Sunday, February 26, 2012

eeshwar prem

प्यार बिना सारहीन है ,सांसारिक जीवन.कबीर ने अपने पद में लिखा है -माया भरी संसार में शिव कीप्यारी पार्वतीदेवी  तो विष्णू की  प्यारी  लक्ष्मी,ब्रह्मा की प्यारी सरस्वती, भक्त  केलिये  भगवान प्यारा है.यह प्यार  का मोह न ठगता तो  ......जग  जीवन  निरर्थ  हो जायेगा.
हम देखते  हैं, मरणावस्था में भी प्रिया जन जाब तक न आते,जीव तडपत रहता है.प्रिया के नाम कहने पार आंखेन
घुमती हैं. प्रिया के आने पर प्राण चाले जाते हैं..प्यार का अपना विशिष्ट स्थान है.
साधू-संत-सिद्ध-योगी सब के सब सांसारिक  प्यार से हटकर ईश्वरीय प्यार पर लोगों को जोर देते है.
तुलसीदास,तमिळ के अरुनागिरी नाथ,संत  पट्टी  नात्तार ,राजा भर्तृ हरी,किते ही लोग अपने कटू अनुभव के कारण  ,अपनी ईश्वरीय अनुभूती के वश में  सांसारिक प्रेम की अश्लीलता को घृणा  प्रद  पद में लिखकर ,
ईश्वरीय  प्रेम ही शाश्वत आनंद  का मार्ग दिखाते हैं.ईश्वरीय प्रेम में लेन-देन की चर्चा नहीं.धन की आवश्यकता नहीं.दलाल नहीं.पुजारी
की आवश्यकता नहीं.अपने मन की एकाग्र ध्यान ही प्रधान है.संसार में जीकर सांसारिक प्रेम से दूर रहना,
पारिवारिक संबंध में रहकर  भागवत प्रेम में लगना,
ईश्वर प्रेम प्राप्त करना;ईश्वर को रक्षक बनाना.

संत कबीर ने लिखा  है----

जाकै राखै साईयां   ,मारी न सकके कोई १
बाल न बांका करी सकके ,जो जग वैरी होय. 





Friday, February 24, 2012

DHARMAM NILAIKKUM

மனிதன் மனித நேயத்திற்கு அடிமையானால் ஆண்டவன் அவனுக்கு அடிமையாவான்.எத்தனையோ ஏழை அடியார்கள் வீட்டில் இறைவனே சென்று ஊழியம் புரிந்த நிகழ்ச்சிகள் சிவ  புராணத்திலும்  உண்டு சிவா புராணத்திலும் உண்டு.இறைவன் திருவிளையாடலே அன்பர்களை சோதித்து அவர்களின் அன்பு வேண்டுகோளை  நிறைவேற்றுவதுதானே.


ஆனால்,இறைவனே மக்களிடத்தில் ஏமாறும்  கதைகளையும் படிக்கிறோம்.சிவன் பக்தனுக்கு வரம் அளித்து ஓடி ஒழிந்த கதையின் விளைவே
சபரியின் கதை. அதாவது சபரி கிரிவாசன் ஐயப்பன் கதை.பக்தனுக்காக சற்றே அதர்மமும் செய்ததே மகா பாரதக்கதை.தர்மம் குனியக்குனிய அதர்மம் மேலோங்கும்.தர்மத்தின் அன்பு,பொறுமை,சகிப்புத்தன்மை ஆகியவற்றை
தர்மம் இழக்கும் பொது  அதர்மம்  அடியோடு ஒழியும்.ஒளிரும் தர்மம் மீண்டும் 
அசுரசக்தியல் அடக்கிவைக்கப்படும்.
அதுதான் சாத்தானின் வேதம் ஓதுதல்.மாயை.ஷைத்தான்.மது,மாது,ஊழல்,
பணம்,தங்கம்,அறிவியல் சாதனங்கள்,ஆசை,பேராசை,பொறாமை,ஆணவம்,விரோதம்,காமம்  போன்றவை. இந்த குணங்கள் இருந்தால் முட்டாளும் மூடனே.
இன்றைய சமுதாய அமைப்பு தன்னலம் சார்ந்தாலும் நமது ஆன்மீக அமைப்பு,
சோதனை,நோய்,விபத்து,ஊனம் ,குருடு,பைத்தியம்,சித்தபிரமை,செவிடு,கொலை,தற்கொலை,ஆவி,பேய்பிசாசு,
என ஒரு ஆத்மா பயத்தை உருவாக்குகிறது.இதனால் பல அநியாயங்களுக்கு நடுவில் தர்மம் ,இறையன்பு உயர்ந்து விளங்குகிறது.விளங்கியது.விளங்கும்.   

