Thursday, April 30, 2015

வெறுப்பில் வேதனை தானே மிஞ்சும்

 ஆன்மிகம் என்றால்  தியாகம்  வேண்டும் .

ஆடம்பரம்  அறத்திற்கு மறத்திற்கு  வேண்டுமா?

ஆண்டவனைக் கண்டோர் ,ஆண்டவன் செய்தி சொன்னோர் 

ஆடம்பரம் என்றால்   வெறுத்து ஒதுங்கியவர்கள்.

கானகவாசம்  குடிசை  வாசம்  தவம் தியானம்.
ஆனால்  இன்றைய ஆன்மிகம்   ஆஸ்தி சேர்க்கிறது. 

ஆசார்யர்கள்  சாமியார்கள் பொற்கிரீடம் ,

பொன்னாசனம்  கேட்கின்றனர்.

கொடுப்பவர்களுக்கு  பணம் வரும் விதம் என்ன ?

கொடுப்பவர்கள் வாழ்க்கைத்தரம் என்ன ?

கொடுப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள்  என்றால்,

ஏழைகளுக்கு இறைவன்  வரம் /அருள்  கிட்டாதா/?

அரசபோகம் துறந்து  கானகம் சென்றார் சித்தார்த்தர் 
ஞானம்  பெற்றார். புத்தர் ஆனார் 
அதில் ஆடம்பரம் கருத்துவேறுபாடு 
இரண்டுபட்டது புத்த மதம்.

தோற்றுவித்தவர்கள் மனித நேய  ஒற்றுமைக்கு என்றால் 

பின்னால் வந்தவர்கள் இரண்டுபடுத்தும் காட்சி .

இஸ்லாம் என்றாலும் கிறிஸ்தவம் என்றாலும் 

ஹிந்து  என்றாலும் மனித ஒற்றுமை இல்லா வேற்றுமைகள்.

உருவமில்லா இறைவன் உருவமற்ற இறைவன் ,

ஒரேமதத்தில்   இந்த வேறுபாடு .

இறைவனின் பல உருவங்கள் ,மந்திரங்களில் சில மாற்றங்கள் 

சிவா விஷ்ணு  வேறுபாடு.
சியா  சன்னி  என்ற வேறுபாடு 
காதொலிக் ப்ரோடேஸ் டாண்டு 

இன்னும் எத்தனையோ  இறைவன் வழிபட ஒற்றுமை இல்லா 

வையகம் ,இதற்கு அடிதடி குத்து வெட்டு கொலைகள் 

எந்த மத  ஆ ண்டவன்  சொன்னான் 
என்னை வழிபடா ,என் வழி  வரா ,மனிதனைக் கொன்று குவி .

அன்பில்லா  ஆண்டவன்  இரக்கமில்லா
ஆண்டவன் இல்லை வையகத்தில் 
மனித ஒற்றுமைகாணா   மதவாதிகள் 
ஆன்மிகம்  புரியா தெளியா  மேதைகள் 
உள்ளவரை  உலகில் இல்லை அமைதி.
வெறுப்பில்  வேதனை தானே மிஞ்சும்.

அன்பு  ,மனிதநேயம் மனித ஒற்றுமையே 

ஆன்மிகம் ஆடம்பரமல்ல . 




Wednesday, April 29, 2015

அமைதி ,ஆரோக்கியம் ,ஆஸ்தி தரும்.

ஆண்டவனிடம்  பிரார்த்தனை

 இன்றைய யுகத்தில் மட்டுமா?

முருகன்  விநாயகனிடம்  வேண்டுகோள்

வள்ளி -முருகன்  காதல் .

இன்று திருப்பதி ஏழுமலை  வெங்கடேசா ,

காதலுக்கு பச்சை கொடி  காட்டுராஜா.

என்றுமே  காதல் என்றாலே போராட்டம் .

தக்ஷன் மகள் சிவனைக் காதலித்ததால் 

தக்ஷனுடன் போர்.

மனிதக் காதல்  நிறைவேறவே  போராட்டம் 

இறைவனை  காதலித்து வரம் பெற போராட்டமே வேண்டாமே .

மீரா ,ஆண்டாள் ,ரமணர் ,தியாகராஜர் ,ஆதி சங்கரர் 

புத்தர் ,நபிகள் நாயகம் அனைவரும் 

காட்டியது  ஒருமையுடன்  தியானம் .
மன ஒரிமைப்பாட்டுடன்  ஆழ்நிலை தியானம்.
இவ்வழி   சாதாரண இல்லற உலகியல்  வாழ்க்கையிலும் 

இன்னல் இல்லா வாழ்க்கைக்கு 

இன்புற்று வாழ  பிரார்த்தனை 

அமைதி ,ஆரோக்கியம் ,ஆஸ்தி தரும்.





Tuesday, April 28, 2015

அறமும் மறமும் மறையும் அதுவே.

  புவியினில்  பூகம்பம் வந்தால் ,

சுனாமி வந்தால்,

பு யல் காற்று  வந்தால்.

ரயில் விபத்து  வந்தால்.

விமான விபத்து வந்தால்,

குண்டு வெடித்தால்

மழை  வெள்ளம்  வந்தால்

சுருக்கமாகச் சொன்னால்

ஆயிரக்கணக்கில்  பேரழிவு வந்தால்

பஞ்சம் வந்தால்

அனைவருக்கும்  போதுவானதுன்பம்

காலனின்  அழைப்பு வந்தால்

கடவுள் ஒருவரே என்ற ஞானோதயம் .

அன்பு ,அஹிம்சை ,அரவணைப்பு ,

தானம் தர்மம்  ஒற்றுமை உணர்வு

இந்த   இறைவன் ஒருவனே

சமரக்ஷை ,சம அழிவு ,சமத்துவம்

இயற்கையின்  தத்துவம் ,

இயற்கையின்  மாற்றம்

இயற்கையின் சீற்றம்

என்ற எண்ண  உணர்வு என்றும்

நிலைத்தால் அழியும்  உலகில்

ஆண்டவன் அருளும் ,

மனிதநேயமும்

மத இறை பேத சண்டைகள் இன்றி

அமைதி யுடன்   ஆனந்தம் பேரானந்தமே.

இறைவன் ஒருவன் என்ற உணர்வே மனித

ஒற்றுமைக்கு  ஓர்  உன்னத வழிகாட்டி.

அறமும் மறமும் மறையும் அதுவே.


Monday, April 27, 2015

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

இறைவன்  இனியவன் ,

இன்னல் தீர்ப்பவன்

அனைவரையும் சமமாக

அரவணைக்கும் ஆண்டவன்.

அவனில் பேதம் ஏன்?

இயற்கை சீற்றம்  பேதம் பார்ப்பதில்லை.

தேனின் சுவை அனைவருக்கும்  ஒன்றே .

வேப்ப எண்ணெய் கசப்பும் ஒன்றே .

கல்லின் அடி வலி ,கத்திக்குத்து வலி

வேதம் பயின்றாலும் ஒன்றே .

குரான் தொழுதாலும் ஒன்றே .

பைபிள் படித்தாலும்  ஒன்றே.

இறை பேதம் சொல்லி மனிதபேதம் கொண்டு

குறை சொல்லி ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி

வெறிகொண்டு வெறுப்புடன்  வேறுபடுத்தி

இறைவனை கூறுபோடும் பக்தி

அமைதிக்கு  வழி இல்லை .

ஆண்டவனை சிவன் விஷ்ணு ராம் ,கிருஷ்ணன்

அல்லா  இயேசு என்று வழிபடும்போது

அனைவரின் அருளும் வழியும் ஆசியும்

அன்புள்ளம் கொண்டோருக்கே .
சத்திய வழி  ஒன்றே.
மனித சேவையே மகேசனின் சேவை.
அறவழி செல்வோருக்கே  ஆண்டவன் அருள்.
அன்பு ,சத்தியவழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
நேர்வழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
தானதர்மம் செய்வோருக்கே ஆண்டவன் அருள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
அவன் சீற்றம்,அவன் தண்டனை
வேதம் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
குரான் படிக்கும் பாவிக்கும் ஒன்றே
பைபிள் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
வழிபடுங்கள் இறைவனை,
வாழுங்கள். மற்றவரையும் வாழவிடுங்கள்.
அஹிம்சை  அவனுக்கு பிடிக்கும் .
அன்பே ஆண்டவன்.

Monday, April 20, 2015

அந்த வழிபாட்டின் அருளே , ஆண்டவன் ஏற்று தரும் கருணை ,அருள்.

இன்று  எனது நண்பர்  எண்ணிய எண்ணங்கள்

ஏற்றமடைய வேண்டும்  என்றார் .

மனிதன்  என்ன எண்ணுகிறான் ?

நிலைத்த  எண்ணங்கள்  மனதில் உள்ளனவா ?

ஆன்மீகத்திலும் சரி ,அரசியலிலும் சரி

அலைபாயும் எண்ணங்கள் ,

இறைவனின் ஆன்மீகச் சொற்பொழிவு ,

மனிதமனத்தில்  தெளிவு பிறக்கவேண்டும்.

ஆன்மீகத்தில்  பல இறைவனைக் கூறுகின்றனர்.

எண்ணங்கள் மாறுகின்றன.

இந்த எண்ண  மாற்றங்களால்

சக்திக்கு ஒரு இறைவன் ,முக்திக்கு ஒரு இறைவன் ,

ஆஸ்திக்கு  ஒரு இறைவன் ,உலகியல் இன்பத்திற்கு

ஒரு  இறைவன் ,

ஒரு மனைவியுடன் வாழ ஒரு இறைவன் ,

இருமனைவியுடன்  வாழ ஒரு இறைவன் ,

பிராமச்சரியத்திற்கு  ஒரு இறைவன் ,

பிணி  தீர்க்க ஒரு இறைவன்  என்றால்

கல்லூரியில்  விருப்ப பாடம் போல் இறைவனை

தேர்ந்தெடுத்து  வாழும் கலை  வளர்க்கும் எண்ணம் .

இறைவன்  வழிபாட்டில்  இறைவன் ஒருவனே

அனைத்தும் தருபவன் ,

என்ற மன ஒருமைப்பாடு தேவை .

அரசியல் தலைவர்கள் போல் ஆன்மீகத்தலைவர்கள் ,

தங்களுக்கென  ஒரு கூட்டம் ,ஆஸ்தி சேர்ப்பதில்

ஆன்மீகத்தில் அலைபாயும் மனம் .

இந்த மன ஒருமைப்பாடு  மனித ஆற்றலுக்கு அப்பால்

ஒரு  இயற்கை சக்தி ,இறை சக்தி ,

இதையே சித்தர்கள் ,யோகிகள் கூறி

இயற்கையைப் போற்றி   வணங்கினர்.

கோள்கள் வழிபாடு ,பஞ்சபூத வழிபாடு ,

இயற்கையை மாசுபடுத்தா வழிபாடு ,

வையகம்  வாழ  வழிபாடு

மனித நேய வழிபாடு

இதை உணரா  வழிபாடு

இறைவழிபாடு  அல்ல என்றே

இறைவனை  ஒரே எண்ணத்தில் வழிபட்டால்

இன்னல் களையும். இதுவே  இறைவனைக்

காணும் அருள் தரும்  எண்ணமாகும்.

தெளிந்த மனதுடன்  இறைவனை வழிபட வேண்டும்.

இந்த  ஆலயம் ,அந்த  ஆலயம் ,

இந்த  ஆஷ்ரமம் ,அந்தாஷ்ரமம் என்று அலைபாயும்

மனதால் ஆண்டவன்   வழிபாட்டில் அலைபாயும் எண்ணம்.

மத மாற்றம், மனித ஒற்றுமை இன்மை ,இறைவன் பெயரால் கொலை

இதல்ல  ஆன்மிகம் ஆண்டவன் அருள் பெரும் வழி.

வையகம்  இன்புற ,அமைதி ,அஹிம்சை ,சர்வே ஜனா சுகினோ பவந்து

அனைவரும்  இன்பமுடன் இருக்கவேண்டும்

இதுவே  இறைவழிபாடு .

அந்த வழிபாட்டின் அருளே  ,

ஆண்டவன் ஏற்று தரும்  கருணை ,அருள்.




Sunday, April 19, 2015

அவனை அறிந்தவர்கள் மாணிக்கமே .

ஆண்டவனின்  அதிசய ரஹஸ்ய  படைப்பு ,

யாரே  அறிவர் ?

காட்டுப் பூ போல் கர்ணனைப் படைத்தார் .

பூக்கள் அரசவையில்  மட்டும்  பூப்பதில்லை

நகரத்தை விட்டு தொலைவில்  காட்டிலும் பூக்கின்றன .

இந்த கடும் இயற்கையின் மந்தணம் யார் அறிவர் ?

காட்டில் மலர்ந்தாலும் அப் பூ மணத்தால் ,அழகு தோற்றத்தால்

குணத்தால் ,காணும் மக்களின் உளம் கவர்கின்றன .

பங்களாக்களின் அழகுப்பூக்கள்  தென் படுகின்றன.

காட்டுப்பூக்களின்  சக்தி  தானாக வெளிப்பட்டு

மதிப்பைப்  பெருகின்றன.

பிறந்த இடம் அரண்மனையானாலும்  திறமை இன்றி

பெருமை யாரும் அடைவதில்லை.

சேற்றில்  மலர்ந்த செந்தாமரை போல்,

குப்பையில் கிடக்கும் மாணிக்கம் போல்

குணத்தால்  பண்பால் உயர்வோர் பலர் .

ஆண்டவனின்  இயற்கை அதிசயங்கள் ,கடும் மந்தணங்கள்.

அவனை அறிந்தவர்கள்  மாணிக்கமே .

Thursday, April 16, 2015

இவை விடுத்து இறைவனைதுதித்து இன்புற்று வாழ்வோம்.

   வையகம்  -இதில் ஆண்டவன் ஒரு புரியாத  புதிர்.

மனிதன்  விருப்பங்கள் நிறைவேறும் வரை.

ஆனால், மனித முயற்சிகள்  தோல்விகாணும் போது

அவன்  மனம் தளரும் போது ,

அவனுக்கு ஒரு நம்பிக்கை ,ஒரு பிடிப்பு , ஒரு முயற்சி ,

ஊக்கம்  தேவை.

அது எப்படி கிடைக்கும்?

இவை கிட்டாத போது ஒரு நொடியில் தற்கொலை /கொலை .

இது மனிதனுக்கு  ஏற்ற வழியா /??

அப்பொழுது  அவனுக்கு ஊக்கம் அளிப்பது  ஆன்மிகம்.

உலகம் ,நாம் என்று நினைக்கும்  மனிதன்

எவ்வித  தோல்வியும்  சந்திக்க முடியாமல்  தன்னையே

அழித்துக்  கொள்ள  லௌகீகம்  தூண்டும்.

ஆன்மிகம்  உன் க்ரஹநிலை  சரியில்லை .

இறைவனை வழிபடு  என்று ஆற்றுப்படுத்தும்.

நாற்பத்தைந்து  நாள்  இந்த மந்திரம் சொல்.

இந்த கோவிலுக்குப்போ .

அவனுக்கு  வாழ  நம்பிக்கை  அளிக்கும்.

தம்மினும் மெலியாரை நோக்கி ,அம்மா!

பெரிதென்று அக மகிழ்க --இது ஒரு தத்துவம்.

புத்தர்  பிறப்பு ,மூப்பு .இறப்பு   மூன்றிலும் வையகம் படும்

துன்பம்  கண்டார்.துறவியானார் .

அவருக்கு  கிடைத்த ஞானம் --அன்பு ,சேவை ,புன்சிரிப்பு .புலனடக்கம்.அஹிம்சை .

இதையே  ஆன்மிகம் --

காமம் ,குரோதம் ,ஆணவம் பேராசை ,
இதையே வள்ளுவர் அறம் பற்றி கூறும்  போது-

அழுக்காறு ,அவா,வெகுளி ,இன்னா சொல் இவை  நான்கும் மிழுக்கா இயன்றது அறம்  என்கிறார்.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.  என்கிறார்.

எனவே  இவை விடுத்து இறைவனைதுதித்து 

இன்புற்று   வாழ்வோம்.