Friday, July 28, 2017

रामचरित मानस --அயோத்யகாண்டம் --௩௨ முப்பத்திரண்டு

வனவாசத்திற்கு தேவையான  பொருட்களை
எடுத்துக்கொண்டு , தன் மனைவி  சீதையையும் ,சகோதரன்
லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு  ராமர் குருவை வணங்கி விட்டு  காட்டை நோக்கி புறப்பட்டார்.
துக்க   மிகுதியால்   அனைவரும்  மயக்கமடைந்தனர்.
  ராமர் வசிஷ்டரின் வீட்டிற்கு சென்றார். அங்கு   ராமரின்  வனவாசப்  பிரிவால் அனைவரும்     துன்புறுவது கண்டு
அனைவருக்கும் ஆறுதல் சொன்னார். பிறகு அந்தணர்களை
அழைத்து அவர்களுக்கு ஓராண்டிற்கு  வேண்டிய உணவுப் பொருட்களை அளித்தார். யாசகர்களுக்கு தானம்  அளித்தார்.
அனைவரின் அன்பையும் பெற்று தன் அன்பினால்  அனைவரையும்  மகிழ்வித்தார்.
பிறகு    பணியாட்களையும்   குருவிடம் ஒப்படைத்து  அவர்களை  பெற்றோர்கள் போல் கவனிக்க வேண்டும்  என்றார்.
மன்னரை  மகிழ்ச்சியாக வைத்திருப்போர் தான் என் நலம் விரும்பும் நண்பர்கள்  என்றார்.
 பிறகு  நகர மக்களிடம்  என் பிரிவால்  யாரும் துன்பப் படும்படி  நடந்துகொள்ளாதீர்கள் என்றார்.
 மீண்டும்    குருவையும்  கணபதி, பார்வதி, சிவன்  ஆகியோரை  வணங்கி ஆசிகள் பெற்று ராமர் புறப்பட்டார்.


ராமர் புறப்பட்டதும் நகரமே துன்பக்கடலில் மூழ்கியது.
ஸ்ரீ லங்காவில் கேட்ட சகுனங்கள் தோன்றின. தேவலோகம்
மகிழ்ச்சியால்   திளைத்தது. ராமர்  கானகம் செல்வதால்  வருத்தமும் , ராக்ஷசர்கள் அழிவார்கள் என்ற  மகிழ்ச்சியும்
தேவலோகத்தில்    காணப் பட்டன.

  தசரதர் மயக்கம் தெளிந்ததும்   அமைச்சர்களிடம் ,,    ராமர் கானகம்    விட்டார் , உயிர் போகவில்லையே  என்று  புலம்பினார். எந்த    சுகத்திற்காக  இந்த  உயிர் உள்ளதுரூ தெரியவில்லையே  என்று புலம்பத் தொடங்கினார்.

Thursday, July 27, 2017

இளைஞர்களே! சிந்தியுங்கள்

காலை வணக்கம். 
கடவுள் அருளட்டும்.
நல்ல எண்ணங்கள் , நல்ல செயல்கள் , ஒழுக்கம் , கடமை ,
கட்டுப்பாடு , நேர்மை , தியாகம் , உழைப்பு 
என்ற தெய்வீக எண்ணங்கள் வளர இறைவன் உதவட்டும் . 
மனிதநேயம் வளர அசுர சக்திகள் ஒழிய
இறைவன் மனம் இறங்கட்டும்.
மாமிச பக்ஷினி , சாகபக்ஷ்ணி என்று கொடிய
சாந்த மிருகங்களைப் படைத்த இறைவன்
மனிதர்களையும் அவ்வாறே கொடிய நேர்மையான
சாதுவான என்றே படைக்கிறான்.
ஆனால் அறிவு பகுத்தறிவு என்று கொடுத்து
கொடிய விலங்குகளை அழித்துவிட வகை செய்தான்.
இந்த கொடியவைகளை, எண்ணங்களை , ஹிம்சையை ஒழிக்க தர்ம ஆசாரங்களை கற்றுக்கொடுக்க மகான்களைப் படைத்தான்.
இஸ்லாமியர்கள் மோதிக்கொண்டு அவர்களை அவர்களாகவே கொடூரமாகத் தாக்கிக் கொண்டு
அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த போது
முஹம்மது நபிகள் மூலம் இன்சானியத் அதவாது
மனிதநேயத்தை வளர்க்க குரானைப் படைத்தான்.
கொடிய விலங்குகள், கடல்வாழ் அசைவ உணவு சாப்பிடும் ஜப்பானுக்கு புத்தரின் மதத்தை அளித்தான்.
ஏசுவை அன்பு ,சேவை , உதவி என்று ப்ரசார்சம் செய்ய புவிக்கு அனுப்பினான்.
நமது ஹிந்தி சாஸ்த்திரங்கள், சீக்கிய,ஜைன சமண மதங்களும் சத்தியம் , அஹிம்சை, தான தர்ம பரோபகாரம் என்ற மனித ஞானத்தை போதித்து
நிலையற்ற உலகில் பாவங்கள் அசத்தியங்கள் ஒழுக்கமின்மை ஆகியவைகளை
நினைத்தாலே பாவம் ,பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது தண்டனைதான்
இதை சட்டப்படி உணராமல் சமுதாயத்தைப்
பார்த்து ஒவ்வொரு குடும்ப அரசியலின் அவலங்கள்
பலகோடிகள் இருந்தாலும் கேடிகள் என்றே சகித்து வாழும் தன்மையை அளித்துள்ளான்.
ஆக மதங்கள் அனைத்துமே அன்பையும்
பண்பையும் ஒற்றுமையையுமே
வழிக்காட்டி நல்வழிப்படுத்துகின்றன.
இதை புரிந்து மத ஜாதி இன சண்டைகள் இல்லாமல்
வாழ்ந்தால் வையகம் வாழ்க, வையகம் ஒரு குடும்பம் , சர்வே ஜனா சுகினோ பவந்து -அனைத்து மக்களும் சுகமாக வாழவேண்டும் என்ற
குணம் வளரும்.
இதற்கு ஆண்டவனின் நல்ல ஞானம் வையகத்தில்
அதிகமாக இருப்பதால் கொடியவர்கள்
அதிக இரக்கமற்ற செயல்களைச் செய்யமுடியாமல்
தண்டனைக்கும் , அவமானத்திற்கும் ,கடவுள் அளிக்கும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. சத்தியம்.
மதங்கள், ஜாதி இன பெயரால் சண்டைகளை உருவாக்கும் மாயை , சைத்தான் சாத்தானிடம் இருந்து வையகம் காக்கும் ஞானம் வளரட்டும்.
இளைஞர்களே ! சிந்திப்பீர்.
விநாயகப்பெருமானை அவமதிக்காதீர்கள்.
வாழ்க வையகம் ! வளர்க நற்பண்பு. இதற்காக
இறைவனை பிரார்த்திப்போம்.

Monday, July 24, 2017

அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ் .

அன்பு என்றும்   இரண்டுபேருக்கே  என்பதல்ல.
காதல் என்பது இருவருக்கும்  இடையில் .
 மீரா - கிருஷ்ணன் ,
ஆண்டாள் - ஆண்டவன்    காதல்.

பக்தி  -சிரத்தை ஆட்களைக் கூட்டுகிறது.
காதல் ஒருவழிப் பாதைபோல்
மூன்றாவது ஆளுக்கு  இடம் விடுவதில்லை.
இப்படிப்பட்ட அன்பில் திளைத்தவர்களில்
பிரதானமானவர்கள்  பக்ததியாகராஜர்  ,
ரமண மஹரிஷி, யோகிராஜ் சரத் குமார் , சீரடி சாய்.
இந்த நேரடி அன்பில் ஆண்டவன் அருள்
அன்பால் ஈர்க்கப்பட்டு , காதலால் மலர்ந்து ,
பக்தியால் பூத்து-காய்த்து, பழுத்து ,
பார் முழுவதற்கும் நல்வழி காட்டி
சாந்தி, மகிழ்ச்சி , திருப்தி அளித்து,
அகிலத்தை பொறாமை ,கோபம் ஆணவம் ,பெண் ஆசை
முதலிய தீய குணங்களை விரட்டி அடித்து,
வையகம் வாழ வழி   வகுக்கிறது.
     ஓம்  கணேசாய நமஹ.
  ஓம்  கார்த்திகேயாய நமஹ
  ஓம்  நமஹ சிவாய.
  ஓம் துர்காயை  நமஹ.

 இறைவன் நாமம் பிராணாயாமம்
பகவான் அருள் பெறலாம்.
 பகவானால் இரட்சிக்கப்படும்
ஒருவனை யாராலும்
அடிக்க முடியாது.
வையகமே எதிர்த்து ,
 தனி ஒருவனாக நின்றாலும்
மயிரைக்கூட பிடுங்க முடியாது.
 (---படிக்காத பக்தர்  கபீர்தாஸ்  

அன்பே ஆண்டவன்

அன்புக்கு  ஆண்டவன் அன்பே ஆண்டவன்
அன்பிலேயே  ஆண்டவன்  அன்புக்காகவே ஆண்டவன்
அருள்தரும் ஆண்டவன்  அவனியில் ஆண்டவன்
அகிலாண்டம் ஆதிசிவன் விஸ்வநாதன் .
அன்பே   சிவம் . உலகம் எதில் அடங்குமோ
மயங்குமோ மூழ்குமோ கலையுமோ  அங்கே
மங்கை   ஓர்  பாகன்  அர்த்தநாரீஸ்வரன்
அவன் மன்மதனை எரித்தாலும்
மங்கையர் பாகன்.

Sunday, July 23, 2017

உள்ளத்தூய்மையே இறை அருள்

ஆன்மீக உணர்வு தெய்வீக ஈர்ப்பு
உள்ளுணர்வு இதில் சஞ்சலம்
அதையும் மீறி தன து அமானுஷ்ய
ஆற்றலைக் காட்டும் மகான்கள்
என் நடை முறை வாழ்க்கையில் 
காட்டி தங்கள் வாழ்ந்த வளாகத்துக்கு
வரவழைத்து அதிர்வலைகள் காட்டுகின்றனர்.
வடலூர் வள்ளலார் ,பூண்டி மகான் ,
பாம்பன் சாமிகள் .சித்தானந்தம். சத்யா சாய் சீரடி
இப்பொழுது படே சாயபு
புதுச்சேரி என்னே ஈர்ப்பு
எளிய ஆடம்பரமற்ற சூழல்
சிவன் கோயில்
முஸ்லிமாக இருந்தாலும்
அவர் வணங்கிய விநாயகர்
தெய்வீக சக்த்திக்கு தூய மனம்
மந்திரங்கள் இரண்டாம் நிலை ..
ஞான மார்க்கம் வெளி ஆடம்பரமற்ற
தியானம் இறை அருள் .உண்மையில்மகான்கள்
உள்ளத் தூய்மை யே இறை அருள்
இறை தரிசனம் .
ரமணர் காட்டியதும் அதே

प्रार्थना

சனிக்கிழமை
சனிப்ப்ரீத்தி
சங்கடங்கள்
தீர பிரார்த்திக்கிறோம் .
பூர்வ ஜன்ம பாவங்கள்
இந்த ஜன்ம அறிந்தோ
சேர்க்கை தோஷத்தாலோ
சமுதாய நடை முறையாலோ
தன் நலத்தாலோ
தன் உறவு நட்பாலோ
செய்த கர்மங்கள்
அறிவிருந்தும் தெளியா அறிவு
அனைத்தையும் மன்னித்து
அகிலத்தில் வாழ மன நிறைவு
மன அமைதி .மன மகிழ்ச்சி
மன ஒருமைப்பாடு ஆழமான
தியானம் செய்ய உன் கருணை
உலகில் வேண்டும்
அருள்வாயாக.
அனைவருக்கும் உன் அன்பு பார்வை
வேண்டும்.
--------_--------
நண்பர்களுக்கு காலை வணக்கம் .

Wednesday, June 7, 2017

தி ரு ப்பதி தங்க.

சிலர் திருமலையில் விடுதிப் பட்டியலைப் பகிர்ந்து கொண்டனர். TTD இல் ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

MUTT (TIRUMALA)

மூல் மட் மின்: 0877-2277499.

புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா

விவேர்டினினி சபை Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் மின்: 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன ராமானுஜா

ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சரத மடம் Ph: 0877-2277269,2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316

உடிபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிரிந்தாவனம் ப: 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம்

மோதிலால் பன்சிலால் தர்மசலா ஃபீ: 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ட்ரி பி: 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சால்ட்ரி டி: 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் மாளிகை பி: 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் அறநெறிகள் பி: 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் ப: 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடு திருப்பதிகோவில் பாதுகாவலர்கள்
இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு
700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் எப்படி?

நிபந்தனைகள்.

1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4) .காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) .நானும் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதுர் அவசியம்.

7) .காலை உணவு பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவந்த பிறகு
3 மாத கழித்த பின் அனுமதி அனுமதிக்கப்படுவர்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. நண்பர் கேட்டுக் கொண்டதால் இந்த தமிழாக்கத் தகவல்கள். நன்றி