Thursday, November 30, 2017

பகவத் கீதை --கர்மயோகம் -8

  கர்மயோகம்

மனிதன்  மனதளவில்
 பல எண்ணங்களில்
ஆசைகளில்
  செயல்களில்
ஈடுபடுகிறான் .

புலன்கள் அவனை
 செயலாக்கத் தூண்டுகிறது .

ஆனால் அவன் தன்
ஆத்மாவை
 நேசித்தால்
அவன் வினை ஓய்கிறது.
ஆத்மாவில் மகிழ்ந்தால்
அவன் மனம் பற்றற்று
மன நிறைவுடன்
லௌகீகக் கர்மங்களை
விட்டுவிட்டு
ஆத்மா நிறைவுடன்
ஆத்மா பரமாத்மா
ஐக்கிய நிலையில்
சாந்தியுடன் இருக்கிறது.

ஆத்மானந்தத்தில்
 லயித்தவர்களுக்கு
வினைப்பயன் ,இழத்தல் ,
சார்ந்திருத்தல்
போன்றவை இல்லவே இல்லை.

ஆகையால் நமது வினைகள்
 பற்றற்று இருக்கவேண்டும்.
ஆனால் நமக்கு
 இறைவனளித்த
 கடமையை   ஆற்றவேண்டும்.
பற்றற்ற பற்றுள்ள வாழ்க்கை.
தாமரை இலை  தண்ணீர் போன்று.
 மகாராஜா   ஜனகர்  தன்
 நல் வினைகளால்
முக்திபெற்றார்.
அவரைப்போன்றே
 பலர்  நல்வினைகள்
செய்து  நற்பயனை
அடைந்திருக்கிறார்.
ஆகையால்  ஜீவாத்மாவின்
கடமையைச் செய்யாமல்
 விடுவது சரியில்லை.

Wednesday, November 29, 2017

நரசிம்ஹா க்ருபா கடாக்ஷம்

நரசிம்ஹா க்ருபா கடாக்ஷம்
நாளும் நமக்கிருக்க
நான்முகன் துணை இருக்க
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
நிறையே நம் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆனந்தமே.
நீதியையே நினைப்போம்
ந்ருசிம்ஹனைத் துதிப்போம்.
நுணலும் தன் ஜபத்தால் வாழும்
நூல்களின் அறிவு பெருகும்.
நெடுமால் திருமால்
நேர்மைக்கு அருள் கொடுக்கும்.
நைதிகை மனம்மணம் மணக்கும்.
நொடி நொடி யில் ஞானம் பிறக்கும்.
நோய் உடல்,மனம் அறியாமை தீரும்.
ந்ருசிம்ஹா நருசிம்ஹா ஓம் ந்ருசிம்ஹா.
நாளும் நமக்கிருக்க
நான்முகன் துணை இருக்க
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
நிறையே நம் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆனந்தமே.
நீதியையே நினைப்போம்
ந்ருசிம்ஹனைத் துதிப்போம்.
நுணலும் தன் ஜபத்தால் வாழும்
நூல்களின் அறிவு பெருகும்.
நெடுமால் திருமால்
நேர்மைக்கு அருள் கொடுக்கும்.
நைதிகை மனம்மணம் மணக்கும்.
நொடி நொடி யில் ஞானம் பிறக்கும்.
நோய் உடல்,மனம் அறியாமை தீரும். நௌ கோள்கள் நம்மைத் தீண்டா .
ந்ருசிம்ஹா நருசிம்ஹா ஓம் ந்ருசிம்ஹா.

Tuesday, November 28, 2017

பகவத் கீதா --கர்மயோகம் --௭.7

   

 இவ்வுலகில்   இறைவனின்
 சுழற்சி சக்கரம் .
இதைப் பின்பற்றவில்லை
 என்றால்    புலனடக்கமில்லா
 பாவ  வாழ்க்கை  உடையவனாய்
 தான்  வாழ்வான்.
முறையான அறமான  வினைகள்
செய்யப்படா விட்டால்  அவன்
செல்வங்கள் பெற்றும்
 தீய   வலையில் சிக்கித்  தவிப்பான்.
வசதிகள்      இருந்தும்    வேதனைதான்.
 பதவிகள் இருந்தும் 
அதிகாரம்   இருந்தும்
அறமும்  மனித  நேயமும் 
இல்லை  என்றால் 
அவன் வாழ்க்கை  வீண் மட்டுமல்ல நரகமே.
இன்றைய நடை முறையில்
பல   லக்ஷம் கோடி ஊழல்
புரிந்தவர்கள் ஆஷ்ரம சாமியார்கள்
சிறையில்.

Monday, November 27, 2017

கர்மயோகம் -பகவத்கீதை -6



நாம்  வாழ்வதற்கு  உணவு அவசியம்.
உணவின்றி  உயிர்   வாழ்வது
இயலாதது.
உணவிற்கு பயிர் விளைவது அவசியம்.
பயிர்  விளைய மழை   அவசியம்.
 வேள்வி போன்ற வினைகளால்
மழை பெய்கிறது.
இதற்கு பூத யக்ஞம்  அவசியம்.
இயற்கை ஜீவ   ஜந்துக்கள்
மரம் செடிகொடிகள்
 வளர்ப்பது அவசியம்
அதுவே ஒரு வேள்வி.
இறைவனால் இயற்றப்பட்ட வேதம்
அதாவது அறிவு
வினை. வினைப்பயன்.
வேதத்தால் தான் 
  வேள்வி  நிலை  பெறுகிறது.

கர்மயோகம் --பகவத்கீதா -5



        வேள்விகள் செய்து
 தேவர்களைப்  போற்றுங்கள்.

அந்த தேவர்களை
   நீங்கள்  வளர்ப்பதால் 
  அவர்கள் உங்களை
வளர்க்கட்டும்.   
ஒருவொருக்கொருவர் 
 நன்மை செய்து
  வளர்வீர்களாக. 
இப்படி தேவர்களும்
அவர்களின் ஆசியால்
 நீங்களும் வளர்வீர்களாக. 

      வேள்வியால்  போற்றப்பட்ட  தேவர்கள்  , 
 நல்ல  ஆசாரமுடையவர்களின்  அனைத்து   
  மன விருப்பங்களையும்
  நிறைவேற்றுவார்கள். 
தேவர்கள்  நல்லது செய்யும்போது    
 அவர்களுக்கு  நன்மை 
செய்யாதவர்கள் ,
துதி செய்யாதவர்கள்   திருடர்களே.
அவர்கள்  இழி  நிலை  அடைவார்கள்.

  தேவர்களைப் போற்றி
   நல்ல  நிலையில்
அறநெறியில் வளரவேண்டும்.
பாவங்களில் இருந்து 
விடுபட  வேள்விகள் செய்து
மீதமுள்ளதை சாப்பிட வேண்டும்.

வேள்விகளின்  வகைகள் :--
௧,தேவர்களுக்கான     வேள்வி
௨.  ரிஷியக்கியம் --
உலக சுபிக்ஷத்திற்காக ,
  நல்ல நூல்களை
எழுதியுள்ள  நல்ல 
அறிவியல்  நூல்கள்
மெய்ஞான நூல்கள்   எழுதிய
மகான்களுக்கான  வேள்வி .
௩.பித்ருயக்ஞ்யம் :-
தங்கள் முன்னோர்கள் ,
பெற்றோர்கள் 
நம்மைப் பெற்று வளர்த்து 
ஆளாக்கியவர்களுக்கு  சேவைகள்
நாள் தோறும்   பணிவிடை செய்தல்.
௪. நரயக்ஞம் :--
மனித   இனத்திற்கு  சேவை செய்தல்,
நோய்களைப் போக்குதல் ,
கல்வி   கற்பித்தல் ,
வாழ்க்கைக்கு  நல் ஒழுக்கங்கள்
நாகரிக அறிவியல் வளர்ச்சி 
மாற்றங்கள்  ஆகிவற்றுக்கேற்ற
பண்பினை வளர்த்தல்
மனிதவேள்வியாகும்.

௫.  பூத யக்ஞம் :--
மக்களின்   அன்றாட வாழ்க்கைக்கு
பயன்பட்டுவரும்   
 ஆடு ,மாடு ,செடிகள்,மரங்கள்
ஆகியவற்றைப்  பேணுதல்
 இயற்பியல்   வேள்வியாகும்.

Sunday, November 26, 2017

கர்மயோகம் --பகவத் கீதை --௪


  படைப்புக்    கடவுள்   பிரம்ம தேவன் .
   வேள்வியுடன்    மக்களைப் படைத்தான்.
அது மனிதனின்   விருத்திக்காக.
 வளர்ச்சிக்காக .

 விருப்பங்கள்  நிறைவேறும்
  கேட்பதெல்லாம் கொடுக்கும்
காமதேனுவாகட்டும்   
என்றும் பிரம்மா கூறினார்.
   இதுவே  படைப்பின்  ஆரம்பம்.

காமதேனு  ஒரு பசு .
 விரும்புவைகளைக் கொடுக்கும்.
அதை வளர்த்தால்  சிறப்பு.
இங்கு அது நற்செயல் புரியும்
வேள்விகள் செய்வதாகும்.

  இறைவனால்   படைக்கப்பட்ட
மனிதர்களுக்கு இன்னல்கள் இல்லை.
இன்னல்களுக்குக்     காரணம் அவன் கர்மங்களே .

நாம் விதைக்கும் விதைக்குத் தகுந்த
 பலன் கிடைக்க வேண்டும்.
அதற்கு  விதை எப்படிபட்டது,
எவ்வித மண்ணில்    வளரும் .
அதற்கேற்ற  பருவ நிலை ,
தட்ப வெட்ப நிலை
எல்லாம் அறிந்து பயிரிட வேண்டும்.

              மனிதனுக்கு மட்டும் 
  இறைவன்  ஞானத்தைக்கொடுத்தான் .

ஆனால் அவன் நன்மை தீமைகள் அறிந்தும்

 உடனடி பலன் பெற
தீய வழிகளைப்
பின்பற்றுகிறான்.
அவன் தன்  வலிமை,
பதவி, அதிகாரம்
செல்வம் ஆகியவற்றால்
அனைத்தும்
சாதிக்க முடியும்
என்று     நினைக்கிறான்.


அவன் செயல்களுக்கேற்ற
 பரிசும்  தண்டனையும்   கொடுக்க
 ஒருவன் மேலிருந்து கவனிக்கிறான்
 என்பதை முற்றிலும்  மறந்து விடுகிறான்.
அந்த  சர்வ   சக்தியை அறிந்த
 ஞானியின் செயல்  வேறு.
 உலகியல்     கர்மங்கள்  வேறு.
ஆனால் ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டவை.
ஞானி  அந்த   அந்த சர்வ சக்தியின்
 மேன்மையை  நிகரற்ற தன்மையை
 கர்யோகிகளுக்கு   நினைவு
 படுத்திக்கொண்டே இருக்கிறான் .

கர்மயோகம் -பகவத் கீதை --3


  வேள்விகள்  செய்யப்பட வேண்டும். 
ஆனால் இவ்வுலகம் மற்ற
கர்மங்களில் ஈடுபட்டுள்ளது.
வேள்விக்கான செயல்களை
 எவ்வித  பற்று ஆசாபாசங்கள்
 இன்றி செய்யவேண்டும்.
இவ்வுலகத்  துன்பங்களுக்குக் காரணம்
பறித்துப் புசித்தல்.
 இந்நிலையில் போராட்டம்.

இதைக்   கீழ்  நிலையில் உள்ளவர்களை விட
ஆட்சி ,அதிகாரத்தில் உள்ளவர்கள்
  செய்கிறார்கள்.
 ஆனால்    அதிக  மேல் நிலையில் உள்ளவர்கள்
தனக்கென்று  எதுவும் செய்வதில்லை .
நமது ஒவ்வொரு செயலும் உலக நன்மைக்காக
எவ்வித பற்றும் இன்றி செய்வதே வேள்வி.
சாதாரண அறிவு வளர்ந்து
 ஞானம் வரவேண்டும்.
நம் செல்வம் ,நம் ஞானம்
 மற்றவர்களுக்கு
உதவுவதால் வளர்கிறது
என்பதை
மறக்கக்    கூடாது.
ஔவையார்   மற்றும்    நீதி நூல்கள் சொல்வது
இட்டார்   பெரியோர் ,இடாதார் இழி குலத்தோர்.

ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

நாம்  கர்ம யோகத்தில் ஈடுபடவேண்டும்.