இறைவன் இன்பம் அளிப்பவன் .
இறை இன்பம் நிலையானது.
இப்புவி இன்பம் நிலையற்றது .
தற்காலிகமானது .
ஆடம்பரமற்ற
ஆனால் புவியில் வாழும் நாம்
அருள் பெறவே பொருள் வேண்டுகிறோம்.
ஆனந்தம் என்பது புறவாழ்வு ,
ஆடம்பரம் அலங்காரம் அதிலே தான் இறைவன்
அனாவசிய எண்ணங்கள் ,புற விருப்பங்கள்
மன தியான ஒருமைப்பாட்டை தடுக்கும் .
ஆடம்பரமற்ற ஆழ்நிலை தியானம்
ஆலயங்களில் அமைவது கடினம்.
புற ஆடம்பரங்கள் தவிர்த்து பக்தியில் நாட்டம்
ஏற்பட ஆலயங்கள் ஆரம்பத்தில் உதவும்.
மன சஞ்சலமின்றி இறைவனைக் கண்டு பேரானந்தத்தில்
பேட்டிகண்டோர் இறைவனைக் கண்டோர்
ஏகாந்த தியானம் செய்தோரே.
ரமணரும் ,புத்தரும் அல்லாவும்
தனிமைத் தவத்தில் இறை செய்தி பெற்று
இப்புவி உய்ய தெய்வீக செய்திகள் தந்தார்களே.
வால்மீகி தவம் ,துளசியின் தவம் தனித்து
அரிய பொக்கிஷம் ராமாயணம்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் அவர்களின் மன ஈடுபாடு.
சாப்பிட்டார்களா ?இல்லையா ?என்பது தெரியா ஆராய்ச்சி ,
நம்மில் தொலைக்காட்சி பெட்டியிலும்,
கைபேசியிலும் பலர் மனம் லயித்தால்
வருவோர் போவோர் தெரியாது.
அந்த மன லயம் ஈஸ்வர வழிபாட்டில் ஈடுபடவேண்டும்.
பசித்திரு -தனித்திரு என்றார் விவேகானந்தர் ,
அவர் அலைபாயும் கடல் பாறையில் அமைதிகண்டார்
அமைதி .அமைதி.அமைதி .
சாந்தி ! சாந்தி. சாந்தி!
அதில் அடையும் பிரம்மானந்தம்
அதுவே பரவசம் . பரமானந்தம்.
புற ஆசை மறந்து அக அமைதி.
அதுவே இறைநிலை.
இறையன்பு.
முக்திநிலை.
சித்தி நிலை.
No comments:
Post a Comment