Monday, May 20, 2019

श्री கணபதி சச்சிதானந்தஸ்வாமீ ஜீ க்ரியா யோகா .

श्री கணபதி  சச்சிதானந்தஸ்வாமீ ஜீ  க்ரியா  யோகா  .
பகுதி  --4.

வ்ருத்திஸாரூப்யமிதரத்ர:

 இரத்தர:  யோகமில்லா நேரத்தில் 
வ்ருத்தி ஸாருப்யம் =   அந்த  சச்சிதானந்த ரூபம் மன எண்ணத்துடன் ஐக்கிய மாகி  ஆத்மா பரமாத்மா  சம நிலை அடையும்.
  மன விஷயங்களும்  வடிவ ஞானமும் மிக அண்மையில்  ஒன்று  பட்ட நிலையே
யோகம்  .  பார்வை யில்  அப்பொழுது  இரண்டு  பட்ட நிலை  ஆகிறது. யோகம்  இல்லா நேரத்தில்  தனித்தும்,பார்ப்பவன்
வடிவத்திலும் யோகா  நேரத்தில்  துவைத்து வம்  அத்வைத்வமாக ஆகி
ஆத்மா  பரமாத்மா  வுடன்இணைவதில்
பிரம்மானந்தம். வர்ணிக்க முடியா
அனுபூதி நிலை.
இறை உணர்வு. பேரானந்த நிலை.
இந்த  ஒன்று  பட்ட நிலையில்
ஸஜாதிய விஜாதிய  வேற்றுமை  உணர்வு 
அகன்று  பிரம்மனில்  மனம் நிலைத்து  விடும்.
 தங்கம்,வெள்ளி, மண், தாம்பரம்  மூலப்பொருட்கள்.
அவைகள்  பல வடிவங்கள்
விருப்பத்திற்கு  ஏற்ப  மாறு கின்றன.
அப்போது  அதன் பெயர்கள் மாறுகின்றன.
தங்கத் தோடு, ஒட்டியாணம், வளையல்கள், வெள்ளி த் தட்டு, வெள்ளி  சொம்பு.  மண் குடம்,தாம்பரம் சொம்பு,
 அவ்வாறு    விசுத்தமான ஆத்ம ஸ்வரூபம்,
வெவ்வேறு  வினைப்பயன்  என்ற  வார்ப்பில் பில்  விழுந்து  பல வடிவங்கள்  பெற்று  ராமா,கிருஷ்ணா, சிவா,அல்லா,ஏசு  என்றாலும்  மூலப் பொருட்கள்  ஒன்றே.
ஆத்மா பரமாத்மா  ஐக்கிய  நிலை.
 யோகா  பயிற்சியில்  சுவாச  பந்தனம்
மன ஒருமைப்பாடு, தியானம்,மூலாதாரம் முதல் ஸஹஸ்ரஹார சக்கர ஞானம்,திவ்ய தரிசனம், சாக்ஷாத்காரம்  அதாவது இறை வனை  தரிசித்து  பேட்டி  காணல்
ஐக்கிய மாதல் .இவையே தத்தா கிரியா  யோகா பயிற்சி  .




No comments: