இறைவன் இனியவன் ,
இன்னல் தீர்ப்பவன்
அனைவரையும் சமமாக
அரவணைக்கும் ஆண்டவன்.
அவனில் பேதம் ஏன்?
இயற்கை சீற்றம் பேதம் பார்ப்பதில்லை.
தேனின் சுவை அனைவருக்கும் ஒன்றே .
வேப்ப எண்ணெய் கசப்பும் ஒன்றே .
கல்லின் அடி வலி ,கத்திக்குத்து வலி
வேதம் பயின்றாலும் ஒன்றே .
குரான் தொழுதாலும் ஒன்றே .
பைபிள் படித்தாலும் ஒன்றே.
இறை பேதம் சொல்லி மனிதபேதம் கொண்டு
குறை சொல்லி ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி
வெறிகொண்டு வெறுப்புடன் வேறுபடுத்தி
இறைவனை கூறுபோடும் பக்தி
அமைதிக்கு வழி இல்லை .
ஆண்டவனை சிவன் விஷ்ணு ராம் ,கிருஷ்ணன்
அல்லா இயேசு என்று வழிபடும்போது
அனைவரின் அருளும் வழியும் ஆசியும்
அன்புள்ளம் கொண்டோருக்கே .
சத்திய வழி ஒன்றே.
மனித சேவையே மகேசனின் சேவை.
அறவழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
அன்பு ,சத்தியவழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
நேர்வழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
தானதர்மம் செய்வோருக்கே ஆண்டவன் அருள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
அவன் சீற்றம்,அவன் தண்டனை
வேதம் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
குரான் படிக்கும் பாவிக்கும் ஒன்றே
பைபிள் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
வழிபடுங்கள் இறைவனை,
வாழுங்கள். மற்றவரையும் வாழவிடுங்கள்.
அஹிம்சை அவனுக்கு பிடிக்கும் .
அன்பே ஆண்டவன்.
இன்னல் தீர்ப்பவன்
அனைவரையும் சமமாக
அரவணைக்கும் ஆண்டவன்.
அவனில் பேதம் ஏன்?
இயற்கை சீற்றம் பேதம் பார்ப்பதில்லை.
தேனின் சுவை அனைவருக்கும் ஒன்றே .
வேப்ப எண்ணெய் கசப்பும் ஒன்றே .
கல்லின் அடி வலி ,கத்திக்குத்து வலி
வேதம் பயின்றாலும் ஒன்றே .
குரான் தொழுதாலும் ஒன்றே .
பைபிள் படித்தாலும் ஒன்றே.
இறை பேதம் சொல்லி மனிதபேதம் கொண்டு
குறை சொல்லி ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி
வெறிகொண்டு வெறுப்புடன் வேறுபடுத்தி
இறைவனை கூறுபோடும் பக்தி
அமைதிக்கு வழி இல்லை .
ஆண்டவனை சிவன் விஷ்ணு ராம் ,கிருஷ்ணன்
அல்லா இயேசு என்று வழிபடும்போது
அனைவரின் அருளும் வழியும் ஆசியும்
அன்புள்ளம் கொண்டோருக்கே .
சத்திய வழி ஒன்றே.
மனித சேவையே மகேசனின் சேவை.
அறவழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
அன்பு ,சத்தியவழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
நேர்வழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
தானதர்மம் செய்வோருக்கே ஆண்டவன் அருள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
அவன் சீற்றம்,அவன் தண்டனை
வேதம் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
குரான் படிக்கும் பாவிக்கும் ஒன்றே
பைபிள் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
வழிபடுங்கள் இறைவனை,
வாழுங்கள். மற்றவரையும் வாழவிடுங்கள்.
அஹிம்சை அவனுக்கு பிடிக்கும் .
அன்பே ஆண்டவன்.
No comments:
Post a Comment