அறிவியல் வளர்ச்சி ,பொருளாதார வளர்ச்சி ,பகுத்தறிவு என்றெல்லாம் மனிதர்கள் முன்னேறினாலும் ,அவன் பக்திமார்கத்தை ஐந்து நிமிடமாவது தினம் கடைப்பிடித்தே ஆகவேண்டும். மனித அறிவுக்கும் ,கண்டுபிடிப்புகளுக்கும் மேலாக ஒரு சக்தி அவனை இறைவனை நோக்கி இழுத்துச் செல்வது இயல்பாகிறது.
நான் முயற்சி எடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர். நான் * என்கிறபோது முயற்சி செய்தால் ஒரு இலக்கியவாதியின் மனம் எவ்வளவு முயற்சித்தாலும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடாது.
அறிவியலில் ஆற்றல் உள்ளவர்கள் இலக்கியத்திலே ஆர்வம் செலுத்துவது அபூர்வம். ஆனால் ,ஆன்மிகம் என்பது அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும்.
நாத்திக வாதிகள் பகுத்தறிவு என்று சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த ஆன்மீகத்தை இகழ்கிறார்கள். அவர்களும் ஒரு மனித ஆற்றலுக்கு அப்பால் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்கத்தான் வேண்டிஉள்ளது. அதை அவர்கள் இயற்கை என்கின்றனர்.
முன்பே நான் ஒரு இடுகையில் நம் முன்னோர்கள் இயற்கையைப்போற்றினர் ,வழிபட்டனர் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.
அதற்கு உருவம் ஏற்படுத்துவது மனிதர்கள்.தேனீ பக்கத்தில் ஒருவர் தனக்கே கோயில் கட்டி பூஜைகள் செய்வதாக செய்தி.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் கோயில்.திருவான்மியூரில் சக்கரை அம்மன் கோயில்.ஒரு விதவை ஆன்மீகத்தில் ஈடுபட்டு சில அற்புதங்கள் நடத்தியதால் அவரின் மேல் சிரத்தை கொண்டு கட்டியது. அங்கு பல ஆன்மீக சத்சங்கங்கள்,பஜனைகள் நடக்கின்றன.
மனிதனுக்கு ஆலயம் என்பது அமைதியைத் தரும். ஆலயங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால் பல விஷயங்கள் தெரியவரும்.
சாய் பஜன் பஜனை முடிந்த்ததும் ஒரு ஆன்மீகச் செய்தி அறிவிக்கப்படும்.
அவ்வாறே பைபிள்,குரான் வாசிக்கப்படுகின்றன.
இதில் இறைப்பற்று என்பதைவிட மனித நேயம்,மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மை,தானம்-தர்மம் தான் பிரதான மகத்துவம்.மனிதர்கள் சேவையே மகேசன் சேவை.
இந்த ஆன்மிகம் என்பதில் இறைவனை உணர முடியும்.சிலர் பார்க்க முடியுமா?என்றால் அது அனைவருக்கும் கிட்டுமா? மனித உருவில் நாம் பெரும் உதவிகள் அனைத்துமே ஆண்டவன் பிரதிநிதியாக வருவதே.அனைத்து மனிதர்களுக்கும் எதோ ஒரு உதவி கிடைக்கும்.நண்பர்கள்,உற்றார் உறவினர்கள்,அதைவிட முன்-பின் அறிமுகமாகதவர்கள் என.உதவுதல் என்பது இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய பெரும் குணம்.
ஒரு கந்துவட்டிக்காரர் அவசரத்திற்கு பணம் தருகிறார்.தேவைக்கு அந்த நேரத்தில் அவர் கூறும் வட்டியைவிட நமக்கு உடனடியாக பணத்தேவை
பூர்த்தியாகிறது.நமது காரியம் முடிந்தவுடன் வட்டி பற்றி சிந்திக்கிறோம்.
அநியாய வட்டி என்று புலம்புகிறோம்.அனால் அந்த தருணம் உதவியது அந்த கந்துவட்டி, அதை நன்கு பயன் படுத்தி லாபம் சம்பாதிப்பவர்களுக்கு அது பெரிதாகத் தோன்றாது.குடிப்பதற்கும்,குதிரைப்பந்தயத்திற்கும்,வீண் சிலவிற்கும் ஆடம்பரத்திற்கும் கடன் கந்துவட்டிக்காரரிடம் வாங்கினால் கஷ்டமே.சிகிச்சைக்காக கடன் வாங்கினால் உடல் குணம் அடையும் .இது தான் இறைவனின் சோதனை. இந்நிலை வராதிருக்க அல்லது வந்தபின் சமாளித்து வெற்றி நடை போட ஒரே வழி பிரார்த்தனைதான்.
அதை தினந்தோறும் செய்தால் மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் எட்டாத ஒரு சக்தியை உணர்வோம். என்வாழ்நாளில் நடந்த மெய்யுணர்வு. அது என்னுடன் பணியாற்றிய நண்பர்களுக்குத் தெரியும்.
அன்பே ஆண்டவன். இந்த உலகில் நாம் வாழ ,வெற்றி பெற,அமைதியாக வாழ
அந்த பிரார்த்தனை மார்க்கமே சிறந்த நிலை.நமக்கிருக்கும் ஆற்றல் முன்னேற்றம் முயற்சி செயல் அனைத்திற்கும் மூலம் இறைவனே.பிறவியிலேயே மன நலம் குன்றியவர்கள் முயற்சியால் முன்னேற முடியுமா?அந்த நிலை எல்லோருக்கும் வருவதில்லை.இதற்கான விடை மருத்துவத்தில் இல்லை.பிறவி நோய் இறக்கும் வரை விடுவதில்லை,
பிரம்பரைநோய் இதற்கு கட்டுப்படுத்தவே முடியும்.நோய்
இருக்காது. அது தான் பூர்வ ஜன்மப்பலன் என்பர்.நல்லதே செய்வோம்.
இறைவனை வழிபட்டு தானமும் தர்மமும் காக்கும்.தர்மம் தலைகாக்கும்.தக்க சமயத்தில் உயிர்காக்கும்.கர்ணன் அந்த தர்மத்தையே தானமாக அளித்தவன்.
இறைவழிபாட்டை ஒரு இயக்கமாக மாற்றி வீண் விரயம் செய்யும் பக்திமுறை சரியல்ல.லக்ஷக்கணக்கான பணம் கடலில் கரையாமல் ஆன்மீக கேசட்டுகள்,அறிவுரை,சம்யச்சொர்போளிவுகள்,ஆண்மீகப்புத்தகங்கள் வளங்கள் போன்று சத் கார்யங்களுக்கு பயன் படுத்தினால்தான் ஹிந்து மதம் அறிவுபூர்வமான ஆக்கப்பணிகள் செய்து முன்னேறும். சக்திபெறும்.பாரதமக்கள் வேற்றுமை இன்றி எழுச்சிபெற ஹிந்து மதத்தில் ஒரு உத்வேகம் பிறக்கவேண்டும்.

1 comment:
உணர வேண்டிய உண்மைகள் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
Post a Comment