Tuesday, March 13, 2018

இன்றைய இறை சிந்தனைகள்

இறைவனையே நம்புங்கள்.
இன்னலில் இன்பம் பெறுவீர்கள்.


இறைவனை சரணடையுங்கள்.
ஆரோக்கிய வாழ்வை அடைவீர்கள்.
தீராத நோய் ,முன் ஜன்ம கர்ம வினை,
அறிந்தும் அறியாமல் செய்த பாவ வினைகள்
சற்றே இன்னல் அளித்து இன்பமாக மாற்றும் .
இறைவனைக் க்காண இடைத்தரகர்கள் கூறும்
பரிகாரங்கள் பலன் தராது,புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு நேரடி குழந்தைகள் இல்லை.
கிருஷ்ணனையே உடன் வைத்த பாண்டவர்களுக்கும் இன்னலே.
காரணம் அவர்களிடம் முழு சரணாகதி தத்துவம் இல்லை.
நம்மை இறைவன் படைத்து நமக்கு என்று ஒரு திறமை , நமக்கு என்று ஒரு கடமை , நமக்கு என்று ஒரு வாழ்க்கை கொடுத்துவிட்டான்.
அதில் நேர்மையாக ஈடுபடவேண்டும் .
முழு நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுங்கள்.
மந்திரங்கள் வேண்டாம். பரிகாரங்கள் வேண்டாம்.
பொறமை ,துரோகம் ,ஊழல் ,லஞ்சம் ,வஞ்சம் போன்ற எண்ணமின்றி உலகியல் ஆசை இன்றி இறைவனை வழிபட வேண்டும் .
நாம் நமது வட்டத்தில் குறைந்த பட்சம் பெருமை அடையும் வாழ்க்கையை ஆண்டவன் அளிப்பான்.

No comments: