Friday, September 6, 2013

இருக்கும் வரை அமைதி என் அன்பர்களுக்கு. அன்பிலே,பண்பிலே வாய்மையிலே நான்.

கலியுக தெய்வமே ,கந்தனே !
கண்டபடி ஊழல்
கதறக் கதற கொலை ,
கத்த -கத்த  கற்பழிப்பு;
கண்டும் காணாமல் இருப்பதேனோ;

பக்தா!என்னை சுரண்டியபோதே
சுரண்டியவர்களுக்கு பயமில்லை .
சுரண்டட்டும்  என்றே
இருந்துவிட்டேனே.

உன்னைச் சுரண்டினாலும்
உன்னால்  உண்டியல் நிரப்ப முடிகிறதே;
உன் அருளை எப்படியோ பொழிகின்றாய்.
உன் உண்டியலில் அவர்களும் பொழிகின்றனர்.

பக்தா ! எப்படியோ என் மௌன தண்டனையும்
என்னை  உணர்ந்து மெய்சிலிர்க்கும்  பக்தர்ககளும்
எண்ணிக்கையில் அதிகம்; ஏற்றம் பெறுவதால்;
ஏமாற்றம் அடைந்தாலும் அதுவும் என் கருணை
நன்மைக்கே என்றுணரும் பக்தர்கள்;

மனிதன் மனிதனை ஏமாற்றினாலும்
நம்நாட்டு ஆன்மிகம் அதுவும் நான் அளிக்கும் சோதனை ;
அதுவும் நன்மைக்கே !என்றுணர்த்தும் ஞானம் !
கொலை செய்தாலும் நான் கொடுத்த ஞானம் .
கொள்ளை அடித்தாலும் நான் கொடுத்த அறிவு.
குற்றவாளிகளே என் மேல் சாற்றும் குற்றம்.
நோய் வந்தாலும் என் அருள்;
நோய் தீர்ந்தாலும் என் அருள்;
புண்ணியமும் என் அருள்;
பாவமும் என் அருள்;
நான் கொடுத்த அறிவு;நான் கொடுத்த ஞானம் ;
அதுதான் நான் கொடுத்த உரையாடல்
நல்லவர்களை சோதிப்பேன் ;கைவிடமாட்டேன்.
கெட்டவர்களை நிம்மதி இழக்கச்  செய்வேன்;
கோடிகள் சேர்த்தாலும் கேடிபோல் மறைந்துவாழ்வர்;
சிறை செல்வர்;வெளியில்  வருவர்;ஏளனத்து க்கு  ஆளாவர்;
ஏற்றத்தில் வாழ்ந்தாலும் உள்ளத்தில் தாழ்ந்தோர் ;
அனைவருக்கும் மரணம் நான் தரும் தண்டனை;
கோடீஸ்வரனுக்கும்  கோவனாண் டிக்கும்
கோடித்துணி  தானே மிஞ்சும்.
அதுதானே இந்த பழனி கோவணாண்டி வேடிக்கை.
இருக்கும் வரை அமைதி என் அன்பர்களுக்கு.
அன்பிலே,பண்பிலே வாய்மையிலே  நான்.
அன்பே நான்;நேர்மையே நான்!பரோபகாரமே நான்!
அதுவே  சாந்தி!சாந்தி!சாந்தி!








No comments: