விக்னேஸ்வரா!வடிவேல் சகோதரா!
விஷ்வேஷ்வரன் விஷாலாக்ஷி குமாரா!
விக்னங்கள் தீர்க்கும் விக்னேஷ்வரா!
வினைகள் தீர்க்கும் விநாயகா!
கணங்களின் நாயகா! கணநாதா!
சக்தி அளிக்கும் சக்தி விநாயகா!
சங்கடம் தீர்க்கும் சங்கடஹரா!
சித்திகள் தரும் சித்திவிநாயகா!
எளியோருக்கு எளியோனாய்,
மூஞ்சூறு வாகனனாய் முக்திளிப்போனே!
மூதாட்டி அவ்வை துதித்த முத்தமிழ் வித்தகா
முழு முதற் கடவுளே!ஓங்கார ரூபனே!
கலிதீர்க்கும் நாயகா!கற்பக விநாயகா!
நதிக்கரை நாயகா!குளக்கரை குலவிளக்கே!
சரணம்!சரணம்!சரணம்!
No comments:
Post a Comment