Tuesday, February 21, 2012

alavu athikamaanal

அன்பால் இவ்வுலகம் இயங்குகிறது.அன்பில்லை என்றால் உலகம் அழிகிறது.
அன்பான  காற்று  புயலாக மாறினால் அழிவு.மிதமான மழைஇடியுடன் கூடிய பெரும் மழையாக மாறினால் அழிவு.குறைந்த உணவு ஆரோக்கியம்.மிகுந்த உணவு  நோய்.அவ்வாறே அளவான வருமானம் நிம்மதி.அளவுக்கு அதிக வருமானம் தூக்கமின்மை.அளவுக்கு அதிகமானால் அன்பால் கெடும் குழந்தைகள்.அன்பால் கெடும் நண்பர்கள்.அன்பால் கெடும் .அன்பு அதிகமானால்.அவ்வாறே வெறுப்பும்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.பணப்பற்று பாசம் அறுக்கும்.நீட்டி ஒலிக்கும்.நீதி ஒழிக்கும்.
பெற்றோர்,உற்றோர், நண்பர்கள் தானாக ஒதுங்குவார்கள்.அல்லது பேராசையால் ஒதுக்கப்படுவார்கள்.அதே சமயம் பணம் படைத்தவர்களுக்கு அனைவரும் அடிமையே.

Wednesday, February 15, 2012

prayer vaiyakam kaakka.

உலகநாதனே,

ஊழ்வினைப்பயன்  தீர்ப்போனே,

உடல் எடுக்க உந்து  கோல்   நீயே.

உன் பாதங்களில் சரணம்!சரணம்!

உலகில் உன் திருவிளை யாடல்,

உன் மேல் உளம் உருக வைக்குதய்யா.


எண்ணங்கள் ஏற்றமோ,இறக்கமோ,


முன்னேற்றமோ வீழ்ச்சியோ .

உன் கருணையே என உணர்ந்தேன்.

உன்னையே  சரணடைந்தேன்.

உண்மை நீ ,பொய் உலகு;

யாக்கை பொய்;அனைத்துமே நிலையில்லாமை;

உனது அரும் பெரும் கருணை ஒன்றே,

இவ்வுலகில் அவ்வுலகில் சாஸ்வதம் என்றே,

அனுபவ ஞானிகளின் சத்திய வாக்கு.

அவனியில் துன்பங்கள் பல வந்தாலும்
உன் நினைவகற்றி ஆணவத்தால்,
அநியாயங்கள் பல செய்தே,
தன் நிலையாமை உணரா மக்கள்,,
தனம் தனை சேர்த்திட்டாலும்,
தன் தரம் தனை உயர்த்திட்டாலும்,
தரணியில் புகழ்பெற்றாலும்,
அவனியில் நிலை பெற்றாலும்,
காலன் வந்து உயிரெடுக்கும் நீதி,
நீலகண்டனின்  நீதி.
நித்திலத்தில் நீங்கும் உயிர்,
 சுட்டெரிப்பார் உடலை.
பிடிசாம்பலாகும் உடலே.
புதைத்துவைப்பர்  உடலை,
புழு பூச்சிக்கு இரையாகும் உடலே.
புண்ணியம் செய்தாலும்  ,
புவி ஆட்சி செய்தாலும்.
புவியில் பிறந்தோர்
புவியினில் நிலைப்பதில்லை.
பூமி நாதனே உன் சரணம் .
பூவையின் அழகிலே நாட்டம் வைத்து,
மாதவியிடம் மையல் கொண்டு,
கட்டிய மனைவி கண்ணகியை கதறவிட்டு,
தானும் அழிந்து,மன்னவனும் உயிர் துறந்து,
மதுரையும் அழிந்த கதை.
பட்டினத்தார்,பத்ரகிரி,அருணகிரி என ,

உன்னையே தஞ்சம் அடைந்த ஞானிகள்.
பட்ட அனுபவ  அறிவை ,அவனிக்குத்  தெரிய
பாடிய புலம்பல்.
இன்றைய பட்ட தாரிகள் பாடங்களில் இல்லை.
நீதி போதனைகள் இல்லை.
தர்ம சிந்தனை இல்லை.
உலகநாதனே!!!
உலகைக்காப்போனே!!
அநாதை ரக்ஷகனே!!
தீன பந்துவே!
மாணவ உலகம் தறி கட்டே செல்லும் மார்க்கம்.
கொலை,தற்கொலை,கொள்ளை என்றே மாறும்
மார்க்கம்.
உன்னையே தஞ்சம் அடைகின்றேன்;
வையகம் காக்க,அவனியில் வாழ்வோருக்கு,
நேர்வழி ,நல்வழிகாட்ட
உன்னையே வேண்டி தஞ்சம் அடைகிறேன்;
அவனியில் நேர்மை காக்க ,
அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
அடைகிறேன் சரணாகதி உன்னிடமே.



religious harmony -

அல்ஹம்துலில்ல்லாஹ் -எல்லாப்புகழும் இறைவனுக்கே.
லா ஹவ்ல வள குவ்வத்த இல்லா பில்லாஹ் --நன்மைகளை செய்வதும் தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதும்,மேன்மையும்மகத்துவமும் மிக்க ஏக
இறைவனின் உதவி இன்றி செய்ய இயலாதவை.


