Saturday, March 18, 2023

துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-பாகம்-1.

 துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-

வால்மீகி எழுதிய இராமயணம் பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
 பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலும்
 உலகத்தில் உள்ள மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு
மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தை விட
துளசி இராமாயணம் வட பாரதத்தில் 
 ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
இராமநவமியை முன்னிட்டு துளசி இராமாயணத்தின்
 சுந்தரகாண்டத்தின் தமிழ் பொருளுரை.


ஸ்ரீ கணேசா போற்றி.
ஓம் முருகா போற்றி 
ஓம்  சிவனே போற்றி.
ஓம் துர்கையே போற்றி.
ஓம் ராமரே போற்றி.
ஓம் சீதையே போற்றி.
ஓம் ஹனுமனே போற்றி

-------------------------------------------------------

சுந்தர காண்டம் 

பகவான் இராமர்  அமைதியானவர் .
அழிவில்லாதவர் .
நிலையானவர் .
முக்தியளிப்பவர்.
 சாந்தி அளிப்பவர் .
ஆசிகள் வழங்குபவர்.
படைக்கும் கடவுள்
பிரம்மனால் வணங்கப்பட்டவர்.
அழிக்கும்  கடவுள்
சிவனால் வணங்கப்பட்டவர்.
பூமியைத் தாங்கும்
ஆதிசேஷனால் வணங்கப்பட்டவர் .
வேதங்களால் அறி்யப்பட்டவர்.
உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.
அனைத்து இறைவனைவிட உயர்ந்தவர்.
மாயையால் மனிதனாக காட்சியளிக்கும் ஹரி.
அனைத்து பாவங்களையும் போக்குபவர்.
கருணையின் சுரங்கம்.
அரசர்களில்  தலைசிறந்தவர்.
ரகுகுலத்திலகம்.
ராமர் என்று அனைவராலும்
அழைக்கப்படுகின்ற
வையக இறைவனை வணங்குகிறேன்.
என் மனதில்
என் அந்தராத்மாவில்
 எவ்வித விருப்பமும் கிடையாது.
எனக்கு முழுமையான பக்தியை அளியுங்கள்.
என் மனதில் காமம் போன்ற
 குற்றமில்லாமல் இருக்க அனுக்ரஹம் செய்யுங்கள்.

ராமரே ! ஒப்பிடமுடியாத பலம் பெற்றவரே! 
தங்கமலை போன்று
மின்னும் ஒளிரும் உடல் பெற்றவரே ! 
அரக்கர்கள் என்ற வனத்திற்கு
காட்டுத்தீ  போன்றவரே!
ஞானிகளின் தலைவரே!
அனைத்து நற்குணங்களையும் பெற்றவரே ! 
உங்களை வணங்குகிறேன்.

வானரங்களின் தலைவரான ராமரின்
ப்ரிய பக்தனாக விளங்கும்
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்

ஜாமவந்தனின் அழகான அன்பான,
பணிவான வந்தனங்கள்,வேண்டுகோள்கள்
ஆஞ்சநேயருக்கு மிகவும்  பிடித்திருந்தன.
ஹனுமான் அனைவருக்கும் தைரியம் அளித்து சொன்னார்----
நான் சீதையை கண்டுபிடித்து திரும்பும் வரை
மனத்துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயமாக சீதையைக் கண்டுபிடித்து திரும்பிவருவேன்.
எனது மனம் மிகவும் மகிழ்கிறது.
என்று கூறிக்கொண்டே
ஸ்ரீ இராமரை மனதில் அமர்த்தி 
அனைவரையும் வணங்கி
சீதையைத் தேடி புறப்பட்டார்.

இராமர் கடற்கரையை அடைந்தார்.
அங்கு ஒரு அழகான மலை இருந்தது.
அதன் மேல் மகிழ்ச்சியாக ஏறினார்.
இராமரை மனதில் நினைத்துக் கொண்டே
துள்ளிக் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் மலையானது
 பாதாளத்திற்குள் அமுங்கிவிட்டது.
இராமரின் குறிதப்பாத அம்பு போல் 
ஹனுமான் முன்னே சென்றார்.

சமுத்திரமானது ஸ்ரீஹனுமானை
இராமரின் தூதர் என்று அறிந்து 
மைனாக் மலையிடம்
ஸ்ரீஹனுமானுக்கு  ஓய்வெடுக்க இடம் கொடு என்று கூறியது.
=============================================.

    ஸ்ரீ ஹனுமான் அந்த மலையைத் தொட்டு வணங்கிக் கூறினார் --
சகோதரா! ஸ்ரீ ராமரின் பணியினை முடிக்காமல் நான் எப்படி ஓய்வெடுப்பது ?

          தேவர்கள் வாயுகுமாரன்  அன்னை சீதையைத் தேடி செல்வதை அறிந்ததும்
  அவரின் வலிமையையும் அறிவுத்திறனையும் சோதிப்பதற்காக
  பாம்புகளின் அன்னை ஸுர்ஸாவை அனுப்பினர்.
ஸுர்ஸா  ஆஞ்சனேயரிடம்  வந்து
உன்னை எனக்கு உணவுப் பண்டமாக அளித்துள்ளனர்.
இதைக்  கேட்டதும் ஸ்ரீ ஹனுமான் கூறினார்---
நான் ஸ்ரீ ராமரின் பணிக்காக அன்னை சீதையைத் தேடிச் செல்கிறேன்.
அப்பணியை  முடித்து சீதையைக் கண்டுபிடித்த செய்தியை ராமரிடம் கூறியதும்
உனக்கு உணவாக என்னை அர்பணிக்கிறேன் .  அரவங்களின் அன்னையே  என்னை செல்ல அனுமதி அளியுங்கள்.நான் சொல்வது சத்தியம்.
   ஆனால் அரவம் ஆஞ்சனேயரை செல்ல அனுமதிக்கவில்லை. வேறு வழி இன்றி தன்னை உணவாக்கிக் கொள் என்று வாயுபுத்திரன் கூறினார். 
      அரவங்களின் அன்னை  ராம பக்த அனுமானை சோதிக்க  தனது வாயை நான்கு மைல் அளவிற்கு 
 அஞ்சனை மைந்தனை  விழுங்குவதற்காகத்  திறந்தது.உடனே ஆஞ்சநேயர்  தன் உருவத்தை இரண்டு மடங்காக்கினார். ஸுர்ஸா தன் வாயை  பதினாறு மைல் அகலத்திற்குத் திறந்தது. உடனே. ஸ்ரீ ஹனுமான் தன் உடலை இரண்டு மடங்காக அதாவது 32 மைல் அளவிற்கு உருமாற்றினார்.  இவ்வாறு அதன் வாயின் அகலம் அதிகரிக்க அதிகரிக்க ஹனுமானின் உயரமும் இரண்டு மடங்கு அதிகரித்தது. அரவம் தன் வாயை நூறு மைல் விஸ்தீரணத்திற்குத்  திறந்தது.அப்பொழுது  ஹனுமா்ன் தன் உருவத்தை  மிக சிறியதாக்கினார். அரவத்தின் வாயினுள் நுழைந்து வெளியே  வந்தார். பிறகு தலை வணங்கி
சீதாதேவியைத்  தேடிச் செல்ல அனுமதி  கேட்டார்.  தேவர்கள் உன் அறிவுத் திறனையையும் பலத்தையும் சோதிக்க அனுப்பினார்கள்.அதில் நீ வெற்றி பெற்றதை நான் அறிந்துகொண்டேன்.நீ அறவுத் திறனும் பலமும் கொண்ட  கிடங்கு. நீ ஸ்ரீ ராமரின் அனைத்துப் பணிகளையும் வெற்றியுடன் செய்யும் திறமை உடையவன். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு மிக மகிழ்ச்சியடன் 
அன்னை  சீதையைத் தேடி புறப்பட்டார்.

==================================

   கடலைக்கடக்க  அங்கும் வாயு குமாரனுக்கு ஒரு சோதனை.கடலில் ஒரு அரக்கி . அவளுக்கு ஒரு
சக்தி. கடலுக்கு மேல் பறப்பவைகளை அவைகளின் நிழலைப் பிடித்தே நிஜத்தைக் கொன்று விடுவாள்.
நிழலைப் பிடித்தாலே அவைகளால்  பறக்க முடியாது.அவைகள் கடலில் விழுந்து விடும்.அதை அந்த அரக்கி தன்  உணவாக்கிக் கொள்வாள். கொல்வாள்.அவளின் மாயையை வாயு குமாரன்  அறிந்து கொண்டார்.தன் மதிநுட்பத்தால்  அந்த  அரக்கியைக்  கொன்றுவிட்டு சமுத்திரத்தைக் கடந்து சென்றார். அந்த பிரதேசமே அழகாக இருந்தது. பூஞ்சோலைகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின.பூக்களில் வண்டுகள். ரீங்கரமிட்டன. மரங்களில் பழங்களும் பூக்களும் அதிகமாக இருந்தன.
பல விதமான விலங்குகளையும் பறவைகளையும் கண்டு களித்தார்.எதிரில் ஒரு பெரிய மலையைக் கண்டு அச்சமின்றி ஏறி இலங்கையின் அழகைக் கண்டு  வியந்தார். 

      ஹனுமானின் செயல்களைக் கண்டு சிவபகவான்  தன் மனைவியிடம்  இதில் ஹனுமானுக்கு எதுவும் பெருமை இல்லை. இது இராமரின் மகிமை. எமனையும் அழிக்கும் சக்தி வருவது இராமபிரானின்  அருளாகும்.
   ஹனுமான் மலை மேல் நின்று இலங்கையைப்  பார்த்தார். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட எழில் மிக்க நகரம்.கோட்டையின் மதில் சுவர்  தங்கத்தால் ஆனது.ஒளிமயமானது. அதில் விலை உயர்ந்த இரத்தினங்கள் பதிக்கப் பட்டிருந்தன. அகலமான தெருக்கள்,கடைத் தெருக்கள் இருந்தன. அழகான நகரம் பலவாறு அலங்கரிக்கப் பட்டிருந்தன. யானைகள்,குதிரைகள்,கோவேரிக் கழுதைகள் கூட்டம 
கூட்டமாக இருந்தன. மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. தேர்களும் அதிகமாக இருந்தன.
அவைகள் அனைத்துமே  எண்ணமுடியாத அளவிற்கு இருந்தன . பல உருவங்களில் அரக்கர் குழுக்கள்.
வலிமை மிக்க படைகள்.

அங்கிருந்த காடுகள் ,தோட்டங்கள்,நந்தவனங்கள் ,பூந்தோட்டங்கள்,கிணறுகள்,படியுள்ள கிணறுகள் அனைத்துமே  அழகுள்ளதாக இருந்தன. அங்குள்ள மனிதர்கள்,நாகர்கள்,கந்தர்வர்களின் பெண்கள்
ஆகியோர்  தங்களது  ஒப்பற்ற  அழகால் முற்றும் துறந்த முனிவர்களையும் வசீகரி்த்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில் மல்லர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.அவர்கள் தங்கள் பயிற்சி மைதானத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உடல் மலைகள் போல் காட்சி அளித்தன.அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டும் சவால் விட்டுக் கொண்டும் இருந்தனர்.
      அச்சமளிக்கும் சரீர அமைப்பைக் கொண்ட பலவித வீர்ர்கள் நகரத்தின் நான்கு திக்குகளிலும் எல்லா பக்கங்களையும்  பாதுகாத்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில் துஷ்ட அரக்கர்கள் மனிர்களையும்,எருமைகளையும்,பசுக்களையும் ,கழுதைகளையும்.வெள்ளாடுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  நிச்சயமாக  இவர்கள் இராமரின் அம்பு  மழை  தீர்த்தத்தில்  வீரமரணம் அடைவார்கள் என்பதை  அறிவிக்கத்தான்  துளசிதாசர் இவர்களுடைய  கதையைக். கூறி இருக்கிறார்.

   நகரில்  அதிக எண்ணிக்கையில் கண்காணிப்புக்  காவலர்கள்  இருப்பதைக்  கவனித்த ஹனுமான் 

தன் வடிவத்தை சிறிதாக்கி. இரவில் நகரில்  நுழைவதே சரி என முடிவெடுத்தார் .

       ஹனுமான் தன் வடிவத்தைக்  கொசு போல சிறு உருவமாக மாற்றி ,
மனித வடிவில் லீலைகள்  புரியும் பகவான்  ஸ்ரீ இராமசந்திரனை  வணங்கி  இலங்கைக்குச் சென்றார்.
இலங்கையின்  நுழைவாயிலில் லங்கினி என்ற அரக்கி இருந்தாள். அவள் ஆஞ்சனேயரிடம்
என்னை அவமதித்து என்னிடம்  கேட்காமல் எங்கே  போகிறாய் ?என்று கேட்டாள் .
மேலும்  முட்டாளே!  நீ என் ரகசியத்தை அறியவில்லை. திருடர்கள்  அனைவரும் எனது உணவாவார்கள்.
இதை  அரக்கி கூறியதுமே  ஹனுமான் அரக்கியை ஒரு குத்து குத்தினார். அரக்கி இரத்த வாந்தி எடுத்து 
தரையில் விழுந்தாள். 

 அந்த லங்கினி   தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து பணிவுடன் கைகளைக் கூப்பி  சொன்னாள் ----

பிரம்மா  இராவணனுக்கு  வரம் கொடுத்து விட்டுச்  செல்லும்  போது  என்னிடம் கூறினார்----
உன்னை ஒரு குரங்கு தாக்கும்.அப்பொழுது   நீ குழப்பம் அடைவாய். அப்பொழுது அரக்கர்களுக்கு
அழிவுகாலம்  என்று அறிந்து கொள். நான் செய்த புண்ணியத்தால் ஸ்ரீராமனின் தூதனான  உன்னை என் கண்களால் பார்த்துவிட்டேன். 
 சுவர்கத்தையும்  மோட்சத்தையும்  அதனால் கிடைக்கும் சுகங்களையும் திராசின் ஒரு தட்டில் வைத்து 
மறு தட்டில்  ஒரு நொடியில் சத்சங்கத்தால்  ஏற்படும்  நன்மைகளை வைத்தால்  அந்த சுவர்க மோட்ச சுகங்கள் அந்த ஒரு நொடி சத்சங்கப் பயன்களுக்கு  ஈடாகாது. 

  அயோத்தியாவின்  அரசன் இரகுராமனை மனதில் வைத்து ஜபித்துக் கொண்டே இலங்கைக்குள் சென்று நீ வந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவும். ராம பக்தரகளுக்கு  விஷம் அமிர்தமாக மாறிவிடும். விரோதிகள்  நண்பனாகி  விடுகின்றனர்.  சமுத்திரம்  பசுவின் குழம்பின்  அளவிற்கு  ஆழமில்லால்  போய்விடும். நெருப்பு  குளிர்ச்சி  அடைந்துவிடும். 
     ==========================
21/3
  ராமரின் அருட்பார்வை  பெற்றவர்களுக்கு மேருமலை கால் தூசிக்கு சமமாகும்.
 ஹனுமான் மிகச் சிறிய வடிவம்  எடுத்துக் கொண்டு இலங்கைக்குள்  நுழைந்தார் . அவர் 
 ஒவ்வொரு மாளிகைக்கும் சென்று சீதையைத்  தேடினார் . சென்ற  இடத்தில் எல்லாம் அதிக எண்ணிக்கையில் போர் வீர்ர்களைக்  கண்டார். பிறகு  இராவணனின் மாளிகைக்குச்  சென்றார். 
ராஜமாளிகை மிகவும்  விசித்திரமாக இருந்தது. அதை வர்ணிப்பது மிகவும் கடினம் .ஹனுமான்
   
மாளிகையில்  இராவணன்  படுத்திருப்பதைக் கண்டார். ஆனால் சீதையைக் காணவில்லை.பிறகு மற்றொரு  அதிக அழகான பகவானின் ஆலயத்தைக் கண்டார்.அந்த மாளிகை இராமரின் ஆயுதமான 
வில் மற்றும். அம்புகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.அந்த அழகை வர்ணிக்க சொற்கள் கிடைக்காது.
அங்கு புதிய புதிய துளசி மரக் கூட்டங்களைக்கண்டு  வானர அரசனான ஆஞ்சனேயர் மகிழ்ச்சி அடைந்தார். 

 இலங்கை அரக்கர்களின் கூட்டங்கள் வசிக்கும் இடம். அங்கு நல்லவர்கள் இருப்பதரிது. ஆஞ்சனேயர் இப்படி  நினைத்துக் கொண்டிருக்கும் போதே விபீஷணன் எழுந்தார் . எழுந்ததுமே  இராம நாமத்தை 
உச்சரித்தார். ஹனுமான் விபீஷணனை நல்லவர்  என உணர்ந்து மகிழ்ந்தார் .இவரிடம் என்னை அறியப் படுத்திக் கொகிறேன். நல்லவர்களால். எவ்வித தீமைகளும் உண்டாகாது. பயன்களே  ஏற்படும். 

      அந்தணர் வடிவமெடுத்து ஆஞ்சனேயர்  கூப்பிட்டார் . உடனே விபீஷணர் வெளியே வந்தார் .அந்தணரை வணங்கி  அவரைப் பற்றிய விவரம் கேட்டார் . 
  நீங்கள் ஹரிபக்தரா ?  உங்களைக்  கண்டதுமே என் மனதில் அதிகமான அன்பு உண்டாகிவிட்டது.
 நீங்கள்  வறியவர்களுக்கு உதவும் ராமர் தானே? எனக்கு என் இருப்பிடத்திற்கே வந்து காடசி அளித்து 
பெரிய பாக்கியவானாக்க எழுந்தரளியிருக்கிறீரா?  என்றெல்லாம் விபீஷணர் அந்தணர் வடிவில் வந்த 
ஆஞ்சநேயரிடம் கேட்டார் . 

  ஆஞ்சனேயர் விபீஷணனிடம்  இராமருக்கு நேர்ந்த நிலையைக்  கூறி தான் யார் என்பதையும் விளக்கினார்.  கேட்டதுமே. விபீஷணன் மிகவும்  ஆனந்தமடைந்தார். ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த பண்புகளின் நினைவலைகளில் இருவரும் அன்பிலும் ஆனந்த்த்திலும்  மெய் மறந்தனர்.

     பிறகு விபீஷணன் பவனகுமாரன்  ஆஞ்சனேயரிடம் கூறினார்--- வாயுகுமாரரே! நான் பற்களுக்கிடையில் உள்ள  நாக்கு போல இங்கு உள்ளேன்.என் நிலை சரி இல்லை. சூரியகுல திலகம் 
ஸ்ரீ  ராமர் என்னை அநாதையாக ஏற்று. அருள் புரிவாரா? 
  நான்   அரக்க  உடல்   பெற்றுள்ளதால் எனது  சாதனையில் வெற்றிபெற முடியவில்லை.என் மனதில் இராமர். மீது  அன்பும்   இல்லை தங்கள் போன்ற பக்தரை சந்தித்த பிறகு இராமரின் அருள் எனக்கு கிடைத்திருக்கிறது என்ற  நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.ராமரின் அருள் இருந்ததால்  தான் உங்களுடய 
தரிசனம்  கிடைத்துள்ளது.ராமர் பக்தர் மேல்  எப்பொழுதும் அன்பு செலுத்துவது தான் அவரது நெறிமுறையாகும். நான் ஒன்றும்  உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவனில்லையே. நான் சஞ்சல மன நிலைஉள்ள வானரம்.பிறவிகளில்  மிகவும்  தாழ்ந்தவன்.   காலையில் எழுந்ததும் குரங்குகளின் பெயரைச் சொன்னால் அன்று முழுவதும் உணவு கிடைக்காது. நான் இந்த அளவிற்கு தாழ்ந்தவன்.
அப்படி உள்ள எனக்கு  இராமரின் அருள்  கிடைத்திருக்கிறது. என்று தன்னைப் பற்றி விபீஷணனிடம் கூறும் போதே ஸ்ரீஹனுமானின் கண்களில் இருந்து பக்தி பரவசத்தால் கண்ணீர் பெருக்கெடுத்தது.

     பகவானின் அருள் அறிந்தும் மற்ற லௌகீக விஷயங்களில் ஈடுபட்டு செல்லும் திசை தெரியாமல் சுற்றித் திரிவோருக்கு  இன்னல்கள் ஏன் வராது? இராமரின் பண்பினை குணத்தைப்  புகழைப்  பாடப்பாட வர்ணிக்க முடியாத அளவிற்கு தெய்வீக அமைதியைப்  பெற்றனர். 
    பிறகு விபீஷணன் அன்னை ஜானகியின் இலங்கையில் இருக்கும்  நிலைபற்றி கூறினார். ஸ்ரீஹனுமான்  சீதையின் நிலைபற்றி கேட்டறிந்ததும்  அன்னையைப்  பார்க்க வேண்டும் என்ற தன் வந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் கூறினார்.
   விபீஷணன்  சீதையைக்  காண அனைத்து உபாயங்களையும் கூறினார். ஸ்ரீஹனுமான். மீண்டும் தன் உருவத்தை மிகச் சிறியதாக மாற்றி அசோக வனத்தில் சீதை  இருக்கும் பக்கமாகச் சென்றார்.

   அங்கு. சீதையைக் கண்டதும்  மனத்திற்குள்ளேயே அவரை வணங்கினார். அங்கேயே இரவு முழுவதும் கழிந்துவிட்டது. சீதையின் உடல் மெலிந்திருந்தது. தலையில்  ஜடாமுடியின் ஒரு கொத்திருந்தது.
ஜானகியின்  துயரமான நிலை கண்டு  பவனகுமாரர்  மிகவும் வருத்தமுற்றார்.
     ஹனுமான்  மரத்தின். இலைகளில் மறைந்து அமர்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிகமான பெண்களுடன் அலங்கரித்துக்கொண்டு இராவணன் அங்கு வந்தான். 
 துஷ்டனான இராவணன் சீதையை பலவாறு தன் இச்சைக்கு அடங்கும் படி  அன்பாகவும்,  தானம் பரிசு தருவேன்  என்றும் அச்சுறுத்தியும்  தண்டனை தருவேன் என்றும்  மிரட்டினான் .பிறகு மண்டோதரி போன்ற ராணிகளை  உனக்கு அடிமையான  வேலைக்காரிகளாக்குவேன்  என்று. உறுதி மொழி அளித்தான். தனது  அன்பிற்குறிய கணவன் கோசலநாட்டு மன்னனை மனதில் நினைத்துக் கொண்டு 
அங்குள்ள  துரும்பகளைத்  திரையாக்கி அதன் மறைவி்ல் இருந்து  கொண்டு சொன்னாள்--
  பத்துத்  தலை கொண்டவனே! மின்மினுப் பூச்சி  வெளிச்சத்தில் தாமரை மலராது. நீ உன்னை அப்படியே நினைத்துக் கொள். தீய குணம் படைத்த அரக்கனே! உனக்கு  ஸ்ரீ ராமரின் பாணத்தின் மகிமை பற்றி  தெரியாது. 
  பாவியே! நீ அவர் இல்லாத போது சூனியத்தில் என்னை கொண்டுவந்துள்ளாய். நீ தாழ்ந்தவன்.வெட்கமில்லாதவன். உனக்கு வெட்கமே இல்லையா?

    தன்னை மினிப்பூச்சி என்றும் இராமனை சூரியன் என்றும்  சீதை சொன்னதுமே இராவணன் மிகவும் 
கோபம்  அடைந்து தன் வாளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு  கோபத்துடன் சொன்னான்---
சீதையே! நீ என்னை அவமதித்துவிட்டாய். நான் உன் தலை என் வாளால் வெட்டிவிடுவேன்.நான் சொல்வதைக் கேட்கவில்லை.என்
றால் நீ. உன் யிரை  இழந்துவிடுவாய். 

   பத்துத் தலையா! என் பிரபுவின்  புஜங்கள்  கருப்புத் தாமரை மலர் போன்று மென்மையானவை.அவை
யானையின் தும்பிக்கை போன்றவை. அவருடைய புஜங்கள் என் கழுத்தில் விழும் . அல்லது  உன்னுடைய வாள். ஏ பைத்தியக்காரா! இது தான் என் உண்மையான உறுதிமொழி. 

