வனவாசத்திற்கு தேவையான பொருட்களை
எடுத்துக்கொண்டு , தன் மனைவி சீதையையும் ,சகோதரன்
லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு ராமர் குருவை வணங்கி விட்டு காட்டை நோக்கி புறப்பட்டார்.
துக்க மிகுதியால் அனைவரும் மயக்கமடைந்தனர்.
ராமர் வசிஷ்டரின் வீட்டிற்கு சென்றார். அங்கு ராமரின் வனவாசப் பிரிவால் அனைவரும் துன்புறுவது கண்டு
அனைவருக்கும் ஆறுதல் சொன்னார். பிறகு அந்தணர்களை
அழைத்து அவர்களுக்கு ஓராண்டிற்கு வேண்டிய உணவுப் பொருட்களை அளித்தார். யாசகர்களுக்கு தானம் அளித்தார்.
அனைவரின் அன்பையும் பெற்று தன் அன்பினால் அனைவரையும் மகிழ்வித்தார்.
பிறகு பணியாட்களையும் குருவிடம் ஒப்படைத்து அவர்களை பெற்றோர்கள் போல் கவனிக்க வேண்டும் என்றார்.
மன்னரை மகிழ்ச்சியாக வைத்திருப்போர் தான் என் நலம் விரும்பும் நண்பர்கள் என்றார்.
பிறகு நகர மக்களிடம் என் பிரிவால் யாரும் துன்பப் படும்படி நடந்துகொள்ளாதீர்கள் என்றார்.
மீண்டும் குருவையும் கணபதி, பார்வதி, சிவன் ஆகியோரை வணங்கி ஆசிகள் பெற்று ராமர் புறப்பட்டார்.
ராமர் புறப்பட்டதும் நகரமே துன்பக்கடலில் மூழ்கியது.
ஸ்ரீ லங்காவில் கேட்ட சகுனங்கள் தோன்றின. தேவலோகம்
மகிழ்ச்சியால் திளைத்தது. ராமர் கானகம் செல்வதால் வருத்தமும் , ராக்ஷசர்கள் அழிவார்கள் என்ற மகிழ்ச்சியும்
தேவலோகத்தில் காணப் பட்டன.
தசரதர் மயக்கம் தெளிந்ததும் அமைச்சர்களிடம் ,, ராமர் கானகம் விட்டார் , உயிர் போகவில்லையே என்று புலம்பினார். எந்த சுகத்திற்காக இந்த உயிர் உள்ளதுரூ தெரியவில்லையே என்று புலம்பத் தொடங்கினார்.

No comments:
Post a Comment