Friday, March 31, 2017

ராமசரிதமானஸ்--அயோத்தியாகாண்டம் -பகுதி பக்கம் ஐந்து.

ராமசரிதமானஸ்--அயோத்தியாகாண்டம் -
                           பகுதி பக்கம் ஐந்து.

மந்தரை சொன்னாள்-- எல்லா நம்பிக்கைகளும்  ஒரே முறை சொன்னதால் பூர்த்தியாகிவிட்டது.  இப்பொழுது வேறு விதமாக சொல்கிறேன்.  நல்லது சொன்னாலும் உங்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது. என்னுடைய கபாலம்  வெடிக்கவேண்டும்.
பொய்யை உண்மையாகப் பேசுபவர்கள் தான் உங்களுக்கு பிரியமானவர்கள்.  என்னுடைய பேச்சு உங்களுக்கு கசப்பாக இருக்கிறது. இப்பொழுது நானும் பார்த்ததைச் சொல்லுவேன் .
இல்லை என்றால் பேசாமல் இருப்பேன்.
கடவுள் என்னை அசிங்கமாகப் படைத்து அடிமை ஆக்கிவிட்டார். மற்றவர்களின் மேல் குறை சொல்லி என்ன பயன்?
விதைத்தவன்  எதை விதைத்தானோ,
அதையே அறுவடை செய்வேன்.
எதைக்கொடுக்கிறோமோ   அதையே பெறுவோம்.
அரசர் யாரானால் என்ன ?நான் வேலைக்காரி. நான் ராணி எப்படி ஆவேன்?
என் குணம் பொறாமைப்படத்தான்.ஏனென்றால் உன்னுடைய தீமை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதனால் நான் பேசினேன். நான் தவறு செய்து விட்டேன். மன்னிக்கவும்.
கைகேயி நிலையற்ற அறிவுடைய பெண்ணானதாலும்,
தேவர்களின் மாயையினாலும் தன் நிலை மறந்து கபடம் நிறைந்த மந்தரையின் அன்பான வார்த்தைகளைக்கேட்டு
கைகேயி  மந்தரையை தன் நலம் விரும்பி என நினைத்து
நம்பிவிட்டாள்.
வேட்டைக்காரியின் பாட்டில் மான் மயங்கியதுபோல்
கைகேயி கூனி சொல்வதைக்கேட்டாள்.
கூனி தன் நாடகத்தின் வெற்றி அறிந்து  மகிழ்ந்தாள்.
 கைகேயி சொன்னாள்---நீ கேட்பதால் உண்மையைச் சொல்கிறேன். முதலிலேயே  என்னுடைய பெயரை  வீட்டை பிரிப்பவள் /குடும்பத்தை கலைப்பவள்  என்று கெடுத்துவிட்டீர்கள்.   அயோத்தியாவிற்கு கூனி மூலம் ஏழரைச்  சனி பிடித்தது போல் சொன்னாள்--
நீ சொன்னது  சரி . எனக்கு சீதையும் ராமும் அன்பானவள்.
ராமனுக்கு உன் மேல் உண்மையான அன்பு இருக்கிறது.
ஆனால் இது முன்னாலேயே இருந்தது. அந்த நாட்கள் கழிந்துவிட்டன. காலம் மாறும்போது நண்பனும் விரோதி ஆகிவிடுவான்.
சூரியன் தாமரை குலத்தை  வளர்ப்பவன். ஆனால் தண்ணீர் இல்லை என்றால் அதே சூரியன் அதை எரித்து பஸ்மம்
ஆக்கிவிடுவான். சக்களத்தி கௌசல்யா   தங்களை வேரோடு சாய்க்க விரும்புகிறாள்.  ஆகையால்  எப்படியாவது  அதிலிருந்து தப்புங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு உங்கள் சுமங்கலி பலம் புரியவில்லை.
அரசன் உங்கள் வசம் என நினைக்கிறீர்கள்.
ஆனால்  அவர் பேச்சுதான் இனிமை. மனம் அழுக்கு.
உங்களுடைய குணம் நேரானது. உங்களுக்கு கபடம்  தெரியாது.  ராமரின்  அன்னை   கௌசல்யா  மிகவும் கெட்டிக்காரி.  அவர்கள் கம்பீரம் . அவர் மன ஆழத்தை யாராலும் அறிய முடியாது.  அவள் நல்ல சந்தர்ப்பம் பார்த்து தன் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள். அரசர் பரதனை பாட்டிவீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதில் ராமனின் அன்னையின் ஆலோசனை தான்.
கௌசல்யா நினைக்கிறார் எல்லா சக்களத்திகளும் அவருக்கு நல்ல பணிவிடை செய்கிறார்கள். ஆனால்  பரதனின்  அம்மா கணவனின் அன்பால் பலத்தால் கர்வமாக உள்ளாள்.
கௌசல்யா கண்களின் உறுத்தலாக நீங்கள் இருக்கிறீர்கள்.
ஆனால் அவள் கபட நாடகத்தில் கெட்டிக்காரி. அதனால் அவள் மனதில் உள்ளதை அறிவது கடினம்.

அரசனுக்கு உன்மேல் அதிக அன்பு உள்ளது. சக்களத்தி கௌசல்யாவால் அதைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவள் ராஜாவிற்கு வலை விரித்து
தன் வயப்படுத்தி  ராமனின்  ராஜ்யாபிஷேகத்திற்கு
முகூர்த்தம் குறித்துள்ளார்.
ராமருக்கு ராஜ திலகம் குலாசாரப்படி  சரியே.
இது எல்லோருக்குமே பிடிக்கிறது.  ஆனால்  எனக்கு எதிர்காலத்தை எண்ணி பயமாக இருக்கிறது.
  இவ்வாறு சுமித்திரை  கைகேயிக்கு தவறாக பாடம் புகட்டினாள். நூற்றுக்கணக்கான சக்களத்திகளின் கதைகளைச் சொன்னாள்.
கூனியின் கெட்டிக்கார வார்த்தைகளால் , கைகேயின் மனதில் நம்பிக்கை வந்துவிட்டது.

Thursday, March 30, 2017

ராமசரிதமானஸ்--அயோத்தியா காண்டம் --பக்கம்-நான்கு

ராமசரிதமானஸ்--அயோத்தியா காண்டம் --பக்கம்-நான்கு


  நகரம்    நன்கு அலங்கரிங்கப்பட்டிருப்பதை  மந்தரை பார்த்தாள்.  அழகான  மங்களம் நிறைந்த வாத்தியங்கள்  வாசிக்கப்பட்டன.  
அவள் மக்களிடம் கேட்டாள்---என்ன உற்சவம்?
ராமரின்  ராஜ்யாபிஷேகம்  என்ற செய்தி கேட்டதுமே ,
அவள் இதயம் எரிந்தது.  கெட்ட புத்தியுள்ள தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்த அடிமை
  இந்த ராஜ்யாபிஷேகத்தை இரவோடு இரவாக
கெடுக்க நினைத்தாள்.  அவள் எண்ணம் கொடுமையான வேட்டைக்காரி தேன்கூட்டை கலைப்பதற்காக சந்தர்ப்பம் பார்ப்பதுபோல்  இருந்தது.

அவள் மிக வருத்தமடைந்து  பரதனின் அன்னை கைகேயியிடம் சென்றாள். கைகேயி, "நீ ஏன் வருத்தமாக உள்ளாய்? " என்று கைகேயி கேட்டாள்.
மந்தரை எவ்வித பதிலும் சொல்லாமல் , பெருமூச்சுவிட்டு
மாய அழுகைக் கண்ணீர் விட்டாள்.
கைகேயி --நீ  அதிகம் பேசுபவள்.
லக்ஷ்மணன் உனக்கு ஏதேனும் தண்டனை கொடுத்தானா ? என்று  மந்தரையிடம்  கேட்டாள்.
அப்பொழுதும் அந்த பாவி  தாசி  கூனி  எதுவும் பேசவில்லை.
 கரு நாகப்பா ம்பு சீருவதுபோல் மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.
ராணி பயந்து , என்ன / சொல் !என்றாள். அரசர், ராமர் , லக்ஷ்மணர் , பரதன் , சத்துருகனன் எல்லோரும் நலமா ?
இதைக்கேட்டதும் மந்தரைக்கு மிகவும் மன வேதனை ஏற்பட்டது.
 கூனி --அம்மா! எனக்கு யார் தண்டனை கொடுக்க முடியும்?
யாரின் பலத்தால் நான் அதிகம் பேச முடியும்.
ராமரைத்தவிர   இன்று யாரும் நலமாக இல்லை. அவருக்கு யுவராஜ் பதவி கிடைக்கப்போகிறது. இன்று கடவுள் கௌசல்யாவிற்கு அனுகூலமாக இருக்கிறார். இந்த செய்தியால் அவருடைய இதயத்தில் , கர்வம் அதிகமாகிவிட்டது.  எந்த காட்சிகளைப் பார்த்து எனக்கு  வருத்தம் ஏற்பட்டதோ , அந்தக்காட்சிகளை நீங்கள் சென்று பாருங்கள்.
உன்னுடைய மகன்  வெளிநாட்டில் இருக்கிறான். உனக்கு எவ்வித கவலையும் இல்லை. அரசர் நம் வசத்தில் இருக்கிறார். உனக்கு கட்டிலில் படுத்து  தூங்குவதிலேயே ஆனந்தம்.
அரசரின் கபடம் நிறைந்த புத்திசாலித்தனம் உனக்குப் புரியவில்லை.
மந்தரையின்  அன்பான சொற்கள் கேட்டாலும் ,
ராணிக்கு அவளின் மனதின் கபடம் தெரியும்.
ராணி அவளை  மிரட்டி சொன்னாள்-- நீ வீட்டை  இரண்டாக்குபவள்.  மறுபடியும் இப்படி செய்தால்  உன் நாக்கைப் பிடித்து இழுத்துவிடுவேன் என்றார்.

ஒற்றைக்கண்ணன், நொண்டி, கூனி போன்றோரை கொடியவர்களாகவும், கெட்ட நடத்தையுள்ளவர்களாகவும் நினைக்க வேண்டும். அதிலும் முக்கியமாக பணிப்பெண் .
என்று சொல்லி கைகேயி சிரித்தாள்.
அன்பான சொற்கள் பேசும்  மந்தாரையே!  உன்மேல் எனக்கு எனக்கு கனவிலும் கோபம் கிடையாது. நீ சொல்வது உண்மை என்றால்  அழகான மங்களம் தரும் நல்ல நாள்  அதுவே ஆகும்.
 சூரிய வம்சத்தின்  பழக்கப்படி முறைப்படி அண்ணன் அரசனாவதும் தம்பி  சேவகவனாவதும் தான் சரி. நாளை உண்மையிலேயே ராமருக்கு ராஜ்யாபிஷேகம் என்றால் சொல் , உன் மனம் விரும்பும் பொருள் தருகிறேன். ராமருக்கு கௌசல்யா போலவே மற்ற அன்னைகள் மீதும் சமமான அன்பு உண்டு. நான் அதை சோதித்தும் பார்த்துவிட்டேன்.  ராமர் போன்ற மகனும் சீதை போன்ற மகளும் கிடைப்பது ஆண்டவனின் மிகப்பெரிய கிருபை. ஸ்ரீ ராமர் எனக்கு உயிரைவிட அதிகமான அன்புடையவர். அவருடைய ராஜ்யாபிஷேகத்தால்  எனக்கு எப்படி மனவேதனை வரும்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் துன்பம் ஏன்?
பரதன் மீது ஆணை. உண்மையைச் சொல்.

ராமசரித மானஸ்- அயோத்தியா காண்டம் -பக்கம் --3

ராமசரித மானஸ்-   அயோத்தியா காண்டம் -பக்கம் --3

   எல்லோருக்கும்  முதலில் அந்தப்புரத்தில் தகவல் தெரிவித்தோருக்கு அவர்கள் மிக ஆபரணங்களையும்
ஆடைகளையும் அன்பளிப்பாக அளித்தனர்.
 ராணிகள் மிகவும்   ஆனந்தமடைந்தனர்.
மனம் அன்பில் அப்படியே மூழ்கிவிட்டது.
அவர்கள் அனைவரும் மங்கள கலசம் அலங்கரிக்கத் தொடங்கினர். சுமித்திரை ரத்தினங்களால் பலவித மிகவும் அழகான  முற்றம் தயார் செய்தாள்.
 ராமரின் அன்னையான கௌசல்யா அந்தணர்களை அழைத்து அதிக தானங்கள் அளித்தார்.
அவர்கள் கிராம தேவதைகள், தேவிகள் , மற்றும் நாகதேவதைகள்  அனைவருக்கும்  பூஜை செய்தனர்.
பிறகு பலியும் அன்பளிப்பும் கொடுக்கச் சொன்னார்.
காரியம்  வெற்றி பெற்றபிறகு  பூஜை செய்யவும் வேண்டிக்கொண்டனர்.  ராமருக்கு நல்லது நடக்கும் வரமே அவர்களது வேண்டுகோள்.

 குயிலைப் போன்று இனிமையான  குரல் உள்ள  ,நிலவைப்போன்று அழகான முகமுள்ள, மான்குட்டியின் விழிகள் போன்று அழகான விழிகள் உள்ள  பெண்கள் மங்கலப் பாட்டுகள் பாடினர்.
ராமரின் பட்டாபிஷேகச் செய்திகள் கேட்டு ஆண்களும்
பெண்களும் மனதில் மிக  மகிழ்ச்சி அடைந்தனர்.
கடவுளின் அனுகூலத்தை  அறிந்து  எல்லா அழகான
மங்கள  அலங்காரம்  செய்தனர்.
  தசரதர்  வசிஷ்டரை அழைத்து ராமருக்கு தகுந்த அறிவுரைகளும்  உபதேசமும் செய்ய அனுப்பினார்.
குரு வந்த செய்தி அறிந்ததும்  ராமர்  நுழைவாயிலுக்கே
சென்று  பாதங்களில் வணங்கி  வரவேற்றார்.

          மரியாதையுடன் அர்க்க்யம் சமர்ப்பித்து ,
பதினாறுவகை உபசாரங்களால்  பூஜை செய்து குருவை
கௌரவித்தார். பிறகு சீதையுடன் நமஸ்காரம் செய்தார்.
  பிறகு தன் தாமரை  போன்ற கரங்களைக் கூப்பி ,
"சேவகனின் வீட்டிற்கு  சுவாமி எழுந்தருளுதல் மங்களங்களுக்கு மூலம் அமங்கலங்களுக்கு அழிவு.
இருந்தபோதிலும்   குருநாதா!  தாசனையே  அன்புடன்
செயல் புரிய  அழைக்க வேண்டும். இதுதான் நீதி.
ஆனால் நீங்கள்  இங்கே எழுந்தருளி அன்பு காட்டியதால்
இன்று இந்த வீடு பவித்திரமாகிவிட்டது.
இப்பொழுது ஆணையிடுங்கள். என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்கிறேன்.  உங்களுக்கு தொண்டு செய்வதால்
சேவகனுக்கே  லாபம் தான்.
இந்த பணிவான அன்பும் மரியாதையும் செய்யும் ராமரின் நடத்தையால்  குரு வசிஷ்டர் மிகவும் மகிழ்ந்தார். ராமரைப் புகழ்ந்து  சொன்னார் --நீங்கள் சூரிய குல பூஷணம்.
பிறகு சொன்னார் --அரசர் உங்களுக்கு பட்டாபிஷேகம்
செய்ய விரும்புகிறார். அவர் பட்டாபிஷேகத்திற்கு  ஏற்பாடு செய்திருக்கிறார். உங்களுக்கு யுவராஜ் பதவி கொடுக்க விரும்புகிறார்.

    ராமரே!  நீங்கள்  புலனடக்கத்துடன்   இருங்கள். கடவுள் இந்த விழாவை  வெற்றி அடையும்படி செய்யட்டும்.
குருஜி அறிவுரை வழங்கி  விட்டு   அரண்மனைக்குத் திரும்பினார்.  
ஸ்ரீ ராமருக்கு திடீர் என  இந்த விஷயத்தால் மன வருத்தம் ஏற்பட்டது.  
 நான்கு சகோதரர்களும் ஒன்றாகவே பிறந்தோம். வளர்ந்தோம்.  காதுகுத்துதல், உபநயனம் , விவாகம்
முதலியவை அனைத்தும் ஒன்றாகவே நடந்தன.
 
 இந்த  புனிதமான வம்சத்தில்  பெரியமகனுக்குத்தான் பட்டாபிஷேகம்  என்பது   சரியானதல்ல.
துளசி சொல்கிறார் ---ஸ்ரீ ராமச்சந்திரரின்  இந்த அழகுநிறைந்த   அன்புநிறைந்த வருத்தத்தால்  பக்தர்களுடைய மனதிலுள்ள சுயநலமும் தீய எண்ணமும் போகவேண்டும்.

      அதே  சமயம்   அன்பும் ஆனந்தமும் நிறைந்த  லக்ஷ்மணன்
வந்தார்.  ரகுகுலம் என்ற அல்லியை  மலரச் செய்கின்ற  ஸ்ரீ ராமச்சந்திரர்  அன்புடன்  லக்ஷ்மணனுக்கு மரியாதை செய்தார்.
  பலவித வாத்தியங்கள் இசைத்துக்கொண்டிருந்தனர்.
 நகரத்தின்  அதிசய  ஆனந்தத்தை வர்ணிக்க முடியாது.
எல்லோரும் பரதனின் வருகையைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அவரும் சீக்கிரம் வந்து பட்டாபிஷேக உற்சவத்தைக் கண்டு களிக்கட்டும்.  
   கடைத்தெரு , வழி, வீடு, தெரு, மேடைகள் அனைத்து இடங்களிலும் நாளை ராஜ்யாபிஷேகம் நேரம் எப்பொழுது வரும்?  கடவுள் நம் ஆசையை எப்பொழுது நிறைவேற்றுவார்.

சீதையுடன் ராமர் ஸ்வர்ண சிம்மாசனத்தில்  எழுந்தருளுவார் .நமது மன விருப்பம் பூர்த்தி அடையும்.
இங்கு எல்லோரும் நல்லதை நினைக்க , வேறொரு பக்கம் துர்தேவதைகள் ராஜ்யாபிஷேகத்தில் தடை ஏற்படுத்தும்
நிகழ்வைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அயோத்தியாவின் விழா பிடிக்கவில்லை.
திருடனுக்கு நிலவு வெளிச்சம் பிடிக்காததைப் போல.

சரஸ்வதியை அழைத்து  வேண்டினர்--எங்களுடைய பெரும் ஆபத்தை அறிந்து  ராமர் வனவாசம் செய்ய அருளுங்கள்.
அப்பொழுதுதான் தேவர்களுடைய எல்லா செயலும் வெற்றி அடையும்.

    தேவர்களின் வேண்டுகோள் கேட்டு சரஸ்வதி தேவி வருந்தினார். நான் தாமரைக்கண்  ராமருக்கு பனிக்கால இரவு ஆகிவிட்டேன். தேவியின் வருத்தம் அறிந்த தேவர்கள்
மீண்டும் வேண்டினர் --இதில் தங்களுக்கு எதுவும் தோஷமில்லை.
ரகுநாதருக்கு துன்பமும் இல்லை வருத்தமும் இல்லை.
நீங்கள் ஸ்ரீ ராமரின் எல்லா மஹிமையையும் அறிந்தவர்.
ஜீவன்  தன் வினையின் காரணமாக  சுகத்திற்கோ துன்பத்திற்கோ  பங்காளி ஆகிறான். ஆகையால் தேவர்களின் நன்மைக்காக நீங்கள் அயோத்தியா செல்லுங்கள்.  
அடிக்கடி    கால்களைப்பிடித்து  தேவர்கள் சரஸ்வதியை தயக்கமடையச் செய்துவிட்டார்கள்.  தேவி தேவர்களின் அறிவு  அறிவு மட்டமானது என்று நினைத்தாள்.
தேவர்கள் இருக்குமிடம் உயர்ந்தது. ஆனால் செயல்  தாழ்ந்தது.   இவர்களால் மற்றவர்களின்   ஐஸ்வரியங்களைப்
பார்க்க  பொறாமைப் படும் இயல்பினர்.
    ஆனால்   ராமர் வனவாசம்  செல்வதால்  அரக்கர்கள் அழிக்கப்படுவார்கள். வையகம் சுகமடையும்.   சிறந்த கவிஞர்கள்   காட்டுவாசிகளின் குணநலன்களை வர்ணிக்க
என்னை விரும்புவார்கள். இவ்வாறு நினைத்து சகிக்க முடியா துன்பம் தருகின்ற ஒரு  கிரஹநிலை   தசரதரின் நகருக்குள்
வந்தது போன்றே  சரஸ்வதி இதயத்தில் மகிழ்ச்சியுடன்
அயோத்தியாவில் நுழைந்தார்.
 மந்தரை கைகேயியின்  தாசி. அவள் மந்த புத்தியுள்ளவள்.
அவளின் புத்தியை மாற்றி இகழ்ச்சிக்கு பாத்திரமாக்கி
சரஸ்வதி தேவி சென்றுவிட்டாள். 

Wednesday, March 29, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு

ராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு

        ராமர் திருமணமாகி வந்ததில்  இருந்து தினந்தோறும்

புதிய மங்கள  நிகழ்ச்சிகள் அயோத்தியாவில் நடந்துகொண்டே இருக்கின்றன..
     ஆனந்த  மங்கள இசை வாசிக்கப்படுகின்றன.
 நான்கு உலக வடிவமான மிகப்பெரிய மலைகளில்
புண்ணிய வடிவமான  மேகங்கள்  சுகமான  மழை
பொழிந்து கொண்டிருக்கின்றன.

செழிப்பும்  செல்வமும் சொத்தும்  நதிகள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து அயோத்தியா என்ற கடலில் சங்கமித்தன.
 நகரத்தின் ஆண்களும் பெண்களும் நல்ல ரத்னங்களின் குவியல் போன்றவர்கள். பவித்திரமானவர்கள். விலை மதிப்புள்ளவர்கள். அழகானவர்கள்.
 நகரத்தின் ஐஸ்வரியம்  பற்றி சொல்லவும் வேண்டுமா ?
நகர மக்கள் அனைவரும்  ஸ்ரீ ராமச்சந்திரரின் முகம் என்ற நிலவைப் பார்த்து எல்லாவிதத்திலும் மகிழ்ந்தனர்.
  எல்லா அன்னைகளும் தோழிகளும்  தன்னுடைய மனவிருப்பம் என்ற கொடி  பூத்து பழுத்துள்ளது கண்டு ஆனந்தமடைந்தனர். எல்லோரும்  மகாதேவனை வேண்டி தன்  விருப்பத்தை வெளியிட்டனர். அரசர் உயிருடன் இருக்கும்போதே   ஸ்ரீ ராமச்சந்திரருக்கு  இளவரசர் பட்டம் தரவேண்டும் .
 இந்த மக்களின் எண்ணம் பூர்த்தி அடைந்தால்,
உடல் இருந்தாலும் இறந்தாலும்  எந்தவித வருத்தமும் இல்லை என்று தசரதர் கூறினார். இதைக்கேட்டு முனிவர் மனதில் மிக மகிழ்ந்தார்.
 வசிஷ்டர் சொன்னார் ---அரசே!  ராமச்சந்திரர்  உங்களுடைய மகன். அவர் மக்களால் மிகவும் விரும்பப்படுபவர். அவரைப்பார்க்காமல்  மக்கள் வருத்தப்படுவார்கள். அவரை ஜபிக்காமல் மனவேதனை போகாது. அப்படிப்பட்ட சர்வலோகேஷ்வர்  உங்கள் புத்திரர் ராமர்.  அவர் பவித்திர அன்பை பின்பற்றி செல்பவர்.
  அரசே!இன்னும் தாமதிக்காதீர்கள். சீக்கிரமாக ஏற்பாடு செய்யுங்கள்.  ஸ்ரீ ராமச்சந்திரர் இளவரசர் பட்டம் சூட்டும் நாள் தான் சுப நாள்.
  அரசர் ஆனந்தமடைந்து   அரண்மனைக்கு வந்தார்.
அவர் சேவகர்களின்    மூலம்   சுமந்திரியையும்  அழைத்துவரச் சொன்னார்.
அனைவரிடமும்   தசரதர்  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய விரும்புவதைச் சொன்னார். அனைவருக்கும் என் எண்ணம் பிடித்திருந்தால்   நீங்கள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள்.
தசரதரின் அன்பு வார்த்தைகளைக்கேட்டு  மந்திரிகள் ஆனந்தமடைந்தனர். அனைவரும்  தசரதரை "பலகோடி ஆண்டுகள் வாழ்க" என்று கோசமிட்டனர்.
  அரசே!  நீங்கள் அகில உலகத்திற்கும் நல்லதை செய்யும் நல்ல யோசனை நினைத்துள்ளீர்கள். சீக்கிரமாக செய்யுங்கள். தாமதிக்காதீர்கள் . என்றனர்.

அமைச்சர்கள் ஆமோதித்து வாழ்த்தியதும் அரசர் ஆனந்தமடைந்தார்.  தத்தளிக்கும் கொடிக்கு படர மரம் கிடைத்ததுபோல் உணர்ந்தார்.
 அரசர் அறிவித்தார் -- ஸ்ரீ ராமச்சந்திரரின் பட்டாபிஷேகத்திற்காக  வசிஷ்டர் கூறும் ஆணைப்படி அனைத்தும் உடனே செய்க என்றார்.
  வஷிஸ்டர்   மிக மகிழ்ந்து மென்மையான சொற்களால்  எல்லா உயர்ந்த தீர்த்தங்களில் இருந்தும் தண்ணீர் கொண்டுவாருங்கள் என்றார். பிறகு வேள்விக்கு வேண்டிய மூலிகைகள், வேர்கள், மருந்துகள், பழங்கள் , இலைகள்  போன்ற மங்கலப்பொருட்களின் பட்டியலைச் சொன்னார்.
  சாமரம் ,மான் தோல், பலவித ஆடைகள், பல இனத்தைச்சேர்ந்த  கம்பளங்கள், பட்டாடைகள், ரத்தினங்கள், பல மங்கலப்பொருட்கள்,பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்கள்  எடுத்துவர கட்டளை இட்டார்.
முனிவர் வேதங்களில் கூறப்பட்ட
எல்லா விதிகளையும் சொன்னார்.

நகரத்தில் அதிக கூடார மண்டபங்கள் அமைக்க உத்திரவிட்டார். பழங்களுடன் கூடிய மா ,பாக்கு,வாழை  மரங்களை நட உத்திரவிட்டார். அழகான ரத்தினங்கள்  பதித்த மேடைகள் அமைக்கச்சொன்னார்.
கடைதெருவெல்லாம் அலங்கரிக்கச்  சொன்னார் .
ஸ்ரீ கணேசர், குரு, குலதெய்வ பூஜை செய்யக் கட்டளை பிறப்பித்தார். பூமியின் தேவதைகளான அந்தணர்களுக்கு அனைத்து வித சேவைகளும் செய்யவேண்டும் என்றார்.
 கொடிகள் ,பதாகைகள்,தோரணங்கள்,கலசங்கள், குதிரைகள், யானைகள்,  தேர்கள் எல்லாவற்றையும் அலங்கரிக்கச் சொன்னார். எல்லோரும் முனிவரின் கட்டளைகளை சிரமேற்கொண்டு தங்கள் தங்கள் கடமையில் ஈடுபட்டனர்.
முனிவரிட்ட கட்டளைகளை மிகவிரைவில் செய்து முடித்தனர். அந்த வேகம் முனிவர் கட்டளைக்கு முன்பே பணிகள் நடந்து முடிந்ததுபோல் இருந்தது.
அரசர் ராமருக்காக அனைத்து மங்கள காரியங்கள் செய்யத்தொடங்கினார்.
சாதுக்கள், அந்தணர்கள் மற்று தேவதைகளை பூஜை செய்தார். ஸ்ரீ ராமருக்காக எல்லா மங்கள காரியங்களையும் செய்தார்.
செய்தியைக்கேட்டதுமே அயோத்தியா நகரில் மங்கள் வாத்தியங்களின்  ஒலிகள் கேட்கத்தொடங்கின. பாடல்கள் பாடத்தொடங்கினர். ஸ்ரீ ராமச்சந்திரரின்,உடலிலும் சீதையின் உடலிலும் சுப துடிப்புகள் துடிக்கத்தொடங்கின.
நல்ல சகுனங்கள் தோன்றின.
 சீதையும் ராமரும் பரதனின் வருகையின் அறிவிப்பே இந்த நல்ல சகுனங்கள் என்றனர். பரதன்  தன் மாமா வீட்டிற்குச் சென்று அதிக நாட்கள் ஆகிவிட்டன. பரதனை சந்திக்கத்தான் இந்த சகுனங்கள். நமக்கு மிக அன்பானவர் பரதன் என்றனர்.
 ஆமையின் மனதில் முட்டையின் நினைவு இருப்பதுபோல்
ராமரின் மனதில் பரதனின் நினைவுகள் இருந்தன.
   ராமரின் பட்டாபிஷேகச் செய்தி கேட்டு அந்தப்புரத்தில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.  நிலவைக்கண்டு கடல் அலைகள்  வீசுவதுபோல் ஆனந்தம் அனைவருக்கும். 

Sunday, March 26, 2017

ராமசரிதமானஸ் -- அயோத்யா காண்டம் --பகுதி -1

ராமசரிதமானஸ் -- அயோத்யா காண்டம் --பக்கம் -1

ஹிமாச்சலனின் மகள் பார்வதியை மடியிலும்
தலையில் கங்கையும் ,
நெற்றியில் இரண்டாம் பிறை சந்திரனும் , 
 கழுத்தில் ஆலகால விஷமும் ,
மார்பில் நாகராஜன் சேஷனும் வீற்றிருக்கும்
   சிவபெருமான்
அழகாக இருக்கிறார் .
அவர்  விபூதி பூசி தேவர்களுக்கெல்லாம்
மேன்மையானவர்.
சர்வேஸ்வரர், தீயவர்களை நாசம் செய்பவர்,
 பக்தர்களின்
பாவங்களைப் போக்குபவர்.
எங்கும் வியாபித்திருப்பவர்,
நிலவைப்போன்று  வெண்மையானவர்.
அந்த சங்கரர் என்னைக் காக்கட்டும்.
 
