Friday, November 13, 2015

உலகப்பற்று

காலைவணக்கம்.
பழனி முருகா
பாலகுமாரா.!
ஆண்டியாய் வந்தாலும்
ஆறுமுகமாய் வந்தாலும்
தந்தைக்கு உபதேசம் தந்தாலும்
தரணியில் வாழ
தாரத்துடன் வாழ
தெய்வானை வள்ளியுடன்
வள்ளுவர் குறள் நெறி
வையகத்துக்குகாட்டிய
வள்ளிமணாளா
உலகப்பற்றுடன்
உலகநாதன் பற்றும்
இறுகப்பெற்றால்
உலகப்பற்று உதிர்ந்து விடும்

பற்றுக பற்ற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பிறவி உண்டாக மூலகாரணம் வா.
அவா வென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பீனும் வித்து

கந்தன் கருணை

கந்தா கடம்பா கார்த்திகேயா
கலியுக வரதா.!
கருணைக்கடலே..!
காலை முதல் மாலை வரை
கந்தாகந்தா  என்றால்
கண நேரத்தில் கருணைபுரிவான்
இன்னல் நீக்கி இன்பம் அளிப்பான்.
அன்பர்களுக்கு ஆனந்தமளிப்பான்.
எண்ணங்கள் யாவையும்
ஏற்றமளிக்கும்
உள்ளம் நிறைவடையும்
ஊக்கமும் ஒப்பில்லா உயரவுண்டாகும்
ஓம் முருகா ஓம் முருகா என்றால்
ஓளஷதமாகும்.
கந்தா கந்தா என்றால்
கரையில்லா மகிழ்ச்சி பொங்கும்

Tuesday, November 10, 2015

தீபாவளி

ஆண்டவன் இருக்கிறானா?
என்ற கேள்விக்கு
இன்று தீபாவளி
இருள் சூழ்ந்த தீபாவளியாக
வெள்ளம் சூழ்ந்த தீபாவளியாக
நடைபாதை வியாபாரிகளுக்கு
நஷ்ட தீபாவளியாக மாறிவிட்டது.
மகிழ்ச்சி குறைந்த தீபாவளி
மகிழ்ச்சியற்ற தீபாவளி
டாஸ்மாக் வியாபாரம் அதிகமாகுமா .!.!?  குறையுமா  இதுவே அரசின் இலக்கில் வெற்றி பெருமா.?
பாரப்போம்.
மக்களே.டாஸ்மாக் போகாமல் தீபாவளி கொண்டாடுங்கள்.
அதுவே மதுக்கடை மூட உண்மை போராட்டம்.

Sunday, November 8, 2015

தீபாவளி

தீபாவளி தீயவை ஒழித்து
இருளில் ஒலிஔி பெற்று
புத்தாடை உடுத்தி மகிழும் நாள்.
இந் நன்நாளில் டாஸ்மாக்
அதாவது மதியிழக்கும் மதுக்கடை
பக்கம் பார்வை செல்லக்கூடாது.
மது அருந்தக்கூடாது
ஐம்புலன் அடக்கத்துடன்
மதுவிற்பனையை
மந்தமாக்கி நஷ்டமடையச்
செய்ய சபதம் எடுங்கள்
தீய வருமானம் வளர்ச்சியல்ல
நாட்டிற்கும் வீட்டிற்கும் தீமையே.
இந்த தீபாவளி மதுக்கடை முந்நூற்று அறுபது கோடி
இலக்கை டெபாசிட் இழக்கச் செய்ய
சபதம் எடுப்போம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அரசல்ல .மக்கள் நினைத்தால்
மதுக்கடை பக்கம் செல்லாமல்
இருந்தால் போதும்
போராட்ட அரசியல் தேவையில்லை
இறைவன் நல்லறிவை  தந்து மாயையை ஒழிக்கட்டும்.

Thursday, November 5, 2015

அவனருள்.

வையக மாற்றங்கள்.

வையகத்தில் வைகறைமுதல்  இரவு வரை மாற்றங்கள் 

எவ்வளவோ  மாற்றங்கள் 

குளிர் விடியக்காலை 

குளிர்காயகாலை வெயில் 

சுட்டெரிக்கும் நடுப்பகல் 

மாலை வெயில் 
இரவுகுளிர் 

வாழ்க்கையிலும் பால பருவம் 
ஆனந்தம் 
அந்த  ஆனந்தத்திற்கு  ஆண்டவனின் ஆசிவேண்டும்.

நடைபாதைக் குழந்தைகள் 

குளிரில் பஞ்சத்தில் ஆடையின்றி 
கழிப்பறை இன்றி  ஒருபக்கம்.

அங்கேயே ஆனந்தக்களிப்பில் 
உணவுமிகுதி ,உடையும் மிகுதி 
ஒரு பக்கம்.
எத்தனை மக்கள் எவ்வளவு வேதனை 
எத்தனை மக்கள் மகிழ்ச்சிபொங்க 

அங்கே தான் ஆண்டவனின் சித்து விளையாட்டு.
அவன் அன்பு வேண்டும் .அவன் அருள் அவனன்பே  பிரதானம்.வேண்டும் 
ஆஸ்த்திக்கும்  ஆரோக்யத்திற்கும் 
ஆயுளுக்கும் ஆயகலைகளுக்கும்
அவனருள்.

Tuesday, November 3, 2015

ஸனாதனதர்மம்

அல்லா ஒன்றே தெய்வம் .
குரானில் இல்லாது ஒன்றுமில்லை

ஏசுவே பாபங்கள்ஏற்று மன்னிப்பவர்
என்று குறுகிய மனப்பான்மை
உள்ள மதாசாரத்தில்
அந்த மஐங்களை சாரவில்லை எதிரத்தால் என்ற அச்சத்துடன்
இருக்கும் வையகத்தில்
ஜகன்நாதன் விஸ்வநாதன் ஜகத்ரக்ஷகன் என்று வையகத்தைக் காக்க ப்ரார்த்திக்கும் மதம்
நமது ஸனாதனதர்மம்.
ஜயஜகத்
வையகம் வாழ்க என்ற முழுக்கம்
ஜகத்மித்யா உலகம் பொய்யானது
என்ற முழக்கம் ஸத்யமேவ ஜயதே
வாய்மை வெற்றிபெறும்
பாபிகளுக்கு மன்னிப்பில்லை
தண்டனை வேதனைகள் நிச்சயம்
இறந்த பின்னும் தண்டனை.
கர்ம வினைகளுக்கு
ஏழேழு பிறவியிலும் தண்டனை
என்றெல்லாம் இறையான்மை வலியுறுத்தி நிலையாமையைஅறிவுறுத்தி
அறவழிகாட்டி வழிநடத்தி
ஆண்டவனை உருவமும் அருவமுமாக ஏற்று
அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாஷமாக மனிதனின் ஒவ்வொரு செயலையும்
கண்காணித்து  தண்டனை.அளிக்கும்
வாழவைப்பவராக
காட்டும் இறைசக்தியே ஸனாதனதர்மம்.
அறம் வளர்க்கும்்
அறநெறியோடு பொருளாசையற்று
இறைப்பணியில் ஈடுபட்டால்
இறைவன் இயற்கையாக வழங்கும்
கடமையை பணியை செய்தால்
மகழ்வுடன் வாழலாம் என்பதே
ஸனாதனதர்மம்.
ஹிந்து என்று அயலவர் இட்டநாமம்
குறுகியவட்டம்.
ஸனாதன தர்மம் ஜகம் முழுவதும்
காக்கும் சக்தி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இறைவன் எளியவன் .
சுடலைபொடி பூசி
வாழ்பவன்
ஒலிஔி வடிவானவன்.
ஓம் ஓங்காரம்

இழந்தவர் அதிகம்.

அன்பும் ஆழ்ந்த தியானமும்

பற்றும் பாசமும் கவரும் உலகில்

பற்றற்ற பக்தி வருவது மெத்தக் கடினம்.


பற்று பாசம் பந்தம் நேசம் நட்பு  இவைகளை

பாரினில் விரும்புவோர் நேர்மையுடன்

இருப்பதும்  கடினம்.

இவ்வையகப்பாசம் இன்னலைத் தரும் .

துரோகத்தைத் தூண்டும்.

நேர்மையற்றோருக்கு பக்கபலமாய் இருக்கத்தொன்றும் .

ராமனின் பாசம் வனவாசம் என்றால்

பரதனின் பாசம் குடில் வாசம்.
கர்ணனின்  நட்புக்கு நன்றி அநீதிக்குத் துணை.
விபீஷணனின்  பிரிவு  துரோகம்.
பாரினில் பற்றால் பாசத்தால்
இழந்தவர்  அதிகம்.

இறைவனின்பற்றால்   ஆனந்தம்.
நாட்டைத்துறந்த மன்னனுக்குமானந்தம். ஆகையால்
 தியானம்மான நிறைவு , மன அமைதி.