Saturday, August 31, 2013

இந்த ஏமாற்றங்களைத் தடுத்தால் தான் மும்மூர்த்திகள் அருள்

இறைவன்  என்பவன் தனிப்பட்ட ஆற்றலுடையவன்.

அவனின்றி அணுவும் அசையாது என்பர்.

நமது சனாதன தர்மத்தில்  இறைவன் அவதாரம் எடுத்து துன்பங்களைப்  போக்குவார் என்று கூறப்படுகிறது.

சிவனின் திருவிளையாடல்கள் ,விஷ்ணுவின் தசாவதாரம்  என்றெல்லாம்

பெரியபுராணம் ,விஷ்ணு புராணம்  விரிவாக விளக்குகிறது.

கடவுள் பற்றி விளக்கும் போது த்வைத்துவம் ,அத்வைத்துவம் ,விஷிஸ்டாத்வைத்துவம்  என்று  மூன்றாச்சாரியர்கள் ஸ்ரீ சங்கரர் ,மத்வர் ,ராமானுஜர்  விளக்கி உள்ளனர்.

இப்பொழுது  பல பாபாக்கள் தங்களுக்கு பாலாபிஷேகம் ,தங்கக்க்ரீடம் ,மலர்க்க்ரீடம் ,மலர் அர்ச்சனை செய்து தன்னை சிவன்,அம்மன்,விஷ்ணு போன்ற  தெய்வங்களின் அவதாரமாக கூறிக்கொண்டு பொன்னும் பொருளும்  கோடிக்கணக்கில் சேர்த்துவருகின்றனர்.

இவர்களில் போலிகள் சிலர் இருக்கின்றனர் என்பதறிந்தும் மக்கள் ஏமாறும் வராய்   ஏமாறட்டும்    என்ற ஹிந்து அமைப்புகள் போக்கு

இந்துமத ஒற்றுமைக்கு ஏற்றதாகத் தெரியவில்லை.

இந்த ஏமாற்றங்களைத் தடுத்தால் தான் மும்மூர்த்திகள் அருள்

இந்துக்களுக்கு கிட்டும்.

அன்பே ஆண்டவன்.

Date Sunday, 01 September 2013 ( As it appeared in Prasanthinilayam)

THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE 
Be careful to not engage yourself in Iccha 
Krishi (the cultivation of wants and desires). 
This is a never ending process of sowing and 
reaping, you will never reach contentment. 
For, one desire, when satisfied will fan the 
thirst for ten more. Be warned! Do not run 
after devious desires or crooked 
satisfactions. All roads leading to the realm 
of the senses are tortuous and blind. Only 
the road that leads to God is straight. 
Cultivate straightforwardness (Neethi) in 
your every act. That will reveal the Divine in 
due course. It will also enable you to 
overcome your threeGunas (Rajas, Sathwa and Tamo). Just as you grind chilly, salt 
and tamarind to get a tasty dish, you must grind all the three Gunas so that the taste 
of Ananda (bliss) emerges.(Divine Discourse, Apr 12, 1959.)


thiagaraajan /guruyayaathi guru.

Thursday, August 29, 2013

வலிமை பெறுவோம்; வளம் பெறுவோம்.



 ஹிந்துமதம்   ஒரு புனித நதி. அதில் ஆஷ்ரமம் ,ஜோதிடம்,அரசியல்

இந்த மூன்றிலும் உள்ள   தன்னலம்,பொருளாசை,பொன்னாசை ,பெண்ணாசை என்ற  கழிவுநீர் கால்வாய்கள் கலந்து  மாசுபடுத்துகின்றன.

இதை தடுக்கின்ற மாசுகட்டுவாரியங்கள் இந்து முன்னணி,பாரதீய ஜனதா தளம்.ராஷ்ட்ரீய  ஸ்வயம் சேவக் தல்.

ஹிந்து மத ஒற்றுமைக்காக பாடுபடும் பக்த சமாஜங்கள்.


ஹிந்து சக்தி ஒன்றுபடவேண்டும்.

ஹிந்துக்களுக்குள் பல்லாயிரக்கணக்காக வேரூன்றி இருக்கும் விருப்பு,வெறுப்பு,இன,ஜாதி பேதங்கள்  ஒழிக்கப்பபட்டு  ஒரே குரல்,ஒரே சமுதாயமாக விளங்கவேண்டும்.

அதற்கு  ஆலயங்கள்,அர்ச்சகர்கள்,புரோஹிதர்கள்,ஆஷ்ராமங்கள்

புனிதமாகவே இருக்கவேண்டும்.

அங்கு நடக்கும் தவறுகளை  கண்டு தக்க நடவடிக்கைகள்

எடுக்கவேண்டும்; இது நம் சனாதன தர்மத்திற்கு ஒரு வெற்றியைத்தரும்.

இந்த அரசியல்வாதிகள் மதம் என்ற ஆயுதத்தை மக்களை வேறுபடுத்தி

ஆதாயம் காண  பயன் படுத்துகின்றனர்.

ராமர் கோயில் நரசிம்மராவ் காலப்பிரச்சனை. அவர் காலமாகிவிட்டார்.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.   இன்னும் தீர்க்காமல் தேர்தல் நேரத்தில்

போராடுவது,மக்களை திசை திருப்புவது ,மிகவும் வேதனை அளிக்கிறது.

பெரியோர்களே!இளைஞர்களே!

இந்து மத ஒற்றுமைக்கு ஆக்க திட்ட செயல்வழிகளை உருவாக்குங்கள்.

அதை விடுத்து   பாதரக்ஷை அணிந்து கிரிவலம் வருதல் ,பக்தர்கள் அணியும் ஆடை விஷயத்தில் அக்கறைகாட்டி போராடாதீர்கள்.

கோவணத்திலிருந்த நாம் இன்று ஆடைகள் அணிகிறோம். அது ஒரு புற  பக்தி.

உள்ளத்தில் ஒன்றுபட்டு  இந்து மதத்தைக் காப்பாற்றுங்கள்.

கடவுளைப் படைத்தவன் முட்டாள்;காட்டுமிராண்டி என்பதை

சகிக்கும் நாம்  பாதரக்ஷை அணிந்து சென்ற நடிகை கொடும்பாவி எரிப்பது

ஆண்டவனை மகிழ்விக்கும் செயலாக இல்லை.மேலும் கிரிவலப்பாதையில்

பாதரக்ஷை அதாவது செருப்பு ,காலணி அது கட்டையாக/தோலாக நம் காலை கல் -முள்ளிலிருந்து காக்கிறது. அசுத்தத்தை மிதித்தாலும் காக்கிறது.

பாதரக்ஷை ஆட்சி செய்த நாட்டில் இந்த மாதிரியான  போராட்டம் சரி அல்ல.

அவ்வாறே விநாயகர் சிலை கடலில் எறிவதும்.

சிந்திப்பீர்! தவறு ஆஷ்ராமங்கள் செய்தால் உமா பாரதி போல் ஆதரிக்காதீர்கள்;

தவறுகள் ஒழிய  மதம் புனிதமாகும்.

இன்றைய சமுதாயம் சிந்திக்கத் துவங்கியுள்ளது.

கடல் கடந்தால் பாவம் என்ற சித்தாந்தம் மாறி வெளிநாடுகளில் நம் ஆலயங்கள்  கட்டப்பட்டு ,சௌகரியத்துக்குத் தக்க சாஸ்திரம் என்பதுபோல்
பூஜை அர்ச்சனை மலர்கள் மாறிவருகின்றகாலம்.

ஔவையார் பாடினார் ---ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று;
கபீர் பாடினார் -जाति न पूछो साधू की ,पूछ लीजिए ज्ञान ,
भारती पाडिनार --ஜாதிகள் இல்லையடி பாப்பா.

இந்துக்களே ஒன்றுபடுங்கள்!இறைவன் பெயரால் ஏமாற்றும் கூட்டத்தை ஒழியுங்கள்;

நாம் சக்தி பெறுவோம்; இல்லை எனில்  சிறுபான்மை பெரும்பான்மை பெரும்.
அந்த சிறுபான்மை ஓட்டில் தான் அரசு என்று அரசியல்வாதிகள்  ஒன்றுபடுகின்றன.

சிந்திப்பீர் ஹிந்து சகோதரர்களே.!முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு


ஒரு மஹா சக்தியை இந்த ௨௦௧௪ தேர்தலில் நிரூபியுங்கள்.

இது நம்மால் முடியும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!நம்மில் வேறுபட்டால் தாழ்வே.

வாழ்க  சனாதன தர்மம்!   வையகம் வாழ்க! வையகம் ஒரு குடும்பம்;

போதித்த மதம். வையகத்தில் சக்தி பெற போலிகளை ஒழிப்போம்;

வலிமை பெறுவோம்; வளம் பெறுவோம்.



THOUGHT FOR THE DAY

Date Thursday, 29 August 2013 ( As it appeared in Prasanthinilayam) 
THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S 
DIVINE MESSAGE 
Scriptures are only road-maps; at best they 
are guide-books that give directions for the 
destination. It is the actual journey that will 
reveal the hardships, the delays, the landslips, the potholes as well as the beauty of 
the scenic route on the way, and the 
magnificence of the destination. No 
secondhand account can equal the firsthand 
experience! The symbols on the map are 
interpreted differently by different scholars 
according to their preconceived notions, 
predilections and pet theories. If you acquire 
Love, then you can dispense with the 
Scriptures; for the purpose of all the Scriptures is just that: to create the feeling 
of Sarvajana samaana prema (equal love for all), and to negate egoism which stands 
in the way. Reason too, if it comes in the way of this love, is to be discarded as 
'perverted'. (Divine Discourse, April 12, 1959.)


தியாகராஜன் /குரு யயாதி குரு.

Tuesday, August 27, 2013

தீயென ஒழியட்டும். நல்லன வளரட்டும்


கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் பிறந்தநாள்.
அலைபாயுதே கண்ணா என்று வரன் பார்க்கவந்த நாள்  பாடும் மங்கைகள்.
ஆண்டாள்.மீராவின் நாயகன்,
கருமைநிறக்கண்ணன் ,

கலக்கம் தீர்ப்பவன்,
துஷ்ட சம்ஹாரன்,

சரணாகத வத்சலன்.
அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் 
ஹரே ராமா ,ஹரே கிருஷ்ணா என்று பரவச ஒலி  எழுப்ப 
தெருவுலா  வந்தவன்.
பார்த்தசாரதி,
ஏழை பங்காளன்,
நவநீத சோரன்.
பாமா -ருக்மணிப்ப்ரியன் 

தேவகி மைந்தன்,யசோதா வளர்ப்புமகன்.
விஸ்வரூபன்,வாமனரூபன்.

அவன் பிறந்தநாள்  
அவன் சரணடைந்து அவன் க்ருபா கடாக்ஷம் பெற பிரார்த்திப்போம்.
தீயென ஒழியட்டும். நல்லன வளரட்டும்.
கடமையைச் செய்வோம்.கண்ணன் பலன் தருவான்.
ஹரே  கிருஷ்ணா. ஹரே கிருஷ்ணா . ஹரே கிருஷ்ணா .
ஹரே ஹரே.
ஓம் சாந்தி! சாந்தி !சாந்திஹி!

Monday, August 26, 2013

ஒரே குரல் ஒலிக்காது ;ஒளிராது .காதலால் கசிந்துருகவேண்டும்.

இறைவனைப் பற்றிய   விஷயத்தில்  இந்துமதம் காட்டும் அக்கறை  எப்படி என்றால்  குதிரைப் பந்தயம் போன்றது. கிரிக்கட்டில்  மேட்ச் பிக்ஷிங்க் போன்றது.

என்று இந்த வாணிக நோக்கம்  முடியுமோ அன்றுதான்  சனாதன தர்மம்  ஒற்றுமை அடையும். இறைவனின்  கருணை கிட்டும்.

பரிசுத்தம் ,புனிதம் என்ற ஆஷ்ரமங்கள்  ஒரு வாணிக மையம்.


அந்த ஆஷ்ரமங்கள்   அனைத்துக்கும்  ஒளி - ஒலி  புகைப்படக் கருவி பொருத்தவேண்டும்  என்று சுவாமி நித்யானந்தா கூறி உள்ளார்.

வேலூர் பொற்கோவில் பற்றிய தவறான செய்திகள் உண்மை என்ற பத்திரிகையில்  வெளிவந்தன.


கோயிலுக்கு செல்பவர்கள் பக்தர்கள் அதிகமாக இருப்பதால் இறைவனை வழிபடுதல் 5 நிமிடம். அங்குள்ள ஈசல்  புற்று போல் உள்ள கடைகளில் கழிப்பதோ  பல மணி நேரங்கள்.

அருள் பெறுவது பொருள் உள்ளவர்களுக்கு துரிதம். அவர்கள் ஆர அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம்..

என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே.நானும் இறைவன் மேல் அதிகம்
பற்றுள்ளவன் தான். ஆனால் இறைவன் என்ற ஒரு அச்சத்தால் மக்களை ஏமாற்றும் ஒரு பெரும் கூட்டம்  இன்று பாரதம் முழுவதும் வியாபித்து இருக்கிறது.

இதனால்  நாட்டில் பல குற்றங்கள் நடைபெறுகிறது.

உத்தர்காண்ட்  நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்வே இவ்வளவு பாத்திப்பும்  சுயநல பாக்திவேஷம் போட்டு பல கட்டிடங்கள் வணிக நோக்கத்திற்காக கட்டப்பட்டதே.

பழனி எப்படிப்பட்ட சித்தர்கள் வாழ்ந்த வாழுகின்ற பூமி.

அங்கு  உண்மையான  சித்தர்கள் கந்தல் துணியுடன்  பைத்தியக்காரர்கள்
போன்று சுற்றுவர். அவர்கள் அந்தர்த்யானம் அடைந்ததும் அவர்களுக்கு ஆடம்பரம். ஆஷ்ரமம். இன்றும் ஒரு சாக்கடை சித்தர்.அவருக்கு ஒரு கூட்டம்.
கணக்கன்பட்டி யில் ஒரு சுருட்டு சாமியார். ஈஸ்வரபட்ட என்பவர். நாங்கள் ஒரு பைத்திக்கரர் போன்று விளக்குத் தூணுக்கு கீழ் உட்கார்ந்து சுற்றிக்கொண்டிருப்பார்.

நான் சிறுவனாக இருக்கும்போது கண்ணுசுவாமி  என்ற குருட்டு சுவாமிகள் திருஆவினன் குடியில் அமர்ந்து இருப்பார். அவரிடம் ஒரு சிறிய விபூதி டப்பா வெள்ளியில் இருக்கும்.ஒரு சிட்டிகை  எடுத்துக்கொடுப்பார். அந்த தெய்வீக
 மணம்   அவர்   இறைவனடி  சேர்ந்த பின்  யாரிடமும் கிடைக்கவில்லை.

இறைவனை தரிசித்த அனைத்து அருட்செல்வர்களும்  இறைவனைமட்டுமே

சரணடைந்து இருப்பர்..பொருளாசை கிடையாது.அருளாசியும் ,அருளாசையும்
மட்டும்தான்.

இன்றோ  ஆஷ்ராமசாமியார்கள்   சிலர் செய்யும்  சில்மிஷங்கள்  ,அவர்களுடைய சொத்துமதிப்பு,சிறை செல்வது,ஜாமீனில் வருவது,அவர்களின்  மீதுள்ள குற்றச்சாட்டுகளின் வழக்கு நடந்துகொண்டே இருப்பது,மக்கள் மறந்துவிடுவது,புதிய சாமியார்கள் குற்றம் புரிந்த செய்திகள் வருவது இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிடுகிறது.

   பழனி எப்படிப்பட்ட புண்ணியஸ்தலம். இன்று பேருந்தில் இறங்கியதும்
பால்   மணக்குது ,பழம்  மணக்குது என்பதுபோய் சிறுநீர்  நாற்றம்.
ஒரு குடம் தண்ணீர் 50 ரூபாய். லக்ஷக் கணக்கில் பக்தர்கள்.கோடிக்கணக்கில் வருமானம். கிரிவீதி முழுவதும் கடைகள்.

இது பொறாமையாலோ பலரின் தொழிலை  கெடுப்பதாகவோ நினைக்கவேண்டாம்.. இது இறைவன் பக்தியை  புனிதமற்றதாக்கிவிடும்.
இது பழனியில் மட்டும் அல்ல. அனைத்து பாரதப்  புண்ணிய   ஸ்தலங்களிலும்   இதே நிலைதான். காசி--- வேண்டாம்.


இறைவனை  அவமானப்படுத்தும் செயல்கள் ,இறைவன் பெயரால் ஏமாற்றும் செயல்கள், பிராயச்சித்தம் ,பரிகாரம் ஜோதிடம்  என்ற பெயரால் நள்ளிரவு பூஜைகள் என்ற பெயரால் நடக்கும் குற்றங்கள். இதை எல்லாம் தடுப்பதில் இந்து முன்னணி ஈடுபடவேண்டும். அதைவிடுத்து ஒரு நடிகை செருப்புப்போட்டு(பாத ரக்ஷை) நடந்தாள்  என்பதற்கான போராட்டம்  பைத்தியத்தன மானது.

இந்து மத ஒற்றுமை ,ஒரே குரலுக்கு  நாம் முயற்சிக்கவேண்டும்.


இதற்கு இறைவன் மேல்  உண்மையான பற்று,பாசம்,சிரத்தை ,அன்பு ,நேசம் ,
அனைத்தும்  ஆத்மார்த்தமாக  இருக்கவேண்டும்.

  பொருளாசையால்  நாம்  நம் தவறுகளை மறைத்தால் நமது  சனாதன தர்மம் என்ற பெரும் இந்து சாம்பராஜ்யம்  சிதைந்துவிடும்.

கிராமீய பக்திப்பாடல்களும் கர்நாடக பாக்திப்படல்களும் இணையும் வரை

இந்துமதத்தில் ஒரே குரல் ஒலிக்காது ;ஒளிராது ; காதலால் கசிந்துருகி
கண்ணீர் மல்கவேண்டும்.






Saturday, August 24, 2013

THOUGHT FOR THE DAY

Date  Sunday, 25 August 2013 ( As it appeared in Prasanthinilayam)

OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

THOUGHT FOR THE DAY

Develop attachment for the Lord, who will

always be with you wherever you go. Only the

years that you have lived with the Lord and for

the Lord, are to be counted as true living.

Developprema (divine love) towards

Him,  parama-prema (supreme love) of which

He is the embodiment. Never give room for

doubts and hesitations or questions to test the

Lord’s love. Do not entertain questions such as,

“Why have my troubles not ended? Does He

not love me enough? Why is He ignoring Me? Why is it that He did not speak to

me?” Never think that God does not care for you and that He does not know you.

God is full of selfless love and truly cares for you always. In fact every act of His, is

for your wellbeing!(Divine Discourse, Oct 10, 1964.)



சத்ய சாய்ராம் ஆன்மீகச் செய்திகள்

Practice renunciation from now on, so that you may 
set out on the journey when the call comes! No one 
knows when the call will come and there is no point
in being in tears at that moment remembering the 
property you accumulated, the fame you amassed or 
the titles you won! The eagle is pestered by the 
crows, so long as it has a fish in its beak. The crows 
swish past the eagle to steal the fish from its mouth. 
They pursue the bird wherever it sits for a little rest. 
At last, the eagle gives up the attachment to the fish 
and drops it from its beak; the crows fly after the fish and leave the eagle free. So 
too, when you give up sense pleasures, the crows of pride, envy, malice and hatred 
will fly away and leave you in peace.(Divine Discourse, Oct 10, 1964)

Friday, August 23, 2013

மெய்கண்ட இன்பம் அதில்தான்


மனிதனுக்கு  ஆன்மிகம் அமைதி தருவது,

இன்னல் வரும் போதுஇறைவனின் சோதனை ,

அவன் கருணை என்று சாதனை நோக்கி 

முன்னேற நம்பிக்கை தருவது.

இன்று ஆன்மிகம் வாணிகமாகி,

பொருள்  இருந்தால் அருள் கிட்டும் என்ற 

எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

பயணமுகவர்கள்,ஜோதிடர்கள் 

புனித யாத்திரையும் புண்ணியமும் பரிகாரமும் 

என்று  தங்கள் சந்தையை விரிவு படுத்தி,

பணம் சம்பாதிக்கின்றனர்.



ஆலயங்கள் அர்ச்சனை,தரிசனம்,அபிஷேகம்,அலங்காரம் 

என  கட்டணத்திற்கே முன்னுரிமை .

இதில் விரைவு தரிசனம்,முக்கியஸ்தர் தரிசனம்.

அங்கிங்கெனாதபடி பக்தர்களுக்கு  அருளும் இறைவனை

தன் பக்தியால் தன் முன் தோன்றச் செய்த இறைஅடியார்கள் 

வாழ்ந்த நாடு.

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசன் அவதரித்தநாடு.

பக்தர் வீட்டில் பணியாளாக பணியாற்றி அருள் புரிந்த கதை கொண்ட நாடு.

ராகவேந்திரர்,சீரடி ,ரமணர்,ஈஸ்வர பட்டார்,விசிறி சாமியார்,சுருட்டு சாமியார்,

புத்தர்,மகாவீரர் என்று பரதேசி கோலத்தில் இறைவனைக் கண்ட 

பக்தர்கள் கொண்ட நாடு.

இன்று ஆசாராம் போன்றவர்கள் ஆன்மிகம் என்ற பெயரால்

 கோடிகள் சேர்த்து  கேடிகளாக 

உன்னத சனாதன தர்மத்தை மாசு படுத்தி வருகின்றனர்.

பெரியார்  இதற்குத்தான் விழிப்புணர்ச்சி தேவை என்றார்.

கடவுளை யாரும் எளிதாகக் காணமுடியாது.

கடவுளின் கருணையை உணரமுடியும்.

அது தான் தூய்மையான பக்தி,அன்பு.

மெய்கண்ட இன்பம்.

  அதில்தான்  அருள் கிட்டும்.

வாழ்வின் பொருள் கிட்டு

ஆடம்பர பக்தி லௌகீகம். பொருள் சார்ந்த பொருளற்ற பக்தி.

உண்மையான அன்பு மீரா,ஆண்டாள்,அவ்வை போன்று 

தன்நலமற்ற பக்தி.

அதில்தான் மெய்யான இன்பம்.

அந்த அன்புதான் பண்பைக் கொடுக்கும்.

ஆண்டவன் என்று ஆராதிக்கும் கடவுளை 

மிகவும் மதிப்பளித்து ஆராதிக்கவேண்டும்.

இறைவனை இழிவுபடுத்தும் செயல் நமது 

சனாதன தர்மத்தில் இல்லை.

சிவபெருமானுக்கு கண் அளித்த கண்ணப்பர் 

கால் வைத்து கண்ணை அடையாளம் வைத்து

 தன் கண்ணை பதிய வைத்த பக்தி.

ஆலயம் மிகவும் புனிதம்.

அதைவிட புனிதம் தெய்வப் பதுமைகள்.

நாம் நமது ஒற்றுமை,பக்தி காட்ட எத்தனையோ

 வழிகள் இருக்கின்றன.

கூட்டுப் பிரார்த்தனைகள்.

சங்கீத உபன்யாசங்கள்.

கோவில் திருவிழாக்கள் .
உழவாரப் பணிகள்.
கோயில் குளங்கள் தூர்வாரல் 

ஆனால்  இந்த சுதந்திரப்போராட்டத்தில் 

நாட்டின் நன்மைக்காக ஆரம்பித்த விநாயகர் 

ஊர்வலம்  மிகவும் வேதனை அளிக்கும் அளவிற்கு 

இன்று வளர்ந்துள்ளது.

௧௦௦௦ ரூபாய் முதல் ௨௦,௦௦௦ வரை 

கடின உழைப்பில் உருவாகிய  பலவித உயரத்தில்.

அழகின் ஆராதனைக்கு  பயன் படுத்தி 

அதை கடலில் எரிந்து அவமானப்படுத்துவது 

கௌரவப்படுத்துவதாகுமா?

சாலைகள் இல்லை.
பள்ளிகளில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை.
அறிவுத்திறன் உள்ள மாணவர்களில் பலர் உயர் கல்விக்கு வசதி இல்லை.
எத்தனையோ நாட்டில் துயரங்கள்;துன்பங்கள்.

ஆனால் இந்த விநாயகர் சிலைகள் 

அழகை வர்ணிக்கமுடியா கலைஞனின் படைப்பு ;உழைப்பு. பொருள் முதலீடு.
லக்ஷக்கணக்கில் ரூபாய் .

பிறகு இதை கடலில் பழு தூக்கிவைத்து எறிவது 

அவமானப்படுத்துவது தானே?
இது ஆராதனையா?
பக்தியா? சிரத்தையா?ஒற்றுமை உணர்வா?
அன்றைய தினம் போக்குவரத்து இடையூறு.
ஒரு அச்சம். ஊர்வலத்தில் அடிதடி வரக்கூடாது.
அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது.
இதில் காவல்துறை ஆக்கப் பணிகளை விட்டுவிட்டு  இந்த சிலைகள் எங்கெல்லாம் உள்ளதோ.அங்கெல்லாம் இரவு-பகல் பாதுகாப்பு.

சில தினங்கள் கழித்துப் பார்த்தல் 

சமுத்திரக்கரையில்  மலத்துடன் சேர்ந்து அசிங்கப்படும் யானை முகம்,
கால்கைகள்,கைகள்,முண்டங்கள்.
இவ்வளவு அவமானம் உதாசீனம் ஆண்டவனை செய்வதில் ஆனந்தம்;பக்தி.

இந்த மன நிலையில் உள்ளவர்கள் 

கற்பழிப்பு என்றும் கொலை,கொள்ளை  என்று மனிதர்களை 
இழிவு படுத்துவதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.

ஆண்டவனை,முழுமுதற்கடவுள் யானை முகத்தோனை ,கந்தனுக்கு மூத்தோனை
எளியயோருக்கு  

அங்கிங்கென்று  ஆற்றங்கரையிலும் ,மரத்தடியிலும்  அருள் புரியும் ஆண்டவனுக்கே இந்த அலங்கோலம்  என்றால் 

மனது துடிக்கிறது.

மனிதனுக்கு பக்தியே இல்லையா?
இது ஒரு இழிசெயல் என்ற எண்ணமே இல்லையா?
நெஞ்சு பொறுக்கவில்லை,
முருகப்பெருமானே!
உன் அண்ணனுக்கு இப்படிப்பட்ட அவமானத்தைத் 
தடுக்க புறப்படு;
இதைத் தடுக்க ஞானம் கொடு.
மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்து.

இந்துக்களே இந்த இழிசெயலால் இந்துக்களை வெறுக்கும் படி செய்யாதே.
முருகா !இதற்கு ஒரு வழி செய்.
இதுதான் பகுத்தறிவு.
அது தான் அன்பு வழி
அந்த அன்புதான் பண்பைக் கொடுக்கும்..

Wednesday, August 21, 2013

அந்த அன்பு ஒருபுதிராகவே உள்ளது. ஒரு ஐயமும் ஏற்படுகிறது.

இந்துமதம்  என்று மாறிய பின் 

சனாதன தர்மம் என்ற காலத்திற்கும் 

இந்துமதம்  என்ற பெயர் 

ஒழுக்கம் இன்மை  சில சுயநல வாதிகளால் ஏற்படுகிறது.

பல போலிகள்  மனிதர்களின்  இறை நம்பிக்கையை 

தான் தான் இறைவனின் அவதாரம் என்றும் 

இறைவனுக்கான அபிஷேகங்கள் ,அலங்காரங்கள் 

மலர் மாலைகள் அணிந்தும்  ஏமாற்று கின்றனர்.

இவர்கள் வேடம் களையும் பொது 

இவர்களிடம் சேர்ந்த பொன்னும் பொருளும் 

தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறது.

சிலர் தண்டனையும் பெறுகின்றனர்.

பெரம்பூர்  ஜோதிடர் .

ஆனால் இவர்களிடம் எதோ ஒரு சக்தி ,

மயக்கும் வார்த்தைகள் 

ஆரம்பகாலத்தில் மக்களை ஈர்க்கின்றன.

ஆனால் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள்,
கிலோ கணக்கில் தங்கம் ,வெள்ளி ,வைரம் இவை எப்படி சேருகின்றன>

ஆடம்பர அரியணைகள்,
ஆஷ்ரமங்கள் 
பக்தர்கள் கூட்டம் 
இது ஒரு அபூர்வம்.

அவர்கள் தவறு செய்தாலும் 
அது பொறாமையால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் 

உருவாக்கப்பட்ட  குற்றச்சாட்டு என்று கூறும் ஒரு கூட்டமும்  இருக்கிறது.

இன்று ஆசாராம் பாபு என்ற ஆடம்பர ஆஷ்ரம சாமியார் தனது  அறுபதாவது அகவையில்  சிக்கியுள்ளார்.
ஹிந்தி செய்திதாளில்  அவரை எதிர்த்து கண்டனக்கணைகளை 
வாசகர் அளித்தாலும்  அவரை ஆதரித்து குறைந்த எண்ணிக்கையில் .

சிலர் செய்த்திதாள்கள் ஹிந்து மதத்தை களங்கப்படுத்தவே  இத்தகைய செய்திகள்  என்கின்றனர்.
நான் ஒரு முறை கல்கி ஆஷ்ரமம் சென்றேன்.

அவரது நேரடி தர்சனம் காண கட்டணம் பத்தாயிரம் ரூபாய்.
அவரைது தீக்ஷை பெற்று இறைவனை நேரடியாகக் காண 
ரூபாய் ௬௦௦௦/-
இதற்கு ஏறும் வரிசை.
அவ்வாறே பல ஆஷ்ரமங்கள்.
ஆலயங்கள்.

இதுதான் இந்துமதச் சிறப்பு.

இந்த மாதிரியான மூட பக்தி /குருட்டு பக்தி 
எப்படி மக்களுக்கு ஏற்படு கிறது.
இக்கூட்டத்தில் படித்தவர்கள்,நீதிபதிகள்,அரசியல் தலைவர்கள்,
பின்னணிப் பாடகர்கள் ,மருத்துவர்கள் எழுத்தாளர்கள் 
பணம் படைத்தோர் ,வெளிநாட்டவர் என்று  அனைவரையும் திகைக்க வைக்கிறது.
அந்த திகைப்பு தீர்வதற்குள் பெண்கள் கூட்டம்.
நல்லவரோ ,கெட்டவரோ  சாமிகளை விமரிசனம் செய்தால் 
பாவம் வரும் என்ற பயம்.

சுருக்கமாக  சொன்னால்  ஆஷ்ரமத்தில் ஆஸ்தி உள்ளோர் சங்கமம்.

பிரேமானந்தாவை சிறையில் கூட வந்து பார்த்துச் சென்ற அமைச்சர்களும் அடங்குவர்.

எல்லாமே ஒரு புதிர்.இதற்கு நீதி /அநீதி என்பதை 
ஒரு மூடநம்பிக்கை/குருட்டு நம்பிக்கை மறைக்கிறது.

இறைவனைக்கண்ட ,வால்மீகி,துளசிதாசர்,பக்த  தியாகராஜர்,புரந்தரதாசர் இவ்வாறு ஆடம்பர வாழ்க்கையில் இறைவனைக் காணவில்லை.
அருணகிரிநாதரும்,பாம்பன் சுவாமிகளும் .பழனியில் இன்று அழகான ஆஷ்ரமம் சமாதியில் இருக்கும் ஈஸ்வரபட்டா மேலும் பல பஞ்சப் பரதேசி சித்தர்கள் இறைவனை வழிபட்டு வழிகாட்டி உள்ளனர்.
இருந்தும் ஆஷ்ரமக் கூட்டம் .பணம் கூட்டும் பூமி.
இதைத்தான் கூரையைப் பிய்த்துக் கொட்டும் என்கிறார்களோ.

அந்த அன்பு  ஒருபுதிராகவே உள்ளது.
ஒரு ஐயமும் ஏற்படுகிறது.

THOUGHT FOR THE DAY

THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE 
All the effort and investment you expend in pursuing the 
scriptures and noble thoughts are a sheer waste, if study 
and reflection do not help you to recognize that the mind 
is worse than a drunken monkey. Pilgrimages are for
elevating the heart, sublimating the impulses and 
leading the lower self to higher levels of thought and 
action. Reason serves the same purpose, or at least, it 
ought to. Reason seeks to know the unity of the universe, 
the origin and the goal of all of it. Through reason, you 
should understand the laws that govern the microcosm 
(anu) and the macrocosm (Bruhath). It peeps behind the 
ever receding curtain to get a glimpse of the Puppeteer 
(Suthradhari) who pulls the strings.(Divine Discourse, Apr 
12, 1959.)

Monday, August 19, 2013

OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

Date  Monday, 19 August 2013 ( As it appeared in Prasanthinilayam)

THOUGHT FOR THE DAY

OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

When some of you visit a temple or a holy shrine,

even as you participate in the worship, your

thoughts are about the safety of your footwear

that you left outside. You will not get joy or

liberation by merely going to a holy place. You will

not get the joy even

through  darshan,  sparshan and  sambhashan -

seeing Him, touching Him and conversing with

Him. You must follow the prescription and act in

accordance with the Divine Directions. Earnestly

and enthusiastically, take the path shown by the

great devotees of the Lord. You must feel

inseparable affinity with the Lord, just as the wave

is inseparable from the sea. Butter is imminent in

milk and is invisible. So too, Divinity is present in

every being and will manifest from within.(Divine Discourse, Oct 10, 1964.)
***************************************************************************************

कबीर:
माला तो कर में फिरै ,जीभ फिरे मुंह  माही ,
मनुवा तो दस दिशी फिरै , यह तो सुमिरन

கையில் ஜபமாலை  சுற்றிக்கொண்டு இருக்கிறது. நாக்கு இறைவனை ஜபிக்கிறது.
மனம் பத்து திக்குகளிலும் சுற்றுகிறது. இது இறைவனை ஜபிப்பதல்ல.
மனதில் இறைவன் இருக்கவேண்டும் .


Wednesday, August 14, 2013

அந்த அன்புதான் நமக்கு நிலைத்த மன நிறைவையும் அன்பையும் தருவன.

 ஆன்மிகம்  என்பது  மனிதனை நெறிப்படுத்த ஏற்பட்டது.

ஆன்மிகம் எப்பொழுது எப்படித் தோன்றியது என்பதற்கும் 

மனிதன் எப்படித் தோன்றினான் என்பதற்கும் விடை தெரியாது.

ஆனால் அனைவருக்கும் தெரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய 

நிலைத்த தத்துவம் ஆன்மிகம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உடனடி பலன் அளித்தாலும் 

அதில் பல மாற்றங்கள் புறத்தேயும் அகத்தேயும்  ஏற்படுகின்றன.

அறிவியல் மாற்றங்கள் ,வசதிகள்,கண்டுபிடிப்புகள் 

அனைத்துப் பயன்களையும் அவனியில் உள்ள அனைவரும் 

உடனடியாக அனுபவிக்க முடியுமா ? என்றால் முடியாது.

காரணம்  அன்டவசதிகள் எல்லாம் அனுபவிக்க முதலில் தேவைப்படுவது பணம்.

எனக்கு உலக அதிசயங்கள் எல்லாம் பார்க்க ஆசை. 

எளிய பயணத்திற்கு விமானம்;

தங்குவதற்கு வசதியான விடுதிகள்.

விளம்பரங்கள் பார்க்கும் போது  மனம் துடிக்கிறது.

ஆனால்  செல்ல பொருளாதார வசதிகள் தேவை.

முயற்சிக்கிறேன். பணம் சேர்க்கவேண்டும்.

அதற்குள்  கடன்வாங்கிச் செல்லலாம் என்றால் அதற்கு ஒரு 

சாட்சிக் கை எழுத்துப்போட  ஒரு நண்பர்வேண்டும்.

கடவுச் சீட்டு,விசா வாங்க வேண்டும்.

அனைத்தும் செய்தபின் புறப்பட்டு விமானத்தில் ஏறி அமரும் வரை ஒரு 

மன அழுத்தம்  இருக்கத்தான் செய்தது.

இதற்குள்  செய்த்திதால்கள்,நண்பர்கள் மூலம்  பல அச்சுறுத்தல்கள்.

விமானக்கடத்தல். எஞ்சினில் கோளாறு,இறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் கோளாறு,பனிமூட்டம்   எத்தனையோ அத்தனையும் கண் முன் வந்து செல்லும்.
பிறகு உணவுப்பிரச்சனைகள்.

பயணம் முடிந்து திரும்பும் வரை அனைத்தும் நல்லமுறையில் நடக்கவேண்டும்.

எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கக் கூடாது.


இந்த நேரத்தில் தான் அம்மா,பாட்டி,நண்பர்கள் அனைவரும் அவனை நினைவு படுத்தினர்.

யாரை ? நான் நேரில் காணாதவனை; அவனை  உலகியல் பார்வையில் என்னால்  நம்ப முடியாதவனை.

ஆம் .  அவன்தான் கடவுள்.

அவன் மீது அன்பு,பக்தி எல்லாம் எப்படியோ அனைவரிடத்திலும் வந்துவிடுகிறது.

கற்பனையில் ஏற்படும் பயம்,இயற்கை ஏற்படுத்தும் பயம்,

உடல் உபாதைகள், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் 

அவனை ஆண்டவனை சரணடைந்தால்  அச்சமில்லை என்ற 

உணர்வு. 

என்னையும் அறியாமல் என் பெற்றோர் ,நண்பர்கள் வழிக்காட்டிய 

முருகா,ராமா,கிருஷ்ணா,சிவா, அல்லா,ஏசு ஏதோ  ஒன்றால் 

நமது உலகியல் அச்சம் நீங்க  காட்டிய அறநெறி ஆன்மீக நெறி 

ஒருவகை துணிச்சலைத் தருகிறது.

அது இறையன்பாக மாறி நமது சிந்தனையைத் தெளிய வைக்கிறது.

நமது எண்ணங்களை நேர்வளிப்படுத்துகிறது.

வாய்மைக்கு அடிகோலிடுகிறது.

அன்புக்கும்,கருணைக்கும்,பரோபகாரத்திற்கும் ,தானத்திற்கும் ,தர்மத்திற்கும் 

வழிகாட்டுகிறது.

அந்த ஆன்மீக நெறிகள் காலத்தால் மாறாதன.

அதுதான் இறைப்பற்று; பக்தி,சிரத்தை.

அந்த அன்புதான் நமக்கு நிலைத்த மன நிறைவையும் அன்பையும் தருவன.

ஆண்டவன் மேல் அன்பு வையுங்கள். அவனியில் அமைதி பெறுங்கள். 

Sunday, August 11, 2013

அந்த ஆனந்தம் அன்பில் கிட்டும்.

மனிதர்கள்  இறைவனைப்படைத்தனர்  என்கின்றனர்.
மனிதனைப்ப்டைத்தவன்  யார்?என்ற வினா எழும்போது

விடை  கிடைப்பது அரிதா ,எளிதா?

இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும் ,அதன் வாழ்க்கைமுறையையும்

முடிவையும் நாம்  பார்க்கும் போது மனிதனின்  வியப்பு ,அதன் விளைவாக

இயற்கையை வழிபட ஆரம்பித்தது  என்ற சிந்தனை அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரலாற்றைப்  புறட்டும்  போது பழைய ,புதிய கற்காலம்  பற்றி படிக்கிறோம்.

அந்த மக்கள்  விலங்குகள்போல வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.

விலங்குகள் போன்று வாழ்ந்த மனிதர்கள்,அறிவைப்பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய காலம் எப்படி வந்தது.
அந்த மக்கள் ஆரம்ப காலத்தில் சத்தியம் /வாய்மை ஒன்றே தானே அறிந்திருக்க முடியும்.எப்படி பொய் என்ற உணர்வு வந்தது.

மனிதனின்  நிற வேறுபாட்டாலா? உருவ மாறுபாட்டாலா?ரூப/அரூப

மாறு பாட்டாலா ? நாட்டிற்கு நாடு வேறு படும் தட்பவெட்ப நிலையாலா?

புரியாத ஒரு மந்தணம்.

அடுத்து  மொழிகள்.எத்தனை ?அவைகளின் வளர்ச்சி. எப்படி மொழிகள் உண்டானது  என்பதில்  divine theory  முதலில் வருகிறது. தெய்வக் கோட்பாடு.

இறைவனுக்கு முன் அனைவரும் சமம் .இறைவனுக்கு என்று ஒருமொழி

இருக்கவேண்டும். அப்படி எனில் அதை அனைவரும் அறிந்திருக்கவேண்டும்.

அப்படி இறைவனை வழிபட உலகம் முழுவதும் ஒரே மொழி கிடையாது.
இறைவனைப் பற்றி அறிய  ஒரே நூல் கிடையாது,

இறைவனைப் பற்றிய ஒரே மதம் கிடையாது.

சில நாடுகளில் இறைவனைப்பற்றிய உணர்வே இல்லை.

எத்தனையோ ஆதிவாசிகள் இன்னும் விலங்குகளைப்போல வாழ்ந்து வருகின்ற செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.


ஆயுட்காலம் விலங்குகளுக்கு விலங்கு மாறுபடுகிறது.

மனிதர்களின் ஆயுட்காலம் ௧௦௦ ஆண்டுகள். அதிசயமாக ௧௨௦-௧௩௦ ஆண்டுகள் வாழ்கின்றனர்.


இந்த நிர்ணயித்த அதிகபட்ச ஆண்டுகள். இதில் அல்ப ஆயுளில்  நோய்வாய்ப்பட்டோ, விபத்திலோ,தற்கொலை ,கொலை செய்யப்பட்டோ இறப்பவர்களும் உள்ளனர்.


 பிறகு அறிவுத்திறனில் எவ்வளவு வேறுபாடு?

சமுதாய அமைப்பில் ,நிர்வாக அமைப்பில்,ஒருவரை ஒருவர் அறிந்து வணக்கம்  சொல்லும் முறையில் எவ்வளவு வேறுபாடு.

 வேறுபாடு.வேறுபாடு ,வேறுபாடு? எதில்தான் இல்லை.
உணவு,உடைகளில் வேறுபாடு.

    இத்தனை வேறுபாடுகள் காணப்பட்டாலும்  மனிதனை மனிதனாக்கி

மனித நேயத்துடன்  வாழ வைப்பது  மகிழ்ச்சியும், சோகமும்.

மகிழ்ச்சியில் ஒன்றுபடவில்லை. துன்பத்திலும் ஒன்றுபடவில்லை.

ஒருவர் மற்றொருவரின் வீழ்ச்சியில்,துன்பத்தில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இதையும் கடந்து மனித இனத்தை இணைப்பது எது.?

இயற்கை சீற்றங்களும்,எதிர்பாராத விபத்துக்களும்.

அதற்குக் காரணம் மனித நேயம்.

மிருகங்கள்  இறக்கின்றன. நமக்கு வருத்தம் ஏற்படுவதில்லை.

ஜப்பானில் பூகம்பம். பலர் இறக்கின்றனர். நாம் நம்மையும் அறியாமல் மன வேதனைப் படுகின்றோம்.

சைனா,பாகிஸ்தான் நம் அண்டைநாடுகள். எதிரிகள். ஆனால் அங்கு சுனாமியால் இறக்கின்றனர். என்றால் வேதனைப்பட்கின்றோம்.

மனித உணர்வு  ஒரு இரக்கம்.கருணை. தயை, அன்பு.  இந்த அன்பு இல்லை எனில்,இந்த சஹானுபூதி  இல்லை எனில்
பல விலங்கினங்கள் அழிந்தது போல் மனித இனம் அழிந்திருக்கும்.
எத்தனையோ பழங்குடிகள் அழிந்துவிட்டன.

அனால் ,நாகரீகமுள்ள மனித குணமுள்ள இனங்கள் அழியவில்லை.

மனித இனத்திற்குப் பொதுவான எண்ணங்கள் அன்பு,இறக்கம்,உதவும் பண்பு.
அஹிம்சை.

எனவே  அன்பே ஆண்டவன்.

மனித அன்பு  மற்றவர்களுக்கு உதவும். துன்பத்தில் உதவுபவன் இறைவன்.

அன்பு மேலோங்க அறம் வளரும் .அறம் வளர ஆத்ம சந்தோஷம்.

ஆத்ம திருப்தி பிரம்மானந்தம். அந்த ஆனந்தம் அன்பில் கிட்டும்.

அன்பே ஆண்டவன் .



Saturday, August 10, 2013

அன்பு என்ற கருவூலத்தை விட்டுவிடாதீர்கள்.

Date Saturday, 10 August 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Become like the flute, a hollow reed, straight, light, with no
substance to hinder His breath. Then He will come and pick you
up and breathe divine music through you, playing upon you with
a delicate touch. In His hand the infinitesimal will be transmuted
into the Infinite. Intensify the love that is present within you. It is
a sacred gift. Expand your love so that all beings can share in it.
Your love must be such that if someone around you is sad, you
feel sad and if they are happy, you feel that happiness. Have your
love fixed and devoted on the Lord, whether your petty wishes
get fulfilled or not. Never let go, under any circumstances, this
precious treasure - your Love for God.(Divine Discourse, Oct 9,
1964.)

இறைவனது மூச்சுக்காற்றிற்கு  எந்தவித தடையும் இல்லாத ஒரு புல்லாங்குழல்  போல் ஆகிவிடுங்கள். அதன் பிறகு ,இறைவனே வந்து உங்களை எடுத்து ,தனது  நளினமான கரங்களால் அவனது தெய்வீக இசையை  உங்கள் மூலம் இசைத்திடுவான்.அவனது கரத்தில் அணுஅளவு இருப்பது கூட அண்டசராசர அளவாக உருவாகிவிடும்.உங்களுக்குள்ளேயே இருக்கும்
அன்பை தீவீரமாக்கிக்  கொள்ளுங்கள்.அது ஒரு புனிதமான பரிசு.உங்களது அன்பை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு விரிவு
படுத்திக் கொள்ளுங்கள்.உங்களது அன்பு எப்படி இருக்கவேண்டும் என்றால்
உங்கள் அருகில் ஒருவர் துன்பப்படும்போது நீங்களும் துன்பப்படவேண்டும்.அவர்கள் மகிழும் பொது நீங்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.உங்களது அற்ப ஆசைகள் நிறைவேறினாலும் ,நிறைவேறாவிட்டாலும் உங்கள் அன்பு ,பக்தி  இறைவனிடத்தில் நிலைத்து இருக்கட்டும். எச்சூழ்நிலையிலும் இந்த விலைமதிக்க முடியாத கடவுள் மேல் அன்பு என்ற கருவூலத்தை  விட்டுவிடாதீர்கள்.

அன்பே கடவுள்.

(message forwarded by shri குருயயாதி குரு.)

Friday, August 9, 2013

அது முதுமையின் இலக்கணம் என்பதா?

இறைவன் மேல் அகப் பற்று
குழந்தைப்பருவத்தில் இருந்தே
 ஏற்படுத்தவேண்டும். ஆனால்,

அது  முதியோருக்கான சிந்தனையாக

மாற்றப் பட்டுவிட்டது.காரணம்,

புரியவில்லை.

இறைவன், ஆன்மிகம் என்பது

நல்ல ஒரு பண்பை,அன்பை,ஒழுக்கத்தை,மன ஒருமைப்பாட்டை

உண்டாக்குவது.ஒவ்வொரு இறைவழிபாட்டுப் பாடல்கள்,சுலோகங்கள்

ஒரு அதிர்வலை கொடுத்து மனித  மனதில் உயர்வான எண்ணங்கள்

ஏற்படுத்துவது.

இன்றைய தலைமுறை திரைப் படப் பாடல்கள் தான் பாடுகின்றன;

அதில்  காதல் என்ற ஒரு கதைக் கரு தவிர வேறு இல்லை.

காதல்,பெற்றோரை இழிவு படுத்துதல்,ஆசிரியரை இழிவு படுத்துதல்,

காவல் துறை  பாதுகாப்புத் தரும் என்பதை விட அபாயமானது என்பதை அதிக வெளிச்சம் போட்டுக் காட்டுதல்,

காதல் நிறைவேறாது என்ற நிலையில் கையை அறுத்தல்,தற்கொலை,பெற்றோர்கள் தற்கொலை செய்வேன்  என்று மிரட்டுதல், காதல் போராட்டங்கள்,திருமணம் அன்று காதலுடன் ஓடுதல்,

வாழ்வில் பெற்றோர்களா?கட்டுப்பாடா?காதலா?என்பதில்

காதலுக்கு மகத்துவம் அளித்தல், குறுக்குவழியில்  பணம் சேர்த்தல்
 இவைகளே கதைக்கரு.

ஆன்மிகம் என்பதற்கும் ,இவ்வாறான சமுதயப்போக்கிற்கும் உள்ள விளைவு?

இன்று தவறான காதலால் கலங்கி கண்ணீர் விடும் அவலம்.

சற்றே சிந்தியுங்கள்.

ஆன்மிகம்  ஒழுக்கமா? ஆண்டவன் மீது காதல் சிறந்ததா?
அது முதுமையின் இலக்கணம் என்பதா?
சற்றே சிந்தியுங்கள்.
உயர்  எண்ணங்கள்  ஏற்படுத்த,வாழ்க்கை சீராக  அமைய,

ஆன்மிகம் என்பது குழந்தைப் பருவம்,இளமை ,முதுமை மூன்றுக்கும் அவசியம்.

Thursday, August 8, 2013

THOUGHT FOR THE DAY

Date Thursday, 08 August 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Picture this inward journey as walking through
a four storied building to get to the top – the
ground floor being the union with God through
action (Karma Yoga), and the other floors being
Devotion, Wisdom and Detachment (Bhakthi,
Jnana andVairagya). When it is just a nascent
fruit, it is karma. That is, all are capable of the
activity, and so it is the first step in spirituality
as well. When it matures and is rendered free
from egoism and greed, it becomes worship,
and so, it leads one onto the second
floor, Bhakthi. When it is ripe and sweet, that is
to say, when the devotee achieves complete
self-surrender, then it is the acquisition of Jnana (Wisdom). When the fruit drops
from the tree, it marks full detachment (Vairagya); the fourth floor of God's
mansion is then reached.(Divine Discourse, Oct 9, 1964)

உங்கள் உள்நோக்கிச் செல்லும் பயணத்தை நான்கு மாடிக் கட்டிடத்தில் ஏறுவதாக உருவகப் படுத்திப் பாருங்கள்.தரைத் தளம் கர்மயோகத்தைப் போன்றது.அது இறைவனுடன் நம்மை சேர்ப்பது.மற்ற மூன்று தளங்களும்
பக்தி,ஞானம்,வைராக்கியம் முதலியவை.அது காயான நிலையில் கர்மாவைப்  போன்றது,(பழுக்காத நிலை)அதை அனைவரும் செயல்படுத்த முடியும்.எனவே ,அதுதான் ஆன்மீகத்தின் முதல் படி.அது பக்குவமாகி
ஆணவம்,பேராசையிலிருந்து விடுபட்டால் அது பக்தியை நோக்கி அழைத்துச் செல்லும் இரண்டாவது படி.அது இனிய பழமாகும் போது ,பக்தனை இறைவனிடம்  முற்றிலும் சரணடையச் செய்கிறது.அது ஞான நிலையை அடைகிறது.அது பழுத்து மரத்தில் இருந்து உதிரும் போதுவைராக்கிய நிலையை அடைகிறது.அது தான் நான்காவது மாடி யான இறைவனை
அடையச் செய்கிறது.

தியாகராஜன் சீதாராமன் அனுப்பி குரு அயாதி குருவால் எனக்கு அனுப்பப் பட்டது.
சாய் ராம்.

Wednesday, August 7, 2013

THOUGHT FOR THE DAY


THOUGHT FOR THE DAY



UR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
For the wisdom of discrimination to dawn on
people, elders must first set an example in
discrimination and detachment. If they run
after sensory pleasures with feverish
excitement, how can the youth be blamed for
their selfishness and greed? The elders must
practise what they preach, show how a divine
life confers mental poise, joy, contentment and
harmony. They must spend at least some time
everyday in the recital of the Lord’s Name or on
Meditation. Then, children too, will imbibe that
atmosphere and acquire peace for sure. Today,
many speak with full passion that there is
nothing as sweet as the Name of the Lord, but they do not repeat it at all. Children
will easily discover the hoax, if one neglects their own spiritual progress on the path,
but preaches it. The accountability of those who profess the spiritual path is great
and must not be undermined.(Divine Discourse, Dec 14, 1958)

forwarded  by  त्यागाराजन सीता रामन.

Tuesday, August 6, 2013

Divine Discourse,

 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
 ‘Samskrithi’, the Sanskrit word for culture, is
derived from the root word ‘Samskara’ which
means the dual process of removing dust and
dirt, and planting the virtues of Truth, Right
Conduct, Love, Non-violence and Love. Certain
obligatory rites of initiation and purification
prescribed by the Vedas for one’s spiritual
upliftment, are also referred to as Samskaras.
There are 48 such, but all of them can be
reduced to just one, which is the final and
fulfilling one - recognition of one’s identity with
the Divine. Man (Nara) is God (Narayana). The
individual entity (Jiva) is Divinity (Brahman)
seen through the limitations of primal ignorance.(Divine Discourse, Oct 9, 1964.)

அதில் தான் இந்துமதம் உயர்கிறது.

சனாதன தர்மத்தில்  தெய்வங்கள் எண்ணிக்கை அதிகம் என்ற
 எண்ணம் ஹிந்துக்களுக்கே  ஒரு வியபைத்  தருவது.

பிரத்யங்கரா தேவி  ,பத்ரகாளி ,நரசிம்ஹன் ,அகோர பத்ரர் ,வீரபத்திரர்,

நடராஜர் ருத்ர  தாண்டவ மூர்த்தி, இதெல்லாம் கற்பனைக்கு  அப்பாற்பட்டது.

இதெல்லாம் பார்த்தால் ,துஷ்ட தீய எண்ணங்கள் ,பொய் பேசுதல்,நீதிக்கு நேர்மைக்கு புறம்பாக நடத்தல் போன்றவை  குறையும் .இதை moral  fear  என்பர்.

இத்தனை  இருப்பதாலும்  ஆன்மீக பயத்தாலும் இன்னும் நாட்டில் தானமும் ,
தர்மமும் ,நேர்மையும் நிலைத்து இருக்கின்றன.

புராண காலத்தில் இருந்தே அசுர சக்திக்கு சக்தி அதிகம்.

எத்தனை அசுரர் கதைகள்.அதை அழிக்க .ஆண்டவனின் எத்தனை வகையான
அவதாரங்கள்.
மஹிஷாசுர வர்த்தினி ,அந்த ஸ்தோத்திரம்,பகாசுரன்,பஸ்மாசூரன்,ஹிரண்யன்,இராவணன்  அனைவருமே வரம் பெற்ற  தவம் புரிந்து தேவலோகத்தையே கலக்கியவர்கள்.

குடல் உருவி வீணை மீட்டிய  வேத விற்பன்னன் இராவணன்.வேதம் பயின்றவன். வீரமிக்கவன்.பெண்ணாசை. அவனை அழிக்க  ராமாவதாரம்.

அந்த ராமனின் கதையில் எத்தனை இன்றைய கருத்துக்கள்.

ஜாதி வேறுபாடுகள் அழிய சபரி,குகன்  போன்ற பாத்திரங்கள்.
வட ,தென் இந்திய ஒற்றுமை.

இலக்கிய பரிமாற்றம்.

தமிழ் இலக்கணம் . குறுமுனி அகஸ்தியர் ,வடக்கில் இருந்து வந்தவர்.

தமிழ் தெய்வம் முருகன் கைலாயத்தில் இருந்து வந்தவர்.

 இந்த உருவ வழிபாடு எளியது. சத்தியத்தை போதிப்பது. அநீதியை எதிர்ப்பது.

ஒரு பக்தியும் சக்தியும் தருவது.

கிராமதேவதைகள் அய்யனார்.கருப்பண  சாமி.அம்மன்கள் ,அந்த மக்களுக்கு

பாதுகாப்புத் தர,நோய்கள் நீக்க, நேர்மை சத்தியம் தவறினால் மழைவராது.

எத்தனையோ ஆன் மிக  நேர் வழிகாட்டல்.

இந்த உருவ வழிபாடுகள்  நேர்மை ,சத்தியம்,தர்மம் தானத்திற்கு  வழிகாட்டி.

5000 ஆண்டுகளுக்கு மேலாக  இந்த உருவ வழிபாடு நாட்டை நேர் வழி

நடத்தி அதர்மத்தில் இருந்து காத்து வருகிறது.

அதில் தான் இந்துமதம் உயர்கிறது.







.


Sunday, August 4, 2013

Do Hindus Worship Idols?











A Hindu Primerby
Copyright © 2007 Sanskrit Religions Institute
All rights reserved.

Do Hindus Worship Idols? 

Deity Image
Sacred Images
The answer to this question is most certainly yes! Hindus do worship idols, but so do Christians, Jews and even Muslims. In fact, it is impossible to conceive of God without some form of idol, for idol worship is the way of religion. Let me explain.
In Hinduism there are many words to describe the nature of God, and we will refer to them as the need arises, but in this regard, the most relevant word is acintya, which means "inconceivable," "beyond thought." The true nature of God is, therefore, beyond the ability of human beings to understand, yet we have a need to reach out in our mind and try to conceive of God, so we create an image of God in our minds. This mental image of God is an idol. Most people, including Hindus, think of an idol solely as a graven or carved image and, while this is true, an idol is a carved image, it is also a form that begins in the mind. It is a mental form. Consequently, mental forms are also idols.
The Image of Father
Christian Image
God as Father
With this in mind, perhaps the most common mental images that human beings use to conceive of God is as a Father, a King or a Mother. The idea of a father, a king or a mother is, therefore, a mental idol, a tool we use, to conceive of what is actually inconceivable, beyond thought. Convert that mental idol into a wooden or stone image and you have created a graven idol. From a Hindu perspective there is little difference between a mental idol and physical idol. One is just an extension of the other. And so, if you conceive of God as the supreme Father, or as the King of kings, or the divine Mother, you have created an idol, a material image with which to approach God. Human beings have no choice other than to approach God through these idols, even though all idols are simply crude and limited approximations of what God is in reality. Of all religions Hinduism seems the most adept at converting mental idols into physical form as graven idols, or what we prefer to call, sacred images. In fact, we generally teach our students not to use the word idol at all because it gives the wrong impression amongst many non Hindus. Indeed, Hindu temples are full of such sacred images of God and Hindus have special ways to install and interact with these images in their temples and homes, and in most cases these images are viewed, not as material images, but as spiritual forms. This is the result of seeing through faith.
Which Image?
Idols 
Baby Krishna: God as a Child
Another Sanskrit word that describes the nature of God and which comes into play in regard to idols is sarva-gata, which means literally "gone everywhere." In other words,sarva-gata refers to the all pervading nature of God. God is in all things and in all places. In fact, you are sitting or standing on God right now, which means, technically speaking, you could worship the floor or chair or anything as an idol of God. This, however, is generally not done. Instead, Hindus worship specific images that are described in scripture(shastra). The technical name for these sacred images of God is arcya-vigrahaArcyameans 'worship-able' and vigraha means "form" and so arcya-vigraha is the "form to be worshipped." We can also say that God agrees to appear in these special forms that can be understood by human beings in order to allow Himself to be worshipped. A more common term that is used instead of arcya-vigraha is murti. It simply means divine form. These sacred images that you find in Hindu temples and homes are installed according to specific rituals also described in scripture (See Prana Pratishtha). How Hindus perceive of these images varies according to adhikara, but one simple way is to see these sacred images as "mail boxes." Devotees come to a temple bringing fruits and flowers and all their prayers and hopes and stand before the sacred image and "post" their offerings and prayers through the sacred image. The worshippers are not bowing down to stone, they are not worshipping a statue; they are approaching these sacred images as the means to get to the God behind the image. In a similar way, a Christian may kneell before a crucifix of Jesus and pray. The worshipper is not worshipping the wooden cross, but instead he is approaching his object of devotion, Jesus, through the manifestation of the crucifix. This is a form of idol worship from a Hindu perspective. Even a Muslim, who will never worship any form, cannot help but have some abstract mental image or concept of God. This too is an idol of God, albeit an abstract mental idol. It can not be helped. This is what I mean when I say there is no way to conceive of and worship God except through some form of idol worship.
Language as an Idol
Closely related to these ideas of idol worship is the use of human language to express our understanding of God. The very words acintya or sarva-gata, are human attempts to touch God using language. But even language is a product of this world and therefore is limited to the boundaries of physical reality. Language, even though it is a crude instrument used to express what is beyond thought is still the best instrument we have. So when we speak about God as our Father, our King, our Lord or our Mother, these words are also idols of God. But, again, how can we speak of the divine without these idols of language? Idols of the divine cannot be avoided.

OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

Date Sunday, 04 August 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
All objects are suffused by the same Divine Principle.
All names are attributes of His glory. Divinity is
imminent and inherent in every soul, and the process
of reminding people of this fact began with the very
dawn of human history. What is to be done to lead a
Divine life? Remove the fog which hides the Truth! The
fog of illusion makes you believe that you are
something inferior, momentary, evanescent and
material! That is incorrect! All are holy, pure and are
part of Eternity. Each one of you shine in proportion to
your spiritual efforts (Sadhana), just as bulbs spread
illumination according to their wattage. There is no
body which is not sustained by the Absolute. There is
no name that does not indicate the Universal. All are His!!


 தெய்வீகக் கொள்கைகளால்

அனைத்துப் பொருள்களும்  ஆனதே;அனைத்திலும் தெய்வீகம் பரவியுள்ளது.
எல்லாப்பெயர்களும் அவர் மேன்மையைக் கூறுபவையே.ஒவ்வொரு ஆத்மாவிலும் தெய்வீகம் என்பது உள்ளுறைவதும் தவிர்க்க முடியாததும் ஆகும்.இந்த உண்மை மனித இன துவக்கத்தில் இருந்தே மனிதர்களுக்குநினைவூட்டப் பெற்று வருகிறது.

தெய்வீக  வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? உண்மையை மறைக்கும் மாயப்  பனிமூட்டத்தை  விலக்கிவிடவேண்டும். மாயை என்ற பனிமூட்டம்
உங்களைத் தாழ்ந்தவர்களாகவும் .தற்காலிகமானவர்கள்  என்றும்,நிலையற்ற
ஜடப் பொருள் என்றும் நம்ப வைக்கிறது.இது தவறானது.அனைத்துமே புனிதமும் தூய்மையும் நிறைந்தது.இறைவனின் அங்கங்களால் ஆனது.மின்விளக்குகள்  தன் திறனுக்கு ஏற்றபடி ஒளிதருகின்றன.அவ்வாறே சாதனை முயற்சிக்கு ஏற்றவாறு  நீங்கள் பிரகாசிக்கிறீர்கள் .இறைவனால் தாங்கப்படாதவர்கள் யாரும் இல்லை.உலகில் அவரைக் குறிக்காத நாமம் எதுவும் இல்லை. எல்லாம் அவருடையதே.

சத்ய சாய் பாபா.



Saturday, August 3, 2013

Hindu Statue worship - Murti Pooja - ஹிந்துக்கள் உருவ வழிபாடு

Jagdip Dave: Can you tell us something about origin of Murti Pooja as Vedas speak about Yajnas, but not MurtiPooja?

Swami Ramswarup: Statue worship (moorti pooja) has not been mentioned in Vedas because God is formless and omnipresent whose statue (moorti) cannot be even imagined then how can it be made. Yajurveda mantra 32/3 especially states .NA TASYA PRATIMA ASTI. i.e., God being beyond calculation, beyond imagination and formless, He cannot be measured and therefore His statue/idol cannot be made. This universe has been created by God about one arab ninety-six crores eight lakhs and fifty-three thousand years ago. Uptil Mahabharat war i.e., about 5,300 years ago no moorti pooja originated. Learned say that first time when Jain.s guru i.e., Mahavir Swami left for heavenly abode, his statue was made in his pious remembrance. Then Hindus also started idol worship.

உருவ வழிபாடு பற்றி  சுவாமி ராமஸ்வரூப் : வேதங்களில்  உருவ வழிபாடு பற்றி குறிப்பிடப் படவில்லை.கடவுளுக்கு  உருவம் இல்லை.அந்த உருவத்தை நாம் கற்பனை செய்ய முடியாது.அப்படி இருக்க எப்படி நாம் அமைக்க முடியும்.யஜுர் வேத மந்திரம் 32/3 சொல்கிறது    न तस्य प्रतिमा अस्ति. கடவுள் உருவமற்றவர். நமது கற்பனைக்கு அப்பாற்பட்டவர்.நமது கணக்கீட்டிற்கு அப்பாற்பட்டவர் . அவரை அளவிட முடியாது.அதனால் அவர் உருவத்தை அமைக்க முடியாது,மகாபாரதப் போர் வரை 5,300 ஆண்டுகளுக்கு முன்னால் உருவ வழிபாடு அமைக்கப்படவில்லை.மகாவீரர் இறைவனடி சேர்ந்த பின்தான் அவர் சிலை ஞாபகத் திற்காக வடிக்கப்பட்டது,  பின்னர் தான் ஹிந்துக்கள் உருவ வழிபாடு ஆரம்பித்தனர்.

Thursday, August 1, 2013

இன்று நடை பயிற்சி . அன்று ஆலய வழிபாடு.



சனாதன  தர்மம்  என்பது அறிவியலுடன் ஆரோக்யத்துடன் 
இயற்கையான மருத்துவம் ,ஈகை,எண்ணங்களில் ஏற்றம் 
ஐக்ய உணர்வு ஒப்பில்லா வாழ்க்கை நெறி  கொண்டது .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது  ஆரோக்யத்திற்கே .

ஆண்டவன் தூணிலும் துரும்பிலும் இருப்பான் .
அவன் இல்லாத இடம் எது.
உள்ளத்தில் உள்ளான் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளான்.
இதை கபீர் தாசர்  எளிய மொழியில் விளக்குகிறார்.

तेरा साई तुझमें ज्यों पुहपन में वास. 
कस्तूरी का मृग ज्यों फिर-फिर ढूंढें घास. 
உன் கடவுள் உனக்குள்ளே ,பூவில் மணம்  போலே.
கஸ்தூரி மானுக்குள் கஸ்தூரி ,அது தேடுவதோ தன்  மணத்தை  புல்லில்.

அறியாத மான் போல் தேடாதே, உனக்குள் இருக்கும் கடவுளைத் தெரிந்து கொள் என்கிறார்.

இந்த விளக்கத்திற்குப் பின் ஆலயம் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

ஆம். செல்ல வேண்டும். எதற்காக. உடல் ஆரோக்யத்திற்காக.

மருத்துவமனை செல்லாமல் இருப்பதற்காக.

மனோ தத்துவ மருத்துவரிடம் செல்லாமல் இருப்பதற்காக.

மனத் தூய்மைக்காக.

மூளை வளர்ச்சிக்காக.

ஆனால் பிரசாதம் வாங்கசென்று வரக்கூடாது.

ஆலயம் புராதனமாக /ஆகம விதிப்படி இருக்க வேண்டும்.
விநாயகருக்கு தோப்புக்கரணம் போட வேண்டும்.
உள் ,வெளி ,பிரகாரம் சுற்ற வேண்டும்.
நவக்ரஹம் ஒன்பது சுற்று சுற்றவேண்டும்.
கொடிக்கம்பத்துக்கு முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அருகம்புல்  மென்று சாப்பிடவேண்டும்.
வில்வ இலை சாப்பிடவேண்டும்.
துளசி  சாப்பிட வேண்டும்.

இவைகளைப்பற்றி  நம் முன்னோர்கள் விரிவாக அறிவியல் முறையில் விளக்கவில்லை.
 இதை ஒரு தெய்வீக நம்பிக்கை யாக வளர்த்து  வந் தனர்.

நமது  இறைவன்  யார்? என்ற ரீதியில்   நகர் புறத் தெய்வங்கள் சிவன்,விஷ்ணு,ராமர்,கிருஷ்ணர்,அம்பிகை.

முனீஸ்வரன்,மாரியம்மாள்,சப்த கன்னிமார்கள்,கருப்பண  சாமி,ஐயனார்,காளி  என்று கிராமதேவதைகள். அதற்கேற்ற  வழிபாட்டு முறைகள். உழைப்புக்கேற்ற  வழிபாட்டு முறைகள்.படையல்.

ஏகாதசி விரதம்,அமாவாசை புலால் உண்ணாமை,.

அனைத்துமே ஆரோக்கிய வழிகாட்டி.

ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைக் கடை பிடிக்கிறோம்.

ஆலயம் செல்கிறோம். சிலருக்கு இரு கரம் கூப்பி வழிபடுதலே நாணம்.

சாஷ்டாங்க நமஸ்காரம் பலர் செய்வதே இல்லை.

தியானம் ஐந்து நிமிடம் அமர்வதில்லை.

 கால மாற்றத்தால் அலுவலகப் பணிகள்.இரவு நேரப் பணிகள்.

வாழ்க்கை முறை மாறிவிட்டது.
அனைத்திலும் அவசரம்.
மக்கள் பெருக்கத்தால் பக்தர்கள் கூட்டம்.
கற்ப கிரகம்  நிற்க முடிவதில்லை.
அர்ச்சனை  செய்ய முடிவதில்லை.
மணிக்கணக்கில் நின்று  மூலஸ்தானம் செல்லும் போது
விரட்டும் காவலர்கள்.
இறைவனைக் கண்குளிர பார்க்க வில்லை என்ற மன வருத்தம்.
இருப்பினும்  நானும் ஆலயம் சென்று வந்தேன்,ஆண்டவன் அருள் கிட்டும் என்ற நம்பிக்கை.


ஆரோக்ய வாழ்விற்கு பயம் காட்டி வழிபாட்டுமுறைகளை வலியுருத்தி வந்தனர். இதில் உழைக்கா  வர்க்கம்  உறுதியாக இருந்தது.உழைக்கும் வர்க்கம் உடல் உறுதியுடன் இருந்தது.அறிவு ஜீவிகள் இன்று
நடை பயிற்சி . அன்று ஆலய வழிபாடு.












அதற்கான  பல காரணங்கள். அவையே இந்துமத  வலுவற்றுப் போனதற்கானவை.