப்புப்பணம் ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையாக குறைந்த வட்டியில் பயன் படுத்தலாம்.
மருத்துவத்திற்கு உதவலாம்.

இவ்வாறு உதவ முன் வருபவர்களுக்கு பூலான் தேவிக்கு கொடுத்தது போல் பொதுமன்னிப்பு வழங்கலாம்.
மனிதனுக்கு சேவையே மகேசனின் சேவை.
நர சேவா நாராயணுக்கு சேவை.
மனிதனுக்கு சேவை செய்ய மனித குணம் வேண்டும்.மனிதத் தன்மை வேண்டும்.
மனிதர்களின் மேல் அன்புவேண்டும்
தன்னலம் கருதா அன்பாலும் .தொண்டுள்ளத்தாலும் ,
பரோபகரத்தாலும் ஏற்படும் மனமகிழ்ச்சியாலும்,மன நிறைவாலும்
மனிதன் ஆண்டவனின் அன்பும்,அருளும் பெற்று,
நோய் நொடி இன்றி,அவ்வாறு நோய்கள் வந்தாலும்
உரிய மருத்துவர் கிடைத்து உரிய சிகிச்சை பெற்று
நலமுடன் வாழலாம்.
வாழ்க வையகம்.
மக்கள் மனதில் மனித நேயம் மனிதத் தன்மை வளர
பிரார்த்திப்போம்.
கள்ளப்பணம்,-- அரசியல்.இரக்கமற்ற படு கொலைகள்,
தற்கொலைகள் ,கடத்தல்,போதைப்பொருளுக்கு அடிமை ஆதல் போன்ற வை
ஒழிய பிரார்த்திப்போம்.
ஆண்டவன் ஆளுநர்கள்,அதிகாரிகளுக்கு உரிய பாடம் கற்பித்து அசோகர் சக்கரவர்த்தி போல் நல்லது செய்ய மனமாற்றம் அளிக்கட்டும்.
உண்மை நேர்மை யாளர்களுக்கு சக்தியளிக்க பிரார்த்திப்போம்.
அன்பே ஆண்டவன்.


No comments: