இன்றைய இந்த மாதம் காதலர்- தினம் கொண்டாடும் மாதம்.பெற்றோர் வேதனைப்படும் மாதம்.
.அவர்கள் தெரியாமல் வாலிபர்கள் பெற்றோர் பணத்தையே திருடும் . திருடர்கள்.
பாட்டிக்கு மருந்து வாங்க வைத்த பணம்,
வீட்டுக்கு மின் கட்டணம் கட்டும் பணம்,
அவசரச் சிலவுக்கு வைத்த பணம்-என
அனைத்தும் மாயமாய் மறையும் தினம்.
மாயை உலகில் நிலைத்த பெற்றோர் அன்பை
தொலைத்து தொல்லை கொடுக்கும் தினம்
காதலியை ஒரு பக்கமாக காதலிக்கும் .
மற்றொரு ஆடவனின் வயிறை எரியவக்கும்
தினம்.
வீட்டில் இருந்து வெளியில் சென்ற
மகனோ,மகளோ, வரவில்லை என்ற
பதட்டத்துடன் பல நடவடிக்கையில் ஈடுபட,
காதலர்களுக்கு வேண்டாதவர்கள்,
போராட பல அடிதடிகளும் கத்தி குத்துகளும்,
காவல் நிலையப்புகார்களும்.
கலவரங்களும் நடக்கும் தினம்
அன்பே பெரிதென்றாலும் .,
அன்பு செய்து திருமண செய்தோரும்,
தன் வாரிசுகளின் காதலை வெறுக்கும்
தினம்.
ஜாதிகள் இல்லை என்று முழங்கும்,
தலைவர்களும் jaathi வெறி காட்டும் தினம்.
பல போராட்டங்கள்,கொலைவெறி ,இன மத வெறுப்புகள் இருப்பினும்
புராண காலம் முதல்,இன்றுவரை
காதல் வளர்ந்து கலப்பினத்தால்.
உலகை ஒற்றுமைப்படுத்தும் புனித தினம். ,
No comments:
Post a Comment