Saturday, August 31, 2013

இந்த ஏமாற்றங்களைத் தடுத்தால் தான் மும்மூர்த்திகள் அருள்

இறைவன்  என்பவன் தனிப்பட்ட ஆற்றலுடையவன்.

அவனின்றி அணுவும் அசையாது என்பர்.

நமது சனாதன தர்மத்தில்  இறைவன் அவதாரம் எடுத்து துன்பங்களைப்  போக்குவார் என்று கூறப்படுகிறது.

சிவனின் திருவிளையாடல்கள் ,விஷ்ணுவின் தசாவதாரம்  என்றெல்லாம்

பெரியபுராணம் ,விஷ்ணு புராணம்  விரிவாக விளக்குகிறது.

கடவுள் பற்றி விளக்கும் போது த்வைத்துவம் ,அத்வைத்துவம் ,விஷிஸ்டாத்வைத்துவம்  என்று  மூன்றாச்சாரியர்கள் ஸ்ரீ சங்கரர் ,மத்வர் ,ராமானுஜர்  விளக்கி உள்ளனர்.

இப்பொழுது  பல பாபாக்கள் தங்களுக்கு பாலாபிஷேகம் ,தங்கக்க்ரீடம் ,மலர்க்க்ரீடம் ,மலர் அர்ச்சனை செய்து தன்னை சிவன்,அம்மன்,விஷ்ணு போன்ற  தெய்வங்களின் அவதாரமாக கூறிக்கொண்டு பொன்னும் பொருளும்  கோடிக்கணக்கில் சேர்த்துவருகின்றனர்.

இவர்களில் போலிகள் சிலர் இருக்கின்றனர் என்பதறிந்தும் மக்கள் ஏமாறும் வராய்   ஏமாறட்டும்    என்ற ஹிந்து அமைப்புகள் போக்கு

இந்துமத ஒற்றுமைக்கு ஏற்றதாகத் தெரியவில்லை.

இந்த ஏமாற்றங்களைத் தடுத்தால் தான் மும்மூர்த்திகள் அருள்

இந்துக்களுக்கு கிட்டும்.

அன்பே ஆண்டவன்.

Date Sunday, 01 September 2013 ( As it appeared in Prasanthinilayam)

THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE 
Be careful to not engage yourself in Iccha 
Krishi (the cultivation of wants and desires). 
This is a never ending process of sowing and 
reaping, you will never reach contentment. 
For, one desire, when satisfied will fan the 
thirst for ten more. Be warned! Do not run 
after devious desires or crooked 
satisfactions. All roads leading to the realm 
of the senses are tortuous and blind. Only 
the road that leads to God is straight. 
Cultivate straightforwardness (Neethi) in 
your every act. That will reveal the Divine in 
due course. It will also enable you to 
overcome your threeGunas (Rajas, Sathwa and Tamo). Just as you grind chilly, salt 
and tamarind to get a tasty dish, you must grind all the three Gunas so that the taste 
of Ananda (bliss) emerges.(Divine Discourse, Apr 12, 1959.)


thiagaraajan /guruyayaathi guru.

Thursday, August 29, 2013

வலிமை பெறுவோம்; வளம் பெறுவோம்.



 ஹிந்துமதம்   ஒரு புனித நதி. அதில் ஆஷ்ரமம் ,ஜோதிடம்,அரசியல்

இந்த மூன்றிலும் உள்ள   தன்னலம்,பொருளாசை,பொன்னாசை ,பெண்ணாசை என்ற  கழிவுநீர் கால்வாய்கள் கலந்து  மாசுபடுத்துகின்றன.

இதை தடுக்கின்ற மாசுகட்டுவாரியங்கள் இந்து முன்னணி,பாரதீய ஜனதா தளம்.ராஷ்ட்ரீய  ஸ்வயம் சேவக் தல்.

ஹிந்து மத ஒற்றுமைக்காக பாடுபடும் பக்த சமாஜங்கள்.