ரகுகுலத்திற்கு ஆனந்தம் அளிப்பவரும் ,
திருமண நிலையில்
 சலனமும் மகிழ்ச்சியும்
வனவாச நிலையில்
  வருத்தமும் இல்லாதவருமான
சுகதுக்கங்களில்
சமமான பாவம் உடையவர்
எனக்கு எப்பொழுதும்
மங்களங்கள் அளிப்பவர்.
ஸ்ரீ ராமச்சந்திரர்.      ௧.

நீலத்தாமரை போன்ற  கருப்பும்
மென்மையான அங்கமும்
சீதையை   இடது பாகத்தில் 
வைத்திருப்பவரும்
கைகளில்கு றிதப்பாத அம்பும்  வில்லும்
ஏந்தியவருமான  
ஸ்ரீ ராமச்சந்திரரை
வணங்குகிறேன்.

அறம்,பொருள் ,இன்பம், வீடு நான்கும்
 கொடுக்கின்ற
ஸ்ரீ ராமச்சந்திரரின் புகழை

ஸ்ரீ குருவின்  சரணகமலங்களின் 
தூசியால் என் மனம் என்ற கண்ணாடியை
சுத்தம் செய்து,   வர்ணிக்கிறேன்.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் இறுதிப்பகுதி --தொண்ணூற்று நான்கு --

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் - இறுதிப்பகுதி --                 தொண்ணூற்று நான்கு --


  அரசர் தசரதர்  காதி மகன்  விஷ்வாமித்திரரை
 பல முறை வணங்கி   பலவிதத்திலும்    புகழ்ந்தார். சொன்னார்--
உங்களுடைய கிருபையால் நான் தன்யனானேன்.
அரண்மனையில் அனைவரும் ராணிகளும்
அவர் தேவை அறிந்து சேவை செய்ய
ஏற்ற இடத்தில் தங்கவைத்தார்.
பிறகு வசிஷ்டருக்கு பூஜை செய்து கௌரவித்தார்.
 மகன்கள் ,மருமகள்கள் ராணிகளும்
அடிக்கடி அவர்கள் காலில் விழுந்து
 வணங்கி ஆசி பெற்றனர்.
அனைவரும் ஆசிகள் வழங்கி
 ராமரை மனதில்  நினைத்துக்கொண்டே சென்றனர்.
ராஜா தன் சொத்துக்களையும் புத்திரர்களையும்
முனிவரின் முன் சமர்ப்பித்து
 ஏற்றுக்கொள்ளும் படி வேண்டினார்.
முனிவர் விருந்து உபசார பொருட்கள் மட்டும்
கேட்டு  அனைவருக்கும் ஆசிகள் வழங்கினார்.

  சீதையையும் ராமரையும்  மனதில் வைத்து
   மகிழ்ச்சியுடன்
வசிஷ்டர் தன் இருப்பிடம் சென்றார்.
அரசர் அனைத்து அந்தணப் பெண்களையும் அழைத்து அவர்களுக்கு அழகான ஆடைகள்,
நகைகளை தானமாகக் கொடுத்தார்.

உறவினர்கள்  திருமணப் பரிசுப்பொருள்கள் பெற்றுச் சென்றனர்.
அரசரும்  அவரவர்களுக்கு  பிடித்தமான பொருள்களைக் கொடுத்து  மன நிறைவடையச் செய்தார்.
அனைத்து விருந்தினர்களையும்  அரசர்  வணக்கத்திற்குறியவர்களாக  ஏற்று தக்க
மரியாதை செய்து அனுப்பினார்.
எல்லோருக்கும் தக்க மரியாதை செய்த பின்
அரசர் தன் புத்திரர்களையும் மருமகள்களையும்  அந்தப்புரத்தில்  சந்தித்து மகிழ்ந்தார்.
  ராணிகளிடம் , "  மருமகள்கள்  குழந்தைகள். இவர்களை கண் இமைகள் கண்களைக் காப்பதுபோல் கண்காணிக்க வேண்டும் என்றார்.  மகன்கள் களைத்துப் போய்விட்டனர். அவர்களை தூங்கவைக்கவேண்டும் என்றார்.
அரசனின் மென்மையான சொற்கள் கேட்டு ராணிகள் மிக மகிழ்ந்தனர்.
அழகான தலையணைகள் ,
அழகான ரத்தினங்கள் பதித்த விளக்கு,
மிகவும் அன்பாக  ஏற்பாடு செய்தனர்.
பெண்கள் மங்கலப்பாடல்கள் பாடினர்.
அடிக்கடி திருஷ்டி கழித்தனர்.
அனைவரும் ராமரின்  பெருமைகளைப் புகழ்ந்து பாடினர்.
 முனியின் கிருபையால் சகோதரர்கள் கல்வி பயின்றனர்.
யாகத்தைக் காத்தனர். பெரும் விபத்திலிருந்து காத்தனர்.
ராமர் பாதம் பட்டு அகல்யா முக்தி அடைந்தார்.
கல் பெண்ணாக மாறியது.
 ராமர் சிவதனுஷை  முறித்தார்.
மிகவும் உறுதிவாய்ந்த ஆமை முதுகு ஓடு போன்ற கடினம்,
வஜ்ரம் போன்ற உறுதி ,
 மலைபோன்ற கடினமான வில்லை
முறித்து  வையகப்  புகழ்   அடைந்து
 ஜானகியை  மணந்தார்.
இதற்கெல்லாம் காரணம்  முனிவர் விஷ்வாமித்திரர்.
ராமரின் அழகான சந்திர முகம் கண்டு
 பிறவிப்பயன் பெற்றோம்.
ராமர் தூங்கும்போது அழகான முகம்
மாலை நேர செந்தாமரை போன்று  உள்ளது என
மிகவும் புகழ்மாலை சூட்டி பாட்டுப்பாடினர்.
ராணிகள்  சொன்னார்கள்--- இரவு  மிக அழகாக இருக்கிறது.
அயோத்யா  நகரம் சிறப்பு பெற்று காட்சி அளிக்கிறது.
மாமியார்கள் தங்கள் அழகான மருமகள்களை ,
பாம்பு தன்  நாகமணியை இருதயத்தில் வைத்து
தூங்குவது போல் அழைத்து தூங்கிவிட்டனர்.
 காலையில்  பவித்திரமான சுப வேளையில் ராமர் எழுந்தார்.
சேவல் கூவியது.
பாடகர்கள், இசைபாடும் ஜாதியினர் ,நகர மக்கள்  ஆசிகள்
 வழங்கி  திருஷ்டி -சுத்திப்போட வந்துவிட்டனர்.
அந்தணர்கள், தேவதைகள் , குரு,
தாயார்கள் ,தந்தை அனைவரையும்
நான்கு சகோதரர்களும் வணங்கி
ஆசிகள் பெற்றனர்.
 தாயார்கள்  மிக அன்புடன் மகன்களைப்பார்த்தனர்.
 அதில் மரியாதையும் தென்பட்டது.
பிறகு அவர்கள் அரசனுடன் வாயிலுக்கு வந்தனர்.
  புனித குணமுடைய  நான்கு சகோதரர்களும் காலைக்கடன்கள் முடித்து சரயு நதியில் குளித்தனர்.
  காலை சந்தியா வந்தனங்களை
 முடித்துக்கொண்டு  தந்தைஇடம்  வந்தனர்.

 ராஜா அவர்களைப்   பார்த்ததுமே
ஆரத்தழுவி தன்  அன்பைக்காட்டினார்.
பிறகு வர்கள் தந்தையின் அனுமதி பெற்று  அமர்ந்தனர்.
ஸ்ரீ ராமரின் தரிசனம் பெற்று அனைவரும்  மகிழ்ந்தனர். எல்லோரின் மனமும் எல்லா தாபங்களில்  இருந்து விடுபட்டு மிகவும் குளிர்ந்தது.
 பிறகு முனிவரும் வசிஷ்டரும் வந்தனர்.
அவர்களை அரசர் தசரதர் அழகான ஆசனத்தில் அமரவைத்தார்.
புத்திரர்களுடன் சேர்ந்து அவர்களை வணங்கினார்.
இருவரும் குரு ராமரைப் பார்த்து மிகவும் அன்பால் மகிழ்ந்தனர்.
 வசிஷ்டர் தர்மத்தின் வரலாறு சொல்ல ராஜா, அந்தப்புரத்துவாசிகள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
வசிஷ்டர்  விஷ்வாமித்தி ரரையும்
அவரது செயலையும் மிகவும் உள்ளன்போடு புகழ்ந்தார்.
வாமதேவர் சொன்னார்--"இவை எல்லாம் உண்மையே. விஷ்வாமித்திரரின் அழகான செயல்கள்
 மூவுலகிலும் பரவி  புகழ் பெற்று விளங்குகிறது.

 இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ந்தனர்
. ராமர் -லக்ஷ்மணர் இதயத்தில் மிகவும்
உற்சாகமும் ஆனந்தமும் பரவியது.

  தினந்தோறும்  ஆனந்தோத்சவம்  நடைபெற்றது.
 ஆனந்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
 நல்ல நாளில் கங்கணம் பிரிக்கப்பட்டது.
   அயோத்யா நகரம்  மங்கள நிகழ்ச்சியால்
 தேவர்கள் மகிழ்ந்தனர்.
 பிரம்மா விடம்   அயோத்தியாவில் பிறக்க யாசித்தனர்.

  விஷ்வாமித்திரர் ஆஷ்ராமத்திற்குத் திரும்ப
 விரும்பினாலும் ராமரின் அன்பினால்
பணிவினால் கட்டுண்டிருந்தார்.

 நாளுக்குநாள் குருவின் மீது   ராஜாவின்  அன்பு பல மடங்கு
வெளிப்பட்டதை முனிவர் மிகவும் புகழ்ந்தார்.
இறுதியில் விஷ்வாமித்திரர்   செல்லும் நேரம் வந்துவிட்டது.
அப்பொழுது அரசர் சொன்னார்-- நாதா ! இந்த அயோத்திய, சொத்து எல்லாம் உங்களுடையது. நானும் என் புத்திரர்களும்  உங்கள் தொண்டர்கள்.
 என் மகன்கள் மேல் எப்பொழுதும் அன்புடன் இருங்கள்.
எனக்கும் தர்சனம் கொடுங்கள்.
 இதைச்சொல்லி தசரதர்  ராணிகள் புத்திரர்களுடன்
 அவர் காலில் விழுந்து வணங்கினர்.
 அன்பின் அதிகரிப்பால் அவர்களால் பேச முடியவில்லை.
பிராமண விஷ்வாமித்திரர் பல வித ஆசிகள்
 அளித்து சென்றார்.
அன்புடன் ஸ்ரீ ராமர் அவருடன் சென்று
 பிரியா  விடை கொடுத்தார்.

காதி குலத்தின்  சந்திரர் விஷ்வாமித்திரர்
 மிக மகிழ்ச்சியுடன் ராமரின் அழகு ,
அரசர் தசரதரின்  பக்தி ,
 நான்கு சகோதரர்களின் திருமண  வைபவம் , உற்சாகம் , ஆனந்தத்தை புகழ்ந்துகொண்டே சென்றார்.

 வாமதேவரும்  ரகுகுல  குரு ஞானி  வசிஷ்டரும் விஷ்வாமித்திரரின் கதையை வர்ணித்தனர்.
 அனுமதிபெற்று அனைவரும் தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர்.  முனிவரின் புகழ் கேட்டு ராஜா தசரதர் மனதிற்குள் தன் புண்ணியத்தின் மகிமையை நினைத்து
புளகாங்கிதம் அடைந்தார்.
ராமரின் புகழ் பாடல் மூவுலகங்களிலும் பாடப்பட்டது.

 ராமர் திருமணமாகி வந்ததில் இருந்து
 அயோத்தியாவில் எல்லாவித செழிப்பும்
 ஆனந்தமும் அதிகரிக்கத் தொடங்கியது.
திருமண வைபவ ஆடம்பர ஆனந்த உற்சாகத்தை சரஸ்வதியோ சேஷனோ கூட வர்ணிப்பது கடினம்.

  தன்னுடைய சொல்லை புனிதமாக்க
துளசிதாசர் ராமரின் புகழைப் பாடியிருக்கிறார்.
ராமரின் புகழ் கதை கடல் போன்று.  ஆழம் காண முடியாதது. கவிஞர் எப்படி   வர்ணிக்க  முடியும்? .
ராமரின்  திருமண மங்கள உற்சவ வர்ணனையை  மரியாதையுடன்  கேட்பவர்கள் , பாடுபவர்கள்
ஸ்ரீ ராமர் மாறும் ஜானகியின் கிருபையினால்
எப்பொழுதும் சுகமாக வாழ்வார்கள்.
அவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக உற்சாகமாக இருப்பார்கள். ராமரின் புகழ்  மங்களத்தின் இருப்பிடம்.
    கலியுகத்தில்  சகல பாவங்களையும்                   போக்கும்
        ஸ்ரீ ராமச்சந்திரரின்
     இந்த முதல் படி முடிந்தது. 

Saturday, March 25, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் -தொண்ணூற்று மூன்று

ராமசரித மானஸ்-பாலகாண்டம் -தொண்ணூற்று மூன்று

  தசரதர் நகரத்திற்குள் நுழைந்ததுமே ,
பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.
மக்கள் அரசனை வணங்கினர்.
ஸ்ரீ ராமச்சந்திரனைப் பார்த்ததும் மக்கள் மிக மிக
ஆனந்தமடைந்தனர். கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது.
நகரப்பெண்கள் மிக  மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்தனர்.
பல்லக்குகளின் திரையை விலக்கி,  மணப்பெண்களைப்
பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்னைகள் மிக மகிழ்ந்து மகன்களுக்கும் மணமகள்களுக்கும்   திருஷ்டி சுற்றிப் போட்டனர்.
அடிக்கடி ஆர்த்தி எடுத்தனர். அந்த அன்பையும் அளவில்லா
ஆனந்தத்தை  வர்ணிக்க முடியாது. பலவித நகைகள், ரத்தினங்கள், அளவிடமுடியா ஆடைகள்  எல்லாவற்றையும்
அன்பளிப்பாகக் கொடுத்தனர்.
அன்னைகள் மூவருமே ராமர் சீதை இருவரின்   அழகைக்கண்டு உலகில் பிறந்த பிறவிப்பயன் அடைந்ததுபோல்  மகிழ்ந்தனர்.
தோழிகள் சீதையின் முகத்தை அடிக்கடி பார்த்து ,
தாங்கள் செய்த புண்ணியத்தின்  பலனை  புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர்,
 தேவர்கள் ஒவ்வொரு நொடியும் பூமாரி பொழிந்தும்,
பாடியும்  ஆடியும் தன் தன் சேவையை சமர்ப்பித்தனர்.
 நான்கு அழகான ஜோடிகளைப்  பார்த்து ,சரஸ்வதிக்கு ஒப்பிட  எந்த உவமையும் கிடைக்கவில்லை. எல்லா உவமைகளும்  இந்த நான்கு ஜோடிகளுக்கு முன்
துச்சமாகவே தோன்றின. இறுதியில் சரஸ்வதி தேவி உவமை கிடைக்காமல் அந்த ஜோடிகளைக் கண் மூடாமல்
பார்த்துகொண்டிருந்தாள்.
  அன்னைகள் வேத குல வழக்கப்படி அர்க்கியம் கொடுத்து மருமகள்களுக்கும் மகன்களுக்கும்  திருஷ்டி சுற்றிப்போட்டு
அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர்.
 இயற்கையிலேயே அழகான நான்கு அரியணைகள் இருந்தன. அவை காமதேவனே
 தானே செய்ததுபோல் இருந்தன.
அன்னைகள் அவர்களை அந்த அரியணைகளில் அமரவைத்து  மரியாதையுடன்  பவித்திர பாடங்களை கழுவினர்.
பிறகு வேத சாஸ்த்திர விதிகளின் படி தூப ஆராதனை செய்து நைவேத்தியம்  படைத்து பூஜை செய்தனர். அன்னைகள் அடிக்கடி ஆர்த்தி எடுத்தனர். வரன் -வதுக்களின் தலைகளில்
அழகான இறகுகளில் சாமரம் வீசினர். யோகிக்கு பரம  தத்துவம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அன்னைமார்களுக்கு.
தீராத நோயுடையவனுக்கு அமிர்தம் கிடைத்ததுபோல் மகிழ்ந்தனர். பிறவியிலேயே தரித்திரமாக உள்ளவன் தங்கம் கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அப்படி மகிழ்ச்சி தோன்றியது.
ஊமை பேச்சுத்திறனும் சரஸ்வதி அருளும் பெற்றதுபோல் மகிழ்ந்தனர்.
சூரவீரன் போரில் வெற்றி   பெற்றதுபோல் மகிழ்ந்தனர்.
ராமனும் அவர் சகோ தரர்களும்  திருமணம் முடிந்து அரண்மணை     திரும்பியதும்  மேலே சொன்ன  ஆனந்தங்களை  விட     கோடி மடங்கு   அதிக  ஆனந்தம் அடைந்தனர்.

அவர்களுக்கு அரண்மனையில்  அன்னைகள் உலக  வழக்க-முறைகள் படி  கேலி -கிண்டல் செய்ய மணமகன்கள் -மணமகன்கள் நாணத்துடன்  நெளிந்தனர்.
இந்த ஆனந்த விநோதத்தைப் பார்த்து ராமர்  மனதிற்குள்ளேயே புன்னகைத்தார்.
மனதின் எல்லா விருப்பங்களும்   முழுமை அடைந்ததால்
தேவதைகளுக்கும் முன்னோர்களுக்கும்  வழிபாடு  செய்தனர். சகோதரர்களுடன் ராமன் நலமாக இருக்கவேண்டும்  என்றே  அன்னைகள் அனைவரின்
வேண்டுகோளாக இருந்தது.
தேவர்கள் விண்வெளியில் இருந்து ஆசிகள் வழங்கினர்.
அன்னைகள் ஆனந்தமாக முந்தானை விரித்து ஆசிகளைப் பெற்றனர். அதற்குப்பின் அரசர் மாப்பிள்ளை வீட்டார்களை அழைத்தார்.   அவர்களுக்கு அவர்களுக்கு ரத்தினங்கள் , துணிமணிகள், சவாரிகள் பொன்றவற்ற தானமாக அளித்தார். யாசகர்கள் எதைக்கேட்டாலும்
 அதையே தானமாக அளித்தார்.
எல்லா பணியாளர்களுக்கும் இசைக்  குழுவினர்களுக்கும்
பலவித தானங்களும் கௌரவமும் கொடுத்து
திருப்திப் படுத்தினார்.

எல்லோரும் வணங்கி ஆசிகள் வழங்கினர். புகழ்ந்து பாட்டுப் பாடினர். அப்பொழுது குருவும் அந்தணர்களும் அரசர்களும்
அரசன் தசரதரும்  அரண்மனைக்குள் சென்றனர்.
 வசிஷ்டர் சொன்னதை எல்லாம் அரசர் மரியாதையுடன்
செய்தார். அந்தணர்களின் கூட்டம் கண்டு ராணிகள் மிகவும் மகிழ்ந்தனர். எழுந்து மரியாதைகள் செய்தனர்.
 அனைவரின் பாதங்களைக் கழுவி  எல்லோரையும் ஸ்நானம் செய்வித்து  நன்கு பூஜை செய்து  விருந்தளித்தார்.  அவர்கள் மகிழ்ந்து  மன நிறைவுடன் ஆசிகள் வழங்கிச் சென்றனர். 

Friday, March 24, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --தொண்ணூற்று இரண்டு

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --தொண்ணூற்று இரண்டு

      அவர்கள் ராமருக்கும் அவரின் சகோதரர்களுக்கும்
     எண்ணெய் பூசி  குளிப்பாட்டினார்கள்.
   மிகவும் அன்புடன்  அறுசுவை உண்டி படைத்தனர்.
  நல்ல சந்தர்ப்பம் என அறிந்து ராமர் அன்புடனும் ,
 ஒழுக்கத்துடனும்  தயக்கத்துடனும்   சொன்னார்,--
"மகாராஜா அயோத்தியா செல்ல விரும்புகிறார் .
அவர் எங்களை தங்களிடமிருந்து விடை பெற அனுப்பினார்.  அம்மா! எங்களுக்கு மகிழ்ச்சியுடன்  செல்ல அனுமதியுங்கள்.
  எங்களை   உங்கள் மகன்கள் போல் கருதுங்கள்.
  இவ்வாறு சொன்னதுமே அந்தப்புரத்தில் சோகம் பரவியது.
 மாமியார்கள்  அன்பின் வயத்தால் மௌனமானார்கள்.
 அவர்கள் ராஜ குமாரிகளை அணைத்துக் கொஞ்சி
 கணவர்களுடன் அனுப்பினர்.
ராமரிடம் சீதையை ஒப்படைத்து மிகவும் வேண்டினர்---
எங்கள் குடும்பத்தினருக்கு ,நகரமக்களுக்கு,எனக்கு . அரசனுக்கு  மிகவும் பிரியமானவள் ஜானகி.
 இவளுடைய ஒழுக்கம்,
அன்பு  இரண்டையும் பார்த்து
 அவளை உங்கள் அடிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
  ராமா! நீ முழு நிலவு, நல்ல குணங்களில்  மேன்மை  பொருந்தியவன். நீ அன்பானவன்.  ராமா! நீ பக்தர்களின் குணங்களை ஏற்றுக்கொண்டு  குற்றங்களை மன்னிக்கின்றவன் .
இரக்கத்தின் இருப்பிடம்.
இப்படி சொல்லி ராணி ராமரின்
 பாதங்களைப்பிடித்து மௌனமானாள்.
அவளுடைய குரல் அன்பு என்ற சகதியில்
சிக்கிக்கொண்டு பேச்சு வரவில்லை.
 அன்பான  சொற்களைக்  கேட்டு
  ராமர் மாமியாரை மிகவும் கௌரவித்தான்.
நமஸ்காரம் செய்து தன் சகோதரர்களுடன் புறப்பாட்டார்.
மகள்களைப் பிரிய மனமின்றி ,
மீண்டும் மீண்டும் அழைத்து
அன்பைக் காட்டினர்.
தோழிகள் காட்டாயப் படுத்தி
 ராணிகளைப் பிடித்து அழைத்துவந்தனர் .
தாய்ப்பசுவிடம் இருந்து  கன்றுக்குட்டியைப் பிரிப்பதுபோன்று   ராணியைப்
பிரித்து மகள்களுக்கு விடை கொடுத்தனர் .
அவர்களை அனுப்புவது   ஜனகபுரி வாசிகளுக்கு
கருணையும் பிரிவும் கூடாரம் போட்டதுபோல் இருந்தது.

சீதை    வளர்த்த கிளிகள் ,
சீதையால் பேசத் தெரிந்த கிளிகள் ,
"சீதை  எங்கே " என்று கேட்டதால்
அனைவரின் சோகம் அதிகரித்தது.
அனைவரும் தைரியம் இழந்தனர்.
சீதை வளர்த்த பறவைகளும் மிருகங்களும்
 இவ்வளவு கவலைப்படும்போது
 மனிதர்களின் நிலை எப்படி இருக்கும்?.

    சகோதரர்களுடன் ஜானகி  அங்கு வந்ததும் ,
       ராஜா ஜனகர் தைரியத்திற்கும் வைராக்கியத்திற்கும்          புகழ் பெற்றவர் .  இருப்பினும்  இன்று
 மகளைப் பிரியும் பொழுது
  ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

 வேதனைப்படும்  தருணம் இதல்ல என அறிந்து   புத்திரிகளை  அன்புடன் ஆரத்தழுவி ,
 அழகாக அலங்கரித்த பல்லாக்குகளை
 கொண்டுவரச் செய்தார்.
எல்லா குடும்பமும்  அன்பினால்  கட்டுண்டிருந்தது.
அரசர் நல்ல நேரம் என அறிந்து
 விநாயகரை தியானித்து
மகள்களை பல்லக்கில் ஏற்றினார்.

  அரசர்  மகள்களுக்கு  அறிவுரை வழங்கி
பெண்களின் தர்மத்தையும்     குல  தர்மத்தையும் எடுத்துரைத்தார்.
சீதைக்குப் பிரியமான நம்பிக்கைக்குரிய பணிப்பெண்களையும்  பணியாட்களையும் உடன் அனுப்பினார்.

  சீதை செல்லும் போது,  ஜனகபுரி மக்கள் கண்  கலங்கினர்.
அங்கு சுப சகுனங்கள் நடந்தன.
 அரசனும் அமைச்சர்களும்  அரசன் ஜனகருடன் ,
சீதையை மாமனார் வீட்டில் கொண்டுவிட சென்றார்கள்.

 நல்ல நேரம் வந்ததும் வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின.
மணமகன் வீட்டார் தேர், யானை,குதிரைகளில் புறப்பட்டனர்.
தசரதர் எல்லா அந்தணர்களையும் அழைத்து அவர்களுக்கு உரிய கௌரவத்துடன்  தானங்கள் கொடுத்தார்.
அரசர் அவர்களின் பாதத் துகள்களை சிரமேற்கொண்டு
ஸ்ரீ கணேசரை வணங்கி , அந்தணர்கள்  ஆசி  பெற்று புறப்பட்டார். .
 மங்களம்  தரும்  நல்ல சகுனங்கள் உண்டாகியது.
தேவர்கள் மகிழ்ந்து பூமாரி  பொழிந்தனர்.
 தேவலோகப் பெண்கள்  பாடினர்.
முரசுகள்  முழங்க தசரதர் ஆனந்தத்துடன்   அயோத்தியாபுரிக்குப் புறப்பட்டார்.
ராஜா தசரதர் கௌரவமுள்ள மனிதர்களைத்
திருப்பி அனுப்பினார்.
      எல்லா யாசகர் களையும்  அழைத்து
நகைகள், துணிகள் ,குதிரைகள், யானைகள் ,
அனைத்தும் அளித்து  தன் அன்பை  உறுதிப் படுத்தினார்.
யாசகர்கள் ராமரின் குலத்தைப்
புகழ்ந்து  வர்ணித்து ராமரை
மனதில் நினைத்துக்கொண்டே சென்றனர்.
தசரதர்  ஜனகரையும் திருப்பிச் செல்ல வற்புறுத்தினார் , ஆனால் ஜனகர் அன்பின் வயப்பட்டு
திரும்ப விரும்பவில்லை.
 மிக தொலைவு சென்றதும் தசரதர் ஜனகரிடம்  மீண்டும் திரும்பிச்  செல்ல  வேண்டும்   எனக் கேட்டார்.
அவரின் கண்களில் இருந்து அன்புக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

  இதைப் பார்த்த  ஜனகர் கைகூப்பி
அன்பு என்ற அமிர்தத்தில்
மூழ்கிய சொற்களால் --
 "நான் எப்படி  வேண்டுகோள் விடுப்பேன்.
மகாராஜ்! நீங்கள் என்னை மிகவும் பெருமைப்
படுத்திருக்கிறீர்கள்". என்றார்.

தசரதர் தன் சம்பந்திக்கு   எல்லாவித மரியாதையும் செய்தார். சம்பந்திகள் தங்களுக்குள் சந்திப்பதில் மிகவும் பணிவையும் அன்பையும் காட்டினர்.

 ஜனகர் முனிவர்களை வணங்கி
 எல்லோரின் ஆசிகளைப் பெற்றார்.
பிறகு மரியாதையுடன் தன்
 நான்கு மாப்பிள்ளைகளைச்  சந்தித்தார் .
 தன் மென்மையான தாமரை போன்ற
 கரங்களைக்கூப்பி
அன்பிலேயே பிறந்தவர் போன்று ,
அன்பான குரலில் பேசினார்-- --
ஸ்ரீ ராமரே! உங்களை எந்த விதத்தில் புகழ்வேன்?
 நீங்கள் முனிவர்கள் மேலும் மகாதேவரின் மனம்
என்ற மானசரோவரின் அன்னப்பறவை.
 உங்களின் கருணைக்காக  யோகிகள்  கோபம், மோகம், அன்பு ,ஆணவம் அனைத்தும் விடுத்து யோகசாதனை செய்கிறார்கள்.
சர்வவியாபகர், பிரம்மா, வெளிப்படாதவர், அழியாதவர், சிதானந்தர், உருவமற்றவர், உருவமில்லாதவர்.
குண நிதி.
இதற்கு சரியான மனம் விரும்பும் சொல் இல்லை. எல்லோரும் யூகிக்கவே முடியும். யாரும் விவாதிக்க முடியாது. வேதங்கள் முக்காலங்களிலும் மாற்றமில்லாதவர் என்று வர்ணிக்கிறது.
நீங்கள் தான் அனைத்து சுகங்களுக்கும் மூலம். கடவுளுக்கு  அனுகூலமாக இருந்தால்  உலகில் உள்ள ஜீவன்களுக்கு எல்லாம் லாபமே லாபம்.

    நீங்கள் எனக்கு பல விதத்திலும் பெருமை அளித்தார்கள்.
நீங்கள் எங்களை தன் மக்களாக அறிந்து ஏற்றுக்கொண்டீர்கள். கோடிக்கணக்கான யுகங்களுக்கும் உங்கள் குணம் பாடினாலும் மகிமை முடியாது.
நீங்கள் சிறிதளவு அன்பு காட்டினாலும் நீங்கள்  மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் பலமும்  மகிமையும் அதிகம்.
என்  மனம் மறந்தும் கூட உங்கள்  சரணங்களை விட்டுவிடக்கூடாது.
ஜனகரின் சிறந்த சொற்களைக்  கேட்டு  அன்பில் கட்டுண்ட ராமர்  மிகவும் திருப்தி அடைந்தார்.
ராமர் ஜனகரை தன் தந்தை தசரதர், குரு விஷ்வாமித்திரர்,குல குரு வசிஷ்டர் ,போன்றே
சமமாகக்  கருதி  கௌரவம் அளித்தார். பிறகு பரதரை
சந்தித்தார். ஆசிர்வாதம் செய்தார்.
விஷ்வாமித்திரரின் காலில் விழுந்து வணங்கினார்.
பிறகு முனிவரிடம் சொன்னார் ---உங்களுடைய தரிசனத்தால்  நடக்க முடியாதது எதுவும் இல்லை.
 உங்களால் எனக்கு எளிதாக சுகமும் புகழும் கிடைத்துவிட்டது.
 எல்லா சித்திகளும் உங்களைப் பின் தொடருபவை.
 இவ்வாறு புகழ்ந்து ஆசிபெற்று சென்றார்.
 வரும் வழியில் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
கிராமங்களில் ஆண்கள்-பெண்கள் ஸ்ரீ ராமச்சந்திரரை
பார்த்து மிகவும் மகிழ்ந்தனர்.   அங்கங்கு முகாம் போட்டு வழியில் உள்ள மக்களுக்கு ஆனந்தம் அளித்து  நல்ல நாளில் அயோத்தியாவை அடைந்தனர்.
முரசுகள் முழங்கின. மத்தளங்கள் முழங்கின.
சங்குகள் முழங்கின. யானைகள் பிளிறின.
குதிரைகள் கனைத்தன.
ஜால்ரா, சிறிய பறை ,சஹ்னாய் போன்ற
வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
மணமகன்  திரும்பி வந்ததை அறிந்து நகரமக்கள் மகிழ்ந்தனர்.எல்லோரும் தங்கள் வீடுகள், கடைத்தெருக்கள்,தெருக்கள், நாற்சந்திகள் நகர நுழை வாயில்கள், அனைத்தையும் அலங்கரித்தனர்.
 எல்லா வீடுகளிலும் வாசனை திரவங்கள் தெளிக்கப்பட்டன.
தோரணங்கள், கொடிகள் ,பதாகைகள்
 போன்றவற்றால் அலங்கரித்தனர்.

     பூக்கள், பழங்கள், காய்களுடன் கூடிய
பாக்கு மரம்,வாழை ,மா ,மகிழம்பூ,கதம்ப மரம்,இலவங்கம்  போன்ற மரங்கள் நடப்பட்டன.
பழங்களின் சுமையால் அவை பூமியை ஸ்பர்சித்துக் கொண்டிருந்தன.
மணிகள் வைக்கும் தாம்பாளங்கள்
மிகவும்  வேலைப்பாடு நிறைந்ததாக இருந்தன.
பலவித மங்கள கலசங்கள் ஒவ்வொரு வீட்டிலும் அலங்கரிக்கப்பட்ட  ஸ்ரீ ராமச்சந்திரரின்   அயோத்யா நகரத்தைப் பார்த்து பிரம்மா முதலிய தேவதைகள் பொறாமைப் பட்டனர்.
அரண்மனை மிக அழகாககக் காட்சியளித்தது. அதன் அமைப்பைக்கண்டு காமதேவனின் மனம் மிகவும் மோஹித்தது.  இயற்கை அழகே வடிவெடுத்து தசரதர் அரண்மனையில் வந்ததுபோல்  மங்கள சகுனங்கள் , அழகு,
செல்வத்தின் செழுமை ,சுகம் , வளம் போன்ற உற்சாகங்கள் காணப்பட்டன. ராமர் -சீதையின் தர்சனத்தை விரும்பாதவர்கள் இருப்பார்களா ?!
 மிக அழகாக ரதியையே அவமதிக்கும் அளவிற்கு சுமங்கலிப்
பெண்கள்  கூட்டம் கூட்டமாக வந்தனர். சரஸ்வதிதேவியே வந்து பல வேடங்களில் பாடிக்கொண்டிருந்தாள்.அனவைரும் ஆரத்தி தட்டுகளுடன் மங்கள திரவியங்களுடன்  இனிய கீதங்கள் பாடிக்கொண்டிருந்தன.

   அரண்மனை முழுதும் ஆனந்த ஆரவாரங்கள்.கௌசல்யா மற்றும்  ராமரின் அன்னைகள் ஆனந்தத்தில் தன்னையே
மறந்து மெய்மறந்து அன்பில் திளைத்திருந்தனர்.

  கணேசருக்கும் திரிபுராரி சிவனுக்கும்  பூஜை செய்து அந்தணர்களுக்கு அதிக தானம் அளித்தனர்.
 அதிக சுகம் மற்றும் ஆனந்தத்தின் காரணமாக ,
ராமரைப்பார்க்கும் ஆர்வ மிகுதியால் எல்லா
உடல் தளர்ந்த காணப்பட்டனர்.அவர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் அலங்காரம் செய்வதில் ஈடுபட்டனர்.
ராணி சுமித்திரை அனைத்து மங்களப் பொருள்களான
மஞ்சள், அருகம்புல், இலைகள்,வெற்றிலை ,பாக்கு,அக்ஷதை,
முளைப்பாரி,கோரோசனை,உலோகக் கசண்டு,துளசியின் அழகான தளிர் இலைகள்,அலங்கரித்து வைத்தார்.

பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட ஸ்வர்ண கலசங்கள்  காமதேவனின் பறவைகள் கூடுகள் கட்டியது போல் காட்சியளித்தன.
  வாசனைப் பொருட்களின்  மணம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. எல்லா ராணிகளும் ஆரத்தி ,அலங்காரம் செய்து மங்களப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
தங்கத் தம்பாளங்களில் மங்களப்  பொருள்கள் அலங்கரித்து திருஷ்டி கழிக்கச் சென்றனர். அவர்களின் உடல் ஆனந்தத்தால் புல்லரித்தது.
தூபப் புகையால் ஆகாயம் கருத்துத் தென்பட்டது. ஆவணிமாத மேகங்கள் திரண்டு வந்ததுபோல்   இருந்தன.

தேவர்கள் கல்பவிருக்ஷத்தின் பூமாலைகளை மழையாகப்
பொழிந்தனர். அழகான மணி மாலைகள் வானவில் போல்
காட்சி அளித்தன. மேல் மாடிகளின் அறைகளில் இருந்து
பெண்கள் மின்னல்கள் மின்னுவது போல்  வந்து போய்க்கொண்டிருந்தனர்.
முரசொலி மேக கர்ஜனைபோல் இருந்தது. யாசகர்கள் வானம்பாடி, தவளை, மயில் போல்  இருந்தனர்.
தேவர்கள் பவித்திரமான மணமுள்ள மாரி பொழிந்தனர்.
மழையை எப்படி நிலமகள் மகிழ்ச்சியாக வரவேற்பு
செய்வாளோ ,அப்படியே நகரத்தின் ஆண்களும் பெண்களும்
மகிழ்ந்தனர்.

நல்லநேரம் வந்ததும் வசிஷ்டர் ஆக்ஞை பிறப்பித்தார்.
அப்பொழுது ரகு குலத்தின் சிரோமணியான தசரதர் கணேசன்,சிவன்,பார்வதியை வேண்டி தன் பரிவாரங்களுடன் ஆனந்தமாக நகருக்குள் நுழைந்தார்.
நல்ல நேரம்.தேவர்கள் துந்துபி வாசித்தனர். பூமாரி பொழிந்தனர். பாட்டு பாடுபவர்கள் , நட்டுவனார்கள் ,அனைவரும் ஸ்ரீ ராமச்சந்திரன் புகழ் பாடிக்கொண்டிருந்தனர்.
வெற்றி வெற்றி முழக்கமும் ,வேத கோசங்களும் பத்து திக்கு
களிலும் ஒலித்தது. பலவித வாத்தியங்கள் மங்கள ஒலி எழுப்பின . மணமகன் ஊர்வலத்தினரின் ஆடம்பரமும்  ஆடைகளும்  அலங்காரமும் வர்ணிக்க முடியாது.

Wednesday, March 22, 2017

रामचरित मानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -தொண்ணூற்று ஒன்று

रामचरित मानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -                       தொண்ணூற்று ஒன்று

     ராஜா ஜனகரின்    அன்பு ,பண்பு , விருந்தோம்பல்,
ஒழுக்கம், செயல் ஐஸ்வரியம் அனைத்தையும்
 தசரதர்  புகழ்ந்தார்.
ஒவ்வொருநாளும்  தசரதர் அயோத்தியா
  செல்ல  அனுமதி கேட்டார்.
ஆனால் ஜனகர் அவர்களை அன்புடன் தங்கவைத்தார். ஒவ்வொருநாளும் புதிய விதத்தில் மரியாதை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆயிரம் விதமாக  விருந்தோம்பல் நடந்துகொண்டிருந்தது. நகரத்தில் தினந்தோறும் புதிய உற்சாகம் ஆனந்தம் .
 தசரதர்  செல்வதை யாரும் விரும்பவில்லை.
இவ்வாறு பல நாட்கள் கழிந்துவிட்டன.
மணமகன் வீட்டார்கள் அன்புக் கயிற்றால்    கட்டுண்டனர் .
அப்பொழுது விஷ்வாமித்திரரும் சதானந்தரும்
 ஜனகருக்கு விளக்கினர் -"நீங்கள் அன்பின் வயப்பட்டு அவரை அனுப்பவில்லை.
இப்பொழுது  தசரதருக்கு  செல்ல  அனுமதி அளியுங்கள்".

உடனே  மிகவும் நன்று  என்று சொல்லி ,
 ஜனகர் மந்திரிகளை அழைத்தார்,
அவர்கள் வந்ததும்      அயோத்தியா அரசர்  நாடு
 செல்ல விரும்புகிறார்  என்று  ஜனகர் சொன்னார். இதைக்கேட்டு  அமைச்சர் , அந்தணர்கள்,,சபை உறுப்பினர்கள், அரசர் ஜனகர் அன்பில் கட்டுண்டனர் .
நகர மக்கள்  தசரதர் செல்வதை அறிந்து வருத்தப்பட்டனர்.
அவர்கள் முகம் மாலைநேரத்தில் வாடும்
 தாமரைபோன்று வாடியது.
 மணமகன் வீட்டார் திரும்பும் போது
 எங்கெல்லாம்  தங்குவார்களோ
அங்கெல்லாம் உணவுப் பொருட்கள் அனுப்பப் பட்டன. பலவித  உலர்  பழங்கள் ,  பலகாரங்கள்,
உணவுப்பொருட்கள்  அவைகளை வர்ணிக்க முடியாது.
எண்ணிக்கையில்லா    காளைமாடுகளில் ,
பல்லாக்குகளில்  பொருட்கள் ஏற்றி அனுப்பப் பட்டன. அழாகான படுக்கைகளையும்  கட்டில்களையும்
  ஜனகர்   அனுப்பினார்.
ஒரு லக்ஷம் குதிரைகள் ,
 நன்கு அலங்கரிக்கப்பட்டவை ,
 ஐம்பதாயிரம் தேர்கள் அனைத்தும்( நகத்தில் இருந்து தலைவரை)  கீழிருந்து  மேல் பகுதி வரை அலங்கரிக்கப்பட்டவை.
பத்தாயிரம் அலங்கரிக்கப்பட்ட யானைகள்,
வண்டிகளில் நிரப்பப் பட்ட தங்கம்,
ஆடைகள்,ரத்தினங்கள்  , பசுமாடுகள் , எருமைமாடுகள்  மற்றும் பலவித பொருட்கள் அனுப்பினார்.
மீண்டும் அளவிட முடியாத   பொருட்கள் சீதனமாக அனுப்பினார்.
ராணிகள் மணமகன் வீட்டார் செல்வதறிந்து வருந்தி
தண்ணீர் குறைந்ததும் மீன்கள் துடிப்பது போன்று துடித்தனர்.
அவர்கள் சீதையை அடிக்கடி கொஞ்சினர்.
ஆசிகள் வழங்கினர்.
அவளுக்கு உபதேசம் செய்தனர்--" எப்பொழுதும் கணவனின் அன்புக்கு பாத்திரமாக இரு "என்றனர்.
 தீர்க்க சுமங்கலியாக இருக்க ஆசிகள் வழங்கினர்.
"மாமியார் ,மாமனார் ,குரு போன்றோருக்கு பணிவிடை செய்யவேண்டும்"
 என்றனர்.
கணவரின் மனமறிந்து
கீ ழ்படிந்து இருக்கவேண்டும் என்றனர்,
தோழிகளும்  பெண்களின் தர்மத்தைப்பற்றிக் கூறினர்.
மிகவும் அறிவுரைகள் கூறி அடிக்கடி ஆரத் தழுவினர் .
பெண்கள்  ஆண்டவன்  பெண் இனத்தை   படைத்தது   ஏன் என வருந்தினர்.
 ஜனகர்   சூரியகுலக் கொடியான ராமரையும்
மற்ற சகோதரர்களுக்கும் விடை கொடுக்க
அரண்மனைக்குச் சென்றார்.

   அனைவரும் நான்கு சகோதரர்களையும்
பார்க்க ஓடி வந்தனர்.
அனைவரும் தசரத புத்திரர்கள் வருகையால்
தங்களுக்கு புண்ணியமும் கிடைத்ததாகக் கருதினர்.
  இறப்பவனுக்கு அமிர்தம் கிடைத்தது போலவும் ,
பிறப்பிலேயே பசியாக இருந்தவனுக்கு
 கற்பக விருக்ஷம் கிடைத்தது போலவும் ,
நரகத்தில் இருப்பவனுக்கு  பகவானின் பரம பதம்
 கிடைத்தது போலவும்
 ராமரின்  தரிசனம் இருந்தது.
ராமரும் அவர் சகோதரர்களும்
 அனைவருக்கும் தர்சிக்கும் சுகம்
அளித்து அரண்மனைக்குள் சென்றனர்.
அழகின் சமுத்திரமாக இருக்கும்
நான்கு சகோதரர்களையும் பார்த்து அந்தப்புரத்தில் இருந்தவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.
மாமியார்கள் மகிழ்ந்து ஆரத்தி எடுத்தனர்.
அழகின் சமுத்திரமாக விளங்கும் நான்கு சகோதரர்களையும்
பார்த்து  அந்தப்புரத்தில் உள்ள அனைவரும் மிக மகிழ்ச்சியுற்றனர்.
மாமியார்கள் மனதில் மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்தனர்.
ஸ்ரீ ராமச்சந்திரரின் அழகைக் கண்டு
 அவர்கள் அன்பில் மூழ்கினர்.
மனதில் அன்பு அதிகரித்ததால்
 வெட்கம் ஓடிவிட்டது.
 அவர்களின் இயல்பான
அன்பை வர்ணிக்க இயலாது.

Tuesday, March 21, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --தொண்ணூறு .

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --தொண்ணூறு .

       ஸ்ரீ ராமச்சந்திரரின் அழகு இயற்கையானது.
அவரின் எழில் கோடிக்கணக்கான ரதி-மன்மதர்களை
நாணும் படி செய்யக்கூடியது. அவருடைய தாமரைப் பாதங்களில் முனிவர்களின் மனம் என்ற வண்டு எப்பொழுதும் மொய்த்துக்கொண்டிருக்கும்.
 பரிசுத்தமான மஞ்சள் வேஷ்டி காலைநேர சூரியன் மின்னலின் ஜ்யோதியை விட அழகாக இருந்தது.
இடுப்பில் அழகான காப்புக்கயிறு ,கச்சை ,
விஷாலமான புஜங்களில் அழகான நகைகள் .மஞ்சள் நிற பூணூல் .கையின் மோதிரம் , அனைத்துமே ஈடு இணையற்ற அழகாக காட்சி அளித்தது.மஞ்சள் துண்டு பூணுல் போன்றே
இருந்தது. இரு முனைகளிலும் முத்துக்களும் மணிகளும்
இணைக்கப்பட்டு பின்னப்பட்டு இருந்தன.
அழகான அகன்ற மார்பில் அழகான அணிகலன்கள் ஜொலித்தன.
தாமரை போன்ற அழகான கண்கள், காதுகளில் குண்டலங்கள், அழகின் கஜானா  போன்றே  இருந்தன.
அழகான புருவங்கள் எடுப்பான மூக்கு , நெற்றியில் திலகம் ,
நெற்றியில் அழகைக் கூட்டின.
எல்லா நகரப் பெண்களும் தேவ அழகிகளும் மணமகனைப் பார்த்து  திருஷ்டி கழித்தனர். ஆரத்தி எடுத்தனர். ராமரின் புகழ் பாடினர்.

சுமங்கலிப்பெண்கள் , குமாரர்கள் ,குமாரிகள்  அனைவரும்
மிக அன்புடன்  பாட்டுப்பாடினர்.   பார்வதி ஸ்ரீ ராமருக்கு மணமகன் -மணமகள் பரஸ்பர உறவை சொல்லிக்கொடுத்தார். சரஸ்வதிதேவி சீதைக்குக் கற்றுக்கொடுத்தாள். அந்தப்புரமே சிரிப்பும் கும்மாளமும் கேளிக்கைகளிலும் மூழ்கி ராமரையும் சீதையையும் பார்த்து
தங்கள் பிறவிப்பயனை அடைந்தனர்.

சீதை தன கையில் உள்ள மணிகளில் ஸ்ரீ ராமரின் பிரதிபிம்பம் பார்த்து பிரிவு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தன்னுடைய புஜம் என்ற கொடியையும் கண்களையும் அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் . பிறகு வரங்களையும் வதுக்களையும் மணமகன் வீட்டார் தங்கும்
இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது நகரம் முழுவதும்  தேவலோகத்தில் இருந்தும் ஆசிர்வாதங்கள் முழங்கின.நான்கு ஜோடிகளும் சிரஞ்சீவியாக  இருக்கவேண்டும் என்று ஆசிர்வதித்தனர்.
யோகிகள் , முனிவர்கள், தேவர்கள் மிகவும் மகிழ்ந்து ஆசிர்வதித்து  ஜய ஜய முழக்கத்துடன் தன்  தன் லோகத்திற்குச் சென்றனர்.

நான்கு குமாரர்களும் மனைவிகளுடன்  தந்தைக்கருகில் வந்தனர். தங்குமிடத்தில் மிக ஆனந்தம் பொங்கியது.

  பலவித உணவுகள் சமைக்கப்பட்டன.
 ஜனகர் மணமகன் வீட்டாரை அழைத்தார்.
ராஜா தசரதர் மகன்களுடன் விருந்துக்குச்  சென்றார்.

 அங்கு ஜனகர் அன்பும் பணிவும் உருவானவர் போல்
அனைவரின் பாதங்களைக் கழுவி , தகுந்த ஆசனங்களில் அமரவைத்தார். ஜனகர் அயோத்திய நாட்டின் அரசர் தசரதரின் பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்தார். பிறகு   சிவனின் இதய கமலங்களில் மறைத்திருக்கும் ராமரின் பாதங்களுக்கு பூஜை  செய்தார். பரிமாறுபவர்கள் வந்தனர்.
மரியாதையுடன் இலைகள் போடப்பட்டு  பருப்பு சாதம் பசுவின்  நெய் பரிமாறப் பட்டது.
எல்லோரும்   பிராணாய ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, என்று போஜனத்திற்கு முன் சொல்லும்  மந்திரம் சொல்லி  ஐந்து  முறைப்படி சாப்பிடத்  தொடங்கினர்.
பலவிதமான  அமிர்தம் போன்ற பலகாரங்கள் , உணவு வகைகள் , பரிமாறப்பட்டன.
அந்த பலாகரங்களின் பெயர்கள் ,சுவை வர்ணிக்க இயலாதது .
சிறந்த திறமை வாய்ந்த சமையல் நிபுணர்கள்
மென்று சாப்பிடுவது, உறுஞ்சி சாப்பிடுவது , நக்கிச் சாப்பிடுவது , குடித்து அருந்துவது என சாப்பாட்டு முறைப்படி பண்டங்கள் தயாரித்தனர். அறுசுவை  உண்டி , . ஒவ்வொரு சுவைக்கும் பல ரக  உணவுகள். மிகவும் சுவை மிக்கவை.
உணவு அருந்தும் பொது புகழ்மிக்க இனிய பாடல்களைப்
பெண்கள் பாடினர். இந்த முறையில் அனைவரும் உணவு சாப்பிட்டு ஆசமனம் செய்தனர்.
பிறகு வெத்தலை கொடுத்து ஜனகர் சமூகத்துடன் தசரதர் பூஜை செய்தனர். அனைத்து அரசர்களிலும்  மேலான தசரதர்
மகிழ்ச்சியுடன் மணமகன் தங்குமிடத்திற்கும் சென்றனர்.

ஜனகபுரியில் தினந்தோறும் புதிய  மங்கள நிகழ்ச்சிகள்
நடந்துகொண்டிருக்கின்றன. இரவும் பகலும் நொடி போன்று கழிந்துகொண்டிருந்தன. அதிகாலை அரசர் தசரதர் எழுந்தார். அவர் அரசர்களுக்கெல்லாம் மேலானவர். யாசகர்கள் அவரைப் புகழ்ந்து பாடினர்.
நான்கு மகன்களையும் மருமகள்களையும் பார்த்து தசரதர் மிக ஆனந்தமடைந்தார். மனதில் மிக ஆனந்தத்துடன் வசிஷ்டரைப் பார்க்கச் சென்றார்.
முனிவரை வணங்கி மிகவும் பணிவுடன் சொன்னார் ---
முனிவரே!உங்களின் கிருபையால் எனது வேலை முழுமை
அடைந்தது.  அனைத்து அந்தணர்களையும் அழைத்து அவர்களுக்கு நகைகள் துணிகளால் அலங்கரித்த பசுமாடுகளைத் தானமாகக் கொடுங்கள்.
இதைக்கேட்டு முனிவர் ராஜாவைப் பாராட்டி முனிவர்களை அழைக்க ஆட்களை அனுப்பினார்.
அப்பொழுது  அங்கே வாமதேவர், தேவரிஷி நாரதர்,ஜாபாலி, விஷ்வாமித்திரர் போன்ற மேன்மைக்குரிய முனிவர்கள் அங்கே வந்தனர்.  அரசர் அவர்களை வணங்கி உத்தமமான இருக்கையில் அமரவைத்தார். காமதேனுவைப்போன்று நல்ல குணம் உடைய நான்கு லக்ஷம் உத்தமமான மாடுகளை வரவழைத்தார். அந்த பசுமாடுகளை நன்கு அலங்கரித்து
அந்தணர்களுக்குத் தானமாக அளித்தார்.
அரசர் வாழ்வின் பயன் பெற்றதாகக் கருதினார்.
ஆசிகள் பெற்று அரசர் ஆனந்தமடைந்தார்.
எல்லோரின்  விருப்பத்திற்கு இணங்க  தங்கம் , ஆடை, மணி, குதிரை போன்றவைகள் தானமாக கொடுக்கப்பட்டன.

Monday, March 20, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --எண்பத்தொன்பது

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --எண்பத்தொன்பது

தசரத குமாரர்களுக்கும்  ஜனக குமாரத்திகளும்

தன் தன் ஜோடிப்பொருத்தம் கண்டு மிக மகிழ்ந்தனர்.

கண்டவர்கள்  அனைவரும் ஜோடிகளின் அழகைப்

புகழ்ந்தனர் . தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.

நான்கு ஜோடிகளும் பிரம்மங்களில் ஐக்கியமாகும் நான்கு நிலைகளில்  மிகவும் அழகாக காட்சி அளித்தனர்.

நான்கு நிலைகள்- விழிப்பு,கனவு,தூக்கம் ,ஐக்கியம்

நான்கு பிரம்மங்கள் ----உலகம்,ஒளி,ஞானம், பிரம்மம்

தசரத மகாராஜா நான்கு ஜோடிகளையும் பெற்று
 நான்கு பயன்களைப் பெற்றவர் போல்
அதிக ஆனந்தம் அடைந்தனர்.

யாஹம் ,சிராத்தம் ,யோகம் , ஞானம் போன்றவை
 செய்தால் கிட்டும்
அறம்,பொருள் ,இன்பம் வீடு ஆகிய
 நான்கும்  பெற்ற மகிழ்ச்சி. .

ராமருக்கு நடந்தது போன்றே சீர்வரிசைகள்  வரதக்ஷிணை
மற்ற மூன்று சகோதரர்களுக்கும் நடந்தது.
அனைத்தும் ஸ்வர்ணமயமாக காட்சி அளித்தது.

  அதிக கம்பளங்கள் , ஆடைகள், வித வித மான விசித்திர பட்டாடைகள் அனைத்தும் மிகமிக  அதிக பக்ஷ விலை கொண்டவை.
யானைகள், குதிரைகள், தேர்கள் அடிமைகள்  நகைகள் ,
அலங்கரிக்கப்பட்ட காமதேனு போன்ற பசுக்கள், போன்ற எண்ணிக்கையிலடங்கா  சீதனங்கள், அவைகளை வர்ணிக்க முடியாது, தசரதரும் மகிழ்ச்சியுடன் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அவர் அந்த சீர் வரிசைகளை யாசிப்பவர்களுக்கும் கொடுத்துவிட்டார். மீதமுள்ளவை சீர்வரிசைகளுடன் சேர்ந்துகொண்டன.
அனைத்து மணமகன் வீட்டாருக்கும் மரியாதையை செய்து  ஜனகர்  மிகவும் மேன்மையானா வார்த்தைகளால்  மகிழச் செய்தார்.

    பிறகு ஜனகர்  தசரதரை வணங்கி  , அரசே! உங்களுடன் சம்பந்தம் வைத்ததால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.  நாங்கள் உங்கள் சேவகர்கள் .  ஜனகரின் பணிவான அன்பான மரியாதை யான  மென்மையான  வார்த்தைகள்.  அவர் தசரதரை அழைத்தமைக்கு மன்னிப்பு கேட்டார்.
மணமகன் விட்டாரை வலி அனுப்ப முரசு ஒலித்தது . வெற்றி முழக்கங்களும் , வேதகோஷங்களும் , மங்கள கீதங்களும்
மிக ரம்யமாக இருந்தன. தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.
 சீதை அடிக்கடி ராமரைப் பார்ப்பதும் வெட்கப்படுவதுமாக இருந்தாள்.அன்பின் தாகத்தால் சீதையின் கண்கள் மீன்கள் போன்று இருந்தன.

Sunday, March 19, 2017

रामचरित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எண்பத்தெட்டு

रामचरित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எண்பத்தெட்டு

 சீதா- ராமர் திருமணம்முடிந்த அழகான காட்சியை
ரதியும் மன்மதனும் பார்க்க ஆவலாக வந்து வெளிப்பட்டும்
மறைந்தும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

   எல்லோரும்   ஜனகரைப் போலவே மெய்மறந்து

ஆனந்தத்தில் மூழ்கினர்.
 முனிவர்கள் ஆனந்தமாக மணமகன் -மணமகளை
அக்னி வலம் வரச் செய்தனர்.
சுப காரியங்களில்  உறவினர்களுக்குத் தரும் எல்லா
குல முறைகளையும் பூர்த்தி செய்தனர்.
ஸ்ரீ ராமர் சீதையின் நெற்றியில் குங்குமம் இட்டார்,
அந்த அழகை வர்ணிக்க முடியாது .
தாமரைக் கரம் குங்குமம் என்ற மகரந்தத்தை
கருமையான புஜங்களை பாம்பாக உவமை சொல்லி சீதையின் முகத்தை நிலவுக்கு உவமை சொல்லி  பாம்பானது
நிலவை அலங்கரிக்கிறது என்கிறார்.
பின்ன  வசிஷ்டரின் ஆணையால் சீதையும் ராமரும் ஒரு அரியணையில் அமர்ந்தனர். இந்த அழகான காட்சி கண்டு
தசரதர் மிகவும் ஆனந்தமடைந்தார்.

பிறகு   வசிஷ்டர்  உத்தரவுப்படி ஜனகர்  திருமணப் பொருட்களை அலங்கரித்து  மாண்டவி, ஸ்ருத கீர்த்தி ,உரமில ஆகிய மூன்று அரசகுமாரிகளையும் அழைத்தார்.
   குஷத்விஜியின் அழகும் குணமும் ஒழுக்கமும் நிறைத்த பெரிய மகளுக்கும் பரதனுக்கும் விவாகம் நடந்தது.
சீதையின் சிறிய தங்கை ஊர்மிளாவை லக்ஷ்மணனுக்கு மனம் முடித்துவைத்தார். அழகான கண்களும்  குணவதியான சுருதி கீர்த்தியின்  திருமணம் சத்துருக்கனனுடன் நடந்தது. 

Thursday, March 16, 2017

--ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௮௭ எண்பத்தேழு

--ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௮௭ எண்பத்தேழு


   குல வழக்கப்படி குரு அவர்கள் மகிழ்ந்து  கௌரி பூஜை , விநாயகர் பூஜை ,அந்தணர்களுக்கு பூஜை என பூஜைகள் செய்யப்பட்டது. தேவர்கள் வெளிப்பட்டு பூஜை ஏற்றுக்கொண்டு ஆசிர்வாதம் செய்தனர். பாயாசம் போன்ற மங்கள   பதார்த்தங்களை தங்கக் கோப்பைகளிலும் கலசங்களிலும் நிரப்பி தயாராக வைத்திருந்தனர்.

  சூரிய பகவான் அன்புடன் தானே வந்து தன் குல வழக்கப்படி   செய்யும் சடங்குகளைச் சொன்னார் . அதை மிகவும் மரியாதையுடன் செய்யத் தொடங்கினர்.
இவ்வாறு எல்லா பூஜைகள் முறைப்படி செய்து  சீதை அமர அழகான அரியணை போட்டு அமரவைத்தனர்.
ராமரும் சீதையும் ஒருவர் மற்றவரைப்பார்த்து  அவர்களின் அன்பை  வர்ணிப்பது சொற்களால் அடங்காது.
அதை கவிஞர்கள் ஏன் வர்ணிக்க வேண்டும். ?

  வேள்வியின்  போது அக்னி தேவர் தோன்றி மிக சுகமாக
 ஏற்றுக்கொண்டார் . எல்லா வேதங்களையும் அந்தணர் வடிவில் வந்து சொல்கிறார்.
  ஜனகரின் உலகப்புகழ்  பெற்ற பட்டத்து ராணி சீதையின் அம்மாவை  புகழ் . செயல் , அழகு எல்லாவற்றையும் ஒன்று திரட்டி பிரம்மா படைத்திருந்தார்.

காலம் அறிந்து மேன்மை பொருந்திய முனிவர்கள் அவரை அழைத்தனர். சுமங்கலிப் பெண்ககள் மரியாதையுடன் அவரை அழைத்து வந்தனர். சீதையின் தாயார் சுநயனா ஜானகியின் இடதுபக்கம்  மிகவும் அழகாக தென்பாட்டார்.
அவர் அழகு ஹிமச்சலத்துடன் அவர் மனைவி மைனா போன்று இருந்தது.
புனிதமான மணமுள்ள மங்கள ஜலத்தால் நிரப்பப்பட்ட தங்க கலசம் மணிகள் நிரம்பிய அழகான பெரிய தாம்பாளங்கள்
ராஜாவும் ராணியும் தாங்களே கொண்டு வந்து ராமரின் முன் வைத்தனர்.
முனிகள் மங்களமான குரலில் வேதங்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர்.
நல்ல நேரத்தில் ஆகாயத்தில் இருந்து பூமாரி பொழிந்தது.
மணமகனைப் பார்த்து அரசனும் அரசியும் அன்பில் மூழ்கினர். தங்கள் மாப்பிள்ளையின்  புனித கால்களை
பார்க்கத் தொடங்கினர்.
அவர்களுக்கு மிக ஆனந்தமாக இருந்தது.
ஆகாயத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் பாட்டு,முரசு
மற்றும் வெற்றி முழக்கம் , வாழ்க கோசங்கள் நாலாபக்கங்களும் எதிரொலித்தன.
காம தேவனை எட்டி உதைத்த சிவனின் இதய சரோவரில்  எப்பொழுதும்  ராமனின்  தாமரை பாதங்கள்  ராமருடையது.

அந்த பாதங்களை நினைத்தாலே  கலியுகத்தில் உள்ள எல்லா பாவங்களும் போய்விடும்.
 இந்த ராமரின் பாதம் பட்டதால்  கௌதமரின் மனைவி அஹல்யா  பாவ  விமோசனம்  அடைந்தாள் . அந்த புனித பாதங்களை மிக அதிர்ஷ்டசாலியான ஜனகர் கழுவி பூஜை செய்யும் நிகழ்விற்கு வெற்றி முழக்கம் செய்தனர்.
இரண்டு குலங்களைச் சேர்ந்த குரு ஸ்ரேஷ்டர்கள் மணமகன் மணமகள் இருவரின் கரங்களைச் சேர்த்து முறைப்படி
திருமணச் சடங்கை முடித்தனர்.
அனைவரும் தேவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.

 ஹிமவான் பார்வதியை சிவனுக்கு மணமுடித்து வைத்ததுபோலவும் , சாகரமானது விஷ்ணுவிற்கு
லக்ஷிமியை  மணமுடித்தது போலவும் ,
ஜனகர்  ஜானகியை ராமருக்கு மனம் முடித்துவைத்தார்.

மங்கள இசைக்கருவிகள் முழங்கின .
நகரமெங்கும் மங்கள இசை, பாடல்கள் , ஆனந்தம் .

 


Tuesday, March 7, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் -எண்பத்தாறு

ராமசரித மானஸ்--பாலகாண்டம் -எண்பத்தாறு

 தேவர்களுக்கு எல்லாம் சிவபகவான்  சொன்னார்.
 பிறகு தன்னுடைய   சிறந்த  நந்தீஸ்வரரை முன்னால்
ஓட்டினார். தசரதர் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்வதை தேவர்கள் பார்த்தனர். அவர்களுடன் வந்த அந்தணர்களும் ரிஷிகளும்  எல்லா சுகங்களும் உடலவதாரம் எடுத்து சேவை செய்து கொண்டிருப்பதுபோல் இருந்தது. நான்கு புத்திரர்களும் எல்லா மோக்ஷங்களும் உடல் தரித்ததைப் போல்  இருந்தனர்.
(சாலோக்கியம் , சாமிப்யம் ,சாரூபம் ,சாயுஜ்யம் )

மரகதமணி மற்றும் பொன்னிறமான ஜோடியைக்கண்டு தேவர்கள் மிக மகிழ்ந்தனர். ராமரைப்பார்த்து அதிகம் ஆனந்தமடைந்தனர். அவர்கள் மன்னன் மீதும் ராமர் மீதும்
பூமாரி பொழிந்தனர்.
பார்வதியும் சிவனும் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அழகைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர்.

 ராமருடைய மயில் கழுத்துபோன்ற  கருநீல வண்ண உடல் .
மின்னலையே அவமதிக்கும் ஒளிபொருந்திய அழகான
பட்டாடை ,வித விதமான திருமண நகைகள் ,
மிக நேர்த்தியாகத் தோன்றின.

குளிர்கால பௌர்ணமி நிலவு போன்று ராமரின் முகம்
தாமரை நாணும் படியான கண்கள்,ஒரு அலௌகீக அழகு
ராமரிடத்தில். தெய்வீக அழகு உணர மனதிற்குள்ளேயே
அன்பு செய்யத் தூண்டுவது.
அவருடன் வந்த அழகான சகோதரர்கள் , சஞ்சலமான
குதிரைகளை   ஆட்டி வைத்துக்கொண்டு சவாரியில் வருகிறார்கள். அரச குமாரர்கள்  குதிரைகளைக் காட்டிக்கொண்டு   தன் வம்ச புகழைபாட் இன பாடகர்களும்
மற்றவர்களும் பாடிக்கொண்டு வந்தனர்.

 ராமர் வந்த குதிரையின் நடை அழகு, கம்பீரத் தோற்றம்
வர்ணிப்பது கடினம். அதன் நடைபார்த்து கருடனும் நாணமடைந்தது.

ஸ்ரீ ராமரின் குதிரை  காமதேவனே  வேஷம்போட்டு குதிரை வேடத்தில் வந்துள்ளது போல இருந்தது.

அந்த குதிரை தன் வயது , பலம் ,அழகு குணம்,நடந்த  விதத்திலும் அனைவரையும் கவர்ந்துகொண்டிருந்தது .
அழகான  முத்து, மணிகள் ,மாணிக்கங்கள் பதித்த குதிரை பட்டயம்  ஜொலி ஜொலித்துக்கொண்டிந்தது
அதனுடைய  அழகான சலங்கை கட்டிய லகான் பார்த்து மனிதர்கள் ,தேவர்கள் மற்றும் முனிவர்கள் வியந்தனர்.
ராமச்சந்திர பிரபு வின்  விருப்பப்படி நடக்கும் அந்த   குதிரை
நக்ஷத்திரங்களாலும் மின்னலாலும் அலங்கரிக்கப்பட்ட

மேகம் அழகான மயிலை ஆட்டுவிப்பதுபோல் இருந்தது.

ராமரின் குதிரை ,சவாரி செய்யும் அழகு அதை வர்ணிப்பது
சரஸ்வதி தேவியலும் இயலாது. சங்கரர் ராமரின் அழகில் மிகவும் மயங்கி அதிக அன்பு செலுத்தினார்.
சிவன் தனக்கு இருக்கும் பதினைந்து கண்களும் போதாது என்று வருந்தினார். பிரம்மாவும் தனது  எட்டு கண்கள் போதாது  என்று நினைத்தார்.
பகவன் விஷ்ணுவும் ராமரின் அழகான உருவத்தைக் கண்டு

லட்சியம் லக்ஷ்மி பதியும் மோஹமடைந்தார்.
 தேவர்களின் சேனாபதி கார்த்திகேயனும் இதயத்தில்
மிகவும் உற்சாகமடைந்தார் . கார்த்திகேயன் தன் பன்னிரண்டு கண்களால் ராமரின் அழகை  ரசித்தார்.
இந்திரன் தன் ஆயிரம் கண்களால் ராமரின் அழகாய் ரசித்து கௌதமரின் சாபமும் நன்மைக்கே என்று அநினைத்தார்.

இந்திரன் தான் அழகு அவனுக்கு
 இணையான அழகு யாரும் இல்லை என்று நினைத்த தேவர்கள் ராமரின் அழகுகண்டு  மகிழ்ந்தனர்.

இரண்டு அரசர்களைச் சேர்ந்தவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.
இரண்டு அரசர்களின் விரும்பிகளும் மிகவும் ஆனந்தமாக முரசொலி  எழுப்பினர்.
தேவர்கள் மகிழ்ந்து  "ரகுகுல மணி  ஸ்ரீ ராமருக்கு ஜெய் ,
என்று பூமாலை பொழிந்தனர்.
மணமகன் வீட்டார் ஊர்வலமாகப்  புறப்பட்டதும்
அநேகவிதமான மங்கள இசைக்கருவிகள் முழங்கின,
ராணி சுமங்களிப்  பெண்களை  அழைத்து வாசனை திரவியங்களால் அலங்கரிக்கப்பட்ட தாம்பூலத்தாம்பாளங்கள் ,
ஆரத்தி எடுக்க தாம்பாளங்கள்
அழைத்தாள்.
பெண்கள் ஆரத்தி அலங்கரித்து அனைத்து மங்கள திரவியங்களையும்   அலங்கரித்து  யானைபோல் அசைந்து
அணிவகுத்துச்  சென்றனர்.

எல்லா பெண்களுமே நிலவு போன்ற முகமும் மான்  விழி உடையவர்களாகவும் அழகாக இருந்தனர்.
எல்லோரின் அழகும் ரதியின் கர்வத்தை அளிக்கும்படியாக இருந்தது.
பல வண்ணங்களில் அழகான உடை உடுத்தி  இருந்தனர்.
உடலில் பலவித அங்க அழகுக்கான ஆபரணங்கள் அணிந்து
மிக எழிலாக வந்தனர். வளையல் ,காப்பு ,கால் கொலுசு ஒலித்துக்கொண்டு மிகவும் நன்றாக  மகிழ்ச்சியாக இருந்தனர்.
பலவித வாத்தியங்கள் வாசித்துக்கொண்டிருந்தனர்.
பவித்திர தேவலோக தெய்வங்கள் இந்திராணி, சரஸ்வதி,
லக்ஷ்மி ,பார்வதி, ஆகியோரும் வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் சாதாரண பெண்கள் போல்  வேட மிட்டு அந்தப்புரத்தை அடைந்தனர்.
அழகான குரலில் மங்கள கீதங்கள் பாடினர்.
எல்லோரும் ஆனந்தமாக  மெய்மறந்து இருந்ததால்  இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் மணமகனாக வந்துள்ள பரபிரம்ம ஸ்வரூபியான ராமரை புகழ்வதிலேயே இருந்தனர்.
எல்லோரும் மணமகன் தொடராப் பொழிவில்
தாமரைக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிய
அழகான அங்கங்களில் ஆனந்தம் பொங்கியது.
சீதையின் தாயார் சுனயனாவின் ஆனந்தத்தை சரஸ்வதி ,ஆதிஷேசன் போன்றவர்களாலும் வர்ணிப்பது அரிதாக இருந்தது.
வர்ணிக்க பல யுகங்களாகும்.
ராணி ஆனந்தக்கண்ணீரை அடக்கிக் கொண்டு
வேதங்களில் கூறிய குல வழக்கப்படி நல்லமுறையில் நடந்துகொள்வதில் கவனமாக இருந்தனர்.
ஐந்து வகை இசைக்கருவிகள் முழங்கின.
மத்தளம் , வீணை போன்ற நரம்பு இசைகள், ஜால்ரா, முரசு ,
மிருதங்கம்  போன்றவைகளில் மங்கள இசைகள் முழங்கின.
வேத முழக்கங்கள், வாழ்த்துக்களின் கோசங்கள், வெற்றி முழக்கங்கள், சங்கு முழக்கங்கள், மந்திர முழக்கங்கள்
என நகரமே மங்களமயமாக இருந்தது.
ராணி ஆரத்தி எடுத்து அர்க்கியம் விட்டபின் ,
ராமர் மண்டபத்தில் வருகை புரிந்தார்.
தசரதர் தன் குழுவினருடன்  வந்தார்.
அவருடைய வைபவங்களைக்கண்டு
லோகபாலரே நாணமடைந்தார்.
அடிக்கடி தேவர்கள் பூ மாறி பொழிந்தனர்.
அந்தணர்கள் காலமறிந்து சாந்தி கழித்தனர்.
ஆகாயத்திலும் நகரத்திலும் மகிழ்ச்சி ஆராவாரங்கள் .
தன்னவன் -அயலவன் என்ற வேற்றுமை எங்குமே இல்லை.
ராமர்  வந்ததும் அர்க்க்யம் செய்து ஆசனத்தில் அமரவைத்தனர்.
மணமகனுக்கு  ஆரத்தி எடுத்து , பெண்கள் மங்கள கீதம் பாடினர். பிரம்மா போன்ற மேன்மை பொருந்தியவர்கள்
அந்தணர் வேடத்தில்  வந்து ஆனந்தமாக பங்கேற்றனர்.
ரகுகுலம் என்ற தாமரையை மலரச்செய்கின்ற  சூரியனான ஸ்ரீ ராமச்சந்திரரின்  அழகை பார்த்து தன பிறவிப்பயனின்
வெற்றிக்களிப்பில் இருந்தனர்.
நாவிதர்கள், பணிப்பெண்கள், பாடகர்கள் , ராமரை வணங்கி ஆசிர்வதித்தனர்.
வேதங்களின் படியும் , லௌகீக பழக்க வழக்கப் படி  ஜனகரும் தசரதரும்  கடைப்பிடித்து அன்புடன் சந்தித்தனர் .
இருவரின் சந்திப்பை வர்ணிக்க கவிஞர்கள்  சொற்களைத்  தேடினர். அவர்கள் தக்க உவமைகளைத்தேடி கிடைக்காவில்லை. தங்களுடைய கவித் திறமையின் தோல்வியை  ஒப்புக்கொண்டனர்.
சம்பந்திகளின் சந்திப்பைப் பார்த்து ,பரஸ்பர ஆனந்தமான
நிகழ்வுகளைப் பார்த்து , தேவதைகள் பூமாரி  பொழிந்து
போற்றத்தொடங்கினர்.

நாங்கள் உலகத்தை பிரம்மா  படைத் தத்தில் இருந்து பல திருமணங்கள்  பார்த்திருக்கிறோம் . ஆனால் இந்த மாதிரியான சம - அந்தஸ்து, கௌரவம் , ஆஸ்திகள் , தெய்வீகம் கொண்ட சம்பதிகளை  இன்றுதான் பார்க்கிறோம். என்று தேவர்கள் கூறினர் .
அழகான  முறையில் அர்க்கியம் செய்து
ஜனகர் மிக மரியாதையுடன் தசரதரை விவாஹமண்டபத்திற்கு  அழைத்து வந்தார்.
மண்டபத்தின் விசித்திர அமைப்பையும் அழகையும் கண்டு
முனிவர்கள் மனதில் மகிழ்ந்தனர். ஜனகர் தன கையாலேயே அனைவருக்கும் சிம்மாசனம் கொண்டுவந்து போட்டார்.
அவர் தன்னுடைய இஷ்ட தேவதை போன்ற வசிஷ்டருக்கு
பூஜை செய்து ஆசிகள் பெற்றார்.
விஷ்வாமித்திரருக்கு பூஜை செய்தி தனது அளவிட முடியா அன்பைக் காட்டினார்.
வாமதேவர் போன்ற ரிஷிகளுக்கும் பூஜை செய்தார்.
எல்லோருக்கும் தெய்வீக ஆசனம் அளித்து கௌரவித்தார்.
பிறகு தசரதருக்கு பூஜையை மகாதேவர் என்றே நினைத்து
பூஜை செய்தார். பிறகு தசரதருடனான சம்பந்தம் தன்  பாக்கியம் எனப் புகழ்ந்தார். கைகூப்பி வணங்கி பெருமைப் படுத்தினார்.

எல்லா சம்பந்திகளுக்கும் ஜனகர் தசரதரைப்போலவே மரியாதையுடன் பூஜை செய்தார். எல்லோரையும்  தகுந்த ஆசனத்தில் அமரவைத்தார். அவருடைய உற்சாகத்தை
எப்படி வர்ணிப்பது ?
அரசன் ஜனகர் தானம் , மானம் -கௌரவம் ,பணிவு ,உத்தமமான பேச்சு  மூலம் எல்லா மணமகன் வீட்டாருக்கும்
மரியாதை செலுத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ,திக்குபாலகர்கள் , சூரியன்  போன்றோர் ஸ்ரீ ரகுநாதரின் மகிமை அறிந்தோர் சாதாரண அந்தணர்கள் வேடத்தில்
வந்து காட்சிகளைக் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர்.
ஜனகர் அவரை அறியாதபோதிலும் அவர்களுக்கும் தெய்வங்களுக்கு உரிய பூஜையும் ஆசனமும் அளித்து வணங்கினார்.
எல்லோரும் மகிழ்ச்சியால் தன்னையே மறந்து இருந்ததால் யார்  என்று அறியாமலேயே இருந்தனர்.
ஸ்ரீ ராமர்  தேவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு மானசீக பூஜை செய்து மனதில் ஆசனம் அளித்தார்.
பிரபுவின் குணம் -ஒழுக்கம் கண்டு தேவர்கள் மிகவும் ஆனந்தம் அடைந்தனர்.
உரிய நேரத்தில் வஷிஸ்டர் சதானந்தரை மரியாதையுடன் அழைத்தார். அரசகுமாரியை அழைத்து வரும்படி கூறினார்.
புரோஹிதர் ராணியிடம் கூற  அவர் அறிவு கூர்மையுடன்
தோழிகளுடன் மகிழ்ந்து அந்தணப் பெண்களும்
குலத்தைச் சேர்ந்த வயதான பெண்களும்  அழைத்து
மங்களப்பாடல் பாடினார்கள்.
மேன்மை பொருந்திய தேவலோகப் பெண்களும் , அழகான மனித உருவத்தில்  இருந்தனர். எல்லோருமே பதினாறு வயதுள்ள அழகான அப்சரஸ்கள்..அவர்களைப்பார்த்து
அந்தப்புரப் பெண்கள் அவர்களின் அறிமுகம் இன்றியே அவர்களை மிகவும் நேசித்தனர். அவர்களை பார்வதி, லக்ஷ்மி ,சரஸ்வதி என்றே நினைத்து ராணி அவர்களுக்கு
தகுந்த மரியாதை செலுத்தினார்.
அந்தப்புர தோழிகளும் பெண்களும் சீதையை நன்கு அலங்கரித்து மகிழ்ச்சியுடன் மணமேடைக்கு அழைத்துவந்தனர்.
எல்லா அழகிகளும் சரியாக அலங்கரித்துக்கொண்டு
மத யானை போல் நடப்பவர்கள். சலங்கை, கொலுசுகள்,அழகான கங்கணங்கள்  ஆகியவற்றால்
தாளத்தின் கதிக்கேற்றவாறு இசைத்துக் கொண்டிருந்தனர்.
இயகையான பேரழுகு  கொண்ட சீதை அழகான பெண்களுக்கு மத்தியில் அழகே உருவெடுத்து அமர்ந்திருந்ததுபோல்  இருந்தார்.
அழகே உருவெடுத்த சீதையைக் கண்டு அனைவரும் மனதிற்குள்ளேயே வணங்கினர். ராஜா தசரதர் புத்திரர்களோடு மிக மகிழ்ந்தார். தேவர்கள் வணங்கி பூமாரி பொழிந்தனர். மங்களங்களுக்கு மூலமான முனிவர்களின் ஆசிர்வாதம் ஓசைகள், முரசொலி, கேட்டது. அனைவரும்
குதுகூலமடைந்து காணப்பட்டனர்.
சீதை மண்டபத்திற்கு வந்தார். முனிகள் ஆனந்தமடைந்து
சாந்தி மந்திரங்கள் ஓதினர். அந்த சந்தர்பத்தில் முறைப்படி குலவழக்கப்படி  இரண்டு குல குருக்களும் ஆசார அனுஷ்டானங்களைச் செய்தனர்.

Saturday, March 4, 2017

ராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து

   ராமசரித  மானஸ்  --பாலகாண்டம் --எண்பத்தைந்து

  அந்த லக்ன பத்திரிக்கையை பிரம்மா தயாரித்து நாரதர் மூலம் அனுப்பினார். ஜனகரின் ஜோதிடரும் அதே லக்னத்தைக் குறித்து வைத்திருந்தார். பின்னர் ஜனகபுரியில்
லக்னம் குறித்தவரும்  பிரம்மாதான்.
  குறிப்பிட்ட நல்ல நேரம்  வந்ததும் பிரம்மா ஜனகரிடம்
சொன்னார். அரசர் ஜனகர் புரோகிதர் சதானந்தத்திடம் ஏன்
தாமதம்   எனக் காரணம் கேட்டார்.
சதானந்தம் மந்திரிகளை அழைத்தார்.
அவர்கள் எல்லா மங்களப் பொருள்களையும் அலங்கரித்துக்
கொண்டுவந்தனர்.
 சங்கு, முரசு மேலும் பல வாத்தியங்கள் அலங்கரிக்கப்பட்டன.
அழகான சுமங்கலிப் பெண்கள் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.புனிதமான அந்தணர்கள்
வேதங்களை ஓடிக்கொண்டிருந்தனர்.
 எல்லோரும் மணமகன் வீட்டாரை அழைக்கச் சென்றனர்.
அவதநாட்டு அதிபதி  தசரதர் வைபவத்தைப் பார்த்து ஜனகருக்கு தேவராஜ் இந்திரனும் தாழ்ந்தே  காணப் பட்டார்.
  ஜனகர் தசரதரிடம்  நேரமாகிவிட்டது ,வாருங்கள் என்று அழைத்தார். இதைக்கேட்டதும் முரசுகள் முழங்கின.
குரு வசிஷ்டரிடம் கேட்டு குல வழக்கப்படி அரசர் தசரதர் முனிவர்கள் மற்றும் சாதுக்களுடன் புறப்பட்டார்.
 அவதநாட்டு மன்னர் தசரதரின் அதிர்ஷ்டத்தையும் வைபவத்தையும் பார்த்து தன் பிறப்பு வீணாகப் புரிந்து
தசரதரைப் பலவிதத்திலும் புகழத் தொடங்கினார்.

தேவர்கள் அழகான நல்ல நேரம் வந்ததை அறிந்து முரசு முழங்கி பூ மாரி பொழிந்தனர். சிவன், பிரம்மா, மற்றும் தேவர்கள் குழு குழுவாக விமானத்தில் ஏறினர்.
அன்புடன் ஆனந்தமாக மனதில் உற்சாகமாக ராமரின் விவாஹத்தைப் பார்க்க வந்தனர்.  தேவர்கள் ஜனகபுரியைப்
பார்த்து மிகவும் அதிசயித்தனர்.அவர்களுக்கு தேவபுரி
ஜனகபுரியைவிட தாழ்ந்ததாகத் தெரிந்தது.
 விசித்திரமான திருமண மண்டபம் , பலவிதமான அலௌகீகமான படைப்புகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
நகரித்தின் ஆண்களும் பெண்களும் அழகின் சேமிப்பாகவும்
அழகாகவும் மேன்மை பொருந்திய தர்மாத்மாக்களாகவும்
நல்லொழுக்கமாகவும் நல்லவர்களாகவும் இருந்தனர்.
அவர்களைப் பார்த்து எல்லா தேவர்களும் தேவலோகப் பெண்களும் நிலவின் வெளிச்சத்தில் நக்ஷத்திரங்கள் போன்று  ஒளிமயங்கி இருந்தனர்.
பிரம்மாவுக்கும் விஷேச ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் அவர் தன்னுடைய படைப்புகளை எங்கும் பார்க்கவில்லை .
அப்பொழுது சிவ-பகவான் கூறினார் ---
நீங்கள் ஆச்சரியப்பட்டு  தவறு செய்துவிடாதீர்கள்.
இதயத்தில் தைரியத்துடன் எண்ணிப்பாருங்கள் .
இது சீதை- ராமர்  திருமணம். ராமர் பகவான் . சீதை பகவானின் சக்தி.
அவர்கள் பெயரை நினைத்தாலே தீயவைகள் எல்லாம் போய்விடும். அறம்.பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கும்
நம் கைப்பிடியில் வந்துவிடும்.
இவர்கள் அவனிக்கு அன்னையும் தந்தையுமான ஸ்ரீ சீதாராமர். காமனின் விரோதி . சிவபகவான் அவர்களுக்கு விளக்கினார்.





Friday, March 3, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -எண்பத்திநான்கு.


  புவியாளும் அரசர் தசரதர் முனிவரை
  பலமுறை வணங்கினார்.

 விஷ்வாமித்திரர் அவரை அணைத்து ஆசீர்வாதம் செய்தி
நலம் விசாரித்தார்.  பிறகு இரண்டு சகோதரர்களும் தன தந்தை தசரதரின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
புத்திரர்களைத் தூக்கி இதயத்துடன் அணைத்து
சகிக்க முடியாத துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார்.
அவரின் இறந்த உடலுக்கு உயிர் கிடைத்தது போன்ற  புத்துணர்வு ஏற்பட்டது.
பிறகு வசிஷ்டரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
முனிவரும் அன்பின் ஆனந்தத்துடன் அணைத்து ஆசிகள் வணங்கினார்.
இரண்டு சகோதரர்களும் எல்லா அந்தணர்களையும்  வணங்கி ஆசிகள்  பெற்றனர்.
பரதனும் சத்துருக்கனனும் ராமனை வணங்கினர்.
இரண்டு சகோதரர்களையும் பார்த்து லக்ஷ்மணனும்
ராமரும் மகிழ்ந்தனர்.

  பின்னர் மிகவும் கிருபையும் பணிவும் உள்ள ராமர்
அயோத்தியா மக்களையும் , குடும்பத்தினரையும்
யாச்சகர்களையும் , அமைச்சர்களையும்  நண்பர்களையும்
சந்தித்தார்.
 ராமரின் பிரிவால் துன்புற்ற அயோத்தியாவாசிகள்
ராமரைப் பார்த்து  வணங்கினர்.  அவர்கள் மனம் குளிர்ந்தது.
அன்பின் முறையை வர்ணிக்க முடியாது.
  அரசனருகில் அமர்ந்த  நான்கு மகன்களும்

அறம்,பொருள் , இன்பம் ,வீடு நான்கும்
  உடல் தரித்து அழகுடன் காட்சி
அளிப்பது போல் இருந்தனர்.
  அரசருடன்  நான்கு மகன்களும் ஒன்றாக  இருப்பதைப் பார்த்து   அயோத்தியாவாசிகள் மிகவும் மகிழ்ந்தனர்.
ஆகாயத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
முரசுகள் முழங்கின. தேவலோக அழகிகள்
ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
 வரவேற்க வந்தவர்கள் மற்ற அந்தணர்கள் ,அமைச்சர்கள்,
அரசர்  தசரதர் அனைவருக்கும்  தக்க மரியாதை செலுத்தி
 அனுமதி பெற்று சென்றனர்.
மணமகன் வீட்டார் மூர்த்த லக்னத்திற்கு முன்பே வந்ததால்
ஜனகபுரியில் அதிக ஆனந்தம் அடைந்தனர்.
அவர்களின் ஆனந்தம் பிரம்மானந்தமாக இருந்தது.
அனைவரும் ராமரின் அழகையும் சீதையின் அழகையும்
பற்றியே பேசிக்கொண்டும் புகழ்ந்துகொண்டும் இருந்தனர்.
 ஜனகரின் புண்ணியவடிவமாக  சீதையும் ,
தசரதரின் புண்ணியவடிவமாக ராமரும் தோன்றி உள்ளதாகப் புகழ்ந்தனர்.
 இவர்களைப்போல உலகில் யாரும் பிறக்கவில்லை.
எங்கும் இல்லை, எதிர்காலத்திலும் உண்டாக மாட்டார்கள்.
நம் எல்லோரின் புண்ணியத்தின் நிதியாக உலகத்தில் தோன்றி ஜனகபுரியின்  புண்ணியமே.
ஜானகி -ராமச்சந்திரரின்  அழகை  நேரடியாகப் பார்த்த  புண்யாத்மாக்கள் ஜனகபுரி மக்கள் போல் உலகில் யார் இருக்கமுடியும்?
நாம் ரகுநாதரின் திருமணமும் பார்ப்போம் . அதன் பயனும் பெறுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.
இனி அடிக்கடி ராமரின் வருகை ஜானகி --ராமர் திருமணத்தின் காரணமாக ஜனகபுரிக்கு கிடைக்கும்
என்ற மகிழ்ச்சியில் ஜனகபுரி மக்கள் இருந்தனர்.
 ராம-லக்ஷ்மணர் போல் பரதனும் சத்துருக்னனும்
அழகாகத்தான் இருக்கிறார்கள் என்றும் மகிழ்ந்தனர்.
லக்ஷ்மணனும் சத்ருக்னனும் ஒரே மாதிரியாக உள்ளனர் .
இருவரின் இருவரின் அழகுக்கு  மூவுலகத்திலும்  உவமை இல்லை.

     துளசிதாஸ் ,கவிகள் ,வித்வான்கள் அனைவருமே இவர்களுக்கு ஒப்பானவை வையகத்தில் இல்லை என்றே கூறினார்கள். பலம் ,பணிவு, கல்வி, ஒழுக்கம் , அழகு இவர்களுக்கு இணை இவர்களே என்றனர்.
ஜனகபுரியின்  பெண்கள்  அனைவரும் முந்தாணை விரித்து  இந்த நால்வரின் திருமணமும் இங்கேயே நடக்கவேண்டும் என்று
இறைவனைப் பிரார்த்தித்தனர்.
அன்புக் கண்ணீர்  மல்க  , பெண்கள்  ஒருவர் மற்றவரிடம்
இரண்டு அரசர்களுமே புண்ணியத்தின் சமுத்திரம் .
முக்கண்ண1ன் சிவன் இவர்களுடைய மனவிருப்பத்தைப்
பூர்த்திசெய்வார் என்று கூறினர்.  பெண்கள் தங்கள்
மன விருப்பத்தை மனதில் நினைத்தே ஆனந்தமாக இருந்தனர்.
சீதையின் சுயவரத்திற்கு வந்தவர்களும் நான்கு சகோதரர்களின் தோற்றம் கண்டு ஆனந்தமடைந்தனர்.
ராமரின் களங்கமற்ற புகழைப் புகழ்ந்தனர் .
ஜனகபுரி மக்களும் மணமகன் ஊர்வலத்தில் வந்தவர்களும்
ஆனந்தமாக இருந்தனர்.
  திருமணநாளின் லக்ன நாள். பின் பனிக்காலம் .அழகான
கிரஹங்கள்,தேதி,நக்ஷத்திரம் யோகம் ,கிழமை அனைத்திலும்  மேன்மையான நாள். பிரம்மா குறித்தநாள்.