இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்வதில்லை
----இது பொதுவான இறைவணக்கம்.
கவிஞர் இஸ்லாமியர் என்பதற்காக இதற்கு
மதச்சாயம் பூசி
ஐயரும் பாடுகிறார்
என்ற ஒரு முகநூல் பதிவு.
நல்லதை யார் சொன்னாலும்
ஏற்கும் மனப்பக்குவம் உடையது
சனாதன தர்மம்.
ஹிந்து என்று வெளிநாட்டினர்
சொன்னதையே ஏற்று
செல்லும் மதம் ஹிந்து மதம்.
இறைவனை உருவமும்
அருவமுமாக
ஏற்ற நாடு பாரதம்.
மனிதநேயமே ,
மனிதர்களுக்கு செய்யும்
தொண்டே
மகேசன் தொண்டு.
இறைவனை வழிபட வேண்டும்.
இப்படித்தான் என்ற
வரைமுறை கிடையாது.
ராம் , ராம் என்ற நாம ஜபம்
ராம் , ராம் என்ற நாம ஜபம்
ராமாயணம் எழுதவைத்தது.
அது மாரியம்மனாக இருந்தாலும் சரி
மேரியாக இருந்தாலும் சரி.
இறைவன் என்ற பயமின்றி
அநியாயங்கள் நடக்கின்றன.
ஆனால் இறைவனளிக்கும்
மரண தண்டனையில் இருந்து
தப்ப முடியாது.
No comments:
Post a Comment