ஹிந்து சக்தி ஒன்றுபடவேண்டும்.

ஹிந்துக்களுக்குள் பல்லாயிரக்கணக்காக வேரூன்றி இருக்கும் விருப்பு,வெறுப்பு,இன,ஜாதி பேதங்கள்  ஒழிக்கப்பபட்டு  ஒரே குரல்,ஒரே சமுதாயமாக விளங்கவேண்டும்.

அதற்கு  ஆலயங்கள்,அர்ச்சகர்கள்,புரோஹிதர்கள்,ஆஷ்ராமங்கள்

புனிதமாகவே இருக்கவேண்டும்.

அங்கு நடக்கும் தவறுகளை  கண்டு தக்க நடவடிக்கைகள்

எடுக்கவேண்டும்; இது நம் சனாதன தர்மத்திற்கு ஒரு வெற்றியைத்தரும்.

இந்த அரசியல்வாதிகள் மதம் என்ற ஆயுதத்தை மக்களை வேறுபடுத்தி

ஆதாயம் காண  பயன் படுத்துகின்றனர்.

ராமர் கோயில் நரசிம்மராவ் காலப்பிரச்சனை. அவர் காலமாகிவிட்டார்.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.   இன்னும் தீர்க்காமல் தேர்தல் நேரத்தில்

போராடுவது,மக்களை திசை திருப்புவது ,மிகவும் வேதனை அளிக்கிறது.

பெரியோர்களே!இளைஞர்களே!

இந்து மத ஒற்றுமைக்கு ஆக்க திட்ட செயல்வழிகளை உருவாக்குங்கள்.

அதை விடுத்து   பாதரக்ஷை அணிந்து கிரிவலம் வருதல் ,பக்தர்கள் அணியும் ஆடை விஷயத்தில் அக்கறைகாட்டி போராடாதீர்கள்.

கோவணத்திலிருந்த நாம் இன்று ஆடைகள் அணிகிறோம். அது ஒரு புற  பக்தி.

உள்ளத்தில் ஒன்றுபட்டு  இந்து மதத்தைக் காப்பாற்றுங்கள்.

கடவுளைப் படைத்தவன் முட்டாள்;காட்டுமிராண்டி என்பதை

சகிக்கும் நாம்  பாதரக்ஷை அணிந்து சென்ற நடிகை கொடும்பாவி எரிப்பது

ஆண்டவனை மகிழ்விக்கும் செயலாக இல்லை.மேலும் கிரிவலப்பாதையில்

பாதரக்ஷை அதாவது செருப்பு ,காலணி அது கட்டையாக/தோலாக நம் காலை கல் -முள்ளிலிருந்து காக்கிறது. அசுத்தத்தை மிதித்தாலும் காக்கிறது.

பாதரக்ஷை ஆட்சி செய்த நாட்டில் இந்த மாதிரியான  போராட்டம் சரி அல்ல.

அவ்வாறே விநாயகர் சிலை கடலில் எறிவதும்.

சிந்திப்பீர்! தவறு ஆஷ்ராமங்கள் செய்தால் உமா பாரதி போல் ஆதரிக்காதீர்கள்;

தவறுகள் ஒழிய  மதம் புனிதமாகும்.

இன்றைய சமுதாயம் சிந்திக்கத் துவங்கியுள்ளது.

கடல் கடந்தால் பாவம் என்ற சித்தாந்தம் மாறி வெளிநாடுகளில் நம் ஆலயங்கள்  கட்டப்பட்டு ,சௌகரியத்துக்குத் தக்க சாஸ்திரம் என்பதுபோல்
பூஜை அர்ச்சனை மலர்கள் மாறிவருகின்றகாலம்.

ஔவையார் பாடினார் ---ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று;
கபீர் பாடினார் -जाति न पूछो साधू की ,पूछ लीजिए ज्ञान ,
भारती पाडिनार --ஜாதிகள் இல்லையடி பாப்பா.

இந்துக்களே ஒன்றுபடுங்கள்!இறைவன் பெயரால் ஏமாற்றும் கூட்டத்தை ஒழியுங்கள்;

நாம் சக்தி பெறுவோம்; இல்லை எனில்  சிறுபான்மை பெரும்பான்மை பெரும்.
அந்த சிறுபான்மை ஓட்டில் தான் அரசு என்று அரசியல்வாதிகள்  ஒன்றுபடுகின்றன.

சிந்திப்பீர் ஹிந்து சகோதரர்களே.!முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு


ஒரு மஹா சக்தியை இந்த ௨௦௧௪ தேர்தலில் நிரூபியுங்கள்.

இது நம்மால் முடியும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!நம்மில் வேறுபட்டால் தாழ்வே.

வாழ்க  சனாதன தர்மம்!   வையகம் வாழ்க! வையகம் ஒரு குடும்பம்;

போதித்த மதம். வையகத்தில் சக்தி பெற போலிகளை ஒழிப்போம்;

வலிமை பெறுவோம்; வளம் பெறுவோம்.



THOUGHT FOR THE DAY

Date Thursday, 29 August 2013 ( As it appeared in Prasanthinilayam) 
THOUGHT FOR THE DAY 
OUR MOST BELOVED BHAGAWAN’S 
DIVINE MESSAGE 
Scriptures are only road-maps; at best they 
are guide-books that give directions for the 
destination. It is the actual journey that will 
reveal the hardships, the delays, the landslips, the potholes as well as the beauty of 
the scenic route on the way, and the 
magnificence of the destination. No 
secondhand account can equal the firsthand 
experience! The symbols on the map are 
interpreted differently by different scholars 
according to their preconceived notions, 
predilections and pet theories. If you acquire 
Love, then you can dispense with the 
Scriptures; for the purpose of all the Scriptures is just that: to create the feeling 
of Sarvajana samaana prema (equal love for all), and to negate egoism which stands 
in the way. Reason too, if it comes in the way of this love, is to be discarded as 
'perverted'. (Divine Discourse, April 12, 1959.)


தியாகராஜன் /குரு யயாதி குரு.

Tuesday, August 27, 2013

தீயென ஒழியட்டும். நல்லன வளரட்டும்


கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் பிறந்தநாள்.
அலைபாயுதே கண்ணா என்று வரன் பார்க்கவந்த நாள்  பாடும் மங்கைகள்.
ஆண்டாள்.மீராவின் நாயகன்,
கருமைநிறக்கண்ணன் ,

கலக்கம் தீர்ப்பவன்,
துஷ்ட சம்ஹாரன்,

சரணாகத வத்சலன்.
அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் 
ஹரே ராமா ,ஹரே கிருஷ்ணா என்று பரவச ஒலி  எழுப்ப 
தெருவுலா  வந்தவன்.
பார்த்தசாரதி,
ஏழை பங்காளன்,
நவநீத சோரன்.
பாமா -ருக்மணிப்ப்ரியன் 

தேவகி மைந்தன்,யசோதா வளர்ப்புமகன்.
விஸ்வரூபன்,வாமனரூபன்.

அவன் பிறந்தநாள்  
அவன் சரணடைந்து அவன் க்ருபா கடாக்ஷம் பெற பிரார்த்திப்போம்.
தீயென ஒழியட்டும். நல்லன வளரட்டும்.
கடமையைச் செய்வோம்.கண்ணன் பலன் தருவான்.
ஹரே  கிருஷ்ணா. ஹரே கிருஷ்ணா . ஹரே கிருஷ்ணா .
ஹரே ஹரே.
ஓம் சாந்தி! சாந்தி !சாந்திஹி!

Monday, August 26, 2013

ஒரே குரல் ஒலிக்காது ;ஒளிராது .காதலால் கசிந்துருகவேண்டும்.

இறைவனைப் பற்றிய   விஷயத்தில்  இந்துமதம் காட்டும் அக்கறை  எப்படி என்றால்  குதிரைப் பந்தயம் போன்றது. கிரிக்கட்டில்  மேட்ச் பிக்ஷிங்க் போன்றது.

என்று இந்த வாணிக நோக்கம்  முடியுமோ அன்றுதான்  சனாதன தர்மம்  ஒற்றுமை அடையும். இறைவனின்  கருணை கிட்டும்.

பரிசுத்தம் ,புனிதம் என்ற ஆஷ்ரமங்கள்  ஒரு வாணிக மையம்.


அந்த ஆஷ்ரமங்கள்   அனைத்துக்கும்  ஒளி - ஒலி  புகைப்படக் கருவி பொருத்தவேண்டும்  என்று சுவாமி நித்யானந்தா கூறி உள்ளார்.

வேலூர் பொற்கோவில் பற்றிய தவறான செய்திகள் உண்மை என்ற பத்திரிகையில்  வெளிவந்தன.


கோயிலுக்கு செல்பவர்கள் பக்தர்கள் அதிகமாக இருப்பதால் இறைவனை வழிபடுதல் 5 நிமிடம். அங்குள்ள ஈசல்  புற்று போல் உள்ள கடைகளில் கழிப்பதோ  பல மணி நேரங்கள்.

அருள் பெறுவது பொருள் உள்ளவர்களுக்கு துரிதம். அவர்கள் ஆர அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம்..

என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே.நானும் இறைவன் மேல் அதிகம்
பற்றுள்ளவன் தான். ஆனால் இறைவன் என்ற ஒரு அச்சத்தால் மக்களை ஏமாற்றும் ஒரு பெரும் கூட்டம்  இன்று பாரதம் முழுவதும் வியாபித்து இருக்கிறது.

இதனால்  நாட்டில் பல குற்றங்கள் நடைபெறுகிறது.

உத்தர்காண்ட்  நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்வே இவ்வளவு பாத்திப்பும்  சுயநல பாக்திவேஷம் போட்டு பல கட்டிடங்கள் வணிக நோக்கத்திற்காக கட்டப்பட்டதே.

பழனி எப்படிப்பட்ட சித்தர்கள் வாழ்ந்த வாழுகின்ற பூமி.

அங்கு  உண்மையான  சித்தர்கள் கந்தல் துணியுடன்  பைத்தியக்காரர்கள்
போன்று சுற்றுவர். அவர்கள் அந்தர்த்யானம் அடைந்ததும் அவர்களுக்கு ஆடம்பரம். ஆஷ்ரமம். இன்றும் ஒரு சாக்கடை சித்தர்.அவருக்கு ஒரு கூட்டம்.
கணக்கன்பட்டி யில் ஒரு சுருட்டு சாமியார். ஈஸ்வரபட்ட என்பவர். நாங்கள் ஒரு பைத்திக்கரர் போன்று விளக்குத் தூணுக்கு கீழ் உட்கார்ந்து சுற்றிக்கொண்டிருப்பார்.

நான் சிறுவனாக இருக்கும்போது கண்ணுசுவாமி  என்ற குருட்டு சுவாமிகள் திருஆவினன் குடியில் அமர்ந்து இருப்பார். அவரிடம் ஒரு சிறிய விபூதி டப்பா வெள்ளியில் இருக்கும்.ஒரு சிட்டிகை  எடுத்துக்கொடுப்பார். அந்த தெய்வீக
 மணம்   அவர்   இறைவனடி  சேர்ந்த பின்  யாரிடமும் கிடைக்கவில்லை.

இறைவனை தரிசித்த அனைத்து அருட்செல்வர்களும்  இறைவனைமட்டுமே

சரணடைந்து இருப்பர்..பொருளாசை கிடையாது.அருளாசியும் ,அருளாசையும்
மட்டும்தான்.

இன்றோ  ஆஷ்ராமசாமியார்கள்   சிலர் செய்யும்  சில்மிஷங்கள்  ,அவர்களுடைய சொத்துமதிப்பு,சிறை செல்வது,ஜாமீனில் வருவது,அவர்களின்  மீதுள்ள குற்றச்சாட்டுகளின் வழக்கு நடந்துகொண்டே இருப்பது,மக்கள் மறந்துவிடுவது,புதிய சாமியார்கள் குற்றம் புரிந்த செய்திகள் வருவது இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிடுகிறது.

   பழனி எப்படிப்பட்ட புண்ணியஸ்தலம். இன்று பேருந்தில் இறங்கியதும்
பால்   மணக்குது ,பழம்  மணக்குது என்பதுபோய் சிறுநீர்  நாற்றம்.
ஒரு குடம் தண்ணீர் 50 ரூபாய். லக்ஷக் கணக்கில் பக்தர்கள்.கோடிக்கணக்கில் வருமானம். கிரிவீதி முழுவதும் கடைகள்.

இது பொறாமையாலோ பலரின் தொழிலை  கெடுப்பதாகவோ நினைக்கவேண்டாம்.. இது இறைவன் பக்தியை  புனிதமற்றதாக்கிவிடும்.
இது பழனியில் மட்டும் அல்ல. அனைத்து பாரதப்  புண்ணிய   ஸ்தலங்களிலும்   இதே நிலைதான். காசி--- வேண்டாம்.


இறைவனை  அவமானப்படுத்தும் செயல்கள் ,இறைவன் பெயரால் ஏமாற்றும் செயல்கள், பிராயச்சித்தம் ,பரிகாரம் ஜோதிடம்  என்ற பெயரால் நள்ளிரவு பூஜைகள் என்ற பெயரால் நடக்கும் குற்றங்கள். இதை எல்லாம் தடுப்பதில் இந்து முன்னணி ஈடுபடவேண்டும். அதைவிடுத்து ஒரு நடிகை செருப்புப்போட்டு(பாத ரக்ஷை) நடந்தாள்  என்பதற்கான போராட்டம்  பைத்தியத்தன மானது.

இந்து மத ஒற்றுமை ,ஒரே குரலுக்கு  நாம் முயற்சிக்கவேண்டும்.


இதற்கு இறைவன் மேல்  உண்மையான பற்று,பாசம்,சிரத்தை ,அன்பு ,நேசம் ,
அனைத்தும்  ஆத்மார்த்தமாக  இருக்கவேண்டும்.

  பொருளாசையால்  நாம்  நம் தவறுகளை மறைத்தால் நமது  சனாதன தர்மம் என்ற பெரும் இந்து சாம்பராஜ்யம்  சிதைந்துவிடும்.

கிராமீய பக்திப்பாடல்களும் கர்நாடக பாக்திப்படல்களும் இணையும் வரை

இந்துமதத்தில் ஒரே குரல் ஒலிக்காது ;ஒளிராது ; காதலால் கசிந்துருகி
கண்ணீர் மல்கவேண்டும்.






Saturday, August 24, 2013

THOUGHT FOR THE DAY

Date  Sunday, 25 August 2013 ( As it appeared in Prasanthinilayam)

OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE

THOUGHT FOR THE DAY

Develop attachment for the Lord, who will

always be with you wherever you go. Only the

years that you have lived with the Lord and for

the Lord, are to be counted as true living.

Developprema (divine love) towards

Him,  parama-prema (supreme love) of which

He is the embodiment. Never give room for

doubts and hesitations or questions to test the

Lord’s love. Do not entertain questions such as,

“Why have my troubles not ended? Does He

not love me enough? Why is He ignoring Me? Why is it that He did not speak to

me?” Never think that God does not care for you and that He does not know you.

God is full of selfless love and truly cares for you always. In fact every act of His, is

for your wellbeing!(Divine Discourse, Oct 10, 1964.)