இறைவனைத் தேடு ?
எங்கே சென்று தேடுவது?
குருவைத்தேடு ?
குருவை எங்கே சென்று தேடுவது ?
அடர்ந்த வனத்திலா ?
ஆலயங்களிலா ?
ஆஷ்ரமங்களிலா ?
ஹோமம் செய்தா ?
யாஹம் செய்தா ?
காணிக்கைகள் செலுத்தியா ?
குருவுக்கு குரு யார் ?
சித்தர்கள் மூலமாகவா ?
அலைபாயும் மனதை எப்படி அடக்குவது ?
ஆசை துறந்து வாழவேண்டுமா ?
அனைத்துக்கும் ஆசைப்பட்டு வாழவேண்டுமா ?
நல்லமனம் வேண்டுமா /?
ஆஸ்திவேண்டுமா ?
இப்படி அலைபாயும் கேள்விகள்.?
சனாதன தர்மமா ?இஸ்லாமிய தர்மமா ?கிறிஸ்தவ தர்மமா ?
புத்த தர்மமா ?ஜைன தர்மமா ? சீக்கிய தர்மமா ?
உருவமா?உருவமற்ற வழிபாடா ?
எத்தனை வழிகாட்டிகள் ?
எத்தனை மார்கங்கள் ?
அத்வைத்தமா ?த்வைத்தமா ?விசி ஷ்டாத்வைத்தமா ?
யோகமா / ப்ராணாயாம குண்டலினி சக்தியா ?
ஆழ்நிலை தியானமா ? சூழ் - நிலை தியானமா ?
இதுதான் இறைவனைக் காண வழி --என்ற வரைமுறை உண்டா ?/
ஞானம் வேண்டுமா ? அன்பு வேண்டுமா ?
இத்தனையும் மறந்து வழிபடும் சிந்தனை வேண்டும் ?
சத்தியம் ,அன்பு ,தொண்டு ,பிறருக்காக வாழ்தல்
நேர்மை ,கடமை செய்தல் , மனிதநேயம் .
ஒன்றே செய்க ; நன்றே செய்க .
ஐந்து நிமிட சிந்தனை காலை எழுந்தவுடன் .
ஐந்துநிமிட சிந்தனை தூங்குமுன் .
இரவில் தூங்குமுன் சிந்தனை
நாள் முழுவதும் என்ன செய்தோம் ?
நல்லன என்ன /தீயன என்ன ?
காலையில் நல்லன செய்யவேண்டும் .
நமக்கு இயற்கையாக ஆண்டவன் அளித்த சக்தி என்ன /
நமக்கு இயற்கையாக உள்ள ஆற்றல் என்ன ?
இயற்கையாக பாடமுடியுமா ?ஆடமுடியுமா ?
பேச முடியுமா ?பளு தூக்கமுடியுமா ?
ஓவியம் வரைய முடியுமா /காவியம் படைக்க முடியுமா ?
ஆட்சி செய்ய முடியுமா ?அடங்கி வாழ முடியுமா ?
அதிகார வாழ்க்கையா ? அடிமை வாழ்க்கையா ?
பணமா ?கல்வியா ?வீரமா ?
இவை எல்லாம் இயற்கையில் வருகிறதா ? செயற்கையால் முடியுமா ?
பயிற்சி --முயற்சி .--வெற்றி --தோல்வி.
உலக அழகியைப்பார்த்து ஆஹா! நாமும் அப்படி ஆகவேண்டும்
என்று நினைப்பது பயிற்சி --முயற்சி யால் முடியுமா ?
அறிவியல் ,இலக்கியம் ,அரசியல் சிந்தனைகள் மூன்றும் பெற முடியுமா ?
இயற்கைத்திறனை அறிந்து செயல்பட்டால் நாமும் இறைவனைக்
காண லாம்.
அதற்கு தியானம் ஆழ்நிலை தியானம் போதும் .
அதற்குத்தான் உன்னையே நீ அறிந்துகொள் .
உண்மையைத் தெரிந்துகொள்.
அதுவே ஆண்டவன்.
அஹம் பிரம்மாஸ்மி. --நானே கடவுள்.
No comments:
Post a Comment