பாபர்  தன் மகன் ஹுமாயுனுக்குக் கூறிய அறிவுரை:------
௧.எவ்விதமான சமய வெறுப்பும் இல்லாமல் இருக்கவேண்டும்.
௨.ஒவ்வொரு ஜாதியரோடும் நீதியுடன் நடந்து கொள்ளவேண்டும்.
௩.கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
௪.இஸ்லானிய நெறியை மேலோங்கச்செய்ய அன்பெனும் வாளே பயன் படுத்த
வேண்டும் .
௫.மார்க்க விஷயத்தில் ஷீய,சுன்னா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பொருட்படுத்தாதே.
திப்பு
சூல்தான் பிரகடனம்------
குரான் நற்காரியங்கள்  செய்யும் பொது மட்டும் போட்டி போட்டுக்கொண்டு செய்யச் சொல்கிறது

குர் ஆனின் கோட்பாட்டின்படி சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறைவன் ஒருவனே,அவனுக்குப் பல பெயர்கள் உண்டு.அந்த ஒரே இறைவனிடம் சரணடைகிறோம்.

மைசூர் ராஜ்யத்தில் உள்ளோருக்கு மதவேற்றுமை,ஜாதி வேற்றுமை,வர்க்க வேற்றுமை,ஆகியவை சட்ட விரோதம்.
இந்த அறிவிப்பை சிருங்கேரியின்  பீடாதிபதி மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

மத நல்லிணக்கம் பாரதத்தில் அனைத்து மக்களிடம் காணப்பட்டது.

ஆதாரம்:-
எம்பால் தஜம்முல்முஹம்மது.---இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்.
-



Tuesday, February 14, 2012

islam anbu

ஒ மக்களே! -சாந்தியை பரப்புங்கள்.ஒவ்வொருக்கொருவர் சாந்தியையும் சமாதானத்தையும்,கொண்டு நற்செய்தி கூறிக்கொள்ளுங்கள்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்.உறவினர்களின் பண்டங்களை கௌரவியுங்கள்.மனிதர்கள் உறங்கும் வேளைகளில் இறைவனை வழிபடுங்கள்.நீங்கள் சாந்தியுடன் நுழைய து உதவும்.

எல்லா மதத்தினரும் கூடியிருந்த இனிய நேரத்தில் நாயகம் (ஸல்) அவர்கள்
செய்த போதனை.
மதங்கள் மனிதர்களை காக்க. வெறுக்க அல்ல. இதற்கு இந்த உரையே எடுத்துக்காட்டு.


Tuesday, February 7, 2012

total surrender=poorna saranaagathi

அன்பிற்கு  உண்டோ  அடைக்குந்தாழ்.

அன்பான அழைப்பை ஆண்டவன் கேட்பான்.அது முற்றிலும் அவனை சரண் அடைவதாக இருக்கவேண்டும்.அதென்ன முற்றிலும் சரண் அடைதல்?
அதாவது பரிபூரண நம்பிக்கை.சந்தேகம் இல்லா பக்தி.என்னை காப்பான மாட்டானா ?  
அவன் இருக்கிறானா இல்லையா?
நான் தினந்தோறும் துதி பாடுகிறேன்.ஆலயம் செல்கிறேன்.bajanai செய்க்றேன்.ஆன்னாலும் என் மனவேதனை தீரவில்லை.துன்பங்கள்.
அலைகள் ஓய்வதில்லை என்ற எண்ணங்களுக்கு இடமளிக்காத தீவீர அன்பு பக்தி.துர்வனின் பக்தி .பிரஹலாதனின்    பக்தி.ஆண்டாளின் பக்தி.மீராவின் பக்தி.
சிந்தை  கலங்காத   பக்தி
அதுதான் சரணாகதி.அந்நிலை யாருக்கும் இல்லை.அவதாரம் எடுத்த ராமனுக்கும் இல்லை.அதுதான் மனித ஜன்மம்.பூர்ண சரணாகதி  பூர்ண க்ருபா
கடாக்ஷம்.
பற்றுள்ள உலகில் எவ்வித பற்றும் இல்லா நிலை.அந்நிலை பரமானந்த நிலை.
இறையன்பு மட்டும் இதயத்தில்.முயன்று பாருங்கள்.