வாளே! எனது விரகதாபத் தீயால் உண்டான மிக அதிக எரிச்சலை போக்கி விடு. வாளே! நீ குளிர்ச்சியான,தீவீரமான,மேன்மையான பெருக்கத்தை ஓடச்செய்து விடுவாய்.உன்னுடைய  கூர்மை எனக்கு குளிர்ச்சியாக இருக்கும். என் மனத்துயரத்தின் சுமையைப் போக்கிவிடு.

 சீதை இவ்வாறு கூறியதுமே அவளை கொல்வதற்காக இராவணன் ஓடினான்.அப்பொழுது மயன் என்ற அரக்கனின் மகள்  மண்டோதரி அவனைத் தடுத்து அறிஉரை கூறி தடுத்தாள் . இராவணன் தன்னுடன் வந்த அரக்கப்  பெண்களிடம்  சீதையை  பல விதங்களி்ல் அதிகமாக  பயம் காட்டுங்கள். ஒரு மாதத்தில்
இவள். நான். சொல்வதை ஏற்காவிட்டால் இவளை வாளால் வெட்டிக் கொன்றுவிடுவேன். என்று கூறிவிட்டு  இராவணன் அங்கிருந்து சென்றுவிட்டான்.இங்கே ராட்சசிகள்  பல வித பயங்கர வடிவங்கள்
எடுத்து  சீதையை  பயமுறுத்தினர்.  அவர்களில் திரிசடை என்ற அரக்கி  மிக நல்லவள். இராமரின் மீது அதிக பக்தி உடையவள் . அதிக ஞானம் உடையவள்.அவள் அனைவரிடமும் தான் கண்ட கனவைக் கூறி
சீதைக்கு பணிவிடை செய்து நீங்கள் நலம்  பெறுங்கள். 
   எனது கனவில்  ஒரு குரங்கு இலங்கையை எரித்துவிட்டது.அரக்கர்களின் படைகள் முழுவதும் அழிந்துவிட்டது. இராவணன்  நிர்வாணமாக  கழுதையில் உட்கார்ந்திருக்கிறான்.அன் தலை  மொட்டை அடிக்கப் பட்டுள்ளது.இருபது புஜங்களும் வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவன் யமபுரிக்கு போய்க் கொண்டிருக்கிறான்.இலங்கைக்கு அதிபதியாக விபீஷணன் ஆகவிட்டார். நகரத்தில் அனைவரும்
இராமர் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர் . பிரபு   சீதையை அழைத்துச்  சென்றார். இந்த கனவு நான்கு  நாட்களில் மெய்யாகிவிடும். திரிஜடை  சொன்னதைக் கேட்டு  அரக்கிகள் பயந்து சீதையி்ன் கால்களில் விழுந்து வணங்கினர். 
  அனைவரும் சென்ற பிறகு  ஒரு மாதம் கழிந்த பிறகு இந்த அரக்கன் என்னைக் கொன்றுவிடுவான் என்று  சீதை நினைத்தாள். 
சீதை கைகூப்பி திரிசடையை வணங்கினாள். அவளிடம்  ஆபத்தில் என்னுடன் சேர்ந்து இருந்தாய்.நீ விரைவில் என் உயிர் போக ஒரு வழியைப் பயன் படுத்து. இந்த விரஹ வேதனையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. 
 கட்டை களைக் கொண்டுவந்து  எனக்கு சிதை மூட்டு.இராவணனின் கடும் சொற்களை என்னால் கேட்க இயலவில்லை. 

 சீதை சொல்வதைக் கேட்டு திரிசடை அவளுக்கு இராமனின் வீரத்தையும் பலத்தையும் கூறி ஆறுதல் அளித்தாள். இரவில் சிதைக்கான கட்டைகள் கிடைக்காது என்று கூறி சென்றுவிட்டாள். 

 பகவானே எனக்கு எதிராக இருக்கிறார்.நெருப்பும் கிடைக்காது.எனது மனத்துயரமும் தீராது.ஆகாயத்தில் நெருப்பு  கங்குகள் போல் நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் பூமியில் ஒரு நட்சத்திரம்கூட இல்லையே என்று சீதை மனதிற்குள் எண்ணினாள். 

நிலவும் நெருப்பு மயமே .ஆனால் அதுவும் என்னை துரதிர்ஷ்டசாலி என அறிந்து நெருப்பைப் பொழியவில்லை. அசோகமரமே! எனது வேண்டுகோளை ஏற்று எனது மனவேதனைகளைப்  போக்கி 
உன்னுடைய பெயரான துன்பத்தை போக்கு என்பதை மெய்ப்பித்து விடு. உன்னுடைய  மென்மையான 
இலைகள் நெருப்பைப் போன்றவையே. நெருப்பை மூட்டி எனது பிரிவுத்துயரத்தைப் போக்கிவிடு.

  சீதையின் விரக வேதனையைக் கண்ட  அனுமானுக்கு அந்த நொடி  ஒரு கல்பத்திற்கு சமமாக இருந்தது . சீதைக்கு தைரியம் கொடுக்க ஆஞ்சனேயர் ராமரின் கணையாழியை சீதையின் முன் போட்டார். சீதை அது ராமருடையது என அறிந்து எடுத்துப் பார்த்தாள்.அதில் இராமருடைய பெயர் பொறித்திருப்பதைப்  பார்த்து சீதை ஆச்சரியப்பட்டாள். மகிழ்ச்சி அடைந்தாள். ராமரை நினைத்து பிரிவுத் துன்பத்தால் வேதனையடைந்தாள்.பிறகு  ராமர் வீரர். அவரை ஒருவரும்  வெல்லமுடியாது. எந்த மாயையும் இப்படி ஒரு மோதிரத்தை செய்ய முடியாது.இப்படி சீதை  மனதில் பல வித எண்ண அலைகள் அலைபாயும் போது  அனுமான் இனிய  சொற்களால்  பேசினார்--இராமரின் புகழைப் பாடினார். அதைக் கேட்டதும் சீதையின் துயரம். பயந்தோடிவிட்டது.அனுமான் சொல்வதை அவர் கவனமாகக் கேட்டார்.
ஆரம்பத்தில் இருந்து  முழுகதையையும்  அனுமான் கூறினார். 
   என்  காதிற்கு  இனிய  அமிர்தமான சொற்களைக்கூறி மகிழ்வித்தவர் எனக்கு எதிரி்ல் ஏன் வரவில்லை என்றார். உடன் அனுமான் சீதைக்கு முன் வந்தார். அவரைப் பார்த்த்தும் சீதை முகத்தைத் திருப்பிக் கொண்டார். 
அப்பொழுது அனுமான் சீதையிடம். நான் ராமனின்  தூதன். அன்னை ஜானகியே! நான் கருணை வடிவான ராமரின்  மீது சத்தியமாகக்  கூறுகிறேன். அன்னையே! இந்த மோதிரத்தை நான் தான் 
கொண்டுவந்தே
ன். நான் அவர் தூதன்.அற்கு சான்றுதான் இந்த மோதிரம் .
 மனிதருக்கும் வானரத்திற்கும் எப்படி சேர்க்கை ஏற்பட்டது?என்று சீதை வினவ  அனுமான் விவமாக 
 இராமருக்கும் அனுமானுக்கும்  ஏற்பட்ட தொடர்பு பற்றி கூறினார். அனுமானின் அன்பு நிறைந்த 
விரங்களைக் கேட்டு  சீதைக்கு  அனுமார் மனதாலும்,சொல்லாலும் செயலாலும்  அருட் கடல் ராமரின் தாசர் தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.  ராமரின் அன்பிற்குறியவர் அனுமான் மீதுமிகவும் ஆழமான  அதிக அன்பு உண்டாகியது. உடலில் ஆனந்தம்  ஏற்பட்டது.கண்களில் கண்ணீர்  பெருக்கெடுத்தது. அனுமானே!  பிரிவுத் துயரக்கடலில். மூழ்கும் எனக்கு என்னை மீட்க வந்த கப்பல்
போன்றவன் நீ. இராமன-லட்சுமணனின் நலத்தைப் பற்றி கூறு.ராமர்  மென்மையான மனமும் கிருபாகடாட்சமும் கொண்டவர்.  ஏன் இப்படி இரக்கமற்ற முறையைக் கையாள்கிறார். தொண்டனுக்கு சுகம் அளிப்பது அவரது  இயற்கை  குணம்.  அவர் என்னை நினைவில் வைத்துக்கொண்டுள்ளாரா?
அவரது  மென்மையான  உருவம்  கண்டு என் கண்கள் குளிர்ச்சியடையுமா?என்னால் பேச முடியவில்லை.
கண்களில்  இருந்து  கண்ணீர் பெருக்கெடுத்தது. நாதா! நீங்கள். என்னை  முற்றிலும்  மறந்து விட்டீரகள்.
  சீதையின் ஆற்றொனாத் துயர் கண்டு  பணிவாக மென்மையாக பேசினார்--ஸ்ரீராமரும் இலக்குவனனுடன் நலமாக இருக்கிறார். ஆனால் உங்கள் நினைவாகத்தான் வருத்தமாக இருக்கிறார்.
இராமரின் இதயத்தில் உங்கள் மீது  அதிக அன்பு இருக்கிறது. நீங்கள் தைரியமாக இருங்கள். அனுமான்  அன்பினால் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். 
பின் ராமரின் செய்தியாகக் கூறினார்-- ராமர் சொல்கிறார்   - சீதையே! உன்பிரிவால்  எனக்கு எல்லாமே 
அனுகூலமற்றதாக இருக்கின்றன. மரங்களின் துளிர் இலைகளும் நெரு்பு போல் இருக்கின்றது.இரவு பயங்கரமாக உள்ளது. நிலவு  சூரியனைப் போல் சுட்டெரிக்கிறது. தாமரை வனங்கள் ஈட்டிகளின் வனங்கள் போல் இருக்கின்றன. எனக்கு நல்லது செய்வதெல்லாம் இப்பொழுது இன்னல் தருவது போல் இருக்கின்றன. காற்று கூட மூச்சுக் காற்றுபோல் சூடாக இருக்கின்றது. பாம்பு  சுவாசிப்பது போல் விஷம் கலந்த வெப்ப காற்றுபோல இருக்கிறது. மன வேதனை சொன்னால் வேதனை குறையும்.ஆனால் யாரிடம் பகர்வேன். இந்த வேதனையை ஒருவரும் அறியமாட்டார்கள். உனக்கும் எனக்கும் உள்ள காதல் தத்துவம் எனக்கு மட்டும் தான் தெரியும். என் மனம் எப்பொழுதும் உன்னருகில் தான் இருக்கிறது. என் அன்பின்  சாரம் இதுதான். இராமரின் அன்பான செய்திகளைக் கேட்டு  சீதை தன் மெய்மறந்து விட்டாள். அன்பில் ஐக்கியமாகிவிட்டாள்.
  ஹனுமான் அன்னையிடம் இராமர் மீது நம்பிக்கை வைத்து மனதில் தைரியமாக இரு. தன் பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்மைகளையும் சுகங்களையும் தரக்கூடிய ஸ்ரீராமனை ஜபம் செய்.  ஸ்ரீராமரின் மகிமையை மனதில் இருத்தி கோழைத் தனத்தை விட்டுவிடு.
   அரக்கர்கள் கூட்டம் விட்டிற் பூச்சிகள்  போன்றது.அந்துப் பூச்சிகள் போன்றவை. ஸ்ரீ ராமரின் பாணம்
நெருப்பு போன்றது. அன்னையே! அரக்கர்கள் எரிந்துவிட்டனர் என்றே அறிந்துகொள். 
    ஸ்ரீராமருக்கு உங்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் தாமதிக்கமாட்டார்.அன்னையே!ஸ்ரீராமரின் அம்பு என்ற சூரியன் உதித்ததுமே அரக்கர்கள் படைகள் என்ற இருள் அகன்றுவிடும். 
 அன்னையே! இப்பொழுதே நான் தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லமுடியு்ம்.ஆனால் இராமசந்திர பிரபு எனக்கு அனுமதி அளிக்கவில்லை. சில நாடகள் பொறுமையாக இருங்கள்.
ஸ்ரீஇராமர் வானரப்படைகளோடு இங்கு வருவார். அரக்கர்களைக் கொன்று உங்களை அழைத்துச் செல்வார். நாரதர் போன்ற முனிவர்கள் மூன்று உலகங்களிலும் உன் புகழைப் பாடுவார்கள்.
  சீதை மனதில் சிறிய வடிவில் உள்ள அனுமனைக்கண்டதும் சந்தேகம் எழுந்தது. அவர் அனுமானிடம்,
வானரங்கள் அனைத்தும் உன்னைப்போல் சிறிதாக இருப்பார்களா?இவ்வளவு பெரிய அரக்கர்களை எப்படி  எதிர்த்து. போரிடமுடியும்? இதைக் கேட்டதும்  அனுமான் தன் அட்டமா சக்தியால்் தன்் உண்மையான பெரும் வடிவத்தில் தோன்றினார்.பொன் மலை போன்ற உடல். அவரைப் பார்த்தாலே எதிரிகள் அஞ்சும் உடலமைப்பு.பலமும் வீரமும் கொண்ட தோற்றப்பொலிவு. 
    ஸ்ரீஹனுமானின்  உண்மையான தோற்றம்  கண்டு  சீதை மனதில் இருந்த ஐயம் விலகியது.மனதில் 
திடமான நம்பிக்கை ஏற்பட்டது. 

