இறைவன் உள்ளத்தில் அமர வெற்றிடம் உள்ளம்.
வெற்றி பெற நம் மனதில் இறைவனை மட்டும் ஐந்து நிமிடம்
மனதில் அமர்த்தவேண்டும் .
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமர அமரந்திருக்கும் இறைவன்
வெற்றிடத்திலும் உள்ளான் .
ஒரு சாது ஒரு கடைக்குச் சென்றான் .
அங்கு பல டப்பாக்கள் இருந்தன.
சாது ஒவ்வாரு டப்பாவிலும்
என்ன இருக்கிறது என்று வின
கடைக்காரரும் இதில் உப்புஇதில் பருப்பு இது சீரகம் இது மிளகு என்று சொன்னார் .இறுதியில் ஒருடப்பாவில் என்ன இருக்கு என்று கேட்க ராம் ராம் என்றார்.
சாதுவுக்கு புரியவில்லை .
இதென்ன ராம் ராம் . அதில் ஒன்றும் இல்லை என்பதைக்காட்டுமாம்.
சாதுவிற்கு வியப்பு.
ஒன்றுமில்லா இடத்தில் இறைவன் உள்ளார்.
பொருளுள்ள இடத்தில் இல்லை. அங்கு எதோ வையகத்தில் வாழும் பொருள் இருக்கும் .
கடவுள் உள்ள மனம் வெறும் வெற்றிடமாக இருக்கவேண்டும்.
அதற்கு உள்ளம் குறைந்த பக்ஷம்
இந்த உலகியலில் இருந்து விடுபட்டு இறைவனை மட்டும்
தியானிக்கும் காலிடப்பாவாக இருக்க வேண்டும் .
தென் நாடுடைய சிவனே போற்றி !
என் நாட்டவருக்கும் இறைவா போற்றி!
கந்தா போற்றி ! கடம்பா போற்றி!
No comments:
Post a Comment