காலை நேரம்.
கடவுளைத் தொழுதேன் .
கணபதியே போற்றி.
கந்தா போற்றி
சிவனே போற்றி .
துர்கையே போற்றி.
கடவுள் அருளால் இன்று எங்கள் திருமண நாள்.
என் மனைவி கோமதியை கரம் பிடித்து ௪௧ ஆண்டுகள்
நாற்பத்தி ரெண்டாவது ஆண்டு அடி எடுத்துவைக்கிறோம்.
சாவித்திரி சத்தியவானை காப்பாற்றியது கதை .ஆனால்
என் மனைவி என்னைப் போராடி காப்பாற்றியது உண்மை.
அன்பு ,மகிழ்ச்சி ,ஆனந்தம் இந்த வாழ்க்கை ஒரு போராட்டம்.
அதில் மகிழ்ச்சி சக்தி ,எழுச்சி பெற ஆண்டவன் அருள் .
அவனருளால் இணையும் திருமண பந்தம்.
அந்த பந்தத்தில் எப்படி ஒரு நெருக்கம்.
பாசம். நாம் இருவர், நம் குடும்பம் .நம் முன்னேற்றம்.
தானம் தர்மம். எப்படியோ வாழ்நாளில் ஒரு முன்னேற்றம்.
இந்த இல்லற பந்தம் ,இனியபந்தமாக ,இணை பிரியா பந்தமாக
மனக்கசப்புகளுடன் ,சண்டைகளுடன் மகிழ்ச்சியாக
வளர்ச்சியாக அமைத்த ஆண்டவனின் அமைப்புக்கு நன்றி.
உனக்கு நான் எனக்கு நீ என்று ஆக்கி அகிலவாழ்க்கைக்கு
பொருள் பொருந்திய பொருளாதாரம் இல்லாவிட்டாலும்
பொருளுள்ள தாரம் பொருந்திவிட்டால் இன்பமே.
அந்த இறைவன் எங்களுக்கு ஆரோக்கியம் அளிக்க வேண்டும்.
எங்களது பரம்பரை செழிக்க மூன்று மழலைச்செல்வங்கள் .
மகன்கள் -மருமகள்கள் .மகள் -மருமகன்
பேரங்கள்,பேத்திகள் அனைவரின் ஆரோக்கியம் ,ஞானம் ,ஆஸ்தி
வளம் பெற ,அகிலம் வலம் வர ,அவனியில் புகழ்பெற.
மானிடப்பிறவி மாண்பு பெற மதிப்பு பெற ஆண்டவன் எப்பொழுதும்
துணை நின்று க்ருபைகாட்ட பிரார்த்தனைகள்.
கணேசாய நமஹ. கந்தாய நமஹ . சிவாய நமஹ. துர்காய நமஹ .
No comments:
Post a Comment