  ஹனுமான். மீண்டும்  சிறிய. வடிவம் எடுத்துக் கொண்டார்.  
அன்னையே! வானரங்களுக்கு   அறிவு  மட்டு. பிரபுவின் பிரதாபத்தால்  சிறிய  பாம்பும்  கருடனை சாப்பிட முடியும். மிகவும் பலமற்றவனும் மிக  பலமுள்ளவனைக் கொல்ல முடியும்.  
   பக்தி, வீரம் ,பலம், தேஜஸ் மிக்க அனுமானின் வார்த்தைகளைக் கேட்டு சீதைக்கு மனநிறைவு ஏற்பட்டது. ஸ்ரீராமரின் அனபிற்குறிய அனுமானுக்கு ஆசிகள் வழங்கினார். 
அனுமானை மகனே என்று அழைத்தார். நீ பலமானவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் இரு.நீ முதுமை இன்றி எப்பொழுதும் இளமையாக இருப்பாய். உனக்கு மரணமில்லை.ஸ்ரீராமர் உனக்கு அருள் பரியட்டும்.
பிரபு அருள் புரியட்டும் என்று அன்னை சீதை கறியதுமே அனுமான் அதிக ஆனந்தமடைந்தார். 
சீதையை மீண்டு்ம் மீண்டும் வணங்கினார். பிறகு இருகரங்களையும் கூப்பி ,''அன்னையே! இப்பொழுது நான் வெற்றிபெற்றுவிட்டேன். உங்களது ஆசிகள் சக்திமிக்கவை.புகழ் பெற்றவை. 
    பழங்கள் நிறைந்த மரங்களைக் கண்டதும் எனக்கு பசி எடுக்கிறது. மகனே!மிகப் பெரிய வீர்ர்கள் இவைகளைக்  காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சீதை கூறியதும் ஹனுமான் ,அன்னையே!
நீங்கள். மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டால் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை.
  
ஹனுமானின்  அறிவுத் திறனையும் பலத்தையும் கண்டு சீதைஅனுமானிடம் கூறினார்---மகனே!ரகுநாதனை  மனதில் வைத்துக் கொண்டு   இனிப்பான பழங்களைச்  சாப்பிடு.  
   ஸ்ரீஹனுமான் சீதையை வணங்கி விட்டு  தோட்டத்திற்குள் புகுந்து பழங்களை சாப்பிட்டார்.மரங்களின் கிளைகளை முறித்தார். அங்கு பல போர் வீரர்கள்  காவலுக்கு இருந்தனர்.
அவர்களில் சிலரை அனுமான் கொன்றுவிட்டார். சிலர் இராவணனிடம் புகார்  கொடுக்கச் சென்றனர் .
அவர்கள இராவணனிடம் அசோகவனத்தில் பெரிய குரங்கு வந்து பழங்களை சாப்பிட்டது.மரங்களை முறித்தது. சில வீர்ர்களைக்  கொன்றுவிட்டது. 
 இதைக் கேட்டு இராவணன் அதிக வீரர்களை  அனுப்பினான். அவர்களைப் பார்த்து கர்ஜித்தார். பல வீரர்களைக்  கொன்றுவிட்டார். சிலர் அடிபட்டு கத்திக் கொண்டே சென்றனர். 
   பிறகு இராவணன் அட்சயகுமாரனை அனுப்பினார்.அவன் பெரும்படையுடன் சென்றான். அவன் வருவதைப் பார்த்து  இராமன் பெரிய மரத்தைப்  பிடுங்கி அவனைக் கொன்று பெரும் ஓசையுடன் கர்ஜித்தார்.அனுமான் சேனையில்  சிலரைக் கொன்றார்.  சிலரை  நசுக்கினான்.சிலரை மண்ணோடு 
மண்ணாக்கினார்.சிலர் இராவணனிடம் சென்று   அனுமான் பெரிய பலசாலி என்று கூறினர். 
    மகன் வதம் செய்யப் பட்ட செய்தி  அறிந்து தன் மூத்த மகன் பலசாலியான மேகநாதனை அனுப்பினார். அவனைக்  கொன்றுவிடாதே. அவனைக் கட்டி உயிருடன் அழைத்துவா. அந்த குரங்கு எங்கிருந்து வந்திருக்கிறது? 
 இந்திரனையே தோற்கடித்த ஒப்பில்லா வீரன் மேகநாதன் அனுமானுடன் போர் புரியச் சென்றான்.தன் சகோதரனைக்  கொன்ற செய்தி அறிந்து மேகநாதன் மிகவும் கோவமாக இருந்தான். அனுமான் பயங்கரமான போர்வீரன் வருவதைப் பார்த்தார். அவர் கர்ஜித்துக் கொண்டே ஓடினார். ஒரு மிகப்பெரிய 
மரத்தை வேரோடு பிடுங்கி மேகநாதனின் தேரை ஒடித்து அவனுக்குத் தேர் இல்லாமல் செய்தார். அவனுடன் வந்த வீரர்களை அழிக்க ஆரம்பித்தார். அனைவரையும் கொன்று விட்டு மேகநாதனுடன்
போர் புரியத் தொடங்கினார். இரண்டு யானைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் இருந்தது. அனுமான் மேகநாதனை ஒரு குத்து குத்திவிட்டு மரத்தின் மீதுஏறினார். அவனுக்கு ஒரு நொடியில் மயக்கம் தெளிந்தது.  அவன் எழுந்து அனுமான் தன்னை வெல்ல முடியாத அளவிற்கு மாயைகள் புரிந்தான். ்ஆனால் அவனால் வெல்ல முடியவில்லை.இறுதியில் அவன் பிரம்மாஸ்த்திரத்தை 
பிரயோகித்தான். அனுமான் பிரம்மாஸ்த்திரத்தின்  மஹிமை குறைந்துவிடக் கூடாது என கட்டுண்டிருந்தான்.அவன் அனுமான் மீது பிரம்ம பாணத்தை ஏவினான்.அது தாக்கியதுமே அனுமான் மரத்தில் இருந்து விழுந்தார்.விழுந்து கொண்டிருந்த நிலையிலும்  பல படைவீர்ர்களைக் கொன்றார்.
ஹனுமான் மயக்கமடைந்த பிறகு  மேகநாதன் அவரை நாகபாசத்தால் கட்டி எடுத்துச் சென்றான்.
  குரங்கு கட்டப்பட்ட செய்தி அறிந்ததும் வேடிக்கை பார்க்க அரக்கர்கள் எல்லோரும் அவைக்கு வந்தனர். ஹனுமான் இராவணனின் அரசவையைப் பார்த்தார்.அங்கு வர்ணிக்க முடியாத அளவிற்கு
ஜஸ்வர்யங்கள் இருந்தன.
   தேவர்களும் திக்பாலகர்களும் மிகவும் பணிவுடனும் ்பயத்துடனும் இராவணனின் கோபமான முகத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தனர்.அவனுடைய  வீரத்தையும் மகிமையை அறிந்தும் பார்த்தும் ஹனுமான் அஞ்சவில்லை.அவர் பாம்புகளின்  கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் கருடன் போன்று
பயமின்றி இருந்தார்.
  இராவணன் அனுமானைப் பார்த்துஉ தீயசொற்களைக் கூறி அட்டகாசமாக சிரித்தான். ஆனால் மகனின் மரணத்தை நினைத்து  வருந்தினான். 
  பிறகு ஹனுமானைப் பார்த்து கேட்டான்--" நீ யார்?யாருடைய பலத்தால்  நீ காட்டை பாழ்படித்தினாய்?
நீ என்னுடைய பெயரையும் புகழையும் கேள்விப்படவில்லையா?பைத்தியக்காரா! எனக்கு  முன்னால் நீ அச்சமின்றி இருக்கிறாயே! நீ. அசுரர்களை  எந்த குற்றங்களுக்காகக்  கொன்றாய்?முட்டாளே! உனக்கு 
உன் உயிர் போய்விடும் என்ற பயம். இல்லையா?
ஸ்ரீஹனுமான் விடைபகர்ந்தார்--என் பலம்  படைத்தல்,காத்தல்,அழித்தல் புரியும் பிரம்மா,விஷ்ணு,
மஹேஷ்  வலிமை. பிரம்மாண்டத்தை,மலைகள்,வனங்களைத் தாங்கும் ஆயிரம்தலை கொண்ட ஆதிஷேசன் பலம்.தேவர்களைக் காக்க பலவித்த அவதாரங்கள் எடுத்தவர் பலம்.உன்னைப் ்போன்ற 
முட்டாள்களுக்கு தண்டனை கொடுக்கும் பலம்.சிவ தனுஷைஐ உடைத்தபலம்.அதனால் அரசர்களின் ஆணவத்தை தூள் தூளாக்கியபலம். கரன்,தூசன்,திரிசடை,வாலி போன்றோரை வதம் செய்தபல்.யாருடனும் ஒப்பிட முடியாதபலம்.  
 அந்தபலத்தின் சிறிதளவு பலத்தால் உலகம் முழுவதையும் நீ வென்றுள்ளாய்.அந்த அதிக பலம்
உள்ளவரின் மனைவியைத் திருட்டுத் தனமாக கொண்டுவந்துள்ளாய். நான் அந்த சர்வ வல்லமை பெற்றவனின் தூதன்.

 நான் உன் மஹிமையை நன்கு அறிவேன். ஸஹஸ்ரபாஹுஉடனும் வாலியிடமும் போரிட்டு வெற்றிபெற்று புகழ் பெற்றுள்ளாய். அரக்கர்களின் தலைவனே!எனக்கு பசி எடுத்தது.ஆகையால் மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்டேன். குரங்குகளின் குணப்படி மரங்களை ஒடித்தேன்.தீயவழியில் செல்லும் துஷ்ட அரக்கர்கள் என்னை. அடிக்கத் தொடங்கினர்.உடல் அனைவருக்கும் அதிகப் பிரியமானது.என் உயிர் காக்க அவர்களைக் கொன்றேன்.அதனால் உன் மகன் என்னைக் கட்டிக் கொண்டுவந்து விட்டான். நான் என் பிரபுவின் பணிக்காக வந்தேன்.
இராவணா! நான் கைகூப்பி வேண்டுகிறேன்.நீ உன் ஆணவத்தை விட்டுவிட்டு  என் அறிவுரையைக் கேள்.நீ உன் பவித்திர குலத்தின் மேன்மைக்காக உனது பிரமையை விடுத்து பக்தர்களின் பயம் போக்குவதற்காக பகவானை  பஜனை செய்யவும். அனைத்து உலகப் படைப்புகளையும் அழிக்கும் எமனே  ராமரைக் கண்டு அஞ்சுவார்.அவரைப் பகைத்துக் கொள்ளாதே. நான் சொல்வதைக் கேட்டு
சீதையை கொடுத்துவிடு.

 கரனின் விரோதியான ஸ்ரீ ரகுநாதன் அடைக்கலமானவர்களைக் காப்பவர். இரக்கக் கடவுள்.நீ சரணடைந்தால் உன்னுடைய குற்றங்களை மன்னித்து அடைக்கலம் தருவார். ஸ்ரீராமரை மனதில் 
வைத்து இலங்கையை  ஆட்சி செய்.
 தங்கள் தந்தை ரிஷி புலஸ்த்யரின் புகழ்  களங்கமற்ற நிலவைப் போன்றது. அந்த நிலவில் நீ களங்கமாகி விடாதே. 
  ராம நாமம்  இன்றி சொல்லிற்கு அழகு இருக்காது. மோகத்தையும் ஆணவத்தையும் விடுத்து  எண்ணிப்பார். அடே! தேவர்களின்  எதிரியே! ஆபரணங்களால் தன்னை அலங்கரித்த  அழகான பெண் 
ஆடையின்றி நிர்வாணமாக இருந்தால் அழகாக இருக்கமாட்டாள். இராமனை எதிரியாக நினைப்பவர்களின் செல்வமும் மஹிமையும் இருந்தாலும் பயன் இன்றி அழிந்து விடும். செல்வங்கள் பெற்றாலும் பெறாததற்கு  சமம். நீர் ஊற்றுள்ள  நதிமூலம்  இல்லாத ஆறுகளில் மழைகாலத்தில் தண்ணீர் ஓடும்.  மழை நின்றதும் வரண்டுவிடும்.  ராமனை எதிரியாகக் கருதுபவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.ஆயிரம்  சிவன்கள்,விஷ்ணுக்கள,பிரம்மாக்கள் உடன் இருந்து அருள் பாலித்தாலும்  அவர்களால்  தப்பிக்க முடியாது.

அனைத்திற்கும் மூலமாக இருப்பது மோகம் தான்.  அது அறியாமையை உண்டாக்கும் அதிக இருண்ட வாழ்க்கையைத் தரும் மோகத்தையும் ஆணவத்தையும் விட்டுவிடு.கருணைக் கடலான ரகுகுலத் திலகமான இராமச்சந்திரனை  பஜனை செய்.  
 ஸ்ரீ ஹனுமான் இராவணனுக்கு பக்தி,ஞானம்,வைராக்கியம் ,நீதி  ஆகிய அறிவுரைகள் வழங்கினாலும் 

மிகவும் ஆணவம் கொண்ட  இராவணன் ஹனுமானை பரிகாசம் செய்தான். நமக்கு ஞானோபதேசம் செய்ய ஓரு குரங்கு  குருவாகக்  கிடைத்துள்ளார் என்றான்.
ஹனுமானைப் பார்த்து துஷ்டனே!நீச்சனே! எனக்கா பாடம் புகட்டுகிறாயா ?உனக்கு மரணம் நெருங்கி விட்டது என்றான். 
இதைக் கேட்டதும் ஹனுமான் உனக்குத் தான் மரணம் நெருங்கிவிட்டது. எனக்கல்ல.உனது அறிவு  மழுங்கிவிட்டது என்பதை நான் நேரடியாக காண்கிறேன்.







   

  

  
 


 



 




 

 


   



  




  

Friday, February 10, 2023

சுந்தரகாண்டம்

       ராவணனின்  அவையில்  மால்யவான்  என்ற  

  அறிவுமிகுந்த  அமைச்சர்  இருந்தான்.  

   அவன்  விபீசணனின் சொற்களைக்  கேட்டு 

  மகிழ்ந்து  சொன்னான் : --

 அரசே! உங்கள்  தம்பி  விபீஷணன்  நீதிவான்.

 அவர் சொல்வதை  ஏற்றுக்கொள்ளுங்கள்.

 

  ராவணன்  சொன்னான்: --

இந்த  இருவரும்   விரோதியை  

புகழ்ந்துகொண்டிருக்கின்றனர் ,

யார்  அங்கே!  இவர்களை  வெளியேற்றுங்கள்.

உடனே  மால்யவான்  வீட்டிற்குத்  திரும்பி  சென்றான். 

   விபீஷணன்  மறுபடியும்  கைகூப்பி  

வணங்கி    சொன்னான் -:--

 நல்ல  அறிவு ,கெட்ட  அறிவு,

எல்லோரின்  மனதிலும்  இருக்கிறது.

 நல்ல  அறிவு  இருக்கும்  இடத்தில்  

எல்லாவித  சுகங்களும்  சொத்துக்களும்  உள்ளன. 

 கெட்ட  அறிவு உள்ள  இடத்தில் துயரம்தான்  இருக்கும்.

  உங்கள்  மனதில்  தீய  அறிவு  வந்து  அமர்ந்து விட்டது. 

ஆகையால் நீங்கள் நன்மையை  தீமையாகவும் 

 விரோதியை நண்பனாகவும்  கருதுகிறீர்கள். 

அரக்கர்கள்  குலத்திற்கு  எமனாக இருக்கும்  

சீதையின் மேல்  உங்களுக்கு  

அன்பு  ஏற்பட்டுள்ளது.

அண்ணா!  உங்கள்  பாதங்களைப் பிடித்து  வேண்டுகிறேன்: --

என்னுடைய  வேண்டுகோளை  ஏற்றுக்கொள்ளுங்கள்.

 நீங்கள் தீமையில் இருந்து  தப்பிக்க ,

காத்துக் கொள்ள  சீதையை ராமரிடம்  அனுப்பிவிடுங்கள். 

  விபீஷணன்  வேதங்கள் ,பண்டிதர்கள், புராணங்களில்  இருந்து 

 பல  நீதிகளை எடுத்து  வர்ணித்தான்.

ஆனால்  ராவணனுக்கு  அவன்  சொற்களைக்  கேட்டு 

 மிகவும்  கோபம் வந்துவிட்டது.

அவன்  துஷ்டா! உனக்கு  சாவு  நெருங்கிவிட்டது  என்றான்.

  என்  சாப்பாட்டை சாப்பிட்டு  வாழ்பவன்  நீ . 

முட்டாளே!  நீ  விரோதியை  விரும்புகிறாய். அவனைப் புகழ்கிறாய்.  அடே ,துஷ்டா!சொல், இந்த  உலகில்  நான்  வெற்றி பெறாத  சக்தி  உண்டா ?

என் நகரத்தில் இருந்து கொண்டு  தபசிகளைப்  புகழ்கிறாய். நேசிக்கிறாய்.  அவர்களிடம்  சேர்ந்து  அவர்களுக்கு  நீதியைச்  சொல். இப்படி  சொல்லிவிட்டு  ராவணன் அவனை  உதைத்துவிட்டான்.  உதைத்தாலும் விபீஷணன்  அவரின் கால்களைப் பிடித்துக்  கெஞ்சினான்.

    இந்த  நிகழ்ச்சியைப்  பார்த்து ,சிவா பகவான்  உமாவிடம்  சொன்னான்--

 உமா!  சாதுக்களுக்கு  உயர்ந்த  குணமே இதுதான்.  இதுதான் அவர்கள்  மகிமை.  தீங்கு விளைவித்தாலும்  நல்லதே  செய்வர்.


  அங்கு  விபீஷணன் ராவணனிடம்  சொன்னான் --நீங்கள்  என்  தந்தையைப்  போன்றவர். என்னை  அடித்ததும்  நல்லதே.  ஆனால் உங்களுக்கு  ராம பஜனையில் தான் நலமுண்டாகும் . 


பிறகு  சத்தமாக  சொன்னான்--ஸ்ரீராமர்   சத்தியமானவர். உறுதிவாய்ந்தவர்.   ராவணா! உன்னுடைய சபை  எமனின் வசத்தில்  உள்ளது.   ஆகையால் நான்  ராமரை சரணடைகிறேன். என்னைக்  குறைகூறாதே. பின்னர்  தன  மந்திர்களுடன்  ஆகாய  மார்க்கத்தில் ராமரிடம்  சென்றான். 

   விபீஷணன்  இவ்வாறு 

  சொல்லி  சென்றதுமே 

  அரக்கர்களின்  மரணம்

  நிச்சயிக்கப்பட்டுவிட்டது.


  சிவபகவான்   பவானியிடம்  சொன்னார் --

  ஒரு  சாதுவை நல்லவனை

  அவமானம்  செய்தால்

 உடனே  நடக்கக்கூடிய அனைத்து  

 நலமும்  நாசமாகிவிடும்.


    விபீஷணன்  ராவணனை 

  விட்டுவிட்டு  சென்றதுமே 

 அவன் ஒரு  துரதிர்ஷ்டசாலி  ஆகிவிட்டான்.

 அவனுடைய  வைபவங்கள்

 எல்லாம்  போய் விட்டன. 

     விபீஷணன்  மிக்க  மகிழ்ச்சியுடன் 

    மனதின்  பலவித 

  கனவுகளுடன்

  ஸ்ரீ ராமனிடம்  சென்றான்.


 விபீஷணன்   , ராமபகவானின்

 மென்மையான  சிவப்புவண்ண 

அழகான  தாமரைக்கால்களை பார்ப்பேன். 

அதுதான்  தொண்டர்களுக்கு சுகம்  அளிக்கக்  கூடியது. 


அந்த  பாதங்கள்  பட்டு 

 கல்லான  அஹல்யாவிற்கு 

 மோக்ஷம்  கிடைத்தது, 

தண்டகாரன்யவனம் புனிதமாகியது .


சீதையின்  இதயத்தில்  இடம் 

 பெற்ற  சரணங்கள் அவை.

 கபடமான  பொன்மானை  விரட்டிச்  சென்ற  பாதங்கள்  அவை. 

 அந்த  தாமரை  சரணங்கள் சிவபகவான்  இதயத்தில்  இடம்பெற்றுள்ளன. 

 என்  அதிர்ஷ்டம் அவரை  இன்று  தரிசனம்  செய்வேன்.

  பரதன்  தன்  மனதில்  இடமளித்த

 

பாதங்களை  இன்று 

என்  கண்களால்  பார்ப்பேன்.

இவ்வாறு  நினைத்துக்கொண்டே 

 மிக  விரைவாக  சமுத்திரத்தின்  

அக்கரையை  அடைந்தான்.

வானரங்கள்  விபீஷணனைப்  பார்த்ததும் 

அவனை எதிரியின்  தூதன்  என  நினைத்தன.


அவனை  காவலில்  வைத்துவிட்டு  

சுக்ரீவனிடம்  செய்தி சொன்னார்கள்.

சுக்ரீவன்  ராமரிடம் 

 ராவணன் தம்பி விபீஷணன் உங்களை  சந்திக்க 

 வந்துள்ளான்  என்றான்.

   ராமன் சுக்ரீவனின் 

 கருத்தைக்  கேட்டான். 

சுக்ரீவன் , மகாராஜா! 

அரக்கர்களின்  மாயை 

அறிய  முடியாது. 

அவர்கள்  ஏமாற்றுக்காரர்கள். 

தங்கள் விருப்பப்படி  உருவத்தை  மாற்றிக் கொள்வார்கள். 

இவன்  வந்த காரணம்  தெரியவில்லை. 

இந்த  முட்டாள்  நம் ரகசியத்தை  அறிய  வந்திருக்கிறான்.

 இவனைக் கட்டிவைப்பதுதான் சரியெனப் படுகிறது என்றான்.


    ராமர்,  நண்பரே!

  நீ  நன்றாகவே   எண்ணியுள்ளாய். 

 உன்னுடைய நீதி சரியே. 

 ஆனால்  அடைக்கலம் வந்தவனின் 

 பயத்தைப்  போக்கவேண்டும்.


  ஸ்ரீ  ராமரின்  சொல்லைக்கேட்டு 

 ஹனுமான்  மிகவும்  மகிழ்ந்தார்.  

கடவுள்  சரணாகத்வத்சலர்  . 

அதாவது சரணடைந்தவரை 

 விரும்பு பவர். 

  ராமர்  மேலும்  சொன்னார் :--

  தனக்கு  வரும்  தீமையை  யூகித்து

 அடைக்கலமாக  வந்தவனை 

 விட்டுவிடுபவன்  பாமரன்.

அவன்  பாவி. 

 அவனைப் பார்த்தாலே  பாவம். தீங்குவரும். 

  ஆயிரக்கணக்கான   அந்தணர்களைக்  

  கொன்று பாவியாகவந்தாலும் ,

 அடைக்கலம்  என்றுவந்தால்

 அவனை விடமாட்டேன்.

  எந்த ஜீவனும்  என் முன்

  வந்தால் அவனின்  கோடிக்கணக்கான

  ஜென்மங்களின் 

 பாவமும் போகிவிடும். 

  பாவிக்கு  என்மேல்  பக்தி  ஏற்படாது. 

 அது  அவர்களின்  இயற்கை  குணம். 

ராவணனின் சகோதரன்

 தீய  மனமுள்ளவனாக  இருந்தால் 

என்  முன் வரமுடியுமா ?

