Friday, May 27, 2016

பக்தர்கள்

கடவுளை நம்புபவன்  களங்கமில்லாதவன்.
ஆடை எளிது உணவு எளிது
இருக்கை எளிது  இனிமையானவன்
ஆசையில்லாதவன்
பற்றில்லாதவன்
பஞ்சப்பரதேசிபோல்
பரலோக எண்ணங்கள்
ஆனால் இன்றோ ஆன்மீகம்
ஆடம்பரத்தின் உச்சகட்டம்.
குடிசையில் வாழ்ந்தோர்
ரிஷி முனிகள்
இன்று ஆஷ்ரமங்களோ
அழகுமாளிகைகள்
ஆசனமோ தங்க இருக்கை.
மகுடமோ வைரம்.
அபிஷேகப் பிரியராக
அலங்காரப்பிரியராக
ஆசிர்வாதத்திற்கே
ஆஸ்திசேர்க்கும் ஆஸ்திப்ரியராக
ஒரு அதிசயம்
அனைத்து அரசியலவாதிகளும் சென்றூ
தங்கும் விடுதியாக
ஆன்மீகம் செழிக்கிறது களிக்கிறது
அப்பாவிகளை அடக்கி
வாழ்கிறது
பலஆயிரம்கோடி சொத்துக்கள்
காவல்துறை எதிர்த்துப் போராடும் அடியார்கள்
பக்தி பரவசமா ? பாவாடை சாமியாரா ?  புரியவில்லை.
ஆனால் ஆயிரங்கோடிகள்
நடமாடும் மாளிகைகள்

No comments: