ராமர் போனதுமே அயோத்யா மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அனைவருமே தங்களை அனாதைகள் போல் பாவித்து துன்பக்கடலில் மூழ்கினர்.
ராமர் அவர்களுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி திரும்பிச் செல்லும் படி வேண்டினார் அவர்கள் திரும்பினாலும் அன்பின் காரணமாக மீண்டும் பின் சென்றனர்.
அயோத்தியாவே மிகவும் பயமுறுத்துவது போல் காட்சி அளித்தது. இருள் சூழ்ந்து இருபதுபோல மக்கள் உணர்ந்து பயந்தனர். மக்களே ஒருவர் மற்றவரைப் பார்த்து பயந்தனர்.
வீடு சுடுகாடுபோலும் , குடும்ப உறுப்பினர்கள் பூத பிரேதம் போலவும் நலம் விரும்பிகள் நண்பர்கள் அனைவரும் யமதூதர்கள் போல் இருந்தனர். தோட்டங்களில் மரம் செடிகள் கொடிகள் வாடிக்கொண்டிருந்தன. நதிகளும்
குளங்களும் பயம் அளிப்பவையாகத் தோன்றின.
ராமர் இல்லா அயோத்தியில் வளர்ப்பு பறவைகளும் ,
மிருகங்களும் கவலைப் பட்டன. நகரமே பயங்கர காடுபோல் காட்சி அளித்தது.
கைகேயியை வேட்டைக்காரியாக மாற்றி காட்டுத்தீ வைத்தவள் போல் கடவுள் மாற்றிவிட்டார். அனைவருமே
ராமர் , லக்ஷ்மணன் சீதை இல்லா அயோத்யாவில் சுகம்கிடையாது என்றே உணர்ந்தனர்.
அனைவரும் தொடர்ந்தாலும் ராமர் தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தார். முதல் நாள் தமஸா நதிக்கரையில்
தங்கினர். ராமர் கருணை நிறைந்தவர். இரக்கமுள்ளவர்.
அடுத்தவர்கள் துயரத்தைப் போக்குபவர். மற்றவர் துன்பம் கண்டு துயரடைபவர்.
அவர் அன்புடன் மற்றவர்களுக்கு மென்மையாக அன்புடன்
கூடிய அறநெறியுடன்அறிவுரைகளை வழங்கினார்.
ஆனால் மக்கள் அன்பு மிகுதியால் திரும்ப வில்லை.
No comments:
Post a Comment