Sunday, September 8, 2013

என் மனக்கவலை கலியுகம் இவ்வளவு மோசமா?விநாயகா!




கலியுக தெய்வம் கந்தனின் அண்ணனே!
கணேசா!விநாயகா!கஜமுகா!
உன்  சதுர்த்தி பூஜை  இன்று.
நீதானே பக்தர்களுக்கு செல்லப்பிள்ளை.
கணங்களுக்கு நாயகன்  கணபதியே!
கலியுகம் இப்படித்தான் என்று நடக்கும் என்றே 
கணக்கற்ற தவறுகள் தெரிந்தே செய்து,
கணக்கிலே தவறுகள்;
நீதியில் தவறுகள்;
நிதியில் முறைகேடுகள் .
தேர்தல் ஊழல்கள்;
அலைக்கற்றை ஊழல்கள்;
மயான ஊழல்கள்'
மாயமான கோப்புகள்  ஊழல் மறைக்க;
அனைத்தையும் சகித்தாலும் 
கண நாயகா! உன் அழகுப் பதுமைகள் 
அலைகளால் அலங்கோலமாவதால்
ஆனந்த பூஜை செய்த பின் ---உன்னை 
அழகின் அத்புதப்   படைப்பை 
பலர் கூடி தேர் இழுத்து காவலர் புடைசூழ 
கடலில் பளுதூக்கியால் எரியும் கொடுமை .
எனக்கேனோ வேதனைதான்.
பலரிடம் விடையறிய  கேட்கின்றேன் 
இந்த இழிசெயலின்  வேத வழிகாட்டி ,
உபநிஷத்துக்களின் சாரம் ஆதாரம் எங்கே என்றே.
கஜமுகாசூரனை கார்த்திகேயன் அளித்த வரலாறு சூரசம்ஹாரம்.
அந்த கஜமுகன் கணாதிபதியையே அழிக்கும் பெருங்கூட்டம்.
ஒற்றுமை வலிமை காட்ட எத்தனையோ வழிகள்.
ஆனால் இந்த அழிக்கும் செயல் எனக்கு வலிகள்.
என் மனக்கவலை கலியுகம் இவ்வளவு மோசமா?விநாயகா!




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விநாயகா...! உனதருள் அனைவருக்கும் வேண்டும்...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...