ஆறு ப டை முருகா
அங்கிங்கெனாதபடி
அனைத்து ஊரிலும் முருகா.
என்னை என் நாட்டினரை
இனியவை தந்து காப்பாயாக!
வடபழனி ஆண்டவா .
விராலிமலை வேலவா !
வயலூர் வடிவேலா.
ஒட்டன் சத்திரம் குழந்தை வடிவேலா
குன்னக்குடி குமரா.
மருதமலை மாமணியே
ஹஸ்தினாபுரக் ஹரிஹரன் சகோதரா!
குன்றத்தூர் குமரா.
முருகா .! முத்துக்குமரா!
ஷண்முகா போற்றி!
சிவகுமாரா போற்றி .
சிங்காரவேலா போற்றி!
சுப்ரமணி யா போற்றி .
சூக்ஷம குருவே போற்றி!
கஜமுகன் தம்பியே போற்றி!
பாலகுமாரா போற்றி
பீதாம்பர மருகா போற்றி
மயில் வாகனா போற்றி !
மயூரநாதா போற்றி .
தெய்வநாயகி மணவாளா போற்றி
வள்ளி மணாளா போற்றி
சூரஸம்ஹாரா போற்றி.
அபிஷேகப்பிரியாபோற்றி!
அபிராமி புதல்வா போற்றி.
ஆவினன் குடி வேலவா போற்றி.
அழகனே போற்றி
ஆனந்தனே போற்றி
இனியவா போற்றி
ஈச மகனே போற்றி
உமா குமாரா போற்றி
ஊ ர் உலகம் போற்றும் சக்திவேலா போற்றி.
எட்டுக்குடி வெற்றிவேலா போற்றி
ஏகாம்பர குமாரா போற்றி
ஐங்கரன் தம்பியே போற்றி
ஒப்பிலா மாமணியே போற்றி.
ஓதுவாரை காப்பவனே போற்றி
ஓளஷதமாய் இன்னல் களைபவனே போற்றி
ஓளவைக்கு காட்சிதந்தாய் போற்றி
பாலமுருகா போற்றி
No comments:
Post a Comment