அன்பு என்பது பணம் என்பதும் இணைந்து இருப்பதால் வந்தால் அது அன்பாகாது.உண்மையான அன்பு வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து வருவதில்லை .
நாட்டை ஆளும் மன்னன் நாட்டிற்காக போராடி உயிர் இழக்கும் போர்வீரன்.
இருவரில் ஆடம்பரமாக ஆனந்தமாக சுயநலமாக போர்வீரன் இருக்க ஆசைப்பட்டால் அரசனின் வெற்றிக்கனவுகள் பாதிக்கும்.உண்மையான அன்பு துறவு நிலை. பற்றற்ற நிலை. இந்நிலையில் தான் இறைவனைக் காண முடியும்.காண என்றால் ஆன்மீகவாதிகள் இடையில் சர்ப்படாது.இறைவனை தரிசிக்க நுடியும் என்ற வாடா சொல் போடவேண்டும் அதுதான் இறைவன் ஏற்பான் என்ற வாதம்.இதனால் வட மொழி தெரியாதவர்கள் ஆன்மிகம் பற்றி பேசவோ ஆண்டவன் மேல் புகழ் பாடல் பாடவோ முடியாது.
கபீர் படிக்காதவர். மக்கள் மொழியில் ஆழமான இறைப்பற்றைப் பற்றி பாடினார்.
அதனால் அவர் ஆழ்ந்த அனைவருக்கும் புரியும் கருத்துக்கள் அமுக்கப்பட்டன.
இந்நிலை பாரதத்தில் இருக்கும் வரை நூறு சதவிகித ஒற்றுமை உணர்வு மொழி சர்ச்சையில் பாதிக்கப்படும்.இறைவனை புரியும் மொழியில் போற்றவேண்டும்.
இல்லையெனில் இறைப்பற்று இனம் தெரியாமல் போகும்.
ஆன்மீக நூல்கள் எளிய தமிழில் வந்த தும் தான் தமிழகத்தில் இறைப்பற்றாளர்கள் பெருகி வந்தனர்.
துளசி தாசர் ராமாயணம் வந்த பிறகுதான் வட இந்தியாவில் ராமாயணம் இல்லம் தோறும் படிக்கப்பட்டு வருகிறது.
ஆன்மீகக் கண்காட்சியில் தமிழ் ஹிந்து மத நூலக என்ற கண் காட்சி. தமிழ்க்கடவுள் முருகன்.ஆண்டவனே ஒரு மொழிக்காக என்ற நிலை.
புரியாத மொழி வணக்கம் போராட்டம் உண்டு பண்ணும். அதனால் தான் வட கலை,தென் கலை நாமங்கள்.வழக்குகள். வெறுப்புகள் தவறு துவேஷங்கள்.
ஒரு மொழி அறியாதவனைத் தாழ்ந்தவன் என்று ஒதுக்கியதன் பாவத்தை
ஒரு இனம் அறிந்து தன நித்ய அனுஷ்டானங்களை மறந்து எங்கே அவன் என்ற தொடராக தேடவைத்துள்ளது.இதற்குப்பொருள் பொருளாதாரமே.
பல கோயில்கள் பாழடைந்து உள்ளது என்றால் பொருளுள்ள கோயில் பொருளற்ற கோயில்களை அழிக்கப்பார்த்து தன்னை வளம் பட பார்த்துக்கொள்வதுதான்.
எங்கும் இறைவன்.தூணிலும் இறைவன்.ஒவ்வொரு செயலிலும் இறைவன்
என்ற உயர் தத்துவம் கபீரின் பக்தி மார்க்கம்.
No comments:
Post a Comment