 களங்கமற்ற புனித  மனமுள்ளவனுக்குத்தான்

  என்னைப்  பிடிக்கும். 

எனக்கு  கபடமும் வஞ்சனையும்  

 உள்ளவனைப்  பிடிக்காது. 

அவன்  ராவணனின் உளவாளியாக  வந்தாலும் 

எனக்கு  எவ்வித  தீங்கும்  ஏற்படாது. 

 தோழனே! சுக்ரீவா! உலகில்  எத்தனை  அரக்கர்கள்  

 இருந்தாலும்  ஒரு நொடியில்  என் தம்பி 

 இலக்குவன்  அழித்துவிடுவான் . 

அவன்  பயந்து  என்னிடம்   அடைக்கலமாக  

 வந்தால் அவனைக்  காப்பாற்றுவேன்.

என் உயிர் போல்  கருதுவேன். 

  அவன்  தூதனாக வந்தாலும் 

 நண்பனாக  வந்தாலும் 

 அழைத்துவா.

 ராமரின்  ஆலோசனை  கேட்டு

ஹனுமான், சுக்ரீவன் மற்றும் அங்கதன்  மூவரும் 

 "கிருபை  காட்டும் ராமருக்கு  ஜய்" 

 என்ற  முழக்கத்துடன்  புறப்பட்டனர். 


    வானரர்கள் மிக்க  மரியாதையுடன்  

 விபீஷணனை  ஸ்ரீ ராமரிடம்  அழைத்துச்  சென்றனர்.

  விபீஷனான்  ராம லக்ஷ்மணரை

   தொலைவில்  இருந்தே   பார்த்து  

 மிகவும்  மகிழ்ந்தான்.

  இருவருமே  கண்டதும் சுகமளிக்கும் 

  தோற்றப்  பொலிவு உடையவர்கள்.


      அழகின்  இருப்பிடமான  ராமரைக்  

   கண்மூடாமல்  பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.

பகவானின்  நீண்ட விசாலமான புஜங்கள்,

  செந்தாமரைக்  கண்கள்,  

   அடைக்கலமாக  சரணடைந்தவர்களின் 

  பயத்தைப் போக்கும்  கருநீலநிறமுடைய  உடல்.


   சிங்கத்தின்  தோள்கள் , அகன்ற  மார்பு ,எண்ண முடியா 

  காமதேவர்களின் மனதை  கவரும்

 ( மோஹிக்கும் )  முகம்.


   இந்த  அழகிய  முகம்  கண்டு  

   விபீஷணனின்  கண்களில் 

  அன்பும்  ஆனந்தமும்  நிறைந்த  கண்ணீர் 

   பொங்கி வழிந்தது .

  மிகவும்  ஆனந்தமடைந்தான், 

  பிறகு  மன தைரியத்துடன்  சொன்னான்--

  அரசே !  நான்  பத்துத்தலை  இராவணனின்   சகோதரன்.

  தேவர்களைக்  காக்கும்  நாதா!

    நான்  அரக்கர்கள்  குலத்தில்    பிறந்துள்ளேன்.

 நான்  தாமச குணமுள்ளவன்.   

 ஆந்தைக்கு இரவில்  இருட்டு  எப்படி 

  இயற்கையாக  விருப்பமோ   அவ்வாறே  

  எனக்கு    பாவச்செயல்  மிகவும்  விருப்பம்.


  நான்  உங்களின்  புகழ்  கேட்டு  வந்துள்ளேன்.  

 நீங்கள் பிறப்பு -இறப்பு   பயம்  போக்குபவர் .  

  துயரப்படுபவர்களின்   துயரம்  போக்குபவர்.  

  அடைக்கலமாக  வந்தவரை  காப்பாற்றுபவர்.

  என்னை  ரக்ஷியுங்கள்.



 விபீஷணனின் பணிவும் அடக்கமும் ,

வேண்டுகோளும் ஸ்ரீ ராமருக்கு மிகவும்  பிடித்திருந்தது. 

அவர்  தன  விஷாலமான 

புஜங்களால்     ஆரத்  கொண்டார். 

தன்னை  அருகில்  அமரவைத்து பக்தர்களின் 

 பயம்  போக்கும்  கருணைகாட்டி  சொன்னார்--

  ஸ்ரீ  லங்கேச்வரா !  குடும்பத்துடன்  உன்  நலத்தைக் கூறு.

   நீ  இருக்குமிடம் கெட்ட  இடம். 

  இரவும்  பகலும் துஷ்டர்களின்  கூட்டத்தில் உள்ளாய்.


 நீ  எப்படி அறத்தைக் காக்க  ,

 கடைபிடிக்க  முடியும்.

 எனக்கு  உன்னுடைய  பழக்கவழக்க  

  ஆசாரங்கள்  தெரியும். 

 நீ  மிகப்பெரிய  நீதிமான். 

 உனக்கு  அநீதி  பிடிக்காது. 

 மகனே!நரகத்தில் இருப்பது  துஷ்டர்களின் 

 சேர்க்கையில் இருப்பதைவிட சிறந்தது.


 ஸ்ரீராமரிடம்  விபீஷணன்  கூறினான்: --  

  உங்களை  தரிசித்து நலமாக உள்ளேன். 

   நீங்கள்  என்னை உங்களது தொண்டனாக 

  ஏற்று  தயவு  காட்டியுள்ளீர்கள்.


      பெண்ணாசை ,மற்ற  ஆசைகளை விட்டு 

   ஸ்ரீ ராமபிரானை   ஜெபிக்கவில்லை  என்றால், 

   அவர்களுக்கு  நலம்  இல்லை.

  கனவில்  கூட  மனதிற்கு   அமைதி கிடைக்காது.


   ஸ்ரீ ராம  பகவான்    கருணைக்காக  மனதில் ,  

  இதயத்தில்  வசிக்கும்  வரை    பேராசை. பொறாமை,

 ஆணவம்,காமம்  போன்ற பல  துஷ்டர்கள் 

  இதயத்தில்  இடம்  பெற்று  இருப்பார்கள்.

  ஆசை  என்பது   இருண்ட  இரவு ,

 அது அன்பு-வெறுப்பு  என்ற  ஆந்தைகளுக்கு 

  மனதில்  இடம் அளிக்கும்.

 ராமரின்  சூர்யோதயம் மனதில்  உதிக்கும்  வரை ஆசை  இருக்கும். 


  ஸ்ரீ  ராமச்சந்த்ரரே ! உங்களைப் பார்த்தது 

  முதல்  என்  அச்சம்  போய் விட்டது. 

  அருள்  கடலே!  உங்கள்  அனுக்கிரஹம்  பெற்றவர்களுக்கு

 ஆன்மீக,ஆன்மீகமற்ற ,உலகியல்  பயங்கள்  

 மூன்றும் இருக்காது.

     நான்  மிகவும்  தாழ்ந்த  குணமுள்ள  அரக்கன்.  

  நான்  நல்லமுறையில்  நடந்துகொண்டதே இல்லை.   

நீங்கள்  முனிவர்களின்  மீது  கூட 

  கவனத்தைக்  காட்டவில்லை. 

 என்னைப்  பார்த்து  மகிழ்ந்து 

ஆரத்  தழுவினீர். 

  இது  என்னுடைய  பாக்கியம்  தான். 


 சிவனால் பூஜிக்கப்பட்ட  சரணங்களை

  இன்று  தர்ஷித்தேன். 




  ஸ்ரீ  ராமர்  விபீஷணனிடம்  :-


தோழா!   கேள்.

 என்னுடைய  இயற்கை  குணம்

என்னை  சரணடைந்தவர்களைக்   காப்பது.

உலகத்தின் ஜடப்பொருள்-உணர்வுள்ள உயிர்ப்பொருள்

உலகத்துக்கே  துரோஹியாக  இருந்தாலும் ,

என்னை  சரணடைந்தால்  ,

ஆணவம் , மோகம் , ஏமாற்றுதல், வஞ்சனை  போன்ற

 தீய குணங்களை

விட்டுவிட்டால்,


நான்  அவர்களை  மிக விரைவில்  சாது ஆக்கிவிடுவேன்.

இந்த  என் உயரிய  குணத்தை

 காபுஷுண்டி, சிவன் . பார்வதி ஆகியோரும் அறிவர்.



அம்மா, அப்பா, சகோதரன் ,மகன் , மனைவி,

 உடல், வீடு, தனம்,நண்பர்கள், குடும்பம்   இந்த  அன்பு

 நூல்களை  ஒன்றாக  ஒரே  கயிறில்  கட்டி,

அதன்  மூலமாக  என்  சரணங்களை  கட்டுபவன்  சம தர்ஷீ.


அவர்கள்  மனதில்  எவ்வித  ஆசையும்  இருக்காது,

மகிழ்ச்சி ,சோகம் ,பயம்  எதுவும்  இருக்காது.


  இப்படிப்பட்டவன்  பேராசைக்காரனுக்கு

பணத்தின்  மீது  இருக்கும்

பேராசைபோல்,

 எனக்கு  அவர்கள்   மேல்  அன்பு  இருக்கும்.


உன்னைப்போன்ற  சாதுக்கள்  எனக்கு  மிகவும்  அன்பானவர்கள்.


நன்றிவயப்பட்டு   நானும்  யாரையும்   ஏற்கமாட்டேன்.


       உருவவழிபாடு  செய்பவர்கள்,


      மற்றவர்கள்  நன்மையில்  ஈடுபடுகொண்டவர்கள்,


       நீதி  நியமங்களில்  திடமானவர்கள்,


       அந்தணர்களை  விரும்பி அவர்கள்  பாதங்களில்  வணங்குபவர்கள்,


       எனக்கு  என்  உயிரைவிட  மேலானவர்கள்.


     இலங்கை  வேந்தே ! கேள்.


 உன்னிடம்  மேலே  சொல்லப்பட்ட  அனைத்து

குணங்களும்  உள்ளன.  


அதனால்  எனக்கு  நீ   மிகவும்  பிரியமானவன்.


  ஸ்ரீ ராமரின்  சொற்களைக்  கேட்டு

 வானரக் கூட்டம்  மிகவும்  மகிழ்ந்தன.

      ஸ்ரீ  ராமர்  பெயரைகூறி  ஜெய  ராம் !

    என்று  முழக்கமிட்டன.


      விபீஷணன்  ஸ்ரீ  ராமரின்  பாதங்களைப்  பிடித்து


  தன் எல்லையில்லா  அன்பை   காட்டினான்.


    தேவரீர்!


 உங்களைக்  கண்ட   மாத்திரத்திலேயே  என்  மனதில்

 எஞ்சி இருந்த  ஆசைகளும்  போய்விட்டன,

உங்கள்  அன்பு  நதி அவைகளை அடித்துச்  சென்று விட்டது.

    சிவனின் மனதில் எப்பொழுதும் இருக்கின்ற 

படி யான   தங்கள் புனித பக்தியை  எனக்கு அருளுங்கள்.


அப்படியே  ஆகட்டும்  என்று  கடல்  நீரைக்  கேட்டான்.


   தோழா!   என்னை  தரிசித்தவர்கள்  பலனற்று போகமாட்டார்கள்.

 இது  உலகின் நீதி.


  இப்படி சொல்லி   ஸ்ரீராமர்  விபீஷணனுக்கு  பட்டாபிஷேகம்  செய்தார்.


  ஆகாயத்திலிருந்து    அதிக  அளவில்  பூ மழை பொழிந்தது.


     ராவணனின்  கோபக்  கனலில்  இருந்து  ஸ்ரீராமர்  விபீஷணனைக்  காப்பாற்றினார்.

  அவனக்கு  அகண்ட ராஜ்யத்தை அளித்தார்.


      ராவணனுக்கு  சிவன்  அளித்த  சொத்துக்கள்


  அனைத்தையும்  ஸ்ரீராமர்


விபீஷணனுக்கு   அளித்தார்.

 ராவணன்  பத்து  தலைகளை


 பலி கொடுத்து சிவனிடம்  பெற்றான்.  விபீஷணன்   ராமரை  சரணடைந்து  பெற்றான்.

   கிருபை  நிறைந்த  இப்படிப்பட்ட  பக்தவத்சலரான

  ராமரை  வணங்காதவர்கள்    கொம்பும் வாலும்  இல்லா மிருகங்கள்.


விபீஷணனை   தன் சேவகனாக  இறைவன்  ஏற்றார்.


ஸ்ரீராமனின்  இந்த  குணம்    வானரங்களுக்கு  மிகவும்  மகிழ்வைத்  தந்தது.


       அனைத்தும்  அறிந்த,


 எல்லோரின்  மனதிலும்  இடம்பெற்று  வசிக்கின்ற ,


எல்லாவடிவங்களிலும்  வெளிப்பட்டு,   வெளிப்படாத  ஸ்ரீராமர்


 பக்தர்களின்  மேல்  கிருபை  காட்டவும் ,


 அரக்கர்கள்  குலத்தை  அழிக்கவும்


மனித உருவில்  அவதரித்தார்.


  பிறகு  ஸ்ரீ  லங்காதி பதி   விபீஷணனி டமும்  சுக்ரீவனிடமும்


  சமுத்திரத்தை எப்படி  கடப்பது  என்று  கேட்டார்.


   இதில் பலவித  முதலைகள், பாம்புகள்,  மீன்கள்   நிறைந்துள்ளன.

மிகவும் ஆழமான  கடலை    கடப்பது  மிகவும்  கடினம்.


  விபீஷணன்   சொன்னான் ---


ஸ்ரீ ரகுநாதா!  உங்கள்  அம்புகள்  கோடிக்கணக்கான

  கடல்களை வறட்சி  அடையச் செய்துவிடும்.


ஆனால்  அது  நியாயமில்லை.


 கடலிடமே  பிரார்த்திப்போம்.

 

 சமுத்திரம்  உங்கள்  குலத்தின்  முன்னோர்களில்  ஒன்று.


 அவர் சிந்தித்து வழி  சொல்லுவார்.

 அப்பொழுது  மிகவும்  சுலபமாக

கரடிகளும்  வானரங்களும்  கடல்  கடந்து சென்றுவிடும்.


     ராமர்  தோழா! நல்ல உபாயத்தைச்  சொன்னாய்.


இப்படியே  செய்யலாம்.

கடவுள்  துணை  புரிவார்.


இந்த  ஆலோசனை இலக்குமனனுக்குப் பிடிக்கவில்லை.


 ராமரின் சொல்  கேட்டு அவன்  வருந்தினான்.


 லக்ஷ்மணன்   சொன்னான் -- அண்ணா!

தேவர்களை  எப்படி  நம்புவது?

கோபத்துடன்  சமுத்திரத்தை  வறட்சி  அடையச் செய்யுங்கள்.



 இந்த தெய்வம்  என்பது  கோழை களுக்கு ஆறுதல்  அளிக்கும் வழி .


 சோம்பேறிகள்  தான்  தெய்வத்தை அழைப்பார்கள்.



   இதைக்கேட்டு  ராமர் சிரித்துவிட்டு,


  இப்படியே  செய்யலாம்   தைரியமாக  இரு  என்று


சொல்லி  ராமர்  கடலுக்கு அருகில்  சென்றார்.


     முதலில்  தலைவணங்கினார்.


. பிறகு  தர்ப்பை விரித்து ஆசனம் செய்து  அமர்ந்தார்.



  விபீஷணன் வந்ததுமே  ராவணன்


 தன் தூதர்களைஅனுப்பினான்.


  அந்த  தூதர்கள்   குரங்கு உருவத்தில்


 இங்கு  நடப்பது  அனைத்தையும்  கவனித்தன.



  அவர்கள்    ஸ்ரீராமரின்   குணம்  கண்டு  ,

அடைக்கலமாக  வந்தவனை  காப்பாற்றும்

 அருள்  அறிந்து  புகழ்ந்தனர்..

  பிறகு  வெளிப்படையாக


 ராமரின்  குணங்களைப்  புகழ  ஆரம்பித்தனர்.


அவன்  தன்  கபட  வேஷத்தை மறந்துவிட்டான்.


  வானரர்களுக்கு  இவன்   ரவாணனின்  தூதன்  என்று  தெரிந்துவிட்டது.


 அவனைக்  கட்டி சுக்ரீவனிடம்  அழைத்துச்  சென்றனர்.


சுக்ரீவன்  அந்த தூதர்களை  அங்கஹீனமாக்கி  அனுப்பும்படி  கூறினான்.


   இந்த  கட்டளை கேட்டதும் வானரப்படை  அவர்களை சூழ்ந்து  சுழற்றியது.



           வானரர்கள்    ராவண  தூதர்களை 


            ஈவு இரக்கமின்றி  அடித்தனர்.  

   அவர்களுடைய    இரக்கமான  நிலை

  குரல்  கேட்டும் அவர்களை  விடவில்லை. 

 இறுதியில்  தூதர்கள்

கோசலநாட்டு  மன்னன்

 ஸ்ரீ  ராமர்  மீது  ஆணை , 

எங்கள் மூக்கு காது  துண்டித்தால்  என்று  அலறினர். 


  இதைக்கேட்டு  லக்ஷ்மணன்  அவர்களை  

 அருகில்  அழைத்தான்.

அவனுக்கு  அவர்கள்   மேல்  இரக்கம்ஏற்பட்டது.  

 இதனால்  சிரித்து  அவர்களை  விடுவித்தான்.

  அவர்களுக்கு  ஒரு  செய்தி  அனுப்பினான். 

  தூதர்களிடம்  ,

ராவணனிடம்  சொல்.

குலநாசகன்  அவன். 

அவனிடம் இந்த கடிதத்தைக்  கொடு. 

  மேலும் நான்  சொன்னதாகச் சொல். 

 சீதையை  ஒப்படைத்து

 ராமனை சந்திக்கவும்.

இல்லையென்றால்

  உனது  காலன்  வந்துவிட்டான்  என்று.


 இலக்குமணனின்  காலில்  வணங்கி ,

ஸ்ரீ  ராமரின்  குணங்களைப் புகழ்ந்து  வர்ணித்துக் 

 கொண்டே  சென்றனர்.

 அவர்கள்  ராவணனை 

 சிரம்  தாழ்த்தி  வணங்கினர்.

 தசமுக  ராவணன்  சிரித்துக்கொண்டே 

 அந்த விபீஷணனின் செய்தி சொல்.

 மரணம் அவனை நெருங்கிவிட்டது.


 முட்டாள்.  தன்  ஸ்ரீலங்கா  ஆட்சியை 

 விட்டுவிட்டு  சென்றுவிட்டான்.

 அவன் துரதிஷ்ட சாலியான 

      புழு  ஆகிவிட்டான். 

 வானரர்களுடன்  சேர்ந்து அவனும்  கொல்லப்படுவான்.

 அந்த  கரடி வானரப்படைகள் எப்படி  உள்ளது ?

என்று  கேட்டான். 

 அவைகள்  எமனின்  தூண்டுதலால்  

 உயிரைவிட  இங்கு  வந்துவிட்டன. 

 மென்மையான  மனம்  கொண்ட 

  கடல்  நடுவில்  வந்துவிட்டது. 

  இல்லைஎன்றால் 

 அவர்கள் உயிர் போயிருக்கும்.

என்னிடம்  பயம்  கொண்ட  

அந்த தபசிகளின்  நிலை  என்ன ?


   அவர்களை  சந்தித்தீர்களா?

  என் புகழ் கேட்டு  திரும்பிவிட்டனரா ?

  விரோதிகளின்  வீரத்தையும்  பலத்தையும்  பற்றி ஏன்  எதுவும்   சொல்லவில்லை.


 நீங்கள்  ஏன் இப்படி பிரமித்து  நிற்கிறீர்கள்.


 அப்பொழுது  தூதன் ,

" உங்கள்  தம்பி  அங்கே  சென்றதுமே

ஸ்ரீராமர்  அவருக்கு முடிசூட்டிவிட்டான்.

 நீங்கள்  கோபத்தை விட்டுவிட்டு  

எங்களை  நம்புங்கள். 

 நாங்கள்  சொல்வது உண்மை. "என்றான்.


      நாங்கள்  ராவணனின்  தூதன்    என்று  அறிந்ததுமே 

  எங்களைக்  கட்டி  மிகவும்  துன்புறுத்தினர். 

 எங்கள்  காது -மூக்குகளை 

அறுக்க  ஆரம்பித்தனர்.

 ராமரின் மேல் சபதம்  இட்டதும்  

எங்களை  விட்டுவிட்டனர். 


 நீங்கள் ராமரின் படைகளைப் 

பற்றி  கேட்டீர்கள். 

அதை வர்ணிக்க  வார்த்தைகளும்  போதாது.

 பலகோடி வாய்களும்  போதாது.


  பயங்கரத் தோற்றத்துடனான  

முகங்களையும் மிகப்பெரிய  உருவங்களையும்  கொண்ட 

 பல வண்ணக்  கரடிகளும் 

  வானரங்களும் உள்ளன.

 உங்கள் மகன்  அக்ஷயக்குமாரனைக்  கொன்று  

இலங்கையை    எரித்தவனைக்  காட்டிலும்  

 பலம்  வாய்ந்தவர்கள். 

எண்ணமுடியாத  பெயர் கொண்ட  

கடுமையான  பயங்கர  போர் வீரர்கள்.  

அவர்களில்  பலருக்கு  யானையின்  பலம். 

மிகப்பெரிய உடல்.

பலத்தின்  நிதியாக  திவித்,  மயந்து, நீல்,நல, அங்கத்,கத்,

விகடஷ்ய,ததிமுக், கேசரி, நிசட், சட்,

 ஜாம்பவான்

  முதலியவர்கள்  உள்ளனர்.

  இந்த  எல்லா வானரர் களுமே 

 சுக்ரீவனுக்கு சமமானவர்கள்.  

இவர்களைப்போல்  கோடிக்கணக்கில் உள்ளனர்.  

அவர்களை  எண்ண  முடியாது.

 ராமனின் கிருபையால்  இணையற்ற  சக்திசாலிகள். 

 அவர்கள்   மூவுலகையும் தூசியாக எண்ணுகிறார்கள். 

 பதினெட்டு  பதுமர்கள்  தனியாக 

 வானர  சேனாபதிகள். 

நீங்கள்  வெல்லும்படி அங்கு  யாரும்  இல்லை.

  அனைவரும்  மிகக் கோபத்துடன்    கைகளை  

பிசைந்து  கொண்டுள்ளனர். 

 ஆனால்  ஸ்ரீராமர்  இன்னும் 

 அவர்களுக்கு  கட்டளை பிறப்பிக்கவில்லை. 

 எல்லாவானரர்களும்  மீன்களையும் பாம்புகளையும்  

ஒன்றுசேர்த்து  கடலை வற்றச்  செய்துவிடுவோம். 

 இல்லை  எனில் பெரும் 

மலைகளால்  நிரப்பிவிடுவோம் .

ராவணனை  நசுக்கி மண்ணோடு மண்  ஆக்கிவிடுவோம்  

 என்றே  வானரர்கள்  வீராவேசமாக பேசிக்கொண்டுள்ளனர்.   இலங்கையையே விழுங்கி  விடுவோம்  என்று  கர்ஜிக்கின்றனர்.


   எல்லா  வானரர்களும்  கரடிகளும் இயற்கையிலேயே  வீரர்கள். அவர்களுக்குத்  தலைவராக ராமர்  உள்ளார்.  

 ராவணா! அவர்களால் யுத்தத்தில்  

 கோடி எமன்களையும்  கொல்ல  முடியும்.


   ஸ்ரீ ராமரின்  சாமார்த்தியத்தையும் 

 பலத்தையும் ஆய்வையும்  வர்ணிக்கமுயலாது. 

அவர்  நினைத்தால்  ஒரே  பாணத்தில் 

  சமுத்திரத்தை  வற்றவைக்க  முடியும்.

நீதிமானாக  இருப்பதால்  அப்படி  செய்யவில்லை. 

 உங்கள்  தம்பியிடம் 

வழி  கேட்டுக் கொண்டிருக்கிறார்.





 

     தங்கள்  சஹோதரரின்  வழிகாட்டுதலினால் 

    அவர்  சமுத்திரத்தினிடம்  வழி  கேட்டு


   பிரார்த்தனை   செய்துகொண்டிருக்கிறார்.

 அவர்  மனதில்  சமுத்திர   ராஜனின்  மேல்  இரக்கம் உள்ளது. 

 இல்லையெனில்  அதை  வரட்சியாக்க   தாமதிக்கமாட்டார். 


  தூதனின்    செய்தி  கேட்டு  ராவணன் சிரித்துக்கொண்டே  சொன்னான்--


  இப்படிப்பட்ட அறிவு  உள்ளதால் தான் 

  வானரர்களை  உதவியாளனாக்கிஉள்ளான்.

    இயற்கையிலேயே  கோழையான  விபீஷணன்  சமுத்திரத்திடம் வேண்டச்சொல்லி  தன்    பயந்த குணத்தை  நிரூபித்துள்ளான்.

 அட  முட்டாளே!  பொய்யான  புகழ்ச்சி ஏன்?   நான்  விரோதியின்  அறிவு மற்றும்  பலத்தின்  ஆழம் கண்டுகொண்டேன்.

விபீஷணனைப்  போன்று  கோழை மந்திரி  இருக்கும்போது 

 உலகில்  வெற்றி  எங்கே? ஐஸ்வர்யம்  எப்படி கிடைக்கும் ?

  துஷ்ட  ராவணனின் சொல்  கேட்டு  , 

 தூதனுக்கு  கோபம்  அதிகரித்து விட்டது. 

காலமறிந்து  தூதன்  லக்ஷ்மணன்  கொடுத்த  கடிதத்தைக்  கொடுத்தான்.

   தலைவா!ஸ்ரீ  ராமரின்    தம்பி  லக்ஷ்மணன்  இக்கடிதத்தைக்  கொடுத்தான்.  இதை  படித்து  உங்கள்  மனதை  குளிர்படுத்துங்கள்.

  இடதுகையால்  கடிதத்தை  வாங்கி  மந்திரியிடம்  படிக்கக்  கொடுத்தான்.

    கடிதத்தில்  எழுதி  இருந்தது---

அட  முட்டாளே!  வெறும்  பேச்சால்  மனதில் மகிழ்ந்து 

உன்  குலத்தை நாசமாக்கிவிடாதே. 

ஸ்ரீ  ராமரை  விரோதித்துக்கொண்டு  நீ  விஷ்ணு, பிரம்மா,  சிவன்  போன்ற

 மும்மூர்த்திகளை   சரணடைந்தாலும் 

தப்பிக்க  முடியாது.

    நீ  உன்  ஆணவத்தை  விட்டுவிட்டு  ,

 உன்  தம்பி விபீஷணனைப் போல கடவுளின் 

 பாத கமலங்களுக்கு  வண்டாகி  விடு. 

அல்லது  துஷ்டனே! ராமரின் அம்புகளின்  நெருப்பிற்கு 

 குடும்பத்துடன்    பலியாகி  விடு.

   கடிதத்தின்  செய்தி கேட்டதுமே  ராவணன்  மனதில்  பயந்துவிட்டான்.

 ஆனால்  முகத்தில்  பயத்தை  வெளிப்படுத்தாமல்  புன்சிரிப்புடன் 

சத்தமாக  சொன்னான்--

பூமியில்  இருந்து  ஆகாயத்தை கையில்  பிடிக்க 

 முயற்சிப்பதுபோல்  சின்ன தவசி வீணாக பேசுகிறான். 

   தூதன்  சொன்னான்--ஆணவப் பேச்சை விட்டு 

 உண்மையை  புரிந்துகொள்ளுங்கள். 

கோபத்தை  விட்டு நான்  சொல்வதைக்  கேளுங்கள்.

ராமனுடனான  விரோதத்தை விட்டுவிடுங்கள். 

 ராமர்  அனைத்து  உலகங்களுக்கும்

கடவுள். 

ஆனால்  அவருடைய  குணம்  மிகவும்  மென்மை.

நீங்கள்  அவரை சந்திததுமே  கருணை  காட்டுவார். 

  உங்களுடைய எந்த குற்றத்தையும்  மனதில்  வைக்கமாட்டார். 

ஜானகி அவர்களை  ஸ்ரீ  ரகுநாதரிடம் ஒப்படையுங்கள்.   

நான்  சொல்லுவதை  செய்யுங்கள்.

ஜானகியை ஒப்படையுங்கள்  என்று

  சொன்னதுமே  துஷ்ட் ராவணன்  தூதனை   உதைத்துவிட்டான் ,


    தூதனும் விபீஷனனைப்போன்று

  ராமரை சிரம்  தாழ்த்தி வணங்கி  சரணடைந்தான்.

 தன்  கதையை  சொல்லி  ராமரின்  கிருபையால்

நற்கதி  அடைந்தான்.

  சிவபகவான்   இந்த நிகழ்ச்சியைக்  கண்டு 

தன் மனைவி  பவானியிடம்  --

 ஹே பவானி!  அந்த  தூதன்  ஞானி.

 அகஸ்த்தியரின்  சாபத்தால்  அரக்கனாகிவிட்டான்.

  இப்பொழுது  மீண்டும்  முனிவராகி  ராமரை 

மீண்டும் மீண்டும்  வணங்கி  தன்

ஆஷ்ரமத்திற்குச்  சென்றுவிட்டான்.

        இக்கரையில்  மூன்று  நாளாகியும்

  கர்வமுள்ள  சமுத்திரம்  ராமரின்  வேண்டுகோளை  ஏற்கவில்லை.

 ஸ்ரீ ராமர்  கோபத்துடன் லக்ஷ்மணனை 

 அழைத்து அம்பையும்  வில்லையும்  எடுத்துவா, 

  பயமின்றி  அன்பு  ஏற்படாது.

 நான்  அக்னி-பாணத்தால்   சமுத்திரத்தை 

 வற்றச்செய்து  விடுகிறேன். 

 முட்டாளிடம்  பணிவு,  கொடியவனிடம்  அன்பு,

 கஞ்சனிடம்  தாராள  குணத்தை  உபதேசித்தல்  ,

 அன்பில்  கட்டுண்ட  மனிதனிடம் ,

 அறிவின்  கதை,  மிகவும்  பேராசைக்காரனிடம்   வைராக்கியம்,

 கோபமாக  உள்ளவனிடம்  அமைதி,

 காமம்  உள்ளவனிடம்  இறைவனின்  கதை  எல்லாம்  எடுபடாது.

   விளையாத  நிலத்தில்   விதை விதைத்தது  போலாகும். 

  வீண்.

இதை சொன்னதும்  ரகுநாதன் வில்  எடுத்து அம்பை எய்தினான்.

 ராமரின்  இந்த  செயல்  லக்குமணனுக்கு  மிகவும்  மகிழ்ச்சியைத்  தந்தது.

கடவுள்  பயங்கரமான  பாணத்தை  எய்தினார்.

 சமுத்திரத்தின் இதயத்துக்குள் தீ  ஜ்வாலை  பற்றியது.

  திமிங்கிலம்,  பாம்பு,  மீன்கள்  கவலைப்  பட்டன.

  சமுத்திரமானது  தன்  ஜீவராசிகள்  எரிவதைக்  கண்டு 

தன்  ஆணவத்தை விட்டுவிட்டு 

 அந்தணனின்  வடிவில்  தங்கத் தாம்பாளத்தில்

  ரத்தினங்களை  நிரப்பி கொண்டுவந்தது.


  இதைப்பார்த்து  காகபுசுண்டி  கருடனிடம்  சொன்னார் --


 கேளுங்கள். எத்தனை உபாயங்கள்  செய்தாலும் 

 வாழை வெட்டினால் தான்  பழுக்கும். 

 தாழ்ந்தவன் வேண்டுகோளை  கேட்கமாட்டான் . 

அவன்  மிரட்டினால்  தான்  பணிவான்.


  சமுத்திரம்  பயந்து  பிரபுவின்  கால்களைப்  பிடித்து  வேண்டியது :-

 என்  தவறை  மன்னித்துவிடுங்கள். 

ஆகாயம், வாயு,  அக்னி,நீர் , பூமி  அனைத்துமே  ஜடப்பொருள்கள்.

  உங்கள்  கிருபையால்  மாயை ஆனது இவைகளை  சிருஷ்டிக்காக படைத்திருக்கிறார். 

  எல்லா  நூல்களும்  இதையே  சொல்கின்றன.

 உங்களின் கட்டளைப்படி  இருப்பதிலேயே  இவைகளுக்கு ஆனந்தம். 

  எனக்கு  பிரபு  தண்டனை அளித்து  நல்லதே  செய்துள்ளார். 

 ஆனால்  ஜீவன் களின்  நல்ல  கெட்ட குணங்களையும்

 நீங்கள்தான்  அளித்துள்ளீர்கள். 

முரசு, நாகரீகமற்றவன் , சூத்திரன் .மிருகங்கள், பெண்கள்  ஆகியவை 

 தண்டனைக்கு உரியவர்கள்.


   பிரபுவின்  பிரதாபத்தால் நான் வரண்டுவிடுவேன்.

 சேனை  கடந்து சென்றுவிடும். 

 எனக்கு பெருமை இருக்காது. 

உங்கள்  கட்டளையை  மீற முடியாது.

 வேதங்கள்  உங்கள்  புகழை இப்படித்தான்  பாடுகின்றன. 

   இப்பொழுது    நான்  உங்கள்  விருப்பபடி  நடந்துகொள்கிறேன். 

  சமுத்திரம்  சொன்னதைக்  கேட்டு 

  ராமர்  புன்முறுவலுடன்  சொன்னார் :-

 வானர சேனை  கடப்பதற்கு  வழி  சொல்.

  சமுத்திரம்  சொன்னது --நாதா!  நீலன் ,நலன்  இருவரும்  வானர  சகோதரர்கள்.

 அவர்கள்  குழந்தையாக  இருக்கும்போது  ரிஷிகளின்  ஆசியைப்  பெற்றுள்ளனர். 

  அவர்கள்  ஸ்பர்சித்தால்  பெரிய பெரிய  மலைகள்  கூட 

 சமுத்திரத்தில்  மிதக்கும்.

  நானும்  பிரபுவை  தியானம்  செய்து 

 என்  சக்திக்கேற்ற  உதவி  செய்வேன். 

  நாதா!இவ்வாறு  சமுத்திரத்தைக்  கட்டுக்கு கொண்டுவந்தால் 

  மூவுலகிலும்  உங்கள்  புகழ்  பாடப்படும்.

  இந்த பாணத்தால்  வடக்கு  திசையில் 

  இருக்கிற  துஷ்ட  மனிதர்களை  வதம்  செய்யுங்கள். 

  கிருபாகரனும்  போரில் தீரனுமான  ராமர்

  சமுத்திரத்தின்  மனவேதனை  அறிந்து

 உடனே  துஷ்டர்களை  வதம்  செய்தார். 

 வேதனையை  போக்கினார்.

  ஸ்ரீ ராமரின் பெரும் வலிமையையும் 


ஆண்மையையும்  கண்டு  சமுத்திரம்  மகிழ்ந்தது, 

  அது  அந்த  துஷ்டர்களின்  எல்லா குணங்களையும்  சொன்னது. 

 பிறகு  ராமரின்  பாதங்களை வணங்கி சென்றுவிட்டது.

   கடல்  தன்  வீட்டிற்குச்  சென்றுவிட்டது. 

  ராமருக்கு கடலின்  ஆலோசனை  பிடித்து  விட்டது. 

இந்த  குணம்  கலியுகத்தின்  பாவங்களை போக்கக் கூடியது.

இதை துளசிதாசர்  தன் அறிவிற்கு ஏற்றபடி  பாடியிருக்கிறார்,

  ஸ்ரீ ராமருடைய  குணம்  சுகத்தின்  இருப்பிடம், 

 சந்தேகத்தைப்  போக்கக் கூடியது, துன்பத்தைப்  போக்கக்  கூடியது.

  முட்டாள் மனமே!

  நீ  உலகின்  எல்லா  ஆசைகள் நம்பிக்கைகளை  விட்டுவிட்டு 

  இடைவிடாமல் ராமரின்

  புகழைப் பாடு.   கேள்.


  ராமரின்  புகழ்  எல்லா  மங்களங்களையும்  தரக்கூடியது.

 இதை  மிக மரியாதையுடன்  கேட்பவர்கள் , 

 எந்தவித  கப்பலுமின்றி,

 பவசாகரத்தைக்  கடந்துவிடுவார்கள்.

      உலகின்  எல்லா  பாவங்களையும்  போக்கக்கூடிய  ராமச்சரிதமானசின் சுந்தரகாண்டம்  நிறைவுற்றது.

****************************************