Friday, February 24, 2012

DHARMAM NILAIKKUM

மனிதன் மனித நேயத்திற்கு அடிமையானால் ஆண்டவன் அவனுக்கு அடிமையாவான்.எத்தனையோ ஏழை அடியார்கள் வீட்டில் இறைவனே சென்று ஊழியம் புரிந்த நிகழ்ச்சிகள் சிவ  புராணத்திலும்  உண்டு சிவா புராணத்திலும் உண்டு.இறைவன் திருவிளையாடலே அன்பர்களை சோதித்து அவர்களின் அன்பு வேண்டுகோளை  நிறைவேற்றுவதுதானே.


ஆனால்,இறைவனே மக்களிடத்தில் ஏமாறும்  கதைகளையும் படிக்கிறோம்.சிவன் பக்தனுக்கு வரம் அளித்து ஓடி ஒழிந்த கதையின் விளைவே
சபரியின் கதை. அதாவது சபரி கிரிவாசன் ஐயப்பன் கதை.பக்தனுக்காக சற்றே அதர்மமும் செய்ததே மகா பாரதக்கதை.தர்மம் குனியக்குனிய அதர்மம் மேலோங்கும்.தர்மத்தின் அன்பு,பொறுமை,சகிப்புத்தன்மை ஆகியவற்றை
தர்மம் இழக்கும் பொது  அதர்மம்  அடியோடு ஒழியும்.ஒளிரும் தர்மம் மீண்டும் 
அசுரசக்தியல் அடக்கிவைக்கப்படும்.
அதுதான் சாத்தானின் வேதம் ஓதுதல்.மாயை.ஷைத்தான்.மது,மாது,ஊழல்,
பணம்,தங்கம்,அறிவியல் சாதனங்கள்,ஆசை,பேராசை,பொறாமை,ஆணவம்,விரோதம்,காமம்  போன்றவை. இந்த குணங்கள் இருந்தால் முட்டாளும் மூடனே.
இன்றைய சமுதாய அமைப்பு தன்னலம் சார்ந்தாலும் நமது ஆன்மீக அமைப்பு,
சோதனை,நோய்,விபத்து,ஊனம் ,குருடு,பைத்தியம்,சித்தபிரமை,செவிடு,கொலை,தற்கொலை,ஆவி,பேய்பிசாசு,
என ஒரு ஆத்மா பயத்தை உருவாக்குகிறது.இதனால் பல அநியாயங்களுக்கு நடுவில் தர்மம் ,இறையன்பு உயர்ந்து விளங்குகிறது.விளங்கியது.விளங்கும்.   

No comments: