Monday, September 2, 2013

அன்பினுருவே!ஆறுமுகமே! போற்றி!போற்றி!போற்றி












 அன்பின் உருவே ,!ஆறுமுகமே!
,
இடும்பனின்,ஈசனே !

உள்ளம் கவரும் உமையாள் மைந்தனே !
;
 எளியோருக்கு ஏற்றம் தருபவனே!
ஐந்துகரத்தின் ஒப்பில்லா மணியே! 
 ஓம்கார தம்பியே !
ஒளவைக்கு கருணை  அளித்தோனே!
அருணகிரியை ஆட்கொண்டோனே!
அடியேனைக் காக்க வே 
அன்புடன் வேண்டுகிறேன்.
அன்பின் உருவே!ஆறுமுகமே!

அறுபடை வீட்டில் குடிகொண்டோனே!
அடியவரைக்காக்கும்   கலியுக தெய்வமே!
காத்தருள்வாய்  நீயே என்னை !
வள்ளியின் நாயகனே!,
வடிவேலவனே! 
வரம் தருவாயே!
அன்பின் உருவே!ஆறுமுகமே!

சங்கரன் புதல்வா!
சங்கரிப்பிரியாய் !
சஞ்சலம் தீர்க்கும் 
சத்தியசீலனே! 
சண்முகனே !
சர்வகாரிய சித்திதருவோனே!
சடுதியில்வந்தே 
சங்கடங்கள் தீர்ப்பாய்!
காங்கேயனே!
அன்பின் உருவே! ஆறுமுகமே!

மயில் வாகனனே!
மாயை ஒளிப்போனே 
ஞானம் தருவோனே 
ஞாலம் காப்போனே 
ஞானதேசிகனே;
அன்பருக்கருளும் 
யானைமுகன்  சோதரனே.
அன்பினுருவே!ஆறுமுகமே!
போற்றி!போற்றி!போற்றி!