ஆன்மிகம் அடிப்படை
மன ஒருமைப்பாடு
வாய்மை
கடமை
தானம்
தர்மம்
பரோபகாரம்
உலகப்பற்று இன்மை
புலனடக்கம்
அஹிம்சை
அலௌகீகம்
ஆசைகள் பெண் பொன் மண் இன்றி இருத்தல்
கடவுளின் நாமம் தவிர வேறு சிந்தனை இல்லாதிருத்தல்.
இப்படி வையகம் இயங்கினால்
எப்படி இருக்கும் ?
ஜபமாலை தயாரிப்பது யார் ?
உணவு தயாரிப்பது யார் ?
தண்ணீர் ஆகாரம்
காற்று ஆகாரம்
நடக்குமா ?
நடக்காது என்பதற்கு புத்தர் பாயாசம் அருந்திய சான்று.
கையில் பிக்ஷைப்பாத்திரம்
மரத்தின் கீழ் வாசம்
பிறகு எப்படி வைர நகை அலங்காரம்.
வானளாவிய கோபுரம் பணம் இன்றி
வசூலின்றி நன்கொடை இன்றிவருமா ?
இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை செய்யும் அறிவு ஆற்றல் உள்ளது.
ஒரு புகழ் பெற்ற அரசனால் பள்ளம் தோண்ட முடியுமா ?
விவசாயம் செய்ய முடியுமா?
ஆஷ்ராம்சாமியார்கள் மந்திரத்தால் மேடம் கட்ட முடியுமா ?
சாமியார்கள் மாதிரி ஆன்மிகம் பேச முடியுமா ?
தோழி ஞானம் என்பதுதான் இறைவன் அளிப்பது.
ஒவ்வொருவருக்கும் ஒருஞானம்.
அதன்படி தொழிலாற்றினால் போதும் .
செய்யும் தொழிலே தெய்வம்.
ஆலயம் செல்லவேண்டாம்.
நாம் ஒரு அதிகாரி என்றால் நேர்மையாக கோப்பை நகர்த்தவேண்டும்.
கோப்பையில் குடியிருக்கக்கூடாது.
தொழில் தர்மம் தான் ஆன்மிகம்.
ஆன்மீக சக்திகொண்டு காமலீலை செய்து அவமானப்படக்கூடாது.
தங்கள் தங்கள் திறமையால்
சமுதாயத்தில் ஒழுக்கம் ஏற்படுத்தவேண்டும்.
அழகான குரல்வளம் என்று ஆபாசப்பாடல் பாடி
இளைஞர்களைக் கெடுக்கக்கூடாது.
அதைத்தான் கடமை செய்தால் பலன் கிடைக்கும் .
அந்த பலன் இறைவன் அருள்படி.
ஒரேமாதிரி பொம்மை செய்தாலும்
சிலருக்கு அதிகம் விற்பனையாகும்.
சிலருக்கு ஆகாது . இதுதான் இறைவனின் மேன்மை.
நமது புண்ணியபாவ பிரதிபலிப்பு.
அன்பு ,கடமை ,தானம் அறமே கடவுள்.
No comments:
Post a Comment