Sunday, April 29, 2018

பத்திரகிரியார் அறிமுகம் - --भद्रगिरियार परिचय

   

भद्र गिरियार    सिद्ध पुरुष


   उज्जैन  के राजा  भद्र गिरी.   तमिल भाषा के प्रसिद्ध   अठारह सिद्ध पुरुषों में एक  हैं.

तमिल के  सिद्ध पट्टिनत्तार  एक बार उज्जैन के काली के  मंदिर के दर्शन के बाद एक गणेश  मंदिर में ध्यान मग्न बैठे हुए थे. तब कुछ   चोर राजमहल में चोरी करके आये थे. उन चोरों ने एक मोती  की माला फेंकी तो वह पट्टिनत्तार  के गले में पडी.   राजा के सिपाही चोर के  तलाश में आये. उन्होंने  पट्टिनत्तार के गले में मोती की माला  देखी. सिपाही उनको चोर समझकर
राजा   भद्र गिरि के सामने ले गए.  राजा बिना सोचे विचारे उनको बली शूल में  लटकाने की सजा सुनायी.
पर  वह शूल   पेड़ जल गया.  राजा को अपनी गलती मालूम  हुई. वे अपने राजा पद त्यागकर पट्टिनत्तार  के साथ
साधू बनकर  निकले.

 पट्टिनत्तार   को उन्होंने अपने गुरु मान लिया .

दोनों  तिरूविडै मरुदूर के  मंदिर में साधू बनकर ठहरे.
शिष्य  रोज़ भिक्षा  माँगकर गुरु को  खिलाता . एक दिन उन्होंने  एक कुतिया को खिलाया तो वह  उनके साथ रह गया. एक दिन एक भिखारी ने पट्टिनत्तार से भीख  माँगी तो उन्होंने कहा-- दूसरे गोपुर के द्वार पर एक कुटुम्बी रहता है , उससे   माँगो. पत्तिरागिरियार समझ गए और उस कुतिया पर अपने भिक्षा पात्र फेंका कुत्ता मर गया.
वे बिलकुल साधू और  सिद्ध पुरुष बन गए.

फिर सिद्ध पुरुष  बनकर सिद्ध गीत गाने में लग   गए.

उनके ग्रंथों में  एक है ==पत्तिरागिरियार   सत्य ज्ञान  प्रलाप.

 गणेश वन्दना :--

मुक्ति प्रद ज्ञान देने  के प्रलाप गाने
श्री गणेश  की कृपा कब पाऊंगा ?
मूल : तमिल :- मुक्ति तरुम ज्ञान  मोलियाम पुलाम्बल सोल्ल
                    अत्ति मुकवन अरुल पेरुवतु एककालम.
ग्रन्थ :--
१. आन्गारम उल्लडक्की   ऐम्पुलनैच चुट्टरुत्तुत
तून्गामल  तूंगिच सुकम पेरुतल एककालं.?

अहंकार  तजकर ,पंचेद्रियों  को नियंत्रण में रखकर
ईश्वरीय ध्यान में  सुख कब प्राप्त करूँगा?

२. नींगाच शिवयोग  नित्तिरै कोंडेयिरुन्तु
   तेंगाक  करुण तेक्कुवतु  एककालं .

शिव से मिलकर  सदा शिव की याद में  मेरा मन ;
जब उनकी  करुणा प्राप्त होगा.

३.    मेरा मन  ईश्वर की करुणा  से खाली है,
     सत्यज्ञान (ब्रह्मज्ञान )की वह  कमी ,
     कब प्राप्त  होगा ?
मूल :-तेंगाक     करुनै वेल्लम तेककियिरून्तुणपतर्कू
          
       वांगामल विट्टकुरै  वन्त्तडुप्प्तु येक्कालं।
४.  निरंतर दुखी होकर जीने  के कारण की
     माया को मिटाना  कब प्राप्त होगा ?

५.  जन्म के कारण की माया रुपी अज्ञान की सेना
     जीतकर  मन के किले को पकड़ना कब प्राप्त होगा ?

      मायाप्पिरवी  मयक्कत्तै ऊडरुत्तुक
       काया पुरिक्कोटटैक्  कैक्कोल्वतु एक्कालं।

६. मन रुपी किले को वश में  करने शिवानुभूति की
    शक्ति कब   प्राप्त होगी ?
 
मूल ;-

७. बच्चों- सा   मन , बहरे- गूंगे के समान,भूत -समान
   तेरी कृपा के बंधन में फंसकर रहने का अवसर कब प्राप्त होगा ?





  


Saturday, April 28, 2018

ஆலயங்கள்

  ஆலயங்கள் 


  ஆலயங்கள் என்பது 

   மனதிற்கு அமைதி தருவது.

மனதின் துன்பங்களை மறக்க  ஆலயம் செல்கிறோம்.

அமைதியான தியான மண்டபம். 
இன்றைய  ஆலயங்கள் முழு பய பக்தியுடன்  உள்ளனவா ? சிந்தித்துப்பாருங்கள்.எத்தனை ஏற்றதாழ்வுகள்.
 சில உயர்ந்த இனம், ஜாதியைச் சேர்ந்தவர்களே  ஆலயத்திற்குள்  பிரவேசிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது. மகிழ்ச்சியே.
ஆனால் கட்டணங்கள், சிறப்பு தரிசனங்கள்,
இலவச தரிசனம்  என்று பிரிக்கிறார்கள்  .
பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
ஆலய நுழைவாயிலில் அமைதி இழக்கின்றனர்.
பிச்சைக்காரர்கள், தடுத்து வாணிகம் செய்யும் நடைபாதை வாணிகர்கள், அர்ச்சனைத்தட்டில் காசு விழுந்தால்  விபூதி என்ற  நிலை.
கடைகள், கடைக்காரர்களின் அழைப்புகள், 
ஆலயங்களில் சாந்தி எங்கே ?



ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர்  பிரம்மச்சாரி அல்ல.
திருமணமான பிரம்மச்சாரி 

  மனைவி பெயர் சுர்வச்சலா.

சுர்வச்சலா சூர்யகுமாரி .

அவரும்  வாழ்நாள் முழுவதும்  ,

பிரம்மச்சாரினியாக  இருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார்.

சூரியபகவான்  தன் சுபுத்திரி  கன்னியாக இருக்க விரும்பவில்லை.

பிரம்மச்சாரி விரதம் ஏற்றுக்கொண்ட

ஆஞ்சநேயருடன் திருமணம் செய்து

வைக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர்  உதவியுடன்
 பிரம்மச்சாரி -பிரம்மச்சாரினியாகவே திருமணத்திற்குப்  பிறகும்  வாழ்ந்துவந்தனர்.

  இன்றும் சேர்ந்து இருப்பது ,கோ பார்ட்னெர்  என்று புதியதாக சொல்வது  இராமாயண காலத்தில் இருந்து வந்துள்ளது. 




Tuesday, March 13, 2018

இன்றைய இறை சிந்தனைகள்

இறைவனையே நம்புங்கள்.
இன்னலில் இன்பம் பெறுவீர்கள்.


இறைவனை சரணடையுங்கள்.
ஆரோக்கிய வாழ்வை அடைவீர்கள்.
தீராத நோய் ,முன் ஜன்ம கர்ம வினை,
அறிந்தும் அறியாமல் செய்த பாவ வினைகள்
சற்றே இன்னல் அளித்து இன்பமாக மாற்றும் .
இறைவனைக் க்காண இடைத்தரகர்கள் கூறும்
பரிகாரங்கள் பலன் தராது,புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு நேரடி குழந்தைகள் இல்லை.
கிருஷ்ணனையே உடன் வைத்த பாண்டவர்களுக்கும் இன்னலே.
காரணம் அவர்களிடம் முழு சரணாகதி தத்துவம் இல்லை.
நம்மை இறைவன் படைத்து நமக்கு என்று ஒரு திறமை , நமக்கு என்று ஒரு கடமை , நமக்கு என்று ஒரு வாழ்க்கை கொடுத்துவிட்டான்.
அதில் நேர்மையாக ஈடுபடவேண்டும் .
முழு நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுங்கள்.
மந்திரங்கள் வேண்டாம். பரிகாரங்கள் வேண்டாம்.
பொறமை ,துரோகம் ,ஊழல் ,லஞ்சம் ,வஞ்சம் போன்ற எண்ணமின்றி உலகியல் ஆசை இன்றி இறைவனை வழிபட வேண்டும் .
நாம் நமது வட்டத்தில் குறைந்த பட்சம் பெருமை அடையும் வாழ்க்கையை ஆண்டவன் அளிப்பான்.

இன்றைய இறை சிந்தனைகள்.


    நாம்  இறைவனை எப்படி  பிரார்த்திக்கிறோம்

என்பதை சிந்திக்க வேண்டும்.
எவ்வித மன சஞ்சலமின்றி  வணங்குகிறோமா 
என்பதே கேள்வி.
கட்சிகள்  மாறுவதுபோல்  நாம்

  இறைவனை மாற்றுகிறோம்.

இது சரியா ?


பரிகாரங்கள் என்பது லௌகீகமா ?

அலௌகீகமா ?

யாகங்கள்  வேள்விகள்   செய்பவர்கள்  அனைவரும்

இன்னலின்றி வாழ்ந்தார்கள்  என்ற 

சான்று  இல்லை .

முற்றிலும் சரணடைதல் என்பதை 

முழுமையாக  நம்புபவர்கள்

இறைவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஹஜ்    யாத்திரை  சென்றாலும் ,காசி யாத்திரை சென்றாலும்

மனத்தூய்மை இன்றி இறைவன் அருள் பெறுவது
என்பது  இயலாத ஒன்று.

ராவணன் பலவித  ஆற்றல் பெற்றாலும்

ஆணவமும்  பெண்ணாசையும்   பிறந்தவர் துரோகமும்
அவனை   களங்கப்படுத்தின.
பரதனுக்கு  இருந்த பாசம்  விபீஷணனுக்கு இல்லை.

அண்ணன் தவறு  செய்கிறான்  என்று  ராமனிடம்  சரணடைந்தான்.

மகா   பாரதத்தில்   கர்ணன்   துரியோதனனின் செயல் தவறாக  இருந்தாலும் , பாண்டவர்கள் தன்  சகோதரர்கள் என்றாலும்   தன் நன்றி மறந்து பாண்டவர்களிடம்   செல்லவில்லை.

 கர்ணன்  போன்று நாம் இறைவனிடம்  பக்தி செலுத்தவேண்டும்.


Wednesday, February 21, 2018

இன்றைய இறை சிந்தனைகள்

இன்றைய இறை சிந்தனை.

ஓம் கணேசாய நமஹ
அல்லாவே நமஹ.
இறைதூதர் ஏசுவே நமஹ/
அஹிம்சை வழி குரு மகாவீர் போற்றி .
அன்பு வழி புத்தரே போற்றி
வீரமும் பக்தியும் குரு கிரந்த மே போற்றி .
இன்னும் உலகில் நல்வழி காட்டும்
அறிந்தும் அறியாமல் வையகம் காக்கும்
தெய்வங்களே போற்றி.
இன்றைய இறை சிந்தனையில்
ஞானமும் அறிவும் உள்ளவர்களாகிய
மனிதர்களிடம் ஒரு கேள்வி.
மிகப் பழமையான ஹிந்து என்று வெளிநாட்டினர் அளித்த பெயரை சனாதன தர்மம் ஏற்றுள்ளது.
கி.பி.,கிமு என்பதுபோல்
சனாதன
ஹிந்து மதம் தோன்றுவதற்கு முன் / தோன்றிய பின்
என்ற வரலாறு கிடையாது.
அறிவைக்கொடுத்த இறைவன்
சுயநலத்தையும்
கொடுத்துவிட்டான்.
சுயநலம் என்பது சனாதன
தர்மப்படி மாயை.
இஸ்லாமிய /கிறிஸ்தவ மதப்படி
சாத்தான் /சைத்தான்.
சனாதன மதப்படி லௌகீகம் ./அலௌகீகம்.
இவ்வுலக ஆசாபாசங்கள் என்பது
உடனடி இன்பம் என்பதே லௌகீகம் .
ஒரு குளம் .ஏரி, இவைகளை
மூடி நகரமாக்கி
பொருளீட்டுவது ,
இதற்குத்துணை போகும்
அரசியல் வாதிகள்,அதிகாரிகள் ,
வீட்டுமனை ,வீடு விற்பனையாளர்கள் ,தொழிற்சாலைகள் நிறுவும்
தொழில் அதிபர்கள்
லௌகீக ஆசைகள் கொண்டு
வேலைவாய்ப்பு ,நகர்ப்புற அபிவிருத்தி என்று
பணம் ,நகை ,வாகனம் ,ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், விளைவு அறிவியல் சாதனங்கள் என்ற சைத்தான் கள். ஆண்டுக்கு ஒரு மாற்றம் .
அடுத்த சைத்தான் கடன் ,கடன் அட்டை.

விவசாய நிலங்கள் ,ஏரிகள் அழிப்பு
மாயை செய்யும் வேலை.
அரசர்கள் அரண்மனை ஆலயங்கள் .
கல்வி அறிவும் ஆற்றலும் உள்ளவர்களுக்கே.
சராசரி மதிப்பெண்,
இட ஒதுக்கீடு இதுவும் மாயை.
அனைவருக்கும் கல்வி அவசியம்.
ஆனால்
பணம் படைத்தவர்கள் தான்
படிக்கவேண்டும் என்ற அரசர்கால நிலைக்கே இன்று மக்களாட்சிகளும்.
விளைவு ஏகலவியன் ,விதுரன் ,ரைதாஸ் ,கபீர் கர்ணன் ,போன்ற ஆற்றல் மிக்கவர்கள் வளரத்தடை.
இதுவும் அறிவும் ஞானமும் பெற்ற
மனிதர்களின் மாயை/ சைத்தான்கள்.
இப்படியான சிந்தனைகளில்
பாருங்கள் ஒரு விசித்திரம்
அடிமைவம்சம் ஆட்சி .
கல்கத்தகாளி ஆலயம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்
அவர் சீடர் விவேகானந்தர் .
ஆலயம் கட்டி அர்ச்சகர்
கிடைக்காத ஆலயம்.
அப்பொழுது அங்கே பூஜாரி பதவி ஏற்ற அந்தணர் .
அவர் சீடரால் வையகம்
போற்றும் பாரதம்.
பாரதத்தை அவமரியாதையுடன் பார்த்த ,
மேலைநாடுகள் ,
பாரதத்தின் மதிப்பறிந்து
உயர்ந்த நோக்கோடு
பார்த்த நிலை.
விவேகானந்தரின் வையகம் வாழ ,
வையகம் ஒரு குடும்பமாக வாழ
அவர் ஆரம்பித்த சொற்பொழிவின்
முதல் வார்த்தை சகோதர சகோதரர்களே!
இப்படி உலகில் இன்சானியத் /மனுஷ்யதா/ மனிதநேயம் வளர்க்கும்
சனாதன தர்ம சிந்தனைகள்.
தர்மம் என்றால் அறம்.
சனாதன அறங்கள்.
அறம் வேறு. மதம் வேறு.
வெளிநாட்டினர் ,மற்ற இந்திய மதங்கள்.
ஆனால் அறவழி/தர்ம சிந்தனை
அருவமும் உருவமும் ஆகிய இறைவன்.
ராமன் குஹன் சபரி நட்பு ,
விதுரன் பிறப்பு என்று ஜாதி
சம்ப்ரதாயம் அற்ற
சனாதன தர்மம்.
குந்தி பாண்டவர்கள் பிறப்பு ,
இவை எல்லாமே ஜாதிய
ஒழிப்புக்கு சான்றுகள்.
இவை எல்லாம் மீறி ஆணவம் ,
சுயநலம் ,
மனித இன சம்பிரதாய
ஏற்றத்தாழ்வுகள்
நாம் பெற்ற ஞானத்தை
சரியாக பயன்பெறவில்லை என்ற
நிலைக்கு சான்றுகள்.
சனாதன தர்மம் அன்பு ,அஹிம்சை ,
பரோபகாரம் ,தானம் தியாகம் ,
முற்றுலும் துறந்த நிலை.
ஆனால் சில மதங்கள் அழகாக
மிகவும் கலை நயத்துடன்
படைத்த சிற்பங்களை அழிக்கின்றன.
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி கொல்கின்றன.
வன்முறை வளர்க்கின்றன.
ஆனால் இக்பால் கூறிய படி மதங்கள் மனிதர்களை விரோதியாக கருத கற்பிக்கவில்லை.
मजहब नहीं सिखाता ,आपस में वैर रखना.
சைத்தான் /சாத்தான் /மாயைகளிடம் இருந்து
தப்பித்து இன்சானியத் /மனுஷ்யதா/ மனிதநேயத்துடன் வாழவே கற்பிக்கின்றன.
இதை அறிவுபெற்ற / ஞானம் பெற்ற சித்தர்கள் கூறுகிறார்கள்.
மதப்பற்று சுயநலம் உள்ளவர்கள் இன்னும் மாயை /சைத்தானின் .சாத்தானின் பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதே
இன்றைய இறைவன் எனக்களித்த சிந்தனைகள்.
உலகம் அமைதியாக/ சாந்தியாக/peacefull ஆக
இருக்க அன்பு ,அஹிம்சை .ரஹம் ,இரக்கமாக/
வாழ்ந்து வன்முறையில் இருந்து தப்ப வேண்டும்.
இன்று எனக்கு இறைவன் அளித்த சிந்தனைகள்.
------------------------------------------------------------------------------
ஓம் கணேசாய நமஹ !
ஓம் கார்த்திகேயாய நமஹ .
ஓம் நமஹ சிவாய.
ஓம் துர்காய நமஹ.
அருவமும் உருவமும் உள்ள
பகவானே போற்றி.

Tuesday, February 20, 2018

பக்தி --இன்றைய சிந்தனைகள்

இன்றைய இறை அனுபவம் /சிந்தனைகள் .
_________________________________________
இறைவனிடம் கையேந்துங்கள்
இல்லை என்று சொல்வதில்லை. 
நாம் முழுவதுமாக இறைவனை
விசுவசிக்க வேண்டும் .
மனிதனின் பலமே விஸ்வாஸத்தில் தான்.

  என் தாயார்  எண்பத்தைந்து வயது.
 பல விதநோய்கள். எனக்கும் அப்படியே.

பிரார்த்தனை மற்றும் அருளால்  வாழ்கிறோம்.

அம்மா  சிறுநீர் கழிக்க முடியாமல்
 மிகவும் சிரமப்பட்டார்.
 நேற்று இரவு என் தங்கையிடம்
கட்டாயம்  மருத்துவரிடம் அழைத்துச் செல்   என்று கூறியுள்ளார். இரவு பன்னிரண்டு மணி.

  தங்கையும் அம்மாவும்  தனியாக உள்ளனர்.
இரவு பிரார்த்தனை செய்து   தங்கை தூங்கி விட்டார்.
அம்மா வின் உடல்  திடீரென்று வளைத்துநிமிர்ந்துள்ளார்.
உடனே ஒருமாதமாக  சிறுநீர் கழிக்காதவர்  சிறுநீர் குடம் குடமாக கழித்து   காலையில்  எழுந்து எப்பொழுதும் போல் இயல்பாக  மாறிவிட்டார்.

  ஒரு திரைப்பட பாடல் ,
யானையின் பலம்  எதிலே  தும்பிக்கையிலே,
 மனிதனின் பலம் எதிலே நம்பிக்கையிலே .
நம்மிடம் இறைவனின் மீது நம்பிக்கை உள்ளதா ?
என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.
இறைவனின் மீது உண்மையான பக்தி இருந்தால்
அன்பு இருந்தால் திடமான நம்பிக்கை இருந்தால் தான் குரு கிடைப்பார்.
நம்மில் பலர் குரு கிடைத்தால் தான்
இறைவனின் அருள் கிடைக்கும் என்று
எண்ணுகிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.
நாம் பிறக்கிறோம்.
அழகாக , சிவப்பாக , சிரிப்புடன். அழுகையுடன். கருப்பாக , அசிங்கமாக .
அந்த பிறந்த குழந்தையின் சிரிப்பு ,அழுகை ,
நிறம் , கைகால் அசைவுகள் ,உருவம் பார்த்து
நம்மில் பலர் விமர்சிப்பார்கள்.
அப்பொழுது இறைவன் படைப்பின் ரகசியம் வெளிப்படும்.
அந்தக் குழந்தை சிரிப்பு தெய்வீகம் .
அது பேய் மாதிரி அழுகுது.
அந்தக் குழந்தை அழுவதும் அழகு.
வீர் வீரனு கத்துது.
அந்தக்குழந்தையைப் பார்த்தால்
தூக்கி கொஞ்சனும் போல இருக்கு.
அந்த குழந்தை ரொம்ப புத்திசாலி.
அது சிரிப்பில் கள்ளத்தனம் தோனுது.
இப்படி பிறந்த குழந்தை ஆறு மாதத்தில்
பார்வையாளர்களிடம் ,உறவினர்களிடம்
கொஞ்சலுக்கும் , பேச்சுக்கும் ஏச்சுக்கும்
ஆளாகிறது.
பாரு ,அப்பா மாதிரியே அறிவு / திருட்டுப் பார்வை.
இதனால் தெய்வீகமாக தெய்வ அருளுடன் பிறக்கும்
நாம் இறைவனைக் காண , இறைவன் அருள் பெற ,
சத் குரு பெற , நல்ல நண்பர்கள் பெற, நல்ல சூழல் அமைய , முதலில் இறைவனிடம் மட்டுமே பக்தி , நட்பு , காதல் ,அன்பு , சிரத்தை வைக்கவேண்டும்.
ஞானிகள் வாழ்க்கை வரலாறு முதலில் சாமியார்களையோ ,ஆஷ்ராமங்களை யோ
தேடிச் செல்லவில்லை என்பதே சத்தியம்.
இறைவனின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட
ஆதி சங்கரர் . ரமண மகரிஷி, பிரஹலாதன் ,
கண்ணப்பர் , துளசி தாசர் ,கபீர் , ரைதாஸ் ,
பக்த துக்காராம் , நந்தனார் ,துருவன் போன்றவர்கள் இறைவனின் முழு அருள் பெற்றது
தன் சுய இறை அனுபவத்தால் தான்.
பின்னர் இறைவன் அருளால் உயர்ந்த குரு ,ஞானம் ஆகியவை கிட்டும்.
ஆஷ்ரமங்கள் பணமும் ,நகையும் பொருளும்
வழங்குவோருக்கே முதலிடம் அளித்து ஆசி வழங்கும் . குருவின் ஆசி என்று ஐயாயிரம் ,பத்தாயிரம் ,லக்ஷம் என்று வழங்கி பெறுகிறார்கள்.
சில ஆஷ்ரமங்களில் ஆயுள் சந்தா கொடுத்தால்
முதல் தரிசனம் . ஆசிகள். அங்கு சமத்துவம் இல்லை என்பதே சத்தியம்.
ஆகையால் இறைவனிடம் நேரடி பக்தி ,
தியானமே மற்ற நல வழிகாட்டிகள் கிடைக்க
புகழ் , எண்ணம் போல் வாழ்க்கை அமைய
இறைவனை வழிபட இடைத்தரகர்கள் வேண்டாம்.
நீங்கள் அமைதியாக வழிபட வேண்டுமா,
அழகான குரலில் பாடி ஜபம் செய்யவேண்டுமா ,
தியானம் செய்ய வேண்டுமா
என்ற சுய உணர்வுகள் இயற்கையாகவே வரும்.
பெரியார் , கருணாநிதி போன்றவர்கள் ஒழிந்து
வீட்டுப்பெண்கள் மூலம் இறை அருள் பெறுகிறார்கள் என்பதே சத்தியமான நடவடிக்கை.