Thursday, April 16, 2015

இவை விடுத்து இறைவனைதுதித்து இன்புற்று வாழ்வோம்.

   வையகம்  -இதில் ஆண்டவன் ஒரு புரியாத  புதிர்.

மனிதன்  விருப்பங்கள் நிறைவேறும் வரை.

ஆனால், மனித முயற்சிகள்  தோல்விகாணும் போது

அவன்  மனம் தளரும் போது ,

அவனுக்கு ஒரு நம்பிக்கை ,ஒரு பிடிப்பு , ஒரு முயற்சி ,

ஊக்கம்  தேவை.

அது எப்படி கிடைக்கும்?

இவை கிட்டாத போது ஒரு நொடியில் தற்கொலை /கொலை .

இது மனிதனுக்கு  ஏற்ற வழியா /??

அப்பொழுது  அவனுக்கு ஊக்கம் அளிப்பது  ஆன்மிகம்.

உலகம் ,நாம் என்று நினைக்கும்  மனிதன்

எவ்வித  தோல்வியும்  சந்திக்க முடியாமல்  தன்னையே

அழித்துக்  கொள்ள  லௌகீகம்  தூண்டும்.

ஆன்மிகம்  உன் க்ரஹநிலை  சரியில்லை .

இறைவனை வழிபடு  என்று ஆற்றுப்படுத்தும்.

நாற்பத்தைந்து  நாள்  இந்த மந்திரம் சொல்.

இந்த கோவிலுக்குப்போ .

அவனுக்கு  வாழ  நம்பிக்கை  அளிக்கும்.

தம்மினும் மெலியாரை நோக்கி ,அம்மா!

பெரிதென்று அக மகிழ்க --இது ஒரு தத்துவம்.

புத்தர்  பிறப்பு ,மூப்பு .இறப்பு   மூன்றிலும் வையகம் படும்

துன்பம்  கண்டார்.துறவியானார் .

அவருக்கு  கிடைத்த ஞானம் --அன்பு ,சேவை ,புன்சிரிப்பு .புலனடக்கம்.அஹிம்சை .

இதையே  ஆன்மிகம் --

காமம் ,குரோதம் ,ஆணவம் பேராசை ,
இதையே வள்ளுவர் அறம் பற்றி கூறும்  போது-

அழுக்காறு ,அவா,வெகுளி ,இன்னா சொல் இவை  நான்கும் மிழுக்கா இயன்றது அறம்  என்கிறார்.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.  என்கிறார்.

எனவே  இவை விடுத்து இறைவனைதுதித்து 

இன்புற்று   வாழ்வோம்.





Tuesday, April 14, 2015

அதுவே ஆண்டவனின் அதிர்வலைகளைத் தந்து ப்ரஹ்மானந்ததைத் தரும்.

இறைவன்    இதயத்தில்  இருக்கவேண்டும்.

இறைவனைக்கண்டவர்கள்  இறைவனைத்தேடி 

இங்கும் அங்கும்  அலைவதில்லை.

எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை தேடி 

செல்லவேண்டும்  என்றது  இறைவனின் இயற்கையின் 

விந்தைகளைக்  காணவே.

இறைவனை தீர்த்த  யாத்திரை சென்றால்  காணலாம் 

இது ஒரு இறைவனின் அச்சம் காட்டி  செல்லத்தூண்டுதலே.

ஒவ்வொரு தீர்த்த ஸ்தனங்களுக்கும் ஒரு சிறப்பு குணம் உண்டு.

ஒவ்வொரு  புனித இடமும் ஒரு விஷேச  காற்றலை ,

ஒலி-ஒளி அலைகளைக் கொண்டது.

நீர் நிலைகள் விஷேச  தன்மை கொண்டவை.

கர்ப்க்ரஹ அமைப்பும் ஒரு தெய்வீக அதிர்வு   அலை கொண்டது.

ஒரு    உண்மையான   பக்தனுக்கு  அவன் இருக்கும் இடத்திலேயே 

அனைத்து தெய்வீக  அலைகளும்  தானாகவே வந்துவிடும்.


இறைவன்  பக்தனின் வீட்டில் வேலைக்காரனாக இருந்த 

இதிகாசங்களும்  கதைகளும்  உள்ளன.

இருந்த இடத்தில் இறைவனின் அதிர்வலைகள் பெற முயலுங்கள்.

அதுவே ஆண்டவனின் அதிர்வலைகளைத்  தந்து 

ப்ரஹ்மானந்ததைத் தரும்.


****************************************************************************************

मंगल सूत्र  एक पवित्र सूत्र  हिन्दुओं के लिए.
उनको निकाल फेंकने का  आन्दोलन तमिलनाडु में.
उच्च न्यायालय  ने   सरकार  की रोक तोड़ दिया .
राम को जूते से मारा; हर चौराहे  पर भगवान नहीं का  इश्तहार.
करोड़ों  दुखी हिन्दू  सह रहे हैं मुट्टी भर द्रमुख -दल वालों  के कडुवी कदम  पर;
विष वृक्ष के समर्थक करुणा अपने बहुओं को भेजा नहीं 
मंगल सूत्र तोड़ने केआन्दोलन  के लिए.
भगवान  नहीं  कहते  हैं ,
पर मंदिरों की संख्या बढ़ रहे  हैं.
मंदिरों  की  आमदनी  भी.
भगवान तो अपनी शक्ति  के दर्शन दे रहे हैं;
न समझ स्वार्थियों  के भ्रष्टाचार भी बढ़ रहे हैं.
भगवान तो महसूस करने का ब्रह्मानंद ;
है  वे तो नचा रहे हैं ,देख रहे हैं तमाशा .
  மன்மத  ஆண்டு   தமிழ்ப் புத்தாண்டு 

மன மகிழ்வுடன்  மன நிறைவுடன் 

இன்னல்கள்  நீங்கி  இன்புற்று வாழ 

இறைவன் அருள் பொழிய ,

இன்பங்கள் பொங்க,

ஈடில்லா ஏற்றமுடன் 

எண்ணிய எண்ணங்கள் நிறைவேற 

ஐயமின்றி 

பாரதமக்கள்  ஒற்றுமையுடன் வாழ

இந்த  ஆண்டு தமிழகத்தில் மட்டுமல்ல

பாரதத்தின்  பல மாநிலங்களில்  வெவ்வேறு  பெயரில்

கொண்டாடப்படுகிறது.

Wish you all a Happy Thamizh Puththaandu (Tamil New year),
Vishu (Kerala Festival),
Bisu (Thuluva New year in Karnataka),
Pohela Boishakh (Bengali New year),
Mahabishuba Sankranti (Odhisha New year),
Rongali Bihu (Assam New year),
Baisakhi (Punjabi Festival, Sikh New Year),
Chaitra Pratipada (UP, Bihar Festivities),
Judi Sheetal (Maithili New Year)!
Also, Vaishak Ek (Nepali New Year),
Aluth Avurudda (Sinhalese New Year in Sri Lanka),
Thingyan (Burmese New Year in Myanmar),
Chol Chnam Thmey (Khmer New Year in Cambodia),
Songkran (Thai New Year), Songkan (Laos New Year).
All these festivals on 13-14-15 April. What a great season of joy ! A celebration that symbolizes the great Pagan heritage that unifies all humanity, nurtured down the centuries by all the Dharma religions and Asian cultures.
With the flowers in full bloom and the scent and taste of Mango in the air, It is the onset of Vasanta Ritu (Spring) and a great time of celebration in almost every region of Sub continenet.
Celebrate these festivals rooted in our culture and tradition with great joy and pomp.


Friday, April 10, 2015

அவனியில் இல்லை அல்லல்.

ஆண்டவன்  அறம் விரும்புவான் .

அவன்  சொத்தை அபகரிக்கும் கூட்டம்,

அவன் சந்நிதானத்திலேயே  ஏமாற்றும் கூட்டம்.

அவன் ஆலயத்தில் பாதாள அறைகளில் ஆபரணங்கள்

அதை அபகரிக்கும் கூட்டம்.

அசத்தியத்தை சாத்தியமாக்கி அலைமகள் கருணை பெரும் கூட்டம்.

அனைத்தையும்  அவன்  பார்த்தாலும்

பார்க்கவில்லை   என்றே  பாரில் உள்ளோர் நினைக்கின்றனர்,

ஆனால் பார் !சாஸ்வதம்  இல்லை  பார் !என்றே  ஒருநாள்

பாரின்  பாரம்  மறந்து  ஆண்டவன் உயிர் எடுக்கும் நாள்.

அதுவே அவன்  தீர்ப்பு. இதை அனைவரும் சொன்னாலும்

அவனி அதை பொருட் படுத்துவதில்லை.

ஆவி போகும்  நேரத்தில்  அவனை அறிந்து

என்ன  பயன் ?  சொன்னதே சொல்லி

வரும் ஆன்மிகம் ,அது  அறிவியல்  இல்லை .

உண்மை. மாற்றத்திற்கு சாத்தியமில்லை.

சத்யதேவன்   தர்மதேவன் --அறிந்தால்

அவனியில்  இல்லை அல்லல்.

Monday, April 6, 2015

அதுவே இறைநிலை.

இறைவன்  இன்பம் அளிப்பவன் .

இறை  இன்பம் நிலையானது.

இப்புவி இன்பம்  நிலையற்றது .

தற்காலிகமானது .
ஆடம்பரமற்ற 
ஆனால்   புவியில் வாழும் நாம் 

அருள் பெறவே பொருள் வேண்டுகிறோம்.

ஆனந்தம்  என்பது புறவாழ்வு ,

ஆடம்பரம்  அலங்காரம்  அதிலே தான் இறைவன் 

 அனாவசிய எண்ணங்கள் ,புற விருப்பங்கள் 

மன தியான ஒருமைப்பாட்டை தடுக்கும் .

ஆடம்பரமற்ற  ஆழ்நிலை தியானம் 

ஆலயங்களில்  அமைவது கடினம்.

புற ஆடம்பரங்கள் தவிர்த்து  பக்தியில் நாட்டம் 

ஏற்பட ஆலயங்கள் ஆரம்பத்தில்   உதவும்.

மன சஞ்சலமின்றி இறைவனைக் கண்டு பேரானந்தத்தில் 

பேட்டிகண்டோர்   இறைவனைக் கண்டோர் 
ஏகாந்த தியானம் செய்தோரே.

ரமணரும் ,புத்தரும் அல்லாவும் 

தனிமைத் தவத்தில் இறை செய்தி பெற்று 

இப்புவி உய்ய  தெய்வீக செய்திகள் தந்தார்களே.

வால்மீகி தவம் ,துளசியின் தவம் தனித்து 

அரிய   பொக்கிஷம் ராமாயணம். 

அறிவியல் கண்டுபிடிப்புகள்  அவர்களின் மன ஈடுபாடு.

சாப்பிட்டார்களா ?இல்லையா ?என்பது தெரியா ஆராய்ச்சி ,

நம்மில் தொலைக்காட்சி பெட்டியிலும்,

கைபேசியிலும்  பலர்  மனம் லயித்தால் 

வருவோர் போவோர் தெரியாது.

அந்த மன லயம் ஈஸ்வர வழிபாட்டில் ஈடுபடவேண்டும்.

பசித்திரு -தனித்திரு என்றார் விவேகானந்தர் ,

அவர் அலைபாயும் கடல் பாறையில் அமைதிகண்டார் 

அமைதி .அமைதி.அமைதி .

சாந்தி ! சாந்தி. சாந்தி!

அதில் அடையும் பிரம்மானந்தம் 

அதுவே பரவசம் . பரமானந்தம்.

புற ஆசை மறந்து அக அமைதி.

அதுவே  இறைநிலை.

இறையன்பு.

முக்திநிலை.

சித்தி நிலை. 





Sunday, April 5, 2015

நாம ஜபங்கள்.


ஓம் கணேசாய நமஹ
ஓம் முருகா
ஓம் நமஹ சிவாய
ஓம் துர்காய நமஹ

ஓம் நாராயணா
ஸ்ரீ ராம்
ஹரே ராம்
ஹரே ஸ்ரீ கிருஷ்ணா
சரணம் ஐயப்பா !
ஆஞ்சநேயா !
கந்தா !
கடம்பா !
கார்த்திகேயா!
கலியுக வரதா!
கோவிந்தா!

ஆபத்பாந்தவா !
அனாத ரக்ஷகா !
காளி!
சாயீராம்

மகாமாயி,

முநீஷ்வரா

சநீஷ்வரா

அட !கடவுளே!
அட !ராமா !

அல்லா!ஏசுவே!

   இது அனைவரும் வழிபடும்  நாம ஜபங்கள்!

துன்பங்கள் /துயரங்கள்/ இன்பங்கள் / ஆகிய நேரங்களில் துணை நிற்கும்.

 ஆனால் இதில் வேற்றுமை ,வெறுப்பு!ஏன்!





Saturday, April 4, 2015

ஆன்மிகம் வேண்டியதில்லை பாரினில்.

பாரினில்  பகவான்  படைப்பில்  ,

 பல அதிசயங்கள்.

பரவசங்கள்.

பக்தி  என்பது  மனிதனின்  கடும் முயற்சி

  பலன் அளிக்காமல்  போனால் தீவிரமாகிறது.

ஒரு கப்பல் மூழ்கும்  போது அனைவரும் மூழ்கி

முக்தி அடைகின்றனர்.

ஒரு விமான விபத்தில் அனைவரும் மரணம்.

ஒரு ஹிந்து தப்பிக்க முடியாது.

ஒரு இஸ்லாமியன்  தப்பிக்க முடியாது .

ஒரு கிறிஸ்தவன் தப்பிக்க முடியாது.

இயற்கை சீற்றம் ,பஞ்சம்  என்றால் அனைவருக்கும் பாதிப்பு.

பாலைவன மணல்  அனைவரையும் சுடும்.

அல்லா என்றால் ,சிவா   என்றால் ,ஏசு என்றால் சுடும் மணல்

குளிர் சாதனம் ஆகுமா?

இயற்கை    அனைவருக்கும் பொது .

இறைவன்  படைப்பது.

சூரிய ஒளி,சந்திரன் ஒளி,அமாவாசை இருட்டு  பொது.

மனிதர்களை ஒற்றுமைப் படுத்தவே  மதங்கள்.

மனிதர்களை  வேறுபடுத்துவது  மனித அறிவு.

மனிதர்களை  ஒற்றுமைப் படுத்துவது ஆன்மிகம்.

ஒற்றுமை இல்லா ஆன்மிகம் ,மனிதநேயம் வளர்க்கா ஆன்மிகம்,

மனிதர்களை  வேறு படுத்தும்  ஆன்மிகம் வேண்டியதில்லை

பாரினில்.