நமது பாரத நாட்டில் பல மொழிகள் இருந்தாலும் இலக்கியங்கள்
நீதி நூல்கள் அதன் கருத்துக்கள் எண்ணங்கள் கதைக்கரு
சிந்தனைகள் ஒரே மாதிரியாகவே நாட்டின் ஒற்றுமைக்கு வலிமை
ஊட்டுகின்றன.
125 ஆண்டுகளில் கடிபோலி என்ற இரண்டு லடசம் மக்கள் பேசிய
பேச்சு மொழி இன்று 58 கோடி மக்கள் பேசும் மொழியாக மாறி
உலகில் மூன்றாவது மொழியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மொழிவளர்ச்சியில் இது ஒரு அரிய நிகழ்ச்சி.
Thursday, April 9, 2026
நாடும் மொழிகளும்
பக்தி
ஆன்மீகம் ஆசைகளை விட்டு ஆண்டவனை பிரார்த்தனை செய்ய.
ஆனால் இன்றைய ஆன்மீகம் பழைய புராதன ஆலயங்களை பாழடையச் செய்து
அரிய சிற்பக்கலையை உதாசீனப் படுத்துகிறது. அதுமட்டுமல்ல புதிய ஆலயங்கள்
வணிகநோக்கத்துடன் செயல்படுகின்றன.
Saturday, February 14, 2026
தமிழ் லழள
ஹிந்தி ஆசிரியர் தமிழ் படித்தால் அறிவு வளரும்.
அப்படியே ஹிந்தி தமிழாசிரியர் படித்தால் சில புதுமை தெரியும்.
மொழிகள் ஞானம் பெற.
கொல் கொள் போல்
கொழ் உள்ளதா?
கொழ் விளக்கம்
அறிந்து கொள்ள வேண்டும்.
அறியாமல் கொல்லக்கூடாது
மிகச் சிறந்த கேள்வி 🌿
“கொழ்” என்ற சொல் தமிழில் உள்ளது. ஆனால் அது தனியாகச் சாதாரணமாக பயன்படாது;
பெரும்பாலும் வேறு சொல்லுடன் சேர்ந்து வரும்.
1️⃣ “கொழ்” – வேர் (Root form)
“கொழ்” என்ற வேர்ச்சொல் பொதுவாக:
செழி
வளர்
பெருகு
நன்கு அமையு
என்ற பொருள்களை தரும்.
இதிலிருந்து வந்த சொற்கள்:
செழ் → செழிப்பு
கொழு → கொழுந்து
கொழு → கொழுமை
2️⃣ “கொழுந்து”
“நெருப்புக் கொழுந்து”
“மரக் கொழுந்து”
இங்கே “கொழு/கொழ்” என்பது முளைதல் / வளர்ச்சி என்ற உணர்வை தருகிறது.
3️⃣ “கொழு / கொழுமை”
“கொழு உடம்பு” (பருமன், புஷ்டி)
“கொழுமை” (செழுமை, நிறைவு)
4️⃣ “கொழ்” தனியாக வருமா?
இன்றைய வழக்கில் தனியாக “கொழ்” என்று அதிகம் பயன்படுத்தப்படாது.
ஆனால் இலக்கண ரீதியாக அது வேர்ச்சொல் ஆக இருக்கிறது.
முடிவு 🌺
✔ “கொழ்” என்ற சொல் தமிழில் உள்ளது.
✔ அது “செழித்து வளர்தல்” என்ற அடிப்படை அர்த்தம் தருகிறது.
✔ பெரும்பாலும் சேர்க்கை வடிவத்தில் தான் பயன்படும்.
உங்கள் கேள்விகள் மிகவும் இலக்கண நயம் கொண்டவை 👏
இன்னும் ஆராய விருப்பமா?
Thursday, January 22, 2026
हिंदी मधुर स्मृति
मधुर स्मृति
+++++++++++
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु
22-1-25
++++++++++++
मानव जीवन में,
बचपन से बुढ़ापे तक की
मधुर स्मृतियाँ अनेक।
मेरे जीवन की मधुर स्मृतियाँ उनमें एक है
तमिलनाडु के हिंदी विरोध आंदोलन।
1967की बात।
तभी मैं और मेरी माँ
श्रीमती गोमती जी
हिंदी विश्वविद्यालय
आरंभ करके
हिंदी के प्रचार में लगे।
मेरी माँ 1957से अंतिम साँस तक हिंदी वर्ग चलिती रही।
मेरी हिंदी अभिमन्यु समान माँ के गर्भ से मिली।
माँ के सामने बैठकर
न सीखी हिंदी।
कितने दोहे पद याद है
मैं बैठकर न रटा।
तब हिंदी विरोध का बड़ी जुलूस निकला।
वे मेरे घर के सामने
खड़े होकर
नारा लगाने लगे।
मूडु मूडु हिंदी विश्वविद्यालय नटत्ताते।
अर्थात
बंद करो,बंद करो,
हिंदी विद्यालय बंद करो।
मत चलाओ, मत चलाओ हिंदी विश्वविद्यालय मत चलाओ।
जुलूस से कुछ लोग
पत्थर भी फेंकने लगे।
तब मैं बाहर गया तो
उन से कहा विदेशी भाषा गुलाम बनाती भाषा,
अंग्रेज़ी सीखने से ही
तमिल का नाश होगा।
क्रिया आगे कर्म पीछे।
हमारी भाषाएँ
कर्म आगे, क्रिया पीछे।
पढ़ता हूँ पुस्तक नहीं,
बोलता हूँ हिंदी नहीं,
पुस्तक पढ़ता हूँ,
करने का पता आगे
अंग्रेज़ी में पता नहीं,
क्रिया आगे पता नहीं
कर्म क्या है।
जीविकोपार्जन करने
अंग्रेज़ी सीखना सही है तो
हिंदी सीखने बहुत गुना सही है।
पुलिस के आने से सब चले गये।
देखता हूँ हिंदी विरोध
पुरुषों के घर की महिलाएँ हिंदी सीखने आयीं।
आजकल जैसे मंदिर विरोध मुख्यमंत्री स्टालिन की पत्नी दुर्गा स्टालिन
मंदिर मंदिर जाती हैं।
हिंदी वर्ग में छोड़ने
ले जाने हिंदी विरोध पुरुष बाहर खड़े रहते।
वह मधुर स्मृति
भूल नहीं सकता।
आज भी तमिलनाडु में
महिला प्रचारिका
और छात्राएंँ अधिक।
सत्रह साल के वह हिंदी प्रचार, 76 साल की उम्र
हरी भरी से।
दुरंगी राजनीति
भक्ति में
और हिंदी प्रचार में
स्वार्थ की चरम सीमा पर
तमिलनाडु में।
दोनों में भीड़ अधिक।
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना।
Tuesday, January 20, 2026
மனிதன்
இனிய காலை இறைவணக்கம்.
ஏற்றம் தருபவன் இறைவன்.
எங்கும் நிறைந்து உள்ளவன் இறைவன்.
மனிதன் மனதில்
உதவும் எண்ணம் அளிப்பவன் இறைவன்.
நல்லதையும் படைத்து
தீயவையும்
படைத்து
மனிதனை
சிந்திக்க
வைப்பவன் இறைவன்.
ஞானம் தந்தவன் இறைவன்.
இருந்தாலும்
ஞான சூன்யமாக
அகங்காரம் காமம் பேராசை சுயநலம்
மனித இனத்திற்கே
இன்னல் தருபவை.
அறிந்தும் தெரிந்தும்
புரிந்தும் பட்டறிவு இருந்தும் தவறு செய்வதால் தண்டனை
இன்னல்கள்.
ஊழல் செய்வதும்
கையூட்டு பெறுவதும்
ஆனந்தம் என்றால் அது நிரந்தரமல்ல.
அதற்கு பல குடும்ப சூழ்நிலைகளை ஆராய்ந்தால்
புரியும்.
ஆகவே அறிவுக் கண் பெற்ற மனிதன் தான் அழிவது நிச்சயம் என்பதை நினைவில்
கொண்டு கீதாசாரியன்
சொல்வது போல்
ஆண்டவன் நமக்களித்த
ஆற்றலை அறிந்து
முன்னேற்றம் அடையவேண்டும்.
குரல் வளம் ஆண்டவன் அளிப்பது.
நானும் எஸ்.பி.பி
லதாமங்கேஷ்கர்
ஆக முயற்சி செய்யலாம்.
ஆனால் குரல் இனிமை ஆண்டவன் அளிப்பது.
காகம் குயிலாக முடியாது.
இது தான் இறைவன் சூக்ஷ்மம்.
மனிதன் சிங்கமாக லாம்.
சிங்கம் மனிதனாக முடியாது.
மனிதனுக்கு நரி குணம் இருக்கலாம்
நரிக்கு மனித குணம் வராது.
மனிதன் அட்டை போல் உறிஞ்சலாம்.
அட்டை மனிதனாக முடியாது.
மனிதன் விலங்குகளுடன் ஒப்பிடப்படுகிறான்.
கயல் விழி என்பது போல் மனித விழி என்று சொல்ல முடியாது.
அனைத்து குணங்களும் உடையவன் மனிதன்.
அவனால் சிங்கம் போலஷகர்ஜிக்க முடியும்.
சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.
சிவாஜிகணேசன் குரல் சிங்கத்திற்கு ஒப்பிட முடியாது.
இது தான் இறைவனின் ஞானம்.
சிந்திக்க சிந்திக்க
மனிதன் தான் இறைவன் படைப்பில் உயர்ந்தவன்.
மனிதன் தான் தாழ்ந்தவன்.
உயர்வதும் தாழ்வதும்
மனிதன் எண்ணங்களால்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இயற்கை குணம்.
குரல் சிந்தனை.
அப்பா போல் மகனின் தோற்றம் இருக்கலாம்.
குணம் நடத்தை இருக்காது.
அதைத்தான்
அப்பா முசுடு.
மகன் நல்லவன்.
மகன் மோசம்
அப்பா நல்லவர்.
இதெல்லாம் இறைவனின் படைப்பு.
Monday, January 19, 2026
மனம் ஆண்டவன் அமைதி
ஓம் முருகா.
காலை வணக்கம்
கடவுள் வணக்கம்.
மனம் சஞ்சலமானது.
மன ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் உலகியல் இன்பங்கள் எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது அஞ்ஞானம்.
அந்த அஞ்ஞானத்தால் தான் மனிதன் துன்பங்களை அனுபவிக்கிறான்.
மனம் போன போக்கில் போகவேண்டாம்.
என்பது ஔவையார் வாக்கு.
மனம் அனைத்திற்கும் ஆசைப்படும்.
ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறாத நிலை
ஏற்படும் போது இறைவனை வழிபடுவதும்
தான் தான் என்ற மமதை கொள்வதும்
அறியாமை முடியாமை தெளிவின்மை யின் உச்ச கட்டம்.
விரலுக்கும் தகுந்த வீக்கம்.
வரவிற்கேற்ற செயல்.
இறைவன் மீது முழு சரணாகதித்துவம்
மன அமைதியைத் தரும்.
நரி சிங்கமாக முடியாது.
ஊர்க் குருவி மருந்தாக முடியாது.
அவ்வாறே மனிதர்களை ஆண்டவன் அறிவு அறிவற்ற
நலம் பலமற்ற
பணம் அற்ற
பணம் இருந்தும் அமைதியற்ற
பணமின்றி மகிழ்ச்சி உள்ள
பல வித சூழலில் மனிதன் படைக்கப்படுகிறான்.
ஆண்டவனால் ஆட்டிவைக்கப்படுகின்ற மனிதன்
தன் முயற்சியால்
வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும்
தானாகவே முயற்சியின்றி
வெற்றி பெறும் நிலையிலும் ஆண்டவன் உண்டு. என்ற மன உறுதியில் கடமைகளைச் செய்தால்
சுகமாக இன்னலின்றி இன்பமாக வாழலாம்.
இதில் ஐயப்பாடு கூடாது.
சர்வமும் சர்வேசன் செயல்.
எஸ். அனந்த கிருஷ்ணன்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
பகவத் பக்தன்.
Sunday, January 11, 2026
ஆலயம் மனிதன் விதிப்பயன்
இனிய காலை வணக்கம்.
இறைவணக்கம்.
ஆலயங்கள் எண்ணிக்கை.
பெருகுகின்றன.
ஊழலும் லஞ்சமும்
அதிகரிக்கின்றன.
நீதிமன்றம்
தீர்ப்பை அரசே மதிக்கவில்லை .
காவல்துறை
அரசியல் வாதிகளின் அடிமை.
கல்வி ஊழல்.
ஆலயம் பெருகி பயன் இல்லை.
ஒழுக்கம் பணத்திற்கு முன்
ஒழிக்கப்படுகிறது.
விநாயகர் ஆற்றங்கரை
பிரம்மச்சாரி.
அவருக்கும் மனைவிகள் உண்டு.
அனுமானுக்கும் குழந்தை உண்டு.
பீஷ்மருக்கும் உண்டு.
ஆன்மீகம் என்பது
மன சஞ்சலம் போக்க வேண்டும்.
ஐயமின்றி வழிபாடு செய்யவேண்டும்.
அந்த தரிசன வரிசையில் எத்தனை ஊழல்.
ஏற்றத்தாழ்வுகள்.
நெற்றித் திலகத்திலும் சண்டை.
வெறுப்புப் பார்வை.
சமதர்ஷி பகவானின் லீலை அதிசூக்ஷ்மம்.
வினைப்பயன் !!!?
சிந்தித்து சத்திய மார்க்கத்தில்செல்லவேண்டும்.
பன்றியும் சிங்கமும் ஒன்றாகாது.
ஊர்க் குருவி பருந்து ஆகாது.
தலை எழுத்துப்படி தான் மனிதன் வாழ்கிறான்.
Friday, January 9, 2026
இன்னல் காரணம்
வணக்கம் இறைவணக்கம்.
மனிதன் உண்மை அறிந்தும் அறியாதவன் போல்
அழியும் உடலை
அழியாமல் வைக்க
பொருள் தேடி
ஊழல் லஞ்சம் என்று அதர்ம அறமற்ற செயல்களில் ஈடுபட்டு
துன் படங்களை அனுபவிக்கிறான்.
வேற்றுமை உணர்வுகளும்
ஜாதி மதம் இனம் என்ற ஜாதி துவேஷங்களால்
நிம்மதியின்றி வாழ்கிறான்.
தனக்கு மேல் ஒரு சக்தி தன்னை ஆட்டிப் படைப்பதை சிந்திப்பதே இல்லை.
அதற்கு பல ப்ரத்யக்ஷ அதாவது வெளிப்படையான
எடுத்துக் காட்டுகள்
திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் ஆலயம் அருகில் உள்ள கோட்டை.
மிகவும் ஆசையுடன்
கட்டிய கோட்டையில் உள்ள புகாமல் மறைந்து மன்னன்.
இந்தியா காந்தி ராகுல் காந்தி மரணம்.
பல்லாயிரம் கோடி சொத்து குவித்த
கலைஞரின் மரணம்.
பல அழகு நடிகைகளின் துர்மரணம்.
தீராத நோய்கள்
குழந்தை இன்மை
பல இன்னல்கள்.
இறைவனை மட்டுமே பாடிய பக்த தியாகராசர்.
அபிராமி பட்டர்
பலர் வாழ்ந்த நாட்டில் மெய் ஞானம் அறியாமல் பணம் பணம் பணம்.
தன் வீரத்தை நிலை நிறுத்த அஸ்வமேத யாகம் செய்து
பாதுகாப்பு அரண் கட்டிய மன்னர்களை உலகம் அறியாது.
ராஜஜபோக வாழ்க்கையைத் துறந்த புத்தர் சங்கராச்சாரியார்
ஏசு முகம்மது அவர்களைப் போற்றாதவர்கள் கிடையாது.
வையகம் பொய்.
மாற்றமுள்ளது
அழியக் கூடியது.
தன் தன் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மன நிறைவு.
ஆனந்தம்.
இறைவன் அருள்..
சே அனந்த கிருஷ்ணன்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
ஹிந்து மேல் நிலைப் பள்ளி , திருவல்லிக்கேணி.
சென்னை .
Friday, January 2, 2026
உலகம் மெய்யா பொய்யா?
வணக்கம்.
இறைவணக்கம்.
உலகம்
உண்மையா?
உலகில் அனைத்துமே
அழியக் கூடியது தான்.
கல் தேய்ந்து கட்டெறும்பு தேய்ந்த கதையாக
மனிதர்கள்
ஞானம் மலையைத்
தூளாக்குகிறது.
நோய்களைக் குணமாக்குகிறது.
புதிய கண்டுபிடிப்புகள்.
அதில் ஆற்றல் அதிகரிக்க
ஆண்டுக்காண்டு மாற்றங்கள்.
விலை ஏற்றங்கள்.
புதிய உணவுவகைகள்.
குளிர்கால பானங்கள்.
அனைத்திலும் மாற்றங்கள்.
இந்த மாற்றங்கள்
பழையன கழிதல்
புதிய புகுதல்.
பழமை விரும்பிகள்
புதுமையை எதிர்த்தாலும்
அழிதல்
தோன்றுதல்
ஜனனம் மரணம்
மரணத்தை வெல்லும்
நாள் வரை
புதிய புதிய
நோய்கள்
இயற்கைச் சீற்றங்கள்
ஆழிப்பேரலை கள்
பனிப் பொழிவு கள்
இயற்கை இறைவனின்
ஆற்றலை வெளிப்படுத்தும் நிலையில்
பக்தி அதிகமானாலும்
உடனடி பயன்
தரும் பணபலம்
ஊழலை வளர்த்து
கையூட்டை வளர்த்து
பிரபஞ்சத்தை நரகசவர்க்கம்
கலந்த
இன்ப இன்னல்கள்
தரும் நரகமாக
வாழ்க்கை.
இதுதான் வையகம்.