Wednesday, February 15, 2012

prayer vaiyakam kaakka.

உலகநாதனே,

ஊழ்வினைப்பயன்  தீர்ப்போனே,

உடல் எடுக்க உந்து  கோல்   நீயே.

உன் பாதங்களில் சரணம்!சரணம்!

உலகில் உன் திருவிளை யாடல்,

உன் மேல் உளம் உருக வைக்குதய்யா.


எண்ணங்கள் ஏற்றமோ,இறக்கமோ,


முன்னேற்றமோ வீழ்ச்சியோ .

உன் கருணையே என உணர்ந்தேன்.

உன்னையே  சரணடைந்தேன்.

உண்மை நீ ,பொய் உலகு;

யாக்கை பொய்;அனைத்துமே நிலையில்லாமை;

உனது அரும் பெரும் கருணை ஒன்றே,

இவ்வுலகில் அவ்வுலகில் சாஸ்வதம் என்றே,

அனுபவ ஞானிகளின் சத்திய வாக்கு.

அவனியில் துன்பங்கள் பல வந்தாலும்
உன் நினைவகற்றி ஆணவத்தால்,
அநியாயங்கள் பல செய்தே,
தன் நிலையாமை உணரா மக்கள்,,
தனம் தனை சேர்த்திட்டாலும்,
தன் தரம் தனை உயர்த்திட்டாலும்,
தரணியில் புகழ்பெற்றாலும்,
அவனியில் நிலை பெற்றாலும்,
காலன் வந்து உயிரெடுக்கும் நீதி,
நீலகண்டனின்  நீதி.
நித்திலத்தில் நீங்கும் உயிர்,
 சுட்டெரிப்பார் உடலை.
பிடிசாம்பலாகும் உடலே.
புதைத்துவைப்பர்  உடலை,
புழு பூச்சிக்கு இரையாகும் உடலே.
புண்ணியம் செய்தாலும்  ,
புவி ஆட்சி செய்தாலும்.
புவியில் பிறந்தோர்
புவியினில் நிலைப்பதில்லை.
பூமி நாதனே உன் சரணம் .
பூவையின் அழகிலே நாட்டம் வைத்து,
மாதவியிடம் மையல் கொண்டு,
கட்டிய மனைவி கண்ணகியை கதறவிட்டு,
தானும் அழிந்து,மன்னவனும் உயிர் துறந்து,
மதுரையும் அழிந்த கதை.
பட்டினத்தார்,பத்ரகிரி,அருணகிரி என ,

உன்னையே தஞ்சம் அடைந்த ஞானிகள்.
பட்ட அனுபவ  அறிவை ,அவனிக்குத்  தெரிய
பாடிய புலம்பல்.
இன்றைய பட்ட தாரிகள் பாடங்களில் இல்லை.
நீதி போதனைகள் இல்லை.
தர்ம சிந்தனை இல்லை.
உலகநாதனே!!!
உலகைக்காப்போனே!!
அநாதை ரக்ஷகனே!!
தீன பந்துவே!
மாணவ உலகம் தறி கட்டே செல்லும் மார்க்கம்.
கொலை,தற்கொலை,கொள்ளை என்றே மாறும்
மார்க்கம்.
உன்னையே தஞ்சம் அடைகின்றேன்;
வையகம் காக்க,அவனியில் வாழ்வோருக்கு,
நேர்வழி ,நல்வழிகாட்ட
உன்னையே வேண்டி தஞ்சம் அடைகிறேன்;
அவனியில் நேர்மை காக்க ,
அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
அடைகிறேன் சரணாகதி உன்னிடமே.



No comments: