Wednesday, February 1, 2012

kabeer anbu love devotion

கபீர்--அன்பு.
இறைவன் என்னிடம் எப்பொழுதும் இருக்கவேண்டும்.அவன் என்னிடம் இருந்து பிரியாத அளவுக்கு நான் அவனிடம் அன்பும் சிரத்தையும் பக்தியும் காட்டவேண்டும்.நான் துயிலும் பொழுது என்னிடம் இறைவன் பேட்டிகாணவேண்டும்.
விழித்திருக்கும் போதும் என் மனதில் அவன் உணர்வே இருக்கவேண்டும்.அவன் பிரிவால் என் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி கண்கள் சிவக்கவேண்டும்.நான் என்னையே மறக்க வேண்டும்.அவன் நினைவு மட்டும் அவனிடம் இருக்கவேண்டும்.அவன் என்னிடம் இருந்து பிரியக்கூடாது.
सोवों तो सुपने मिलें,जागों तो मनमाहीं ,
लोयन राता सुधि हरी, बिछुरत कबहूँ नाहिं.

२.

प्रेम न बाड़ी  ऊपजे,प्रेम न हाट बिकाय.

रजा प्रजा जेहि रुचे,शीश देई लै जाय.

கபீர் அன்பு என்பது ஆணவம் அழிந்து தானாக பெறப்படுவது என்கிறார்.
அன்பு என்பது தோட்டத்தில் விளைவதில்லை.சந்தையில் விற்பனை
செய்யப்படுவதில்லை.மன்னனோ மக்களோ யாருக்கு இது
விருப்பமாகிறதோ  அவன் தன்
 தலை கொடுத்து அன்பைப்பெருகிறான்.
௩.
छिन्हिन चढे,छीन उतरे,सो तो प्रेम न होय.
अघात प्रेम पिंजर बसे,प्रेम कहावै सोय.

கபீர்   அன்பு என்பது நிலைத்து   நின்றால்   தான் அன்பாகும் என்கிறார்.
ஒரு நொடியில் ஏற்று முகமாகி ,மறு நொடியில் இறங்குமுகமாவது
 அன்பாகாது.என்றும் குறையாதஅன்பாக  இறைவன் என்ற கூட்டில் நிலைத்து
நின்றால் தான் அன்பாகும்.

௪.


No comments: