Sunday, December 17, 2017

சந்நியாச யோகம் தொடர்ச்சி கீதை

    யோகிக்கும் சாதாரண மனிதனுக்கும்  உள்ள  வேறுபாடு

யோகி  வினையாற்றுகிறான்.
ஆனால் பலனில் சற்றும்
 விருப்பமின்றி  வாழ்கிறான்.

  அவன் மனம் எப்பொழுதும்
நிறைவாக  சாந்தியாக  இருக்கும்.

உடல் வேறு .ஆத்மா  வேறு. 

தன்னை வசப்படுத்தியவன்

கர்மங்களை  எல்லாம் ஒதுக்கிவிட்டு ,

ஒன்றும்  செய்யாது

மகிழ்ச்சியாக    இருக்கிறான்.


 கர்மங்களில்    நித்திய கர்மங்கள் -
அதாவது அன்றாடம்
கட்டாயமாக    செய்யவேண்டியது.
அந்த   கர்மங்களை  செய்தால் 
 புண்ணியமில்லை,ஆனால் செய்யாவிட்டால்
 உடல்  இன்னலுறும் .
காலைக்கடன் ,நீராடுவது,வழிபடுவது .
அன்றாடம் செய்யவேண்டும்.

காரண கர்மம்--  இது  விஷேசகாலங்களில்  செய்யப்படும்
கர்மமாகும்.

காம்ய கர்மம் --விருப்பத்திற்காக பலன்களை எதிர்பார்த்து
செய்யப்படும்   வினைகள்.

நிஷித்த கர்மம்--தடை செய்யப்பட கர்மங்கள்.

இவைகளைச் செய்யவே கூடாது.

இந்த வினைப்பலன் என்பது தெய்வீகமல்ல.
இயற்கையாக இயல்பாகச்   செய்ய வேண்டியவை.

 
  பரமாத்மா இவ்வுலகில்  செய்யப்படும்
 புண்ணிய -பாபங்களை  கவனிப்பதில்லை.
   இங்கு ஞானம்   உள்ள  மனிதனின் 
அக்ஞானத்தால்  ஞானம் மறைக்கப்படுகிறது .


திருமண பந்தம்  வேண்டுமா ? வேண்டாமா ?

என்ற  வினா எழும்    போது   வேண்டும் 
என்பதே இயல்பு.  அப்படித் தன்னை
 லௌகீகத்தில்  இணைத்துக் கொள்ளும்போது

அவன் உலகியலில் கட்டுப்படுகிறான். 
சித்தார்த்தர் கட்டுண்டார் .
ஆனால் விலகிச் சென்றார்.    அவர்  யதார்த்த

நிலையில்  இருந்து ஒரு  ஆதர்சத்தைத் தேடி

 தனது அனைத்து  ராஜபோகங்களையும் துறந்தார். 
அவர் இயற்கை  பந்தத்தில்
இருந்து  விடுபட்டார். 
இதில் தான் வேதாந்த சாரம் அடங்கியுள்ள து. விவேகானந்தர், ஆதி சங்கரர்
இயற்கை ஆசாபாச பந்தங்களை விடுத்து
தெய்வீக  அதாவது அலௌகீக பந்தங்களில் ஈடுபட்டனர்.
ஸ்ரீ ரமண மகரிஷியும் அப்படியே.

சூரியன்  உதித்தால்  இருள்  விலகுகிறது.
 அவ்வாறே ஞானமும்  அக்ஞானத்தை
அளிக்கும் ஒளியாகும் .

ஆத்மஞானம்    என்பது பரபிரம்ம    ஞானமே.

  ஞானம் வந்தபின் பிரம்மமே 
அனைத்தும் என்ற  எண்ணம் 
மேலோங்கும். 
அதையே அவர்கள் புகலிடம்   என்று
பிரம்மத்தில்  உறுதியாக  இருப்பார்கள்.
 ஞானத்தால்  பாவங்களைப்  போக்கிவிடுவர்.

அத்தகையோருக்கு  மறு பிறவி இருக்காது.
 ஞானம் பெற்ற   ஞானிக்கு  தன்   மனதில்
உலகியல் படைப்புகள்  அனைத்துமே 
 சமம் தான்.
 அறிவில்    சான்றோன் 
அந்தணன்,பசு ,யானை நாய்,
நாயையே உண்ணும் கீழோன்
என     அனைத்தையும்   சமமாகவே
 நோக்குவார்கள். கருத்துவார்கள்.


மனம்  சம  நிலை அடைந்து விட்டால்
 மனத்தை உறுதிப்படுத்திவி ட்டால்,
இம்மையில்   இயல்பான
குணத்தை ,இயற்கையை 
 வென்றவனாகிறான்.
பிரம்மம்   சமநிலையுடையது. 
எவ்வித குற்றம்  குறை
   இல்லாதது. 
 ஞானிகள்  இதை  அறிந்து  பிரம்மத்தில்
நிலைத்து ஐக்கியமாகி விடுகின்றனர்.

இந்த   ஐக்கிய   ஞானம் 
 பெற்றபின்   
 அவன் குழப்ப  நிலையில்  இருந்து
  முற்றிலும்   விலகிவிடுகிறான்.

அவனுக்கு பிரியமானவைகள்
பெறுவ தால்  இனிமையும் இல்லை.
பிரியமில்லாததைப் பெறுவதால்  இன்னலும் இல்லை.

மனதில் அனைத்தும்  சமநிலை  ஆக்கியதும்
இயற்கை ,   இயல்பை ,  வென்றுவிடும்
உயர்  நிலைக்கு   வந்து  விடுவான்.

பிரம்மம்  எவ்வித மாசும்  இல்லாதது.
 குற்றமும்  இல்லாதது.   ஞானிகள்
பிரம்ம நிலையை  அடைந்து  விடுகிறார்கள்.

இந்த பிரம்மா ஐக்கிய நிலை  பெற்றவன் ,
உறுதியான  அறிவுடையவன்.
 அவன் மனநிலையில்
எவ்வித     சிக்கலும்   இருக்காது.
எவ்வித குழப்பமும்  இருக்காது.

அன்பான விஷயங்களால் ஆனந்தமடையும்
இயல்புநிலையைத் துறந்து விடுகிறான்.

அன்பில்லாத் தொடர்பால் வரும் துன்ப
இயல்பையும்    துறந்து  பிரம்மானந்தத்தில்
தன் நிலை   மறந்து    கிரியா சக்தியை
மாயையாகக் கருதி , நிஷ்கிரியா   சக்தியை 
பிரம்மமாக  ஏற்று வாழ்பவன்  தான் ஞானி.

இப்படிப்பட்ட  ஞானிக்கு   புறப்பொருள்களில்
எவ்விதப்  பற்றும்  இருக்காது.  ஆத்மாவில்
தெளிவான    ஆத்மசுகம்  பெறுகிறான்.
சமாதி  நிலையில்  பிரம்மானந்தமடைகிறான்.

புலன்களால் ஏற்படும்  போகங்களே   உலகத் துன்பங்களுக்குக் காரணம்என்ப தை   அறிந்த
ஞானிகள்   அதில் சற்றும்  நாட்டமில்லாதவர்கள்.

ஞானிகள்    பெண்ணாசையான  காமத்தை   வென்றவர்கள்.

குரோதம் ,  விரோதம்  பாராட்டாதவர்கள். பொருட்படுத்தாதவர்கள்.
ஆத்மாவில்   இன்பம்  பெற்று  ,
ஆன்ம ஒளி  பெற்று   பிரம்மமாகி 
பிரம்ம    முக்தி  பெறுபவனே  யோகி.

   இப்படிப்பட்ட ஞான யோகியின் 
மனதில் எவ்விதத்  தீய
 எண்ணங்களும் இருக்காது.
தீமைகளை   அழிக்கும் 
சக்திபெற்றவன் ஞான   யோகி.

அவனின் யோக  நிலையில்    பிராண ,அபான

வாயுக்களைச்  சமப்படுத்தி , கண்களைப் புருவங்களுக்கிடையில்  அமர்த்தி  ,
இயற்கையான புலன்களின்   இன்பம் ,
மனம் , அறிவு அனைத்தையும்   தன் கட்டுப்பாட்டில்
அடக்கி , மோக்ஷத்தை நாடுபவனே    யோகி /ரிஷி/ முனி.

இப்படிப்பட்ட ஞான யோகிகள்    வேள்வி , தவம்  என்று   ஈடுபட்டுத்    தன்னை உலகனைத்துக்கும் ஈசனாகவும்
உயிரினங்களுக்குத்   தன்னை  நண்பனாகவும்
 அறிந்து   சாந்தி அடைவதில் ஆனந்தம்  அடைகிறான்.
Post a Comment