முருகா .! அறுபடை வாசா.!
அழகா! அபிஷேகப் பிரியா!
அசுர சம்ஹாரா!
அன்பருக்கு அருளும் ஆறுமுகா!
கணபதி தம்பி கார்த்திகேயா.!
நம்பினவர்களுக்கு நண்மைதரும்
நடராஜன் மைந்தா!
நம்பிராஜன் மருகா!
வள்ளிமணளா!
வேடா ! வ்ருத்தா!
ஆவினன் குடிவாழ்
தண்டபாணி தெய்வமே!
திருத்தணி நாதா!
திருப்பரங்குன்ற வேலா!
திருச்செந்தூர் சூரா! வீரா!தீரா! அழகர் மலை வாசா!
அப்பனுக்குஆசனான சுவாமிமலை
தெய்வமே!
குன்றுதோராடும் குன்னக்குடியோனே!
விராலிமலைவாசா!
உன் னருளால் வாழ்கின்றேன் .
உன் திருவடிகளே ! சரணம்!
கந்தா சரணம் ! கடம்பா சரணம்!
கார்த்திகேயா ! சரணம்!
கிரிவாசா வாசா சரணம்!
காங்கேயா சரணம்.
கௌரி புத்திரா சரணம்!
சரவணபவா சரணம்.! சரணம்!
ஷண்முகா சரணம்! சரணம்!
சாமிநாதா ! சரணம் சரணம்!
Thursday, May 26, 2016
முருகா சரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment