மஹாதேவ ஸ்வரூப மஹிமை.
पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृतिम् वहां वरेण्यम् ।
जटाजूटमध्ये स्फुरुद्रांगवारिँ महादेवमेकं स्मरामि स्मरामिम् ।1।
சிவன் தான் அகில உலகத்தைப் படைத்தவன், பாதுகாவலன்.
பாவங்களை அழிப்பவன்.
யானைத் தோலை ஆடையாக அணிந்திருப்பவன்.அது அணியத் தக்க ஆடை தான்.
அவருடைய ஜடா முடியில் கங்கை
அலைபாயும். காம தேவனின் ஒரே எதிரி.
இப்படி உயர்ந்த சிவனை வணங்குகிறேன்.
2. श्लोक 2:
महेशं सुरेशं सुरारातिनाशं विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषम्।
विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम्।।
அனைத்து தேவர்களுக்கும் கடவுள், அசுரர்களை அழிப்பவர், அனைத்து இடங்களிளும் இருப்பவர், உலகநாதர், உடலில் சாம்பல் பூசுபவர், அவர் அலௌகீக உருவம் கொண்டவர்,அவர் சூரியன்,சந்திரன்,அக்னி என்ற முக்கண்கள் உடையவர். நான் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கின்ற ஐந்து முகங்கள் கொண்ட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम्।।
அனைத்து தேவர்களுக்கும் கடவுள், அசுரர்களை அழிப்பவர், அனைத்து இடங்களிளும் இருப்பவர், உலகநாதர், உடலில் சாம்பல் பூசுபவர், அவர் அலௌகீக உருவம் கொண்டவர்,அவர் சூரியன்,சந்திரன்,அக்னி என்ற முக்கண்கள் உடையவர். நான் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கின்ற ஐந்து முகங்கள் கொண்ட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
3.गिरीशं गणेशं गले नील वर्णं
गवेंद्राधिरूढं गुणातीत रूपं।
भवन भास्वरं भस्मना भूषितांगं
भवानी कलत्रं बजे पंचवक्त्रम्। 3।
கைலாய மலையின் சுவாமியும்
தேவர்களின் அதிபதியும்
விஷத்தின் காரணமாக கழுத்தில் நீலவர்ணம் கொண்டவரும் நந்தியை வாகனமாகக் கொண்டவரும் முடிவில்லா எண்ணிக்கையில் அடங்கா உருவம் கொண்டவருமான
சிவனைத் துதிக்கிறேன். அவர் நிலையானவர், ஆழ்மனதில் உணர்வின் ஒளியாக ஒளிர்கின்றவர்
அவர் உடலில் சுடலைப்
பொடி பூசி அழகாக தோற்றமளிக்கிறார்.
நான் அந்த ஐந்து முக மஹாதேவனை உபாசனை செய்கிறேன்.
4.शिवाकांत शम्भो शशांकार्ध मौले
महेशान शूलिन् जटाजूटधारिन् ।
त्वमेको जगद्व्यापकोविश्वरूप
प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप।4।
ஹர ஹர சிவனே!
ஆனந்தமளிப்பவனே!
தேவி பார்வதியின் அன்பரே!
சிரத்தில் பிறை சூடியவனே!
திரிசூலம் வைத்திருப்பவரே!
அகில உலகிலும் வியாபித்திருப்பவரே!
அகில உலகிலும் உங்கள் வடிவமே!
இறைவனே! எங்கள் மீது கருணை காட்டுங்கள்! அருள் புரியுங்கள்!
परमात्मानमेकम् जगद्वीजमाद्यम्
निरीहं निराकारमोंकारवेद्यम्।
यतो जायते पाल्यते में विश्वं
तमीशं भजे लीयते यत्र विश्वम्।5।
வையகத்தின் மூல காரணமான வரும் ஒரே பகவானும் ஆகிய பரமாத்மா, உருவமற்றவர் ஓங்காரம் மூலமாக வேதங்களில் அறியப்படுபவரும்,
உலகைப் படைத்த வரும்
உலகை காப்பவருமான சிவன்.
அவரிடம் உலகமே ஐக்கியமாக இருக்கிறது.
न भूमिर्न चाटो न वह्निर्न वायुर
न चाकाश आस्ते न तन्द्रा न निद्रा।
न ग्रीष्मो न शीतो न देशों न वेषों
न यस्यास्ति मूर्ति स्त्रि मूर्ति तमीडे।।6।।
அவர் பூமி இல்லை. ஆகாயம் இல்லை. தண்ணீர் இல்லை.
காற்று இல்லை.
ஆகாயம் இல்லை.
அவருக்கு ஒரு
பௌதீக உடல் கிடையாது.
அவரிடத்தில் சோம்பல் கிடையாது.
தூக்கம் கிடையாது.
வெப்பம் கிடையாது.
குளிர் கிடையாது.
நாடு கிடையாது.
வேடம் கிடையாது.
ஸ்தூல உருவம் கிடையாது.
இப்படிப்பட்ட மும்மூர்த்தி வடிவமான
கடவுளை வணங்குகிறேன்.
अजं शाश्वतं कारणं कारणानां
शिवं केवलं भासकं भासकानाम् ।
तुरीयं तमः पारमाद्यन्तहीनं।
प्रपद्य परं पावनं द्वैतहीनम्।।7।।
பிறவியில்லாதவர்.
நிலையானவர்.
அனைத்து காரணங்களுக்கும் காரணமானவர்.
கல்யாண மங்களகரமான வடிவுடையவர். அனைவருக்கும் ஒளி அளிப்பவர், உன்னத ஆன்மீக நிலையில் உள்ளவர் இருளைக் கடந்தவர். ஆரம்பம் முடிவு இல்லாதவர். நான் அந்த உயர்ந்த
புனிதமான அத்வைத ஸ்வரூபமான
பரமேஸ்வரனை சரணடைகிறேன்.
नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते।
नमस्ते नमस्ते चिदानंद मूर्ते।
नमस्ते नमस्ते श्रुति ज्ञान गम्य।।8।।
அனைத்து இடத்திலும்
நிறைவாக இருப்பவனே!
உலகநாதனே!
தங்களை மீண்டும் மீண்டும்
வணங்குகிறேன்.
அறிவின் ஆனந்தமே!
தங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
தவ வலிமையினாலும் யோகத்தாலும்
அடைகின்ற தங்களை வணங்குகிறேன்.
ஸ்ருதியாலும் ஞானத்தாலும்
அறியப்படுகின்ற தங்களை
நமஸ்கரிக்கிறேன்.
प्रभो शूलपाणे विभो विश्वनाथ।
महादेव शम्भो महेश त्रिनेत्र।
शिवकांत शांत स्मरारे पुरारे।
त्वदन्यो वरेण्यो न मान्यों न गण्यः।।।9।।
திரிசூலம் கொண்ட சிவனே,
விஸ்வநாதனே! மஹா தேவனே!
ஆனந்தம் அளிப்பவரே!
முக்கண்ணரே!
பார்வதிப் பிரியரே!
சாந்தி ஸ்வரூபியே!
காமதேவனையும் திரிபுராசுரனையும்
சம்ஹாரம் செய்தவரே!
உங்களைப்போல் சிறந்தவர் ஒருவரும் இல்லை.
உங்களுடன் ஒப்பிட யாரும் இல்லை.
ஒப்பில்லாதவரே! எண்ணிக்கையில் அடங்காதவரே! சிவபெருமானே!
शंभो महेश करुणामय शूलपाणे।
गौरीपते पशुपते पशुपते पशुपाशनाशिन्।
काशीपते करुणा जगदेतदेकस्।
त्वं हंसि पासि विदधासि महेश्वरोशी।।।10।।
கருணை நிறைந்த சிவனே!
ஆனந்தம் அளிப்பவரே!
மஹேஸ்வரரே!
திரிசூலம் கொண்டவரே!
கௌரிபதியே! பசு பதியே!
ஜீவ பந்தங்களை தகர்ப்பவரே!
காசியின் தெய்வமே!
நீங்கள் தான் தங்கள் கருணையால்
உலகத்தைப் படைக்கிறீர்கள்.
காண்கிறீர்கள் அழிக்கிறீர்கள்.
No comments:
Post a Comment