அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்.
அன்பான அழைப்பை ஆண்டவன் கேட்பான்.அது முற்றிலும் அவனை சரண் அடைவதாக இருக்கவேண்டும்.அதென்ன முற்றிலும் சரண் அடைதல்?
அதாவது பரிபூரண நம்பிக்கை.சந்தேகம் இல்லா பக்தி.என்னை காப்பான மாட்டானா ?
அவன் இருக்கிறானா இல்லையா?
நான் தினந்தோறும் துதி பாடுகிறேன்.ஆலயம் செல்கிறேன்.bajanai செய்க்றேன்.ஆன்னாலும் என் மனவேதனை தீரவில்லை.துன்பங்கள்.
அலைகள் ஓய்வதில்லை என்ற எண்ணங்களுக்கு இடமளிக்காத தீவீர அன்பு பக்தி.துர்வனின் பக்தி .பிரஹலாதனின் பக்தி.ஆண்டாளின் பக்தி.மீராவின் பக்தி.
சிந்தை கலங்காத பக்தி
அதுதான் சரணாகதி.அந்நிலை யாருக்கும் இல்லை.அவதாரம் எடுத்த ராமனுக்கும் இல்லை.அதுதான் மனித ஜன்மம்.பூர்ண சரணாகதி பூர்ண க்ருபா
கடாக்ஷம்.
பற்றுள்ள உலகில் எவ்வித பற்றும் இல்லா நிலை.அந்நிலை பரமானந்த நிலை.
இறையன்பு மட்டும் இதயத்தில்.முயன்று பாருங்கள்.
No comments:
